பின்பற்றக்கூடாத இமாமும் இருக்கிறார்களா? 

in 2026 ஜூன்

பின்பற்றக்கூடாத இமாமும் இருக்கிறார்களா? 

அபூ அப்தில்லாஹ்

மறு பதிப்பு :

இந்திய திருநாட்டில் முஸ்லிம்கள் பரவலாக வாழ்ந்து வருகிறார்கள். பெரும்பாலும் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் தங்களுக்கென்று பள்ளிவாசல்களைக் கட்டிக் கொண்டு ஒரு சிலராவது ஐங்கால தொழுகைகளைத் தொழுது வருகிறார்கள். அப்பள்ளிகளில் தொழ வைப்பதற்காக இமாம்கள் அமர்த்தப்பட்டு தொழ வைக்கிறார்கள். அப்படிப்பட்ட இமாம்களில் பெரும்பாலோர் தர்ஹா சடங்கு சம்பிரதாயங்களையும், கத்தம், ஃபாத்திஹா, மவ்லூது போன்ற அனாச்சார சடங்குகளையும் முன் நின்று செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அவுலியாக்களின் பெயர்களால் கட்டப்பட்டுள்ள சமாதிகளுக்கு முன் சென்றுசுஜூதுசெய்பவர்களாகவும், அதை நியாயப்படுத்துகிறவர்களாகவும் அவர்களில் சிலர் இருக்கலாம். அவர்கள் செய்யக்கூடிய இக்காரியங்கள் இறைவனுக்கு இணை வைக்கும் சிர்க் அளவில் கொண்டு சேர்க்கும். அவர்கள் தங்களின் சிர்க்கான செயல்களை உணர்ந்து தவ்பா செய்து மீளவில்லை என்றால், நாளை மறுமையில் அவர்கள் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்படுவார் கள்; நரகில் எறிக்கப்படுவார்கள் என்பதை குர்ஆனும், ஹதீதும் மிகத் தெளிவாகப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. இதன் விசயத்தில் குர்ஆன், ஹதீத்களின் முறைப்படி விளங்கியவர்களி டத்தில் மாற்றுக்  கருத்து  இருக்கமுடியாது.

ஆனால் அப்படிப்பட்ட இமாம்களை இவ்வுலகிலேயேமுஷ்ரிக்ஆக்கி அவர்கள் பின்னால் தொழுவது கூடாது என்று ஃபத்வா கொடுத்து வாலிப உள்ளங்களில் முறுக்கேற்றி ஊரையே இரண்டாக்கி, தனிப்பள்ளிகள் கட்டி, அல்லாஹ்வும், ரசூலும் ஒரே உம்மத்சமுதாயம் என்று தெளிவாகச் சொல்லி இருப்பதற்கு மாற்றமாக சமுதாயத்தைப் பிளவுபடுத்தலாமா? அதற்கு மார்க்கத்தில் அனுமதி இருக்கிறதா? என்பதுதான் இப்போது நம்முன் இருக்கிற  தலையாய  விவகாரமாகும்.

நேர்வழி நடப்பவர்கள் குர்ஆன், ஹதீத்படி நடப்பவர்கள் தாங்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் அவர்களிடம் கண்டிப்பாக குர்ஆன், ஹதீத் ஆதாரமிருக்க வேண்டும். அதுவும் அவர்கள் எடுத்து வைக்கும் குர்ஆன் வசனமோ, ஹதீதோ அந்த விசயத்தைப் பற்றியே சொல்லவேண்டும். மற்றபடி ஒரு ஆயத்தை ஒரு ஹதீதை எடுத்து எழுதி அதிலிருந்து யூகமாக ஒரு சட்டத்தைச் சொல்லக்கூடாது. மத்ஹபுகளை உண்டாக்கிய இமாம்கள் (ஹிஜ்ரி 80லிருந்து 241 வரை வாழ்ந்த மரியாதைக்குரிய அந்த நான்கு இமாம்கள் அல்ல; காரணம் அவர்கள் மத்ஹபுகளை அமைக்கவில்லை) இப்படித்தான் குர்ஆனிலிருலிருந்தும், ஹதீதிலிருந்தும் யூகமாகச் சொல்லியே பல சட்டங்களை வகுத்தனர். அவையே சமுதாயத்தில் பெரும் பிளவுகளை உண்டாக்கிவிட்டன. இப்போது குர்ஆன், ஹதீத்படி நடக்கிறோம் என்று கூறிக் கொள்ளும் மவ்லவிகளும் மத்ஹபு மவ்லவிகள், இமாம்கள் செய்த அதே தவறையே செய்து வருகின்றனர். இவர்களது சொந்த யூகமில்லாமல் எந்த ஆயத்தும், எந்த ஹதீதும் இப்படிப்பட்ட சிர்க்கான சடங்குகளைச் செய்யும் இமாம்களைப் பின்பற்றித் தொழக்கூடாது என்று சொல்ல வில்லை என்பதே உண்மையாகும். இது சம்பந்தமாக வந்துள்ளதாக இவர்களால் சொல்லப் படும் ஆயத்துகள், ஹதீதுகள் இவை அனைத்தையும் அந்நஜாத் ஜூன் 90, பிப்ரவரி 91, நவம்பர் 94களில் கட்டுரைகளாகவும் இடையிடையே இது வரை விமர்சன விளக்கங்களாகவும்  எடுத்து வைத்து தெளிவுபடுத்தி இருக்கிறோம். ஆயினும் அச்சகோதரர்கள் பிடிவாதமாக அதே தவறைச் செய்து, தொடர்ந்து சமுதாயத்தைப் பிளவுபடுத்தி வருகின்றனர். எனவே மீண்டும் இந்த ஆக்கத்தில் அவர்களின்ஃபத்வாஎந்த அளவு குர்ஆன், ஹதீதுக்கு முரணானது. அல்லாஹ்வின் தனி அதிகாரத்தில் தலையிடும் பெருங்குற்றம்; அதன் மூலம் இவர்களும் இணை வைக்கும் (சிர்க்) குற்றத்திற்கு ஆளாகி விடுகிறார்கள் என்பதை தெளிவுபடுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். குறிப்பிட்ட ஒருசில இமாமைப் பின்பற்றித் தொழக்கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ள ஒரு ஹதீதையும் பார்க்க முடியவில்லை. ஆயினும் குறைகளுள்ள இமாமைப் பின்பற்றித் தொழக் கட்டளையிட்ட ஹதீத்கள் வருமாறு.

உங்களுக்குச் சில இமாம்கள் தொழுகை நடத்துவார்கள்; அவர்கள் முறையாகத் தொழ வைப்பார்களானால் உங்களுக்கு நல்லது தான். அவர்கள் தவறிழைப்பார்களானால் உங்களுக்கு நல்லதுதான்; அன்றி அவர்களுக்குத்தான் கேடுஎன்று நபி(ஸல்) அவர்கள் கூறினர். அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரழி), நூல்: புகாரி.

ஒரு கூட்டத்தார் வந்து உங்களுக்குத் தொழ வைப்பார்கள். அவர்கள் (தொழுகையை) நிறைவாகச் செய்வார்களானால், அவர்களுக்கும், உங்களுக்கும் நல்லதுதான். (அவ்வாறின்றி) அவர்கள் (தொழுகையில்) குறைபாடு செய்வார்களாயின் அவர்களுக்குத் தான் கேடு; உங்களுக்கு நல்லதுதான். (அவர்கள் தொழுகையில் செய்துள்ள குறை பட்டால் உங்களுக்குப் பாதிப்பு ஏதுமில்லை)” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர். அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரழி)  நூல் : நஸயீ.

தொழுகையை அதற்குரிய நேரம் தவறித் தொழக்கூடிய கூட்டத்தினரை நீங்கள் அடைய நேரும். அவர்களின் காலத்தை நீங்கள் அடைந்தால் உங்கள் இல்லங்களில் (உரிய நேரத்தில்) தொழுது கொள்ளுங்கள்; பின்பு அவர்களுடனும் தொழுங்கள். அவர்களைப் பின்பற்றித் தொழும் தொழுகையை உபரியான(நஃபில்)தாகக் கருதிக் கொள்ளுங்கள்என்று நபி(ஸல்) அவர்கள்  கூறினர். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூது(ரழி), நூல் : நஸயீ.

தொழுகையிலேயே குறை செய்யும் இமாம்களையும் பின்பற்றித் தொழத்தான் வேண்டும். அந்தக் குறைகளைக் காட்டி அவர்கள் பின்னால் தொழுவதை மறுத்துக் கூறுவது கூடாது; அது சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் கொடுஞ் செயல் என்பதை நபி(ஸல்) அவர்கள் அழகுபட தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். தொழுகையின் உள்ளே அவர்கள் செய்யும் குற்றங்களே அவர்கள் பின்னால் தொழுபவர்களின் தொழுகையைப் பாதிக்காது; அது அவர்களுக்கு நல்லதுதான் என்று நபி(ஸல்) அவர்கள் நன்மாராயங் கூறி இருக்கிறார்கள். இந்தக் காரணங்களைச் சொல்லி அவர்கள் பின்னால் தொழாமல் சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் கொடிய செயலை விட்டு விலகி கொண்டது அவர்களுக்கு நல்லதுதான் என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். இப்போது சிந்திக்க வேண்டும். தொழுகையின் உள்ளே செய்யும் அவர்களின் குற்றங்களே பின்னால் தொழுபவர்களின் தொழுகையை பாதிக்காது என்றிருக்கும்போது, தொழுகைக்கு வெளியே அவர்கள் செய்யும் சிர்க், பித்அத் போன்ற செயல்கள் எவ்வாறு அவர்கள் பின்னால் தொழுபவர்களின் தொழுகையைப் பாதிக் கும்? “ஒருவரது சுமையை இன்னொருவர் சுமக்கப்பட்டார்  (அல்குர்ஆன் 6:164) என்று அல்லாஹ் அல்குர்ஆனில் தெளிவாக அறிவித் திருக்கும் நிலையில், இமாமின் தொழுகையே கூடாமல் போனாலும் அவர் பின்னால் தொழுபவரின் தொழுகையை அல்லாஹ் எப்படி ஏற்காமல் விடுவான்?

உதுமான்(ரழி) அவர்களின் அழகிய உபதேசம் கேளுங்கள் :

அதிய்யு பின் கியார் என்பவர் உதுமான் (ரழி) அவர்கள் முற்றுகையிடப்பட்டிருக்கும்போது அவர்களிடம் வந்து, “நீங்கள் அனை வருக்கும் பொது இமாமாக இருந்து கொண்டிருந்தீர்கள்; இப்போது நாங்கள் காணும் நிலையில் உங்களுக்குத் துன்பம் வந்து சம்பவித்துள்ளது. (இப்போது) எங்களுக்கும் குழப்பவாதியான இமாம் தொழுகை நடத்துகிறார். அவரைப் பின்பற்றி தொழுதால் நாமும் பாவிகளாகி விடுவோமோ என்று கருதி சங்கடப்பட்டுக் கண்டிருக்கிறோம்என்றார். அதற்கு (உதுமான்(ரழி) அவர்கள்தொழுகைதான் மக்களுடை அமல்களில் மிக்க அழகானதாகும். மக்கள் அதை அழகாகச் செய்யும்போது, அவர்களுடன் சேர்ந்து தீரும் அதை அழகுறச் செய்து கொள்வீராக! அவர்கள் தீமை விளைவிப்பவர்களாய் இருப்பின் அவர்களின் அத்தீமையை நீர் செய்யாமல் உம்மைத் தற்காத்துக் கொள்வீராகஎன்றார்கள்.  அறிவிப்பவர்: அதிய்யு பின் கியார்(ரஹ்)  நூல் : புகாரி.

நபி(ஸல்) அவர்களால் சொர்க்கத்து நன்மாராயம் பெற்ற, நேர்வழி நடத்த கலீஃபாக்களில் ஒருவரான உதுமான்(ரழி) அவர்களின் இந்த அழகிய உபதேசத்தைச் சிந்தித்து விளங்கும் ஒருவர், பின்பற்றக்கூடாத பள்ளி இமாம் ஒருவர் இருப்பதாக கனவிலும் நினைக்க மாட்டார். அது எவ்வளவு பெரிய கொடுமை, சமுதாயத்தைப் பிளக்கும் அநீதி என்பதைப் புரிந்து கொள்வார்.

உதுமான்(ரழி) யார் பின்னால் தொழச் சொன்னார்கள்? தன்னை அநீதமாகச் சிறைப்படுத்தி கொடுமைகள் செய்ததுடன், நாம் இமாமாக நின்று தொழுத இடத்தில், தம்முடைய அனுமதி இல்லாமல் அக்கிரமமாக நின்று தொழவைத்த ஒருவரைப் பின்பற்றித் தொழும் விசயத்தில் இவ்வாறு அழகிய உபதேசம் செய்கிறார்கள். தொழுகை மக்களின் அழகிய அமல். அந்த அழகிய அமலை யார் செய்தாலும் அவரைப் பின்பற்றித் தொழ வேண்டும். இதுதான் அல்லாஹ்வின் கட்டளை என்பதை உணர்த்தாமல் உணர்த்துகிறார்கள். அல்குர்ஆன் 39:18 இறைக்கட்டளையை ஓதி உணர்கிறவர்கள் இதை மறுக்க முடியாது. இங்கு அக்கொடியவர்கள் “´ர்க்செய்யவில்லையே என்று தடுமாறலாம். “அவர்கள் தீமை விளைவிப்பவர்களாய் இருப்பின் அவர்களின் அத்தீமையை நீர் செய்யாமல் உம்மைத் தற்காத்துக் கொள்வீராகஎன்ற உம்மைத் தற்காத்துக் கொள்வீராகஎன்ற அழகிய உபதேசத்திலேஅவர்கள் சிர்க் செய் பவர்களாக இருப்பின் அவர்களின் அந்த சிர்க்கான செயல்களை நீர் செய்யாமல் உம்மைத் தற்காத்துக் கொள்வீராகஎன்ற அழகிய உபதேசமும் அதில் பொதிந்தே இருக்கிறது என்பதை முறையாகச் சிந்திப்பவர்கள் விளங்க முடியும். அவர் பின்னால் தொழுவதால், அவர் தொழுகைக்கு வெளியில் செய்யும் சிர்க்கான செயல்களுக்கு நாமும் துணை போனதாக ஆகாது என்பதும் உதுமான்(ரழி) அவர்களின் அழகிய உபதேசத்திலிருந்து நமக்கு விளங்குகிறது. உதாரணமாக ஒரு முஸ்லிம் ஒரு ஹிந்து சகோதரருடன் போய்க் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் பக்கத்திலுள்ள பள்ளியிலிருந்து பாங்கு சத்தம் கேட்கிறது. அப்போது அந்த ஹிந்து சகோதரர் முஸ்லிமைப் பார்த்துபாய் போய் தொழுது விட்டு வாருங்கள்என்று கூறுகிறார். உடனே அந்த முஸ்லிம்போயா! நீ ஒரு காஃபீர், நீ சொல்லி நான் தொழுவதா?’ என்று கூறி அந்த ஹிந்து சகோதரரின் கூற்றை நிராகரித்து தொழாமல் விட்டுவிட்டார். அல்லாஹ் இந்த முஸ்லிமை விட்டுவிடுவானா? அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து இவன் தப்புவானா? நல்லதைஅழகானதை யார் சொன்னால் என்ன? யார் செய்தால் என்ன? அந்த அழகானதை எடுத்து நடப்பது பின்பற்றுவது அல்லாஹ்வின் நன்மாராயம் பெற்ற ஒரு உண்மை முஸ்லிமின்ஒன்றுபட்ட சமுதாய நலன் நாடும் உண்மை விசுவாசியின் கடமை அல்லவா? இதைத் தானே 39:18 இறைக் கட்டளை  உணர்த்துகிறது.

அல்லது அந்த இமாமின் தொழுகை அவர் இணை வைத்ததால் வீணாகி விடுவதால் பின்னால் தொழுபவரின் தொழுகையும் வீணாகி விடும் என்று சொல்லுகிறார்களா? அதுவும் தவறாகும். இமாமின் தொழுகை நிறைவேறாமல் போனாலும், வீணாகி விட்டாலும், அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் மஃமூன்களின் தொழுகை நிராகரிக்கப்படுவதில்லை. இதோ இரண்டாம் கலீஃபா உமர்(ரழி) அவர்களின் வாழ்வின் ஒரு நாள் நடந்த  சம்பவம்.

ஒருமுறை உமர்(ரழி) அவர்கள் தாம் ஜுனுபாளிகுளிப்புக் கடமை உள்ளவர்களாக இருக்கும் போது, (அது தெரியாமல்) மக்களுக்குத் தொழ வைத்துவிட்டார்கள். பின்னர் விசயம் தெரியவே அவர்கள் மட்டும் தொழுகையை மீட்டித் தொழுதார்கள். ஆனால் தொழுகையை மீட்டும்படி மற்றவர்களுக்கு அவர்கள்  ஏவவில்லை. (அஷ்­ரீ துஸ்ஸகஃபி தாருகுத்னீ)

இந்த சம்பவத்திலிருந்து இமாமின் தொழுகை வீணாகிவிட்டாலும் நிராகரிக்கப்பட்டாலும் அதனால் மஃமுன்களின் தொழுகை நிராகரிக்கப்படுவதில்லை என்பதை அறிகிறோம்.      

Previous post:

Next post: