தலையங்கம் : 2060ல் முதியவர் 19.6% அதிகரிப்பு… சிறுவர் 7% குறைவு! இஸ்லாம் கூறும் எச்சரிக்கை!! “உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும்” “படைத்தவன் உங்களுக்கு அருள் புரியட்டும்” அந்த ஒரே இறைவன் பெயரால்…. இது இன்றைய உலகின் – Biggest Crisis : இது பற்றி… குர்ஆன், ஹதீதில் நேரடியாக 2 விசயம் உண்டு! 1. குர்ஆனில் முதுமை பற்றி என்ன சொல்கிறது? குர்ஆன் மனித வாழ்க்கையை 4 பாகங்களாக […]
மனிதரில் பிரிவுகள் ஏன்? எப்படி ஏற்படுகின்றன? – அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு : எல்லாம் வல்ல அல்லாஹ் மனித வர்க்கத்தை ஆதம்-ஹவ்வா(அலை) என்ற ஒரே ஜோடியிலிருந்தே படைத்திருக்கிறான். மனிதர்கள் அனைவரும் ஒரு தாய் தந்தை வழியில் வந்தவர்கள். அவர்களது இறைவனும் ஒருவனே. அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாழ்க்கை நெறி-மார்க்கம்-நேர்வழி ஒன்றே. இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் அனைவரும் ஒரே குரலில் அந்த ஒரே கொள்கையைப் போதித்துள்ளனர். இந்த நிலையில் மனிதரிடையே பற்பல மதங்கள். அந்த பல மதங்களிலும் பற்பல […]
நபித்தோழர்கள் வாழ்வில்…! எஸ். ஹலரத் அலி கஅப் பின் மாலிக்(ரழி) அவர்களின் உண்மை, இன்றைய மக்களுக்கு ஒரு பாடம்! நபித்தோழர்களின் வாழ்வு நமக்கு வெறும் வரலாறு அல்ல. வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய பாடங்கள் அதில் ஒரு முக்கியமான சம்பவம். கஅப்பின் மாலிக்(ரழி) அவர்களின் உண்மைப் பேச்சு. தபூக் போருக்கு நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களை அழைத்தபோது, கஅப்(ரழி) அவர்கள் தவறவிட்டார். அவருக்கு உடல் பலம் இருந்தது. செல்வமும் இருந்தது. ஆனால் தயக்கம், காலதாமதம் காரணமாக போருக்குப் புறப்படாமல் விட்டுவிட்டார். […]
வருடாந்தர அனர்த்தங்களினால் படிப்பினை பெறுவதில்லையா? அபூ இஸ்ஸத், இலங்கை பூமியில் அவர்கள் பிரயாணம் செய்யவில்லையா? (அவ்வாறு பிரயாணம் செய்வார்களாயின்) உணர்ந்து கொள்ளக்கூடிய இதயங்கள் அதன்மூலம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும், அல்லது (நல்லுபதேசத்தைக்) கேட்கக்கூடிய காதுகள் அதன் மூலம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும், நிச்சயமாக அவர்களுடைய (வெளிப்) பார்வைகள் குருடாகவில்லை, எனினும் நெஞ்சங்களிலுள்ள (அவர்களுடைய) இதயங்கள் குருடாகிவிட்டன. (அல்குர்ஆன் 22:46) என்று அல்லாஹ் சொல்வதன் மூலம் நாம் புரிந்து கொள்வது என்ன? அதாவது வெறுமனே உடலோடு மட்டும் பயணிக்காமல் உடலோடும் சிந்தனைத் […]
உள்ளே! வெளியே! அ. நஜ்முத்தீன் “நிச்சயமாக தொழுகை வெட்கக்கேடான காரியங்களையும், தீமையையும் தடுக்கும்.” அல்குர்ஆன் 29:45 மேற்கண்ட வசனத்தில், வெட்கக்கேடான காரியங்களையும், தீமையையும் தொழுகை தடுக்கும் என்று இறைவன் கூறுகிறான். ஆனால் பெரும்பாலோருக்கு எது வெட்கக்கேடான செயல்கள், எது தீமையான செயல்கள் என்பது முழுமையாகத் தெரியாமல் இருக்கிறது. ஒருசில செயல்களை மட்டும் வெட்கக்கேடானவை என்றும், ஒருசில செயல்களை மட்டும் தீமையானவை என்றும் நினைக்கின்றனர். விபச்சாரம் வெட்கக்கேடான செயல் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இறைவன் திருக்குர்ஆனில் […]
அறிந்து கொள்வோம்! ரஹிமுத்தீன், குண்டூர் 1. “ஸம்மிலூனி” என்றால் என்ன? என்னைப்போர்த்துங்கள்என்றுபொருள். புகாரி : 3 2. அபூஸுஃப்யான்(ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு என்ன உறவு முறை? மாமனார். ஆதாரம் : அல்ரஹீக் அல்மக்தூம், பக்கம் 577 3. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ரோமப் பேரரசராக இருந்தவர் யார்? ஹிரக்கல். புகாரி : 7 4. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இப்யாவின் (ஜெருசலேம்) ஆளுநராக இருந்தவர் யார்? கிறிஸ்துவர்களின்தலைவர். இப்னுந் நாதூர், புகாரி […]
அன்பளிப்பு – கொடுப்பதும்! வாங்குவதும்!! M. சையத் முபாரக், நாகை நோக்கம் அனுமதி : அன்பு + அளிப்பு = அன்பளிப்பு. அன்பை பகிர்ந்துகொள்வதே அன்பளிப்பு. சக மனிதர்களிடம் அன்புடனும் பாசத்துடனும் இணைந்து வாழவேண்டும் என்பதுவே அன்பளிப்பு களைப் பகிர்ந்து கொள்வதின் நோக்கம் ஆகும். அன்பை வெளிப்படுத்துவதற்காக கொடுக்கவும், வாங்கவும் செய்யும் பரிசுப் பொருளே அன்பளிப்பு. “நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பளிப்பு செய்யுங்கள். அதனால் உங்களில் ஒருவர் மற்றொருவருக்கு விருப்பம் உள்ளவராக ஆகிவிடுவார்” என நபி(ஸல) அவர்கள் கூறினார்கள். […]
நினைத்தாலே கசக்குது….. (முஸ்லிம் சமூகம் கண்ட மாற்றம்) அ. நஜ்முத்தீன் பொதுவாக “நினைத்தாலே இனிக்கும்” என்றுதான் சொல்வார்கள். ஆனால், “நினைத்தாலே கசக்குது” அது என்ன? அது முஸ்லிம் சமூகம் கண்ட மாற்றம்: மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது. ஆனால் அந்த மாற்றம் முஸ்லிம் சமூகத்தை உண்மையிலேயே முன்னேற்றத்திற்குக் கொண்டு சென்றுள்ளதா? தமிழக முஸ்லிம் சமூகம் 1980ம் ஆண்டுக்கு முன்பு எப்படி இருந்தது? இப்போது எப்படி இருக்கிறது? இந்த மாற்றத்தை விரிவாக ஆராய்ந்து பார்ப்பது ஒரு முக்கியமான […]
மனிதன் – நடமாடும் களிமண்! எஸ். ஹலரத் அலி குர்ஆனும், அறிவியலும் ஒரு புதிரை விடுவிக்கும்போது… “அவன் படைத்த ஒவ்வொன்றையும் அழகாக்கினான்; மனிதனைக் களிமண்ணில் இருந்து ஆரம்பித்தான்!” அல்குர்ஆன் 32:7 இந்த ஒரு ஆயத்தில் நிலவியல், உயிரியல், வேதியியல், அழகியல் என நான்கு அறிவியல் துறைகள் அடங்கியுள்ளன. சுபஹானல்லாஹ்! இது வெறும் வர்ணனை அல்ல, நவீன அறிவியல் உறுதிப்படுத்தும் ஒரு பிரம்மாண்ட உண்மை! மனித உடல் = களிமண்ணின் மினரல் லிஸ்ட்! விஞ்ஞானிகள் […]
வெட்டுக்கிளி…. அ. நஜ்முத்தீன் அவர்கள் மண்ணறைகளிலிருந்து வெளியேறும் நாளில், வெட்டுக்கிளிகளைப் போல் மண்ணறை யிலிருந்து வெளியாவார்கள். அல்குர்ஆன் 54:7 மேற்கண்ட வசனம் நம்மை ஒரு கேள்வியையும் ஆழமான சிந்தனையையும் நோக்கி அழைக்கிறது. மறுமை நாளில் மண்ணறைகளிலிருந்து மனிதர்கள் வெளியே வருவார்கள் என்று அல்லாஹ் கூறியிருக்கலாம். அவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு எந்தக் கடினமும் அல்ல. ஆனால் அல்லாஹ், “வெட்டுக்கிளிகளைப் போல்” வெளியே வருவார்கள் என்று கூறுகிறான். அல்லாஹ் வெட்டுக்கிளியை உவமை யாகக் கூறியதற்குப் பின்னால் ஒரு சிந்திக்கத் […]
இஸ்லாமிய வரலாற்றில் ஓர் ஏடு! – எஸ். ஹலரத் அலி “என் நெற்றியில் முத்தமிடு, உன்னை விடுதலை செய்கிறேன்! ரோமானிய மன்னன் முன் ஒரு ஸஹாபி!” ஹிஜ்ரி 19, உமர்(ரழி) அவர்களின் கிலாஃபத்! ரோமானிய பேரரசர் யஹராக்ளிய ஸுக்கு எதிராக, இஸ்லாமிய படை போரிட்டுக்கொண்டிருந்தது. அதில் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா(ரழி) அவர்கள் கைதியாக பிடிக்கப்பட்டார். அவரை ரோமானிய அரண்மனைக்கு கொண்டுவந்தார்கள். யஹராக்ளியஸ், ஆச்சரியப்பட்டான். ஒரு அரபி, எந்த பயமும் இல்லாமல் நிற்கிறார். மன்னன் சொன்னான் : “நீ […]
ஜும்ஆ தொழுகைக்கான முன்கூட்டியே அழைப்பும்! தற்காலச் சமூக நிலைப்பாடுகளும்! – எஸ். ஹலரத் அலி ஒரு விரிவான ஆய்வுக்கட்டுரை : இஸ்லாமிய (இயற்கை இறைநூல் வாழ்வி யல் அறிநெறி) மார்க்கத்தில் தொழுகை என்பது மனிதர்களின் ஆன்மீக மற்றும் லெளகீக வாழ்க்கையை ஒழுங்குபடுத்துகின்ற மிக முக்கியமான தூணாகும். திருக்குர்ஆன் தொழுகையின் சிறப்பையும், அதன் நேர ஒழுங்கு முறையையும் பல்வேறு கோணங் களில் விளக்குகிறது. குறிப்பாக, சூரா அன் நூர் “”சில மனிதர்கள் இருக்கிறார்கள்; வியாபா ரமோ அல்லது கொடுக்கல் […]
அவனது சட்டதிட்டங்களைப் பேணுவதைப் போன்றே அவன் வழங்கிய சலுகைகளையும் அனுபவிக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் விருப்பமாகும்! எஸ். அமீர், நிந்தாவூர், இலங்கை. தூய இஸ்லாத்திலுள்ள சட்டதிட்டங்களைப் பேணுவதைப் போன்றே அதிலுள்ள சலுகைகளையும் மனிதன் அனுபவிக்க வேண் டும் என்பது அல்லாஹ்வின் விருப்பமாகும். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தான் விதித்த கட்டாயக் கடமைகள் நிறைவேற்றப்படுவதை எவ்வாறு அல்லாஹ் விரும்புகின்றானோ அதைப் போன்றே தன் னால் வழங்கப்பெற்ற சலுகைகளும் பயன் படுத்தப்படுவதையும் அவன் விரும்புகின் றான். (அறிவிப்பவர் […]
பார்வையை பாதுகாப்போம்! இஸ்லாமும் விஞ்ஞானமும் சொல்லும் உண்மை! – எஸ். ஹலரத் அலி முன்னுரை : இன்று இணைய உலகில் ஒரு (ளீயிஷ்உவ) கிளிக்கில் ஹராம் நம் கைக்குள் வருகிறது. இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே தடை செய்த.. “அன்னிய பெண்ணின் அந்தரங்கத்தை பார்ப்பது, ஆபாச படங்கள்” என்பதை இன்று விஞ்ஞானம் “பொது சுகாதார பேரிடர்” என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கட்டுரை இஸ்லாமிய போதனை களையும், நவீன விஞ்ஞான ஆய்வுகளையும் ஒப்பிட்டு, ஆபாசப் பழக்கத்தின் ஆபத்துகளை யும் […]
இறைவனுக்கு நன்றி செலுத்துவது எப்படி? அ. நஜ்முத்தீன் இஸ்லாமிய பார்வையில் இறைவனுக்கு நன்றி செலுத்துதல் (ஷிக்ர்) என்பது வெறும் “அல்ஹம்துலில்லாஹ்” என்று சொல்வது மட்டும் அல்ல. உள்ளத்தால் உணர்ந்து, நாவால் புகழ்ந்து, உடல்–செயல்களால் அந்த அருளை நல்ல வழியில் பயன்படுத்துவது தான் முழுமையான நன்றி. 1. உள்ளத்தால் நன்றி செலுத்துதல் : முதலில், நமக்கு கிடைத்த ஒவ்வொரு நன்மையும் இறைவனிடமிருந்தே வருகிறது என்பதை உள்ளத்தில் உணரவேண்டும். “உங்களுக்கு இருக்கும் எந்த அருளும் அல்லாஹ்விடமிருந்தே வந்ததாகும்”. […]