தேர்தல் முடிவுகளும்…கூட்டணி அரசின் சவால்களும்….

in 2026 ஜூன்

தலையங்கம் :
தேர்தல் முடிவுகளும்கூட்டணி அரசின் சவால்களும்….

உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும்” “படைத்தவன் உங்களுக்கு அருள் புரியட்டும்அந்த ஒரே இறைவன் பெயரால்….

சமீபத்தில் (மே மாதம் 2026ல்) நடந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகளில் மிகப் பெரிய திருப்பமாக பார்க்கப்படுவது தமிழக  தேர்தல்  முடிவுகள்.

கருத்து கணிப்புகள் அனைத்தும் தி.மு..வே அதிக பெரும்பான்மைப்  பெற்று ஆட்சி அமைக்கும் என்பதாகவே இருந்தது. ஆனால் முற்றிலும் மாறிவிட்டது.

(இனி கருத்துக் கணிப்புகளை மக்கள் நம்புவார்களா?  என்பது  சந்தேகமே)

தமிழ்நாட்டில் சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.. .தி.மு..விற்கு மாற்றமாக மூன்றாவது சக்தி உருவாகியுள்ளது.

தமிழகவெற்றிகழகம் அதிக இடங் களில் (108) வெற்றி பெற்று ஆட்சி அமைந்துள்ளது.

தமிழகவெற்றிகழகம் சுமார் 1 கோடியே 79 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளது. இது தேர்தலில் வாக்களித்தவர் களில் சுமார் 33 சதவீதம் மட்டுமே பெற்றிருந்தாலும் தனிப்பட்ட பெரும்பான் மையை பெற்ற கட்சியே ஆட்சி அமைக்கும்.

(இது ஜனநாயகத்தில் உள்ள மிகப் பெரிய குறைபாடு. ஆயினும் நமது அரசியல் சாசனத்தில் இதற்கு சரியான தீர்வு இல்லை என்பதால் நாம் இதை மதித்தே  ஆகவேண்டும்)

.வெ.. அதிகமான இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் ஆட்சி அமைக்க தேவையான 118MLAக்கள் இல்லை. எனவே கூட்டணி அரசு அமைப்பைத் தவிர வேறு வழி இல்லை. அவ்வாறு செய்யவில்லை என்றல்ல குடியரசு தலைவர் ஆட்சி தமிழகத்தில் நுழைந்துவிடும். இந்த கூட்டணி அரசு அமைய இதுவே முக்கிய காரணம்.

கூட்டணி ஆட்சி : தமிழக வரலாற்றில் முதன் முறையாக கூட்டணி அரசு ஆட்சியிலும் அதிகாரத்திலும் அமர்ந்துள்ளது. கூட்டணி அதிகாரத்தில் இடம் பெறாமல் வெளியிலிருந்து ஆதரவு என்ற நிலைப்பாடு  நிலையானதாக  இருக்காது.

.வெ.. மக்கள் எதிர்பார்த்த மாற்றத்தை நிரூபிக்குமா? அல்லது கூட்டணி கட்சிகளின் அழுத்தத்தில் சிக்குமா? என் பது சில மாதங்களில் தெரிந்து விடும். 

எவ்வாறு  என்றால்;

தேர்தல் வெற்றி என்பது வேறு;

நிர்வாக வெற்றி என்பது வேறு.

நிர்வாக வெற்றிக்கு நிதி, நீதி,  அதிகாரிகளின் ஒத்துழைப்பு, கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு மிகவும் தேவையான ஒன்று. இதில் கடினமான சோதனையும் கூட.

மேலும், தி.மு.. .தி.மு.. இரண்டு கட்சிகளும் பல வருடங்கள் ஆட்சியிலும், அரசியலிலும் அனுபவம் கொண்டவர்கள். அவ்வளவு எளிதாக அரசியலில் வேறு கட்சிக்கு ஆட்சிக்கான இடத்தை விடமாட் டார்கள்.

இன்னும் சில மாதங்களில் வரப் போகின்ற திருச்சி கிழக்கு தொகுதியில் தி.மு.., .தி.மு.. வேட்பாளர்களை நிறுத்தும். அது சமயம் த.வெ.. வேட்பாளரை நிறுத்துமா? அல்லது கூட்டணி கட்சி களின் பொது வேட்பாளர் நிறுத்தப்படு வாரா? என்பதை பொருத்தே த.வெ..வின் நிலை என்னென்று தெரியும் பொருத்திருந்துப்  பார்ப்போம்.

Previous post:

Next post: