இஸ்லாமிய வரலாற்றில் ஓர் ஏடு!
– எஸ். ஹலரத் அலி
“என் நெற்றியில் முத்தமிடு, உன்னை விடுதலை செய்கிறேன்! ரோமானிய மன்னன் முன் ஒரு ஸஹாபி!”
ஹிஜ்ரி 19, உமர்(ரழி) அவர்களின் கிலாஃபத்!
ரோமானிய பேரரசர் யஹராக்ளிய ஸுக்கு எதிராக, இஸ்லாமிய படை போரிட்டுக்கொண்டிருந்தது. அதில் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா(ரழி) அவர்கள் கைதியாக பிடிக்கப்பட்டார். அவரை ரோமானிய அரண்மனைக்கு கொண்டுவந்தார்கள். யஹராக்ளியஸ், ஆச்சரியப்பட்டான். ஒரு அரபி, எந்த பயமும் இல்லாமல் நிற்கிறார்.
மன்னன் சொன்னான் :
“நீ இஸ்லாத்தை விட்டு கிறிஸ்தவனாக மாறு! உனக்கு என் ஆட்சியில் பாதியை தருகிறேன்! என் மகளையும் திருமணம் செய்து தருகிறேன்!”
அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா(ரழி) ஒரே வார்த்தையில் சொன்னார்.
“அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீ உன் முழு ஆட்சியையும், அரேபியர்களின் முழு ஆட்சியையும் கொடுத்தாலும், ஒரு கண் இமைக்கும் நேரம் கூட முஹம்மது (ஸல்) அவர்களின் மார்க்கத்தை நான் விடமாட் டேன்”
மன்னன் கோபமடைந்தான், அவரை சிலுவையில் அறையச் சொன்னான். அம்பு வீரர்களை அவர் கை, காலுக்கு அருகே அம்பு எய்யச் சொன்னான், பயமுறுத் தினான். அப்துல்லாஹ்(ரழி) அசரவில்லை! பிறகு மன்னன் ஒரு தந்திரம் செய்தான் பன்றி இறைச்சியும், மதுவும் கலந்த உணவை பல நாட்கள் பசியில் இருந்த அவருக்கு கொடுத்தான்.
அப்துல்லாஹ்(ரழி) சொன்னார் :
அல்லாஹ் தேவை நேரத்தில் இதை எனக்கு ஹலாலாக்கி இருந்தாலும், காஃ பிர்களை என்னை பார்த்து சிரிக்க வைக்க நான் விரும்பவில்லை! உணவை தொட வில்லை! கடைசியில் மன்னன் வேறு வழியில்லாமல் சொன்னான் :
“சரி என் நெற்றியில் ஒரே ஒரு முத்தம் கொடு, உன்னையும் உன்னோடு உள்ள 80 முஸ்லிம் கைதிகளையும் நான் விடுதலை செய்கிறேன்!”
அப்துல்லாஹ்(ரழி) யோசித்தார். இது என் தனிப்பட்ட கண்ணியத்தை விட 80 முஸ்லிம்களின் விடுதலை! இது இஸ்லாத் திற்காக! அவர் சம்மதித்து மன்னனின் நெற்றியில் முத்தமிட்டார். மன்னன் வாக்குறுதிப்படி 80 பேரையும் விடுதலை செய்தான்! அவர்கள் மதீனா வந்தபோது உமர் (ரழி) அவர்கள், இந்த சம்பவத்தை கேட்டு, எழுந்து, அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா (ரழி) அவர்களின் நெற்றியில் முத்தமிட் டார்! மற்ற ஸஹாபாக்களையும் முத்த மிடச் சொன்னார்.
ஒவ்வொரு முஸ்லிமும் இப்னு ஹுதாஃபாவின் நெற்றியில் முத்தமிடுவது கடமை! நான் ஆரம்பிக்கிறேன்! உமர்(ரழி)
இதில் படிப்பினை என்ன?
1. ஈமான் பதவி, பெண், பணத்திற்காக, விலை போகாது!
2. ஒரு முஸ்லிமின் விடுதலைக்காக தன்மானத்தை கூட தியாகம் செய்யலாம்!
3. தலைவர் தன் வீரனை கண்ணியப் படுத்த வேண்டும். உமர்(ரழி)