ஜும்ஆ தொழுகைக்கான முன்கூட்டியே அழைப்பும்! தற்காலச் சமூக நிலைப்பாடுகளும்!

in 2026 அக்டோபர்

ஜும்ஆ தொழுகைக்கான முன்கூட்டியே அழைப்பும்! தற்காலச் சமூக நிலைப்பாடுகளும்!

– எஸ். ஹலரத் அலி

ஒரு விரிவான ஆய்வுக்கட்டுரை :

இஸ்லாமிய (இயற்கை இறைநூல் வாழ்வி யல் அறிநெறி) மார்க்கத்தில் தொழுகை என்பது மனிதர்களின் ஆன்மீக மற்றும் லெளகீக வாழ்க்கையை ஒழுங்குபடுத்துகின்ற மிக முக்கியமான தூணாகும். திருக்குர்ஆன் தொழுகையின் சிறப்பையும், அதன் நேர ஒழுங்கு முறையையும் பல்வேறு கோணங் களில் விளக்குகிறது. குறிப்பாக, சூரா அன் நூர் “”சில மனிதர்கள் இருக்கிறார்கள்; வியாபா ரமோ அல்லது கொடுக்கல் வாங்கலோ அவர் களை அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை நிலைநாட்டுவதை விட்டும், ஜகாத் வழங்குவதை விட்டும் திசை திருப்பி விடாது.

 உள்ளங்களும், பார்வைகளும் புரண்டு விடக்கூடிய ஒரு நாளை அவர்கள் அஞ்சு கிறார்கள்”      (அல்குர்ஆன் 24:37)

இறைவனை நினைவுபடுத்துவதிலும் தொழுகையை நிலைநாட்டுவதிலும் வியா பாரமோ உலகியல் பற்றுக்களோ எவ்விதத் தடையையும் ஏற்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்துகிறது. இதேபோல், ஜும்ஆ தொழு கையின் அவசியத்தை விவரிக்கும் திருக்குர் ஆன் வசனம் பின்வருமாறு அமைகிறது.

நம்பிக்கையாளர்களே! வெள்ளிக்கிழமை யில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால், உடனே அல்லாஹ்வின் நினைவின்பால் (ஜும் ஆவிற்கு) விரைந்து சொல்லுங்கள்; வியா பாரத்தை (உலகியல் அலுவல்கள் அனைத்தை யும் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்து) விடுங்கள். நீங்கள் அறிந்துகொண்டவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு மிகவும் மேலானது.”       (அல்குர்ஆன் 62:9)

ஜும்ஆவிற்கு முன்கூட்டியே அழைக்கப்படுவதற்கான அதருஸ்ஸுன்னா (நபி அவர்களின் நல்லறத் தோழர்களின் செயல்வழி) வரலாற்றாதாரங்கள் இன்றைய காலக்கட்டத்தில் சில பிரிவினர், இமாம் மேடையில் (மிம் பர்) ஏறி அமர்ந்த பிறகு கொடுக்கப்படும் பாங்கை மட்டுமே ஏற்றுக்கொண்டு, அதற்கு முன்னர் மார்க்கத்தின் பெயரால் முன்கூட் டியே கொடுக்கப்படும் அழைப்புகளைப் “பித்அத்‘ (நவநாகரீகப் புத்தாக்கம்) என்று விமர்சிக்கின்றனர். ஆனால், நபிமொழிகளின் அடிப்படையில் ஆராயும்போது, ஜும்ஆவிற்கு மக்களை முன்கூட்டியே எச்சரித்து, உலகியல் கடமைகளை இடை நிறுத்தி விட்டுப் பள்ளி வாசலை நோக்கி விரைந்து வருமாறு அழைப் பது அனுமதிக்கப்பட்டதும், நபிவழியைப் பின்பற்றியதுமாகும்.

பிரபல ஹதீத் நூலான சஹீஹ் அல் புகாரியில் (ஹதீத் எண் 881-883) உஸ்மான் (ரழி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் மக்கள் பெருவாரியாகப் பெருகியபோது, ஜும்ஆவுக் கான அவசியத்தை முன்கூட்டியே உணர்த்தும் வகையில் மதீனாவின் “ஸவ்கா‘ (கடைவீதி) பகுதியிலிருந்து ஜும்ஆ தொழுகைக்கான முதல் அழைப்பு அறைகூவல் விடுக்கப்பட்ட நடைமுறை அமல்படுத்தப்பட்டதாகக் குறிப் பிடப்பட்டுள்ளது.

“உஸ்மான்(ரழி) அவர்கள் ஜும்ஆ நாளில் (மதீனாவின் சந்தைப் பகுதியான) “ஸவ்ரா‘ எனும் இடத்திலிருந்து ஜும்மா தொழுகைக் கான எச்சரிக்கை முதல் அழைப்பாக மூன்றா வதாக (பாங்கு இகாமத்துடன் சேர்த்து) அழைப்பை அதிகப்படுத்தினார்கள் என்று அலீ (ரழி) அவர்கள் கூற நான் செவியுற்றேன்” நூல்களின் ஆதாரங்கள்: அல் புகாரி, ஹதீத் எண் 916) அல்  புகாரி: அத்தியாயம் 11(ஜும்ஆ தொழுகை), பாடம்: ஜும்ஆவின் முதல் பாங்கு ஹதீத் எண் : 916)

நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் எங்களுக்குத் தொழுகை நடத்திவிட்டு, (நம் உள்ளங்களை உருக்கும் விமாக) ஒரு வலிமையான உபதேசம் செய்தார்கள். அதைக் கேட்டு எங்கள் கண்கள் கண்ணீர் சிந்தின; உள்ளங்கள் நடுங்கின.. அப் பொழுது அலலாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “எனது சுன்னத்தையும் (செயல் சொல் அங்கீகாரம் எனும் வழிகாட்டலையும்) நேர்வழி பெற்ற கலீபாக்ளின் சுன்னத்தையும் நீங்கள் பின்பற்றுங்கள். அதை உங்கள் கடை வாய்ப் பற்களால் கவ்விப் பிடித்துக் கொள் ளுங்கள். (அதிலிருந்து ஒருபோதும் விலகாதீர் கள்). ஸுனன் அபூதாவூத். ஹதீத்எண் 4607, பாடம் கலீபாக்களின் சுன்னத்தைப் பின்பற்றுதல்.

இப்னு மாஜா நூலின் ஆரம்பப் பகுதியில் உள்ள முப்பது ஹதீத்களுள் இதுவும் ஒன்றா கும். ஜாமிஉ திர்மிதீ, ஹதீத் எண் 2676. பாடம் சுன்னத்தைப் பற்றிக் கொள்வது பற்றிய பாடம், திர்மிதி நூலில், இது “ஹஸன் ஸஹீஹ் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முஸ்னத் அஹ்மத்.  ஹதீத் எண் : 17145

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்(ரஹ்) அவர்களின் முஸ்னத் தொகுப்பில் பல(ரஹ்) அவர்களின் முஸ்னத் தொகுப்பில் பல அறிவிப் பாளர் தொடர்களின் ஊடாக இந்த நீண்ட பேருரை இடம்பெற்றுள்ளது. (மற்றும் பல பதிப்பு எண்கள் உண்டு) பக்க விவரம் : முஃஆவியா பின் ஸாலிஹ் மற்றும் இர்பாத் பின் சாரியா (ரழி) வழி அறவிப்பாளர் தொடர் களில் இது விரிவாக இடம்பெற்றுள்ளது.

மேலும் ஜம்ஆவிற்கு முன்கூட்டியே வருப வர்களின் நன்மைகளை விவரிக்கும் புகாரி மற்றும் முஸ்லிம்.

எவர் ஜும்ஆ நாளில் குளித்துவிட்டு முந் தைய நேரத்தில் செல்பவர்கள் அவரவர் ஒவ் வொரு ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவர் களைப் போன்றவர்கள் ஆவார்கள். இரண்டா வது நேரத்தில் செல்பவர்கள் மாட்டை குர்பானி கொடுத்தவர்கள் போலவும், மூன்றா வது நேரத்தில் செல்பவர்கள் கொம்புள்ள ஆட்டை குர்பானி கொடுத்தவர்கள் போலவும், நான்காவது நேரத்தில் செல்பவர்கள் கோழியை குர்பானி கொடுத்தவர்கள் போலவும்,  ஐந்தா வது நேரத்தில் செல்பவர்கள் மூட்டையைத் தானம் செய்தவரைப் போலவும் நன்மை களைப் பெறுகிறார்கள். இமாம்(மிம்பருக்கு) வந்தால், மலக்குகள் தங்கள் ஏடுகளை மூடி விட்டு (உரையைச் செவிமடுக்க) அமர்ந்து விடுகிறார்கள்.   (அல்புகாரி 881, முஸ்லிம் 850)

இந்தச் சான்றுகளின் பிரகாரம், தற்பொழு தும் கூட இமாம் மிம்பரில் குத்பா சொற் பொழிவு உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போதும் முடிக்கப் போகும் தருவாயிலும் ஏன் தொழுகை கூட இரண்டாவது ரக்காத் நிலை யிலும் விழுந்து அடித்து ஓடி வந்து சேர்ந்து கொள்பவர்களுக்கு எச்சரிக்கையாக முன்கூட் டியே மக்களைத் தொழுகைக்கு பள்ளிவாயில் களின் ஒளி பெருக்கிகள் வாயிலாக அழைக்க முயல்வதும், வியாபாரக் (உலகியல்) கடமை களைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு அறிவை யும் நன்மைகளையும் ஈட்டத் தூண்டுவதும் அல்குர்ஆன் மற்றும் ஹதீதின் அடிப்படை நோக்கத்திற்கு முற்றிலும் உட்பட்டதே தவிர, அது எந்த வகையிலும் தடை செய்யப்பட்ட காரியம் அல்ல.

குத்பா நிகழ்வில் கூட முன் வரிசைகளில் அமர்ந்து கொண்டும்  சிலர் தூண் ஓரங்களில் அமர்ந்து கொண்டு தூங்கி விழுவதையும் செல் போன்களை நோண்டிக் கொண்டிருப்பதும் அழைப்பு ஒலிகளை ரிங்டோன்களை அலற விட்டுக் கொண்டிருப்பதும் செயல்களும் மிகச் சர்வ சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டே  தான்  இருக்கின்றன.

ஜும்மா நாளில் இமாம் குத்பா(உரை) நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது, உன்னரு கில் இருப்பவரிடம் “அமைதியாக இரு‘ என்று நீ கூறினாலும் கூட, நீ வீணான செயலில் ஈடு பட்டுவிட்டாய் (அதாவது உனது ஜும்மாவின் நன்மையை இழந்துவிட்டாய்) என்று அல்லாஹ் வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

யார்(குத்பாவின் போது) கூழாங்கற் களைத் தொட்டாரோ (அல்லது அவற்றைக் கொண்டே விளையாடினாரோ) அவரும் வீணான செயலையே செய்துவிட்டார் என்று நபி(ஸல்)  அவர்கள்  கூறினார்கள்.

இடம் பெறும் நூல்களும் ஆதாரங்களும்: புகாரி: ஹதீத் எண்.  934,935

பாடம் : ஜும்மா நாளில் இமாம் உரை யாற்றிக் கொண்டிருக்கும் போது பேசுவதை நிறுத்தல். மற்றும் “அமைதியாக இரு‘ என்று கூறுவது பற்றியது. முஸ்லிம், ஹதீத் எண்.851 அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா(ரழி), தரம்: புகாரி மற்றும் முஸ்லிம் ஆகிய இரு கிரந்தங் களிலும் மிகத் தெளிவாக “ஸஹீஹ்‘ தரத்தில் இடம்  பெற்றுள்ளது. 

ஸுனன் அபூதாவூத், ஹதீத் எண் : 966, பாடம் : குத்பாவின் போது பேசுவது மற்றும் விளையாடுவது தடை செய்யப்பட்டுள்ளமை. ஜாமிஉ திர்மிதீ, ஹதீத் எண் : 513, தரம்: இமாம் திர்மிதீ (ரஹ்) அவர்கள் இந்நூலில் இந்தச் செய்தியைப் பதிவு செய்து இதன் தரத்தை  விளக்கியுள்ளார்.

சிறப்பு விளக்கம் : ஜும்மா பேருரையின் போது கவனம் சிதறாமல், செல்போன் பயன் பாடு, தூக்கம் மற்றும் வீண் விளையாட்டு களைத் தவிர்த்து முழுமையான அமைதி யோடும், கவனத்தோடும் குத்பாவைக் கேட்க வேண்டும் என்பதை மேற்கண்ட தூய நன் மொழிகள் மிகத் தெளிவாக வலியுறுத்துகின் றன. ஒருவருக்கு அறிவுரை கூறும் வார்த்தை யைக் கூட கூறக்கூடாது என்றால், செல் போனை நோண்டுவது அல்லது குத்பா உரை, தொழுகையை திசை திருப்புவது எவ்வளவு பெரிய  தவறு  என்பதை  இது உணர்த்துகிறது.

Previous post:

Next post: