அவனது சட்டதிட்டங்களைப் அனுபவிக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் விருப்பமாகும்!

in 2026 அக்டோபர்

அவனது சட்டதிட்டங்களைப் பேணுவதைப் போன்றே அவன் வழங்கிய

சலுகைகளையும் அனுபவிக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் விருப்பமாகும்!

எஸ். அமீர், நிந்தாவூர், இலங்கை.

தூய இஸ்லாத்திலுள்ள சட்டதிட்டங்களைப் பேணுவதைப் போன்றே அதிலுள்ள சலுகைகளையும் மனிதன் அனுபவிக்க வேண் டும் என்பது அல்லாஹ்வின் விருப்பமாகும். ஏனெனில், 

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தான் விதித்த கட்டாயக் கடமைகள் நிறைவேற்றப்படுவதை எவ்வாறு அல்லாஹ் விரும்புகின்றானோ அதைப் போன்றே தன் னால் வழங்கப்பெற்ற சலுகைகளும் பயன் படுத்தப்படுவதையும் அவன் விரும்புகின் றான். (அறிவிப்பவர் இப்னு உமர்(ரழி) அவர்கள், ஸஹீஹ் இப்னு ஹிப்பான், பைஹகீ, தப்ரானீ, முஸன்னஃப் இப்னு அபீஷைபா, தஃப்ஸீர் இப்னு கஸீர்) மேலும்;

நபி(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: நிச்சயமாக அல்லாஹ் அவன் (தடுத்த) பாவங் கள் செய்யப்படுவதை எவ்வாறு வெறுக்கின் றானோ அதேபோன்று அவன் (அளித்த) சலு கைகள் செய்யப்படுவதை (பயன்படுத்தப் படுவதை) விரும்புகின்றான். ஆதாரம்: முஸ்னத் அஹ்மத் : 5866,5873) ஸஹீஹ் இப்னி குசைமா : 950, 2027, ஸஹீஹ் இப்னு ஹிப்பான் : 2742, அஸ் சுனனுல் குப்ராலில் பைஹகீ : 5416, இன்னுமொரு அறிவிப்பில் :

நிச்சயமாக அல்லாஹ் அவன் கடமையாக் கிய விசயங்கள் செய்யப்படுவதை எவ்வாறு விரும்புகின்றானோ அதேபோன்று அவன் அளித்த சலுகைகளும் செய்யப்படுவதை விரும்புகின்றான் என்றும் இடம் பெறுகின் றது. ஆதாரம் : முஸன்னப் இப்னி அபீ ஷைபா: 26471, 26472, 26475, 26476, ஸஹீஹ் இப்னி ஹிப்பான் : 354, 3568, அல்முஉஜமுல் கபீர் : 10030, 11880, 11881, அஸ்சுனனுல் குப்ரா லில் பைஹகீ : 5415, மேலும்;

ஹம்ஸா பின் அம்ர் அல்அஸ்லமீ(ரழி) அவர்கள் கூறியதாவது : நான், அல்லாஹ்வின் தூதரே! பயணத்தில் நோன்பு நோற்க எனக்குச் சக்தி உண்டு என நான் உணர்கிறேன். (அவ்வாறு நோன்பு நோற்பது) என்மீது குற்ற மாகுமா? என்று கேட்டேன். அதற்கு “இது அல்லாஹ்விடமிருந்து (வந்துள்ள) சலுகை யாகும். யார் அதைப் பயன்படுத்திக் கொள்கி றாரோ அது நல்லதே. (எனினும் பயணத்தில்) நோன்பு நோற்க விரும்புகின்றவர் மீதும் குற் றம் இல்லை என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். இந்த ஹதீத் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், ஹாரூன் பின் சஈத்(ரஹ்) அவர்களது அறிவிப்பில், “இது சலுகையாகும்‘ என்றே இடம் பெற்றுள்ளது. “அல்லாஹ்விடமிருந்து‘ எனும் குறிப்பு இல்லை.  (முஸ்லிம் : 2062, 2685)

மற்றுமொரு ஹதீதில் நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பதாவது: அல்லாஹ் வழங்கிய சலுகையை ஒருவர் ஏற்க மறுத்தால் அவர் மீது “”அரஃபா”வின் மலைகள் அளவுக்குப் பாவம் (சோதனையாக வந்து) சேரும். (இப்னு உமர் (ரழி), முஸ்னது அஹ்மத், தஃப்ஸீர் இப்னு கஸீர்) மேலும்,

அபூரஜாஉ அல்உதாரிதீ(ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபித்தோழர் இம்ரான் பின் ஹுஸைன்(ரழி) அவர்கள் எங்களிடம் வந்தார் கள். அப்போது கம்பளி கலந்த கோடு போட்ட பட்டு மேலங்கி ஒன்று அவர்கள் மீது இருந்தது. அதற்கு முன் அவர்கள் மீது அந்த ஆடையை நாங்கள் கண்டதில்லை. அதற்குப் பிறகும் கண்டதில்லை. அப்போது அவர்கள் கூறினார் கள்.

ஒருவருக்கு அல்லாஹ் ஓர் அருட் கொடையை வழங்கினால் அந்த அருட் கொடையின் தடயம் தன் படைப்பின் மீது; அல்லது அந்த அடியான் மீது காணப்படுவதை அல்லாஹ் விரும்புகிறான் என்று அல்லாஹ் வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூரஜாஉ அல்உதாரிதீ(ரஹ்) அவர்கள், (முஸ்னத் அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர் : 1:493-496)

அல்லாஹ்வால் தள்ளுபடி செய்யப்பட் டதை  நீங்கள்  ஏற்றுக்கொள்ளுங்கள்” 

(மலக்குகள் கூறுகிறார்கள்; நபியே!) உமது இறைவனின் கட்டளையில்லாமல் நாம் இறங்க மாட்டோம்; எங்களுக்கு முன்னிருப்பதும், எங்களுக்கு பின்னிருப்பதும், இவ்விரண்டிற்கு மிடையில் இருப்பதும் அவனுக்கே (சொந்த மாக) இருக்கின்றன; உம்முடைய இறைவன் ஒருபொழுதும் (எதையும்) மறப்பவனல்லன்.” (அல்குர்ஆன்: 19:64) என்று கூறுகின்றது. இதற்கு முஜாஹித்(ரஹ்) அவர்கள், “உம்முடைய இறைவன் உம்மை மறந்துவிடவில்லை‘ என்று பொருள் கூறினார்கள். (தஃப்சீர் இப்னு கஸீர்: 5:628-631) மேலும்;

அபுத்தர்தா(ரழி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், அல்லாஹ் தனது மறையில் அனுமதித்த அனைத்தும் (உபயோகத்திற்கு) அனுமதிக்கப்பட்டவை யாகும். அவன் தடை செய்த அனைத்தும் (உப யோகத்திற்குத்)தடை செய்யப்பட்டவையா கும். எதைப் பற்றி எதுவும் கூறாமல் அவன் விட்டு விட்டானோ அது தள்ளுபடியானதா கும். அல்லாஹ்வால் தள்ளுபடி செய்யப்பட் டதை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். நிச்சய மாக அல்லாஹ் எதையும் மறந்துவிடுபவன் அல் லன்” என்று கூறிவிட்டு; உம்முடைய இறை வன் ஒரு பொழுதும் (எதையும்) மறப்பவனல் லன் எனும் இந்த (19:64) வசனத்தை ஓதிக் காட்டினார்கள். (ஹாகிம், பைஹகீ, தாரகுத்னீ, தஃப்சீர் இப்னு கஸீர்: 5:628-631)  மேலும் ஒரு வசனத்தின்  விளக்கமாவது:

“பிரயாணத்தில் தொழுகையைச் சுருக்கு வது அல்லாஹ்வின் சலுகையாகும்”

நீங்கள் பூமியில் பிரயாணம் செய்யும் போது, காஃபிர்கள் உங்களுக்கு வி­மம் செய் வார்கள் என்று நீங்கள் அஞ்சினால், அப் பொழுது நீங்கள் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது. நிச்சய மாக காஃபிர்கள் உங்களுக்குப் பகிரங்கமான பகைவர்களாக இருக்கின்றனர். (அல்குர்ஆன் : 4:101)  இவ்வசனம்  குறித்து;

யஅலா பின் உமய்யா(ரழி) அவர்கள் கூறி யதாவது: நான் உமர் பின் அல்கத்தாப்(ரழி) அவர்களிடம் “நீங்கள் பூமியில் பயணம் செய் தால், இறை மறுப்பாளர்கள் உங்களைத் துன் புறுத்துவார்கள் என நீங்கள் அஞ்சும்போது, தொழுகையைச் சுருக்கித் தொழுவதில் உங்கள் மீது தவறேதும் இல்லை” (4:101) என்றுதானே அல்லாஹ் கூறுகின்றான்! தற்போது மக்களுக் குப் பாதுகாப்பு ஏற்பட்டுவிட்டதே? என்று கேட்டேன். அதற்கு உமர்(ரழி) அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள். உங்களுக்கு ஏற்பட்ட வியப்பு(ம் ஐயமும்) எனக்கும் ஏற்பட்டது. எனவே இது குறித்து நான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் வினவினேன். அப்போது (இது) அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய கொடை (சலுகை) ஆகும். அவனது கொடையை (சலுகையை) ஏற்றுக்கொள்ளுங் கள் என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். இந்த ஹதீத் நான்கு அறிவிப் பாளர் தொடர்களில் வந்துள்ளது. மேற்கண்ட ஹதீத் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழி யாகவும் வந்துள்ளது. (முஸ்லிம்: 1222. அத்தியாயம்: 6, பயணிகள் தொழுகையும் சுருக்கத் தொழுகையும் மற்றும் திர்மிதி, அபூதாவூத், இப்னுமாஜா, நஸயீ, முஸ்னது அஹ்மத், தாரிமி, தஃப்சீர் இப்னு கஸீர் : 2:682-691)

நிச்சயமாக அல்லாஹ் பிரயாணிகளுக்குத் தொழுகையில் பாதியைக் குறைத்து சலுகை செய்துள்ளான். இவ்வாறே பிரயாணிக்கும் பால் கொடுப்பவர்களுக்கும், கர்ப்பிணிக்கும் நோன்பு நோற்பதை முழுமையாக (அல் லாஹ்) சலுகை செய்துள்ளான் என்று அல் லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அனஸ் பின் மாலிக்(ரழி), அபூதாவூத், திர்மிதி)

இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறிய தாவது: நாங்கள் மக்காவுக்கும், மதீனாவுக்கும் இடையே மேற்கொண்டதொரு பயணத்தில் எவ்வித அச்சமும் இன்றி பாதுகாப்பானவர் களாக இருந்த போதே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (நான்கு ரக்அத் தொழு கைகளை) இரண்டு இரண்டு ரக்அத்களாகத் தொழுதோம். (நஸயீ, முஸ்னது அஹ்மத், முஸன்னஃப்  இப்னு  அபீ ஷைபா)

யஹ்யா இப்னு அபீ இஸ்ஹாக்(ரஹ்) அவர்கள் அறிவித்ததாவது: நாங்கள் மதீனா விலிருந்து மக்காவை நோக்கி நபி(ஸல்) அவர் களுடன் புறப்பட்டோம். நபி(ஸல்) அவர்கள் மதீனா திரும்பும் வரை இரண்டிரண்டு ரக்அத் களாகத் தொழுதார்கள் என்று அனஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள். அப்போது நான்; நீங் கள் மக்காவில் எவ்வளவு நாட்கள் தங்கினீர் கள் என்று கேட்டேன். அதற்கவர்கள் பத்து நாள்கள் தங்கினோம் என்று விடையளித் தார்கள். (புகாரி: 1081,1082,1084,1657,4297, முஸ்லிம் 1233, 1235, 1237, திர்மிதி, அபூதாவூத், இப்னு மாஜா, நஸயீ, முஸ்னது அஹ்மத், தாரணி)

இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் அறிவித்தாவது: அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (மக்காவில்) பத்தொன்பது நாள்கள் தங்கினார்கள். அந்நாள்களில் இரண்டு இரண்டு ரக்அத் களாகக் கஸ்ருச் செய்தார்கள். (இதுபோன்றே) நாங்களும் பத்தொன்பது நாள்களுக்குப் பய ணம் மேற்கொண்டால் (இரண்டு ரக்அத்களாகச் சுருக்கிக்) கஸ்ருச் செய்வோம். (நாட்கள் அதைவிட) அதிகமானால் முழுமையாகத் தொழுவோம்.    (புகாரி: 1080, 4298)

அபுல் வத்தாக் ஜபீர் பின் நவ்ஃப்(ரஹ்) அவர்கள் கூறியதாவது: பயணத் தொழுகை யில் இரண்டு ரக்அத்கள் தொழுவதைப் பற்றி இப்னு உமர்(ரழி) அவர்களிடம் நான் கேட் டேன். அது வானத்தில் இருந்து (இறைவ னால்) அருளப்பெற்ற சலுகையாகும் என்று பதிலளித்தார்கள். (தஃப்ஸீர் இப்னு மர்தவைஹி) அதற்கு மேலும் சான்றாக;

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மூன்று மைல்கள் அளவு தூரம் அல்லது மூன்று பர்ஸக் அளவு தூரம் பயணம் செய்யும்போது (தொழுகைகளை சுருக்கி) கஸ்ர் செய்து இரண்டு இரண்டு ரக்அத்களாகத் தொழுவார் கள். (யஹ்யா பின் யசீது அல் ஹனாயீ(ரஹ்), முஸ்லிம் : 1230, அபூதாவூத், பைஹகீ, தஃப்ஸீர் இப்னு கஸீர், அஹ்மத்) அன்றைய அரபு நாட்டு மைல், அல்லது பர்ஸக் என்பது, 1748 மீட்டர். எனில் மூன்று மைல்களுக்கு 5244 மீட்டர் இதன் பிர காரம் 5¼ கிலோ மீட்டர் தூரமளவு பயணம் செய்பவர் கஸர் செய்யலாம் என்பதாக அறிகின்றோம்.

“அச்சமற்ற பயணத்திலும் சுருக்கித் தொழலாம்  என்பது  சலுகையாகும்”

அபூ ஹன்ழலா அல்ஹத்தாஉ (ரழி) அவர்கள் கூறியதாவது, பயணத் தொழுகை யைப் பற்றி இப்னு உமர்(ரழி) அவர்களிடம் நான் கேட்டேன். (அது) “இரண்டு ரக்அத்து களாகும்‘ என்று அவர்கள் பதிலளித்தார்கள். அப்போது நான் இறை மறுப்பாளர்கள் உங்க ளைத் தாக்குவார்கள் என நீங்கள் அஞ்சினால் என்ற அல்லாஹ்வின் சொல் என்னவாயிற்று? தற்போது நாம் பாதுகாப்புடனல்லவா இருக்கி றோம்! என்று வினவினேன். அதற்கு இப்னு உமர்(ரழி) அவர்கள் (இது) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் வழிமுறை என்று கூறினார்கள். (முஸ்னது அஹ்மத், முஸன் னஃப் இப்னு அபீஷைபா, தஃப்சீர் இப்னு கஸீர் : 2:682-691)  (இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Previous post:

Next post: