பார்வையை பாதுகாப்போம்! இஸ்லாமும் விஞ்ஞானமும் சொல்லும் உண்மை!

in 2026 அக்டோபர்

பார்வையை பாதுகாப்போம்! இஸ்லாமும் விஞ்ஞானமும் சொல்லும் உண்மை!

– எஸ். ஹலரத் அலி

முன்னுரை : இன்று இணைய உலகில் ஒரு (ளீயிஷ்உவ) கிளிக்கில் ஹராம் நம் கைக்குள் வருகிறது. இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே தடை செய்த..

“அன்னிய பெண்ணின் அந்தரங்கத்தை பார்ப்பது, ஆபாச படங்கள்” என்பதை இன்று விஞ்ஞானம் “பொது சுகாதார பேரிடர்” என்று  அழைக்கப்படுகிறது.

இந்தக் கட்டுரை இஸ்லாமிய போதனை களையும், நவீன விஞ்ஞான ஆய்வுகளையும் ஒப்பிட்டு, ஆபாசப் பழக்கத்தின் ஆபத்துகளை யும் அதிலிருந்து விடுபடும் வழிமுறைகளையும் விளக்குகிறது.

1. இஸ்லாம்  என்ன  சொல்கிறது?

இஸ்லாம் விபச்சாரத்தை மட்டும் தடை செய்யவில்லை. அதற்கு கொண்டு செல்லும் பாதைகளை யும் அடைத்துவிட்டது.

அ. பார்வையை  தாழ்த்தச்  சொன்னது:

அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்:

“(நபியே!) முஃமினான ஆண்களுக்கு நீர் கூறுவீராக; அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளவேண்டும்; தங்கள் வெட் கத்தலங்களைப் பேணிக்காக்க வேண்டும்!”
அல்குர்ஆன் 24:30

இதே கட்டளை பெண்களுக்கும் அடுத்த வசனத்தில் வருகிறது.  (24:31)

இந்த வசனங்கள் பார்வையைத் தாழ்த்து வது மட்டுமல்லாமல், அடக்கத்தைப் பேணுவதையும்  வலியுறுத்துகின்றன. 

3. நெருங்கவே வேண்டாம் என்றது:

“நீங்கள் விபச்சாரத்தை நெருங்கவும் வேண்டாம்! நிச்சயமாக அது மானக்கேடானதாகவும், தீயதாகவும் இருக்கிறது!”  அ.கு.17:32

செய்யாதே என்று சொல்லவில்லை, நெருங்காதே என்கிறான். பார்ப்பது தான் முதல் படி. 

இ. நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கை!

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ஒரு பார்வைக்குப் பின் இன்னொரு பார் வையை தொடராதே! முதல் பார்வை உனக்கு அனுமதிக்கப்பட்டது. இரண்டாவது உனக்கு கூடாது!” திர்மிதி : 2777. (ஹஸன்)

மேலும், “கண்கள் விபச்சாரம் செய்கின் றன. அதன் விபச்சாரம் (ஹராமான) பார்வை யாகும்!” புகாரி : முஸ்லிம். என்ற ஹதீதும் இதை  உறுதிப்படுத்துகிறது.

2. விஞ்ஞானம் என்ன சொல்கிறது?

அ) மூளை பாதிப்பு, போதை போல மாறுகிறது:

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு (2015)

அதிமாக ஆபாசம் பார்ப்பவர்களின் மூளையில் போதை பொருள் அடிமைகளுக்கு ஏற்படுவது போலவே ஏற்படுகிறது என்கிறது. இந்த ஆய்வில், 22 பாலியல் நடத்தை கோளாறு உள்ள ஆண்களும், 40 ஆரோக்கிய மான ஆண்களும் ஒப்பிடப்பட்டனர்.

பாலியல் நடத்தை கோளாறு உள்ளவர் கள் புதிய பாலியல் படங்களுடன் தொடர்பு டைய குறிப்புகளுக்கு அதிக கவனம் செலுத்தி னர். டோபமைன் சுரப்பு கட்டுப்பாட்டை இழக்கிறது. இது தற்காலிக இன்பத்திற்காக மூளையை  அடிமையாக்கும் நோய்.

ஆ. மனநல  சீர்கேடு :

2024ல் வெளிவந்த றீதீவிமிeதுழிமிஷ்உ யூeஸஷ்eழ ழிஐd னிeமிழி புஐழியிதீவிஷ்வி  ஆய்வு:

ஆபாச பழக்கம் உள்ளவர்களுக்கு மன அழுத்தம், பதட்டம், தன்னம்பிக்கை குறைவு, தற்கொலை எண்ணம் அதிகம் என்று உறுதி செய்கிறது. ஏனெனில் ஆபாசத்தில் காட்டப் படும் பொய்யான உடலமைப்பு, நடிப்பு நிஜ வாழ்க்கையுடன் ஒப்பிடும்போது தாழ்வு மனப்பான்மையை  உருவாக்குகிறது.

20 ஆய்வுகளில் 2,021 பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய இந்தமெட்டா அனாலிசிஸ். ஆபாச பழக்கத்திற்கான சிகிச்சையில் அறி வாற்றல் நடத்தை சிகிச்சை  (ளீயவீ) மற்றும் ஏற்பு மற்றும் உறுதிப்பாடு சிகிச்சை (புளீவீ) ஆகியவை பயனுள்ளதாக  இருப்பதைக்  காட்டுகிறது.

இ. தாம்பத்திய  வாழ்வு  அழிவு!

அமெரிக்காவில் 617 திருமணமான தம் பதிகளிடம் நடத்திய ஆய்வில், ஆண்களின் ஆபாசப் பயன்பாடு அவர்களின் தாம்பத்திய திருப்தியுடன் எதிர்மறையாக தொடர்பு டையது என்று கண்டறியப்பட்டது. மேலும் “Pலிrஐ–ணூஐdற்உed சிreஉமிஷ்யிe ம்தீவிக்ஷூற்ஐஉமிஷ்லிஐ (Pணூசிம்)” என்ற புதிய நோய் இளைஞர்களிடம் அதிகரித்து வருகிறது. அதாவது உண்மையான மனைவி யுடன் உறவு கொள்ள முடியாமல், திரையில் மட்டுமே உணர்ச்சி வரும் நிலை.

2016ஆம் ஆண்டு Pழிrவ மற்றும் சகாக்கள் நடத்திய ஆய்வில், Pணூசிம் உள்ளவர்கள் பொது வாக ஆபாச பழக்கத்திலிருந்து தொடங்குவ தாகக்  கண்டறியப்பட்டது.

ஈ. சமூகக் கேடு!

இது தனிமையை அதிகரிக்கிறது. பெண்களை போகப் பொருளாக பார்க்கும் கண் ணோட்டத்தை உருவாக்குகிறது. இதனால் பாலியல் வன்முறை, விவகாரத்து விகிதம் அதிகரிக்கிறது என்று சமூகவியல் ஆய்வுகள் கூறுகின்றன. ஆபாசப் பயன்பாடு வன்முறை பாலியல் குற்றங்கள் மற்றும் குடும்ப உறுதி யற்ற தன்மையை அதிகரிக்கிறது என்று 2006ஆம் ஆண்டு ஆய்வு காட்டுகிறது. கிராமப் புற அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில், ஆபாசம் பெண்களுக்கு எதிரான வன்முறை யுடன் தொடர்புடையது என்று கண்டறியப் பட்டது.

3. தீர்வு  என்ன?

இஸ்லாம்தடைசெய்ததோடுநிற்கவில்லை. தீர்வையும் தந்தது.

1. திருமணத்தை  இலகுவாக்குங்கள்!

“உங்களில் திருமணம் செய்ய இயலாத வர்கள் நோன்பு நோற்கட்டும், அது அவருக்கு கட்டுப்பாடாக இருக்கும். தகுதி வந்தவுடன் திருமணம் செய்யுங்கள்.  புகாரி : 5066

2. பார்வையை திருப்புங்கள்: தவறானது என்று தெரிந்தால் உடனே இஸ்திஃபார் செய்து பார்வையை மாற்றுவது.

3. தனிமையை தவிர்ப்பது : நல்ல நட்பு, குர்ஆனுடன் தொடர்வு.

4. மருத்துவ உதவி : ஆபாசப் பழக்கத்தி லிருந்து வெளியே வர முடியாமல் தவிப்பவர் கள், நம்பிக்கையான ஒரு மார்க்க அறிஞரி டமோ, மருத்துவ ஆலோசகரிடமோ உதவி கேளுங்கள். அல்லாஹ் மன்னிப்பவன்.

முடிவுரை : அல்லாஹ் நம் கண்களை ஆபாசத்தை பார்க்க படைக்கவில்லை, அவன் அழகிய படைப்புகளை, குர்ஆனை பார்க் கவே படைத்தான். விஞ்ஞானம் இன்று சொல் வதை குர்ஆன் அன்றே சொன்னது. பார் வையை பாதுகாப்பவனின் உள்ளத்திற்கு அல் லாஹ் ஈமானின் இன்பத்தை கொடுக்கிறான். இந்தப் பழக்கத்திலிருந்து வெளியே வரமுடி யாமல் தவிப்பவர்கள், தனியாக போராட வேண் டாம். நம்பிக்கையான ஒரு மார்க்க அறிஞரி டமோ, மருத்துவ ஆலோசரிகடமோ உதவி கேளுங்கள்.  அல்லாஹ்  மன்னிப்பவன்!

Previous post:

Next post: