வருடாந்தர அனர்த்தங்களினால் படிப்பினை பெறுவதில்லையா?

in 2026 மார்ச்

வருடாந்தர அனர்த்தங்களினால் படிப்பினை பெறுவதில்லையா?

அபூ இஸ்ஸத், இலங்கை

பிப்ரவரி  தொடர்ச்சி….

அதற்கு அவர்கள், “ஷிஐபே! நீர் சொல் கின்றவற்றில் பெரும்பாலானவை எங்களுக்குப் புரியவில்லை.  (11:91)  என்றும், 

நிச்சயமாக நீர் சூனியம் செய்யப்பட்டு அதனால் பாதிக்கப்பட்டோரில் ஒருவர்தான்என்று  கூறினார்கள்.   (26:185) 

மேலும், நீரும் எங்களைப் போன்ற ஒரு சாதா ரண மனிதரே! தவிர வேறு விசேசம் இல்லை என்றே  கருதுகிறோம்  (26:186)  என்றும்,

நிச்சயமாக உம்மை எங்களிலேயே மிகவும் பலவீனமான மனிதராகத்தான் நாங்கள் காண்கிறோம். என்றும், 

உம்முடைய உறவுமுறைக் கூட்டத்தார் மாத்திரம் இல்லையயன்றால் நிச்சயமாக உம்மை நாங்கள் கல்லெறிந்து கொண்டிருப் போம் என்றும்,

நீர் எங்களிடம் மரியாதைக்குரியவர் அல்லர் என்றும் கூறினார்கள். (11:91) 

உம்மை நாங்கள் பொய்யர்களில் உள்ள வர்களில் ஒருவர் என்றே கருதுகிறோம். (26:186) என்றார்கள்,  அவ்வாறில்லாது;

நீர் உண்மையாளர்களில் ஒருவராக இருந்தால், வானம் இடிந்து பல துண்டு துண்டுகளாக எங்கள் மீது விழச்செய்வீராக!” (26:187) என்றும்  அவர்கள்  கூறினார்கள்.

அதற்கு அவருடைய சமூகத்தார்களில் கர்வம் கொண்ட பிரமுகர்கள்ஷிஐபே! உம்மையும் உம்முடன் உள்ள இறை நம்பிக்கை கொண்டோரையும் எங்கள் ஊரிலிருந்து நாங்கள் வெளியேற்றியே தீருவோம். அல்லது எங்களது பூர்வீக மார்க்கத்திற்கு நீங்கள் திரும்பி வந்தாக வேண்டும் என்றும் கூறினார்கள்.   (7:88)

அவருடைய சமுதாயத்தாரில் ஏக இறை வனை ஏற்க மறுத்த பிரமுகர்கள், “நீங்கள் ஷிஐபைப் பின்பற்றினால் நிச்சயமாக இழப் புக்குள்ளாகுவீர்கள்  என்றும்  கூறினார்கள்.    (7:90) 

மேலும், அவர்கள்ஷிஐபே! எங்கள் முன்னோர்கள் வணங்கி, வழிபட்டு, வந்தவற்றையும், எங்கள் பொருட்களில், செல்வங்களில், நாங்கள் விரும்பியவாறு செயல்படுவதையும் நாங்கள் கைவிட வேண்டும் என்று கட்டளையிடுமாறு உமது தொழுகை தான் உம்மைத் தூண்டுகிறதோ? நிச்சயமாக நீர் பெரிய மனதுக்காரர்தான்; மிகவும் நல்ல மனிதர்தான்; அந்த பாவத்தினால்; ஷிஐப்(அலை) அவர்களையும், அவருடைய தோழர்களையும் அவர்கள் மிரட்டி நடுங்க வைத்து ஊரை விட்டும் வெளியேற்றுவோம் என்று கூறினார்கள். அதற்கு அவர் (அவர்களை நோக்கிஉங்கள் மார்க்கத்தை) நாங்கள் வெறுத்த போதிலுமா?  என்று கேட்டார்.      (7:88)

நீர் உண்மையாளர்களில் ஒருவராக இருந்தால் வானம் (இடிந்து) துண்டு துண்டுகளாக எங்கள் மீது விழச் செய்வீராக! (28:187, 17:92) என்று அவர்கள் நபியிடம் கூறியபோது, அல்லாஹ் அச்சமூகத்தார் மீது இடியையும், ஏழு நாட்களாகக் கடுமையான வெப்பத்தையும் அனுப்பினான். அவர்களுக்கு மூச்சு முட்டியது தமது வீடுகளில் இருந்து வெட்ட வெளிக்கு ஆசுவாசத்திற்காக ஓடினார்கள். கடுமையான சூரிய வெப்பம் சுட்டெரிக்கும் அவ்வேளையில் அவர்களுக்கு நிழல் தர எதுவும் இருக்கவில்லை. பின்னர் அவர்களுக்காக நிழல் போன்ற ஒரு மேகத்தை அல்லாஹ் உருவாக்கினான்.

அதனை அவர்கள்கண்ணால்பார்த்த போது தமக்கு நிழலாக வந்த மேகம் என்று கருதினார்கள். அவர்களதுகண்களும்பொய் தான் சொன்னது அப்போது! அவர்களில் ஒருவர் அந்த மேகத்தின் கீழே நிழல் பெறச் செல்வார். அம்மேகத்தின் இதமான குளிர்ச்சியையும் நிம்மதியையும் சிறிது அனுபவிப்பார். ஓடிச் சென்று அது குறித்துத் தமது சமூகத்தாருக்கும்  தெரியப்படுத்துவார்.

அப்போது அவர்கள் அனைவரும் அங்கு வந்து அந்த மேகத்தின் கீழே நின்று நிழல் பெறுவார்கள். அந்நேரத்தில் அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த பின்னர் அவர்களிடமிருந்து அந்த குளிரான நிழலை அல்லாஹ் அகற்றிவிடுவான். அதிலிருந்து அவர்கள் மீது நெருப்புத் துண்டுகளை அம்மேகம் உமிழும். சூரியன் சுட்டெரித்து அவர்கள் அனைவரும் வறுக்கும் சட்டியில் போடப்பட்ட வெட்டுக் கிளியைப் போன்று எரிந்து கருகிப் போனார்கள். (அப் துல்லாஹ் பின் உமர்(ரழி) இப்னு அப்பாஸ் (ரழி), அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல் ஆஸ் (ரழி), அப்துர்ரஹ்மான் பின் ஸைத்(ரஹ்), யஸீத் அல்பாஹிலீ (ரஹ்), தஃப்ஸீர் இப்னு அபீஹாத்திம், தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 6, பக்கம் 610-613) இதனைத்தான்; மேகம் நிழலிட்ட நாளின் வேதனையாகும். அது மகத்தான நாளின் வேதனையாக அமைந்தது என்று ஏகனாகிய இறைவன் கூறுகின்றான்.  (26:189)

பேரீரைச்சலுடன் கல்மாரி பொழிந்து அழிக் கப்பட்டஸமூதுசமுதாயத்தவர்கள்:

எனவே, ஸமூது கூட்டத்தார் (அண்டம் கிடுகிடுக்கச் செய்யும்) பேரிரைச்சலால் அழிக் கப்பட்டனர். (அல்குர்ஆன் 69:5) என்று உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான். அரபு மொழியில்அத்தாஃகியாஎன்றால் பேரிரைச்சல் அதாவது; அந்தக் கூட்டத்தினரை வாயடைக்கச் செய்த பேரிரைச்சல், முற்றுமுழுதாக முடங்கச் செய்த பூகம்பம் என்று பொருள் என்பதாக கத்தாதா(ரஹ்), இமாம் இப்னு ஜரீர்(ரஹ்), ஆகியோர் கூறியுள்ளார்கள். (தஃப்சீர் இப்னு கஸீர் : 9:610-617)

இறைத்தூதர் ஸாலிஹ்(அலை) அவர்களுடைய சமுதாயத்தவர்களும் அவர்களை ஏற்றுக் கொள்ள மறுத்ததுடன் அவர்களுடையஹிஜ்ர்எனும் பகுதியின் ஓரத்தில் தனியாகக் கிடந்த ஒரு பாறையைக் குறிப்பிட்டு அதிலிருந்து சூல் கொண்ட நிறைமாத ஒட்டகம் ஒன்று தமக்காக வெளிவர வேண்டும் என்று கோரினார்கள். அப்போது இறைத்தூதர் ஸாலிஹ் (அலை) அவர்கள் எழுந்து நின்று தொழுது விட்டு வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிந்தார்கள். அப்போது அந்தப் பாறை அசைந்தது. பின்னர் அந்தப் பாறை பிளந்து அதிலிருந்து அவர்கள் கேட்டதைப் போன்றே வயிறு புடைத்த நிறைமாத சினை ஒட்டகம் ஒன்று வெளிப்படுத்தப்பட்டது அதன் விலாப் பகுதிகளுக்கு இடையே அதன் வயிற்றிலுள்ள குட்டி அசைந்தது. (7:73, 54:28, 26:155, 91:11) தஃப்சீர் இப்னு கஸீர் பாகம் 3, பக்கம் 807-816) அந்த ஒட்டகம் அந்தப் பகுதியிலுள்ள பள்ளத்தாக்குகள் ஒன்றில் மேய்ந்து திரியும் ஒரு குறுகிய பாதை வழியாக வந்த வயிறு முட்ட நீர் அருந்திய காரணத்தால் விசாலமான வேறு ஒரு பாதை வழியாகத் திரும்பும். அந்த ஒட்டகமானது ஒரு குட்டியையும் ஈன்றது. தாய் ஒட்டகமும் அதன் குட்டி யையும் ஸமூது கூட்டத்தாரிடையே சிறிது காலமே இருந்தன.

ஆனாலும் நபி ஸாலிஹ்(அலை) அவர்களை அந்த மக்கள் கடுமையாக மறுத்ததுடன் அந்த ஒட்டகத்தையும் கொலை செய்யத் திட்டமிட்டு; அது வரும் பாதையிலுல்ள ஒரு பாறையின் அடிப்பகுதியில் ஒளிந்திருந்துகுதார்என்பவன் தனது வாளால் அவ் ஒட்ட கத்தைப் பலமாகத் தாக்கி அதன் பின்னங்கால் தொடைப் பகுதியிலுள்ள தசை நாரை வெளியே எடுத்தான். உடனே அது பிடிமானம் இல்லாது தரையில் சரிந்து விழுந்தது. தனது குட்டியை எச்சரிக்கும் வகையில் ஒருமுறை கத்தியது. உடனே அதன் குட்டியானது ஓடிப்போய் யாருமே வந்துசேர முடியாத ஒரு மலைக்கு வந்து அதன் உச்சியிலுள்ள ஒரு பாறையின் மீது ஏறி நின்றுகொண்டு கத்தியது. கொலைவெறித் தாக்குதல் நடத்தி அதன் தாயைக் கொன்றுவிட்டார்கள். ஸாலிஹ் (அலை) அவர்கள் ஒட்டகத்தைப் பார்த்ததும், அழலானார்கள். 

பின்னர் அந்த மக்களை நோக்கி நீங்கள் உங்கள் இல்லங்களில் மூன்று நாட்கள் வேண்டியதை அனுபவித்துக் கொள் ளுங்கள். (11:65) என்று கூறினார். ஆனால் அவர்களோ ஸாலிஹ்(அலை) அவர்களையும் கொல்வதற்குத் திட்டம் தீட்டினார்கள். இவ்வாறு அவர்கள் ஒருமனதாக முடிவு செய்து அல்லாஹ்வின் தூதர் ஸாலிஹ்(அலை) அவர்களை வஞ்சகமாகப் படுகொலை செய்வதற் காக இரவு நேரத்தில் சென்றார்கள்.

அப்போது தூயவனும், உயர்ந்தோனுமாகிய, அல்லாஹ் அக்கும்பலின் மீது கல் மாரியைப் பொழியச் செய்தான். அது அவர்களைச் சின்னாபின்னமாக்கியது. அவகாசம் வழங்கப்பட்ட முதலாவது நாளில் காலை வேளையில் ஸமூத் சமுதாயத்தவர்களின் முகமானது ஸாலிஹ்(அலை) அவர்கள் எச்சரிக்கை செய்ததைப் போலவே மஞ்சள் நிறமாக மாறியது. இரண்டாவது நாள் காலையில் அவர்களது முகம் சிவப்பு நிறமாக மாறியது. மூன்றாவது நாள் காலை அவர்களின் முகங்கள் கறுப்பு நிறமாக மாறியது. 

நான்காவது நாள் சூரியன் உதயமானபோது வானத்திலிருந்து அவர்களை இடி முழக்கம் தாக்கியது அவர்களுக்குக் கீழே கடுமையான அதிர்வுடனும், பேரிரைச்சலுடனும், நில நடுக்கம் ஏற்பட்டது அவர்களின் இருதயங்களைக் கழற்றிப் போட்டபோது அதனால் ஒரே நேரத்தில் அவர்களது அனைவருடைய உயிர்களும் வெளியேறின. தமது இல்லங்களில் உயிரற்ற வெற்றிச் சடலங்களாக வீழ்ந்து மாண்டுபோய்க் கிடந்தார்கள். “சுருக்கம்” (7:73-78, முஸ்னது அஹ்மத், தஃப்ஸீர் தபரீ, தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 3, பக்கம் 807-816 பாகம் 6,  ப க்கம் 599-601)

இதனாலேயே, ஸமூத் குலத்தார் அழிக்கப்பட்ட ஹிஜ்ர் பிரதேசத்தைக் கண்டு அஞ்சிய அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள்  தபூக் போரின்போது அதுபோன்று தண்டனை இறங்கியஸமூத்குலத்தார் வாழ்ந்து அவர்கள் அழிக்கப்பட்டஅல்ஹிஜ்ர்எனும் பிரதே சத்தைக் கடந்து சென்றபோது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “தமக்குத் தாமே அநீதியிழைத்துக் கொண்டு அக்கிரமம் புரிந்தவர்களின் இந்த வசிப்பிடங்களில் அவர்களுக்குக் கிடைத்த அதே போன்ற தண்டனை உங்களுக்கும் கிடைத்துவிடுமோ என்று அஞ்சியவர்களாக அழுதபடியே அன்றி இப்பகுதியில்  நீங்கள் நுழைய வேண்டாம் என்று கூறினார்கள். 

பிறகு அவர்கள் தமது சேண இருக்கையில் மீது இருந்தபடியே தமது போர்வையால் தம்மை மறைத்துக் கொண்டார்கள். “அழுதவர்களாகவே தவிர நீங்கள் செல்லவேண்டாம். நீங்கள் அழுதவர்களாக இல்லை என்றால் அவர்கள் அழிக்கப்பட்ட இப்பிரதேசத்தில் செல்ல வேண்டாம் என்றவாறு அந்தப் பள்ளத்தாக்கைக் கடந்து செல்லும் வரை வேக வேகமாகப் பயணித்தார்கள். (அப்துல்லாஹ் பின் உமர்(ரழி), புகாரி 433, 3378-3381, 4419, 4420, 4702, முஸ்லிம் 5700, முஸ்னத் அஹ்மத், தஃப்ஸீர் இப்னு கஸீர் 4:1054)

அதே தபூக் போரின் போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடன்ஸமூத்கூட்டத்தார் வசித்த பூமியானஹிஜ்ர்என்னும் பிரதேசத்தில் தங்கினார்கள் ஊழியர்கள். அங்குள்ள கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து, அதனால் மாவு பிசைந்தார்கள் இதனை அறிந்த நபி(ஸல்) அவர்கள் அப்பகுதியிலிருந்து எடுத்த கிணற்றின் தண்ணீரை கொட்டிவிடும் படியும் அதனால் பிசைந்த மாவை வீசி எறிந்து விடும்படியும் உத்தரவிட்டார்கள். தண்ணீர் தேவை எனில் அங்கே உள்ள ஸாலிஹ்(அலை) அவர்களின் ஒட்டகம் எந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் குடித்து வந்ததோ அந்த கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ளும்படியும் உத்தரவிட்டார்கள். (7:73-79, 46:24-28, அப்துல்லாஹ் பின் உமர்(ரழி), புகாரி பாகம் 4, பக்கம் 66, பாடம் 17, சிறுகுறிப்பு : 53, 3377-3379)

மக்கள் (தபூக் போரின் போது) இறைத் தூதர்(ஸல்) அவர்களுடன் ஸமூத் கூட்டத்தார் வசித்த பூமியானஹிஜ்ர்என்னும் பகுதியில் தங்கினார்கள். அதன் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து அதனால் மாவும் பிசைந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்பகுதியின் கிணற்றிலிருந்து அவர்கள் இறைத்த தண்ணீரைக் கொட்டிவிடும்படியும் தோழர்களுக்குக் கட்டளையிட்டார்கள். அப்போது தோழர்கள்நாங்கள் அதிலிருந்து எடுத்த தண்ணீரினால் ஏற்கனவே படையினருக்கு மாவு பிசைந்து விட்டோமே! என்ன செய்வது? என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள் அந்த நீரில் பிசைந்த மாவை சாப்பிடாமல் வீசி எறிந்து விடும்படியும், எஞ்சிய அந்தத் தண்ணீரைக் கொட்டி விடும்படியும், தண்ணீர் தேவைப்பட்டால் ஸாலிஹ்(அலை) அவர்களின் ஒட்டகம் தண்ணீர் குடிப்பதற்காக எந்தக் கிணற்றிற்கு வந்து கொண்டிருந்தோ அந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ளும்படியும் உத்திரவிட்டார்கள். (சுருக்கம்: அறிவிப்பாளர்கள்: அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி), அபூதர் (ரழி) நாஃபிவு(ரஹ்), உஸாமா(ரஹ்), சப்ரா பின் மஅபத்(ரஹ்), அபுஷ்­மூஸ்(ரஹ்) புகாரி: 3378-3381, 433) 

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Previous post:

Next post: