வருடாந்தர அனர்த்தங்களினால் படிப்பினை பெறுவதில்லையா?

in 2026 ஜூன்

வருடாந்தர அனர்த்தங்களினால் படிப்பினை பெறுவதில்லையா?

அபூ இஸ்ஸத், இலங்கை

மே 2026  தொடர்ச்சி

நிச்சயமாக நாம் தோட்டத்தையுடைய வர்களைச் சோதித்தது போலவே, நாம் அவர்களைச் சோதித்தோம். (த் தோட்டத்திற்கு டைய)வர்கள் அதிலுள்ள கனிகளை அதி காலையில் சென்று பறித்து விடுவோமென்று சத்தியம் செய்தார்கள். “அல்லாஹ் நாடினால்என்று அவர்கள் கூறவில்லை. எனவே அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது உம்முடைய இறைவனிடமிருந்து சுற்றக்கூடிய (நெருப்பின் ஆபத்)து சுற்றி(த் தோட்டத்தை) அழித்து விட்டது (நெருப்புக் கரித்து விட்டபடியால் அத்தோட்டம்) காலையில் கறுத்த சாம்பலைப் போல் ஆகியிருந்தது. (இதை அறியாது) காலையில் எழுந்த அவர்கள் ஒருவரை ஒருவர் அழைத்து நீங்கள் (விளைந்த) கனிகளைக் கொய்பவர்களாக இருந்தால் உங்கள் தோட்டத்திற்கு அதிகாலையிலேயே செல்லுங்கள் (என்று கூறிக் கொண்டார்கள்) எனவே அவர்கள் (பிறர் அறியாது) மெதுவாகப் பேசிக்கொண்டே சென்றார்கள். எந்த ஏழை எளிய வரும் இன்று உங்களிடம் அ(த்தோட்ட)தில் நிச்சயமாகப் பிரவேசிக்கக் கூடாது(என்று) உறுதியுடன் அ(த்தோட்ட)தில் நிச்சயமாக பிரவேசிக்கக் கூடாது (என்று) உறுதியுடன் சக்தியு டையவர்களாகக் காலையில் சென்றார்கள். ஆனால் அவர்கள் அ(த்தோட்டத்தை அழிந்து போன நிலையான)தைக் கண்டபோது நிச்சயமாக நாம் வழிதவறி (வேறு தோட்டத்திற்கு) வந்துவிட்டோம் என்று கூறினார்கள். (பின்னர் மீண்டும் கவனித்துப் பார்த்துவிட்டு) இல்லை (ஏழை எளியவர்களுக்கு எதுவும் கிடைக்காமல் செய்து) நாம் தான் பாக்கியம் இழந்தவர்களாக ஆகவிட்டோம் (என்றும் கூறிக் கொண்டார்கள் பின்னர்) அவர்களில் நடுநிலையை உள்ள ஒருவர் நீங்கள் (ஏக இறைவனைத்) தஸ்ஃபீஹு செய்திருக்க வேண்டும் என்று நான் (அப்பவே) உங்களுக்குக் கூறவில்லையா? என்று கூறினார். எங்கள் இறைவன் தூயவன் நாம் தாம் நிச்சயமாக அநியாயம் செய்தவர்களாகிவிட்டோம் என்று கூறினார்கள். பின்னர் அவர்களில் சிலர் சிலரை நிந்தித்தவர்களாக முன்னோக்கினார்கள். (பின்னர்) அவர்கள் எங்களுக்குண்டான கேடே! நிச்சயமாக நாம் வரம்பு மீறியவர்களாக இருந்துவிட்டோம் என்று கூறினார்கள். (68:17-31, 41:50, 19:77, இப்னு அப்பாஸ்(ரழி), கத்தாதா(ரழி), புகாரி 5, பக்கம் 706,707இல், 68:20,23,25,26) ஆகிய வசனங்களின் விரிவுரையில்) மேலும்;

ஆஸ்பின் வாயில் அஸ்ஸஹ்மீ என்பவரின் இழிநிலை :

அறியாமைக் காலத்தில் பெரும் செல்வாக்குடன் வாழ்ந்த ஒருவரான, (19:77, கப்பாப்பின் அல் அரத்(ரழி), மஸ்ரூக்(ரஹ்), அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்), புகாரி, பாகம் 5, பக் கம் 444, பாடம் 3 இன் சிறு குறிப்பு 3ஆவது ஃபத்ஹுல் பாரீ, 4732, 4733, 2091, முஸ்லிம்:5387, முஸ்னது அஹ்மத், தஃப்ஸீர் தபரீ, இப்னு இஸீர் 5:647-651)

கப்பாப் பின் அல்அரத்(ரழி) அவர்கள் கூறியதாவது: நான் அறியாமைக் காலத்தில் கொல்லனாகத் தொழில் செய்துகொண்டு இருந்தேன். அப்போது ஆஸ் பின் வாயில் என்பவருக்காக வாள் போன்ற சில பொருட்களைச் செய்து கொடுத்திருந்தேன். அதற்காக அவர் எனக்குச் சில திர்கங்கள் கூலியாக தரவேண்டி இருந்ததால் அவரிடம் நான் சென்று கேட்டேன். அப்போது அவர் என்னிடம், “நீ முஹம்மதை மறுத்துரைக்காத வரை நான் உனது கடனைத் தரமாட்டேன்என்று சொன்னார். அதற்கு நான்,

நீர் இறந்து பிறகு உயிருடன் மறுபடியும் எழுப்பப்படும் மறுமை நாள்வரை நான் முஹம்மதை மறுக்கமாட்டேன்என்று கூறினேன். அதற்கு அவர், “நான் இறந்த பிறகு மறுபடியும் உயிருடன் எழுப்பப்பட்டால் எனக்குச் செல்வமும் மக்களும் அங்கேயும் திரும்பக் கிடைப்பார்கள்” (41:50, 19:77, 18:32-44, 96:6,7) உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நெறிநூலைப் போன்றும் எனக்கும் வழங்கப்படும் அவ்வேளையில் உனது கடனை நிறைவேற்றிவிடுகிறேன்என்று சொன்னார். இதை நான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போதுதான்  அல்லாஹ்;

(நபியே!) நமது வசனங்களை மறுத்தவ னைக் கண்டீரா! அவன்எனக்குச் செல்வமும் சந்ததியும் நிச்சயமாக வழங்கப்படும்என்று கூறுகின்றான். அவன் என்ன மறைவானவற்றைக் கண்டுபிடித்துவிட்டானா? அல்லது அளவற்ற அருளாளனிடம் உறுதிமொழி எதனையும் பெற்றுக் கொண்டானா? அவ்வாறு ஏதுமில்லை. அவன் சொல்வதை நாம் பதிவு செய்வோம். அவனுக்கு வேதனையை அதிகமாக நீட்டிப்போம். அவன் கூறியவற்றுக்கு நாமே உரிமை யாளராகிவிடுவோம். அவன் நம்மிடம் தனியாகவே வருவான் என்ற (19:77-80) வசனங் களை அல்லாஹ் அருளினான் என்றார்கள். (19:77, கப்பாப் பின் அல்அரத்(ரழி), மஸ்ரூக்(ரஹ்), அப்துர் ரஸ்ஸாக்(ரஹ்), புகாரி: பாகம் 5, பக்கம் 444, பாடம் 3இன் சிறு குறிப்பு 3ஆவது, ஃபத்ஹுல் பாரீ, 4732, 4733, 2091, முஸ்லிம் 5387, முஸ்னது அஹ்மத், தஃப்ஸீர் தபரீ, இப்னு இஸீர் 5:647-651)

இங்கே (19:20) வசனத்தில்அவன் கூறியவற்றுக்கு நாமே உரிமையாளராகிவிடுவோம்என்று அல்லாஹ் தெரிவிக்கின்றான். அதாவது அவன் கூறும் செல்வத்திற்கும் சந்ததிக்கும் நாமே வாரிசாவோம் அவன் தனக்கு இவ்வுலகில் வழங்கப்பபெற்றுள்ளதை விட அதிகமாக மறுமை யில் செல்வமும் சந்ததியும் வழங்கப்படும் என்று கூறுகின்றான். ஆனால் அது உண்மையல்ல அவன் கூறியதற்கு மாறாக இவ்வுலகிலும் நாம் அவனுக்கு வழங்கியிருந்த செல்வத்தையும் சந்ததியையும் கூட அவனிடமிருந்து பறித்துக் கொள்வோம். “அவன் நம்மிடம் தனியாகவே வருவான்என்று உயர்ந்தோனாகிய அல்லாஹ் குறிப்பிடுகின்றான். (முஜாஹித்(ரஹ்), கத்தாதா (ரஹ்), அப்துர் ரஹ்மான் பின் ஸைத்(ரஹ்), தஃப்ஸீர் தபரீ, இப்னு இஸீர் 5:650, 651)

செல்வத்தோடு மண்ணுக்குள் புதைந்த காரூன் : இறைத்தூதர் மூஸா(அலை) அவர்களின் தந்தையின் சகோதரரானயஸ்ஹர்என்பவருக்குப் பிறந்த மகனாகிய, அதனால் இஸ்ர வேலர்களில் ஒருவனாகிய (இப்னு அப்பாஸ் (ரழி), இப்ராஹீம் அந்நகஈ, கத்தாதா, மாலிக் பின் தீனார், இப்னு ஜுரைஜ்(ரஹ்), தஃப்சீர் இப்னு கஸரீர் 6:623)

அழகிய தோற்றமும், “தவ்ராத்வேதத்தை அவனை விட இனிமையாகவும் தெளிவாகவும், அழகிய குரலிலும், ஓதியவர் வேறு யாருமே இருக்க முடியாது எனும் அளவுக்குப் பிரபல்யமானவனான். அதன் காரணமாகஅல் முனவ்வர் பிரகாசிப்பவர் என சிறப்புப் பெயர் சூட்டப் பெற்றவனான; (கத்தாதா (ரஹ்), தஃப்ஸீர் இப்னு கஸீர் 6:823,824)

அல்லாஹ்வுடன் உரையாடுவதற்காக நபி மூஸா(அலை) அவர்கள் தேர்ந்தெடுத்துக் கூடவே கூட்டிச் சென்றவர்களின் ஒருவனும், அச்சந்தர்ப்பத்தில் அல்லாஹ்வின் உரையாடலைச் செவிமடுத்தவனுமான, அந்த உரையாடலின் போது மூஸா(அலை) அவர்களுக்கு, இன்னின்னதைச் செய்ய வேண்டும். இன்னின்னதைச் செய்யக் கூடாது என்று அல்லாஹ் கட்டளையிட்டதையும் தடை செய்ததையும் தெளிவாகச் செவிமடுத்தவனும், மூஸா(அலை) அவர்கள் அந்த நிலையிலிருந்து நீங்கியபோது அவர்களை விட்டும் மேகங்கள் விலகிவிடத் தமது சமுதாயத்தாரை நோக்கி வந்தபோது, அவர்களிடம்அல்லாஹ்வை நாங்கள் நேரில் காணாதவரை உம்மை நாங்கள் நம்பவேமாட்டோம்என்று கூறியவர்களிலும் ஒருவனான, (2:55, 4:153, 7:155, இப்னு அப்பாஸ்(ரழி), இப்னு ஜரீர்(ரஹ்) ரபீஉ பின் அனஸ்(ரஹ்), சுத்தீ(ரஹ்), தஃப்ஸீர் இப்னு கஸீர் 1:211-215, 265, 3:907-911) அத்துடன் மதிப்புக் குறைந்த காரீயம் போன்ற உலோகப் பொருட்களைத் துறை சார்ந்தவர்கள் வெப்பப்படுத்துதல் மற்றும் பல்வேறு வேதியியல் முறைகளில் தூய்மைப்படுத்துதல் ஆகியவற்றின் மூலமாகப் பொன்னாக உருமாற்றும்இரசவாதம்எனும் பொய்க் கலையைச் சிரமப்பட்டுக் கற்றறிந்திருந்தவனு மாகிய (28:78, சுத்தீ(ரஹ்), கத்தாதா(ரஹ்), அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் (ரஹ்), தஃப்ஸீர் இப்னு கஸீர் 6:826-829)

அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து பெரும் செல்வந்தன் ஆகியவனான; அதெல்லாம் என்னிடமுள்ள அறிவினாலேயே, (28:78) நான் அதற்குத் தகுதியுடையவன் என அல்லாஹ் அறிந்திருந்த காரணத்தினாலேயே எனக்கு அல்லாஹ் பெரும் பொருட் செல்வங்களை அருளினான். என்மீது அன்பும் என் மேன்மை பற்றிய அறிவும் அல்லாஹ்வுக்கு இல்லாதிருந்திருப்பின் அவன் எனக்கு இச்செல்வங்களை வழங்கியிருக்க மாட்டானே என்று வாதிட்டவனாகிய; (28:76-82, கத்தாதா (ரஹ்), சுத்தீ(ரஹ்), அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் (ரஹ்), தஃப்ஸீர் இப்னு கஸீர் 6:822-836)

நிச்சயமாக அவனது பொருட் செல்வங்களான கருவூலங்களின் ஒவ்வொரு கருவூலத்திற்கும் தோலால் ஆன தனித்தனித் திறவுகோல்கள் பலமிக்க ஒரு கூட்டத்தாருக்குப் பெரும் சுமையாக இருக்கும். அந்த அளவுக்கு அவனது கருவூலங்களின் திறவுகோல்கள் மாத்திரமே அதிக எண்ணிக்கையில் இருந்தன. அதனால் அவற்றை மக்களில் ஒரு பெரும் கூட்டமே தூக்குவது கூடப் பெரும் பளுவாக இருக்கும். அவன் பயணம் மேற்கொண்டால் அவனுடைய கருவூலங்களின் திறவுகோல்கள் (பிரதான) உறுப்புகள் வெண்மையாக இருக்கும் அறுபது கோவேறு கழுதைகளின் மீது ஏற்றிச் செல்லப்படும். அளவுக்குப் பெரும் செல்வக் குவியலுக்குச் சொந்தக்காரனான, (28:76) அஃமஷ்(ரஹ்), தஃப்ஸீர் இப்னு கஸீர் 6:834)

ஒருநாள் அவன் பிரமாண்டமாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டு கருமை கலந்த வெள்ளைக் கோவேறு கழுதையில் ஏழி முழு அலங்காரத்துடன் தனது சமூகத் தாரிடம் புறப்பட்டவனாகி, அவனும் அவனுடைய பணியாட்களும் சிவப்புச் சாயமிடப்பட்ட ஆடைகளை அணிந்தவாறு பிரமாண்டமாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டு மக்களைத் திகைக்க வைக்கும் அளவிற்கு முழு அலங்காரத்துடன் படை பட்டாளங்கள் புடை சூழத் தனது சமூகத் தாரிடம் வெளிப்பட்டவனாகிய, அப்போது அவனது முழு அலங்காரத்தையும் எழிலையும் கண்டு மயங்கியோர் அவனைப் பார்த்ததும்அவனுக்கு வழங்கப்பட்டதைப் போன்று தங்களுக்கும் இருந்திருக்க வேண்டுமேநிச்சயமாக அவன் பெரும் பாக்கியவான் என்று கூறுமளவிற்குப் பெரும் செல்வங்களின் அனந்தரச் சொந்தக்காரனாகிய: (28:79, தஃப்ஸீர் இப்னு கஸீர் 6:822-836, விவிலியம் பழைய ஏற்பாடு எண்ணாக மம் 16:13)

அத்துடன்; அதிகமான பிள்ளைச் செல்வங்களையும் அவர்களின் மூலமாகப் போதுமான பக்கபலங்களையும் கிடைக்கப் பெற்றவனாகிய; (தஃப்தீஸ் அல்குர்துபீ, அல்மாதுரீதீ, இப்னு கஸீர் 6:824, சிறு குறிப்பு 34ஆவது) “காரூன்அல்லாஹ்வின் எதிரியானசாமிரீநயவஞ்சகனாக நடந்து கொண்டதைப் போன்று இவனும் நயவஞ் சகனாக நடந்து கொண்டான். அதீத செல்வச் செருக்கின் காரணமாகப் பெருமை கொண்டு இஸ்ரவேல் மக்களை அற்பமாக வும், கேவலமாகவும் கருதி அட்டூழியம் புரிந்தான். சகோதரர் முறையான மூஸா(அலை) அவர்களுக்கு நபித்துவம் கிடைத்ததினாலும், தனக்குத் தலைமைத்துவம் கிடைக்காததை இட்டும் ஜீரணிக்க முடியாமல் நபிக்குக் கட்டுப்பட மறுத்தான். (கத்தாதா(ரஹ்) தஃப்சீர் அல்குர்துபீ, அல்மாதுரீதீ, இப்னு கஸீர் 6:823,824, சிறு குறிப்பு, 34ஆவது)

Previous post:

Next post: