பின்பற்றக்கூடாத இமாமும் இருக்கிறார்களா?

in 2026 ஆகஸ்ட்

பின்பற்றக்கூடாத இமாமும் இருக்கிறார்களா?

அபூ அப்தில்லாஹ்

மறு பதிப்பு :

ஜூலை  மாத  தொடர்ச்சி….. 

காரணம் நிச்சயமாக அவன் இந்த வருடம்ஃபெயில்ஆகிவிடுவான் என்று உறுதியாகத் தெரிந்திருக்கிறது. இந்த நிலையில் அவர்களில் மிகமிகக் கெட்டிக்கார மாணவன் இருக்கிறானே அவனுக்குத் தனது அபாரத் திறமையால் தலைக்கணம் அதிகம் மற்ற மாணவர்கள் தன்னை மெச்சிக் கொள்வார்கள் என்ற இறுமாப்பு எண்ணத்தில், அந்தஃபெயில்என்று சொல்லப்பட்ட மாணவனின் ரெக்கார்ட் சீட்டைப் பிடுங்கி அதில்ஃபெயில்என்று எழுதி இவனது கை எழுத்தை அகம்பாவத்துடன் போட்டுக் கொடுத்து அந்த மாணவனைக் கல்லூரியை விட்டு வெளியே போகும் படி உத்திரவு போட்டான். அதாவது தீர்ப்பளித்தான்.

இந்த விசயம் கல்லூரி முதல்வர் வரை சென்றுவிட்டது. இப்போது என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்? அந்தக் கல்லூரியிலிருந்து முதலில் வெளியேற்றப்படுவது படிப்பில் மோசமான அந்த மாணவன் அல்ல; மிகத் திறமையாகப் படித்து பெரும்பாலான பாடங்களில் நூற்றுக்கு நூறு மார்க் எடுத்த அந்த மிக மிகக் கெட்டிக்கார மாணவனே முதலில் வெளியேற்றப்படுவான். காரணம் தனது அகம்பாவம் காரணமாக; நான் நன்றாகப் படிக்கிறேன் என்ற தலைக்கணம் காரணமாக கல்லூரி முதல்வரின் அதிகாரத்தில் இவன் தலையிட்டு அந்த மாணவனின் ரெக்கார்ட் சீட்டில்ஃபெயில்என்று எழுதி கை எழுத்துப் போட்டு அவனை வெளியேற்ற  முற்பட்டதேயாகும்.

சிர்க் செய்யும் இமாம்களுக்குகுஃப்ர், சிர்க்ஃபத்வா கொடுப்பதன் மூலம் அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிட்டுள்ள இந்த அதிகப்பிரசங்கித்தனமான மவ்லவிகளின் நிலையும் இந்த அகம்பாவம் பிடித்த மிக மிகத் திறமையுள்ள மாணவனின் நிலையைப் போன்றதே. இவர்கள் என்னதான் தக்வாதாரியாக இருந்தாலும், எப்போது இவர்கள் அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிட்டு, அதிகாரமுள்ள அல்லாஹ்வே எப்படிப்பட்ட கொடியவர்களாக இருந்தாலும் அவர்கள் பற்றிய தீர்ப்பை நாளை மறுமைக்கென்று ஒத்தி வைத்திருக்கும் நிலையில், இவர்கள் இவ்வுலகிலேயே இவர்களது ஆணவத்தால், அகம்பாவத்தால்சிர்க்செய்யும் இமாம்கள்காஃபிர்‘ “முஷ்ரிக்‘, அவர்கள் பின்னால் தொழக்கூடாது என்று அதிகாரமற்ற நிலையில் ஃபத்வா கொடுத்தால், நிச்சயமாக அந்த அகம்பாவம் பிடித்த திறமையுள்ள மாணவன் தூக்கி வெளியே வீசப்பட்டது போல் இவர்களும் அல்லாஹ்வின் தர்பாரிலிருந்து தூக்கி வீசப்படுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும்  இருக்கமுடியுமா? அல்லாஹ் பாதுகாப்பானாக. தங்களின் தவறை உணர்ந்து திருந்திக் கொள்வார்களாக, யாராக இருந்தாலும் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் நமது பார்வையில் எப்படிப்பட்ட கொடியவர் களாக, காஃபிர்களாக முஷ்ரிக்களாகத் தெரிந்தாலும் அது விசயத்தில் ஃபத்வா கொடுக்க அஞ்சவேண்டும். இதுவே உண்மை விசுவாசிகளின் தக்வாதாரிகளின் நடைமுறையாகும். உள்ளச்ச மற்ற தான்தோன்றிகளே இப்படி ஃபத்வா கொடுக்கத் துணிவார்கள். இதோ மூஸா (அலை) அவர்களது நபித்துவ காலத்தில் இடம் பெற்ற  ஒரு  சம்பவம்.

பிர்அவ்ன் மூஸா(அலை), ஹாரூன்(அலை) இருவரையும் பார்த்துயா மூஸா! உங்களிரு வருடைய இறைவன் யார்? என்று கேட்டான்  அல்குர்ஆன் 20:49

ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கான அமைப்பை வழங்கி, பின்னர் வழிகாட்டியிருக்கிறானே அவன்தான் எங்கள் இறைவன்என்று  கூறினார்.    அல்குர்ஆன் 20:50 

அப்படி என்றால் முன் சென்ற தலைமுறைகளின் நிலைமை என்ன? என்று கேட்டான்”. அல்குர்ஆன் 20:51

இது பற்றிய அறிவு என்னுடைய இறைவனிடம் (பதிவுப்) புத்தகத்தில் இருக்கிறது; என் இறைவன் தவறுவதுமில்லை; மறப்பதுமில்லைஎன்று (மூஸா பதில்) சொன்னார். அல்குர்ஆன் 20:52

பிர்அவ்ன் என்ன நோக்கத்தோடு இக் கேள்வியைக் கேட்டான்? இவர்கள் இருவரும் ஒரே தெய்வம் என்கிறார்கள். நமது முன் சென்ற தலைமுறை பல தெய்வ வழிபாடுடையவர் களாகத்தானே இருந்தார்கள். அவர்களது முடிவு என்ன என்றே கேட்கிறான். “சிர்க்செய்யும் இமாமுக்குமுஷ்ரிக்ஃபத்வா கொடுக்கும் நமது இந்த மவ்லவிகளோ உடனே எடுத்தவுடன் அவர்கள்காஃபிர்கள்நாசத்திற்குரியவர்கள் என்று ஃபத்வா கொடுத்து  விடுவார்கள்.

ஆனால் மூஸா(அலை) அவர்கள் ஒரு நபியாக இருந்தும்; அவர்களுக்கு அல்லாஹ் விடமிருந்து வஹி வந்து கொண்டிருக்கும் நிலையில் எவ்வளவு அடக்கமாக, “அது எனது இறைவனின் தீர்ப்பில் இருக்கிறதுஎன்று கூறுகிறார்கள். இந்த நிலையில் தன்னை முஸ்லிம் என்று பிரகடனப்படுத்திக் கொண்டு, முஸ்லிம் மஹல்லாவில் வாழ்ந்து கொண்டு, அவர் இறந்து போனால் ஜனாஸா தொழுகை தொழ வைத்து முஸ்லிம்களின் கப்ரஸ்தானில் அடக்கஞ் செய்யப்பட இருக்கும் ஒரு பள்ளி இமாமுக்குமுஷ்ரிக்ஃபத்வா கொடுத்து அவர் பின்னால் தொழுவதைத் தடுப்பவர்கள் எந்த அளவு அல்லாஹ்வை மறந்தவர்களாக, ஆணவம் பிடித்தவர்களாக இருக்க முடியும்? என்பதை நிதானமாகச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

எனவே குர்ஆனிலுள்ள எந்த வசனத்தை ஆதாரமாகக் காட்டியும் ஒருவருக்கு குஃப்ர் ஃபத்வா கொடுக்க முடியாது. அப்படிக் கொடுப்பவர்கள் பெரும் தவறு செய்கிறார்கள். உலகில் யாருக்கும்குஃப்ர்‘ “சிர்க்‘- ஃபத்வா கொடுக்கச் சொல்லி எந்த குர்ஆன் வசனமும் இல்லை என்பதே  உண்மையாகும்.

அடுத்துசிர்க்‘ “குஃப்ர்செய்கிறவர்களைப் புறக்கணித்து விடுங்கள், அவர்களுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை போன்ற கருத்துக்களையுடைய ஆயத்துக்களைக் காட்டி அப்படிப்பட்ட இமாம்கள் பின்னால் தொழுவது கூடாது என்று ஃபத்வா கொடுப்பதும் தவறாகும். இந்த ஆயத்துக்கள் 3123ல் அல்லாஹ் கூறியிருப்பது போல் அவர்கள் விசயத்தில் மன வேதனைப்பட்டு அதுபோன்ற ஃபத்வா கொடுப்பதை தவிருங்கள், புறக்கணியுங்கள் என்று கூறுகின்றனவே அல்லாமல் அவர்கள் பின்னால் தொழக் கூடாது என்ற கருத்தில் அல்ல. இன்னும் தெளிவுடைய  2:126 வசனத்தைப் பாருங்கள்.

(நபியே!) உமக்கு இவ்விசயத்தில் ஒரு சம்பந்தமும் இல்லை; அவன் அவர்களை மன்னித்து விடலாம்; அல்லது அவர்களை வேதனைப்படுத்தலாம். நிச்சயமாக அவர்கள் கொடியோராக இருப்பதின்  காரணமாக.”   அல்குர்ஆன் 3:128

இந்த இறைவாக்கு அவர்கள் கொடியவர்கள், நபி(ஸல்) அவர்களை எதிர்த்த காஃபிர்கள், முஷ்ரிக்குகள் என்பது தெளிவான நிலையிலும் நபி(ஸல்) அவர்களுக்கு அவர்கள் விசயத்தில் தீர்ப்புச் சொல்லவோ, சபிக்கவோ அதிகாரம் இருக்கவில்லை என்பதையே உறுதிப்படுத்து கிறது. எனவே அவர்களைப் புறக்கணித்து விடுங்கள். அவர்கள் விசயத்தில் உங்களுக்குச் சம்பந்தமில்லை போன்ற கருத்திலுள்ள ஆயத்துக்களை வைத்தும் அவர்கள் பின்னால் தொழுவதை மறுத்து ஃபத்வா கொடுக்க முடியாது.

முஷ்ரிக்குகள் நஜீஸானவர்கள்; நஜீஸை முன்னால் வைத்துக்கொண்டு தொழ முடியுமா? எனவே தர்கா சடங்குகள் செய்து முஷ்ரிக்காக இருப்பவர்கள் பின்னால் தொழக்கூடாது என்று ஃபத்வா கொடுப்பதும் தவறேயாகும். அதாவது அவர்களை இங்கேயே இவ்வுலகிலேயே முஷ்ரிக்குகள் என்று ஃபத்வா கொடுத்து அல்லாஹ்வின் தனி அதிகாரத்தில் தலையிடு வதாகும் இது. ஆக குர்ஆனின் எந்த வசனத்தை ஆதாரமாகக் காட்டி முஸ்லிம் என்று சொல்லும் ஒருவருக்குகுஃப்ர்அல்லது சிர்க்ஃபத்வா கொடுக்கமுடியாது. அப்படி ஃபத்வா கொடுப்பது இவர்களின் சொந்த யூகமே  அல்லாமல்  மார்க்கச் சட்டம்  ஆகாது.

நாங்கள் எங்கே அவர்களுக்குகுஃப்ர்சிர்க்ஃபத்வா கொடுக்கிறோம்? அவர்களின் செயல்பாடு களிலுள்ள சந்தேகம் காரணமாக அவர்கள் பின்னால் தொழுவதைத் தவிர்த்துக் கொள்கிறோம் என்று கூறி தங்களின் தவறான ஃபத்வாவை நியாயப்படுத்தலாம். இதுவும் பெரும் தவறாகும். ஒருவரின் பின்னால் தொழுவதைத் தவிர்ப்பதே அவரை இவர்கள் முஸ்லிமாக ஏற்றுக்கொள்ள வில்லை என்று தானே பொருள்படும். இதுவும் தவறுதானே. இதோ நபி(ஸல்) அவர்களே இதைத் தெளிவுபடுத்துகிறார்கள்.

எவர்கள் நமது தொழுகையைத் தொழு கிறாரோ, நமது கிப்லாவை முன்னோக்குகிறாரோ, நாம் அறுத்ததைச் சாப்பிடுகிறாரோ, அவர் முஸ்லிம்; அவர் அல்லாஹ்வினதும், அல்லாஹ்வின் தூதரினதும் பாதுகாப்பில் உள்ளார். எனவே இந்த பாதுகாப்பில் இருப்பவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்வது கொண்டு அல்லாஹ்வுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யாதீர்கள்அறிவிப்பவர்: அனஸ் (ரழி), நூல் : புகாரி, அபூதாவூத் திர்மிதி, இப்னு மாஜா, தாரமி, அஹ்மத்.

இன்னொரு அறிவிப்பு இவ்வாறு முடிகிறது.

அப்படியானால் அவர் ஒரு முஸ்லிம், மற்ற முஸ்லிம்களுக்கிருக்கும் அதே உரிமைகளும்,  கடமைகளும்  அவருக்கும்  உண்டு    நூல் : புகாரி 1:387

நபி(ஸல்) அவர்கள் இவ்வளவு தெளிவாக அறிவித்த பின்னரும், முஸ்லிம் என்று சொல்லும் ஒருவரை முஸ்லிம் இல்லை காஃபிர் என்று சொல்வதற்கோ அல்லது அவருக்குள்ள உரிமையைப் பறித்து அவர் பின்னால் தொழக்கூடாது என்று சொல்வதற்கோ இவர்களுக்கு எப்படி மனத்துணிச்சல் வந்தது? இது அல்லாஹ்வுக்கே நம்பிக்கைத் துரோகம் செய்யும் மாபெரும்  குற்றச் செயல் என்பதை இவர்களால்  புரிய  முடியவில்லையா?

இந்த ஹதீதை நபி(ஸல்) அவர்கள் தொழுதது போல் தொழுபவர்கள் என்று இவர்கள் தங்கள் மனோஇச்சைக்கு ஏற்றவாறு திரிக்காமல் இருக்க நபி(ஸல்) அவர்கள் எவ்வளவு அழகாக தாழ்ப்பாள் இட்டிருக்கிறார்கள் பாருங்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுதது போல் தொழுவதாக இருந்தால் கண்டிப்பாக கிப்லாவை நோக்கித்தான் தொழ வேண்டும். “நமது கிப்லாவை முன்னோக்குகிறாரோஎன்று சொல்லவேண்டியதில்லை. அப்படி இருக்க நபி(ஸல்) அவர்கள் அதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய காரணம் என்ன? பொருளற்ற ஒரு வாசகம் கூட நபி(ஸல்) அவர்களின் கட்டளையில் இருக்கமுடியாது. 

அதாவது அவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் சரி, அவனது ஈமான் எவ்வளவு பலகீனமானதாக இருந்தாலும் அல்லது இவர்கள் சொல்வது போல் ஈமானே இல்லாத நிலையில் இருந்தாலும் அவன் கிப்லாவை முன்நோக்கி நிற்பவனாக இருந்தால் போதும் அவனை முஸ்லிமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றே நபி(ஸல்) அவர்கள் கட்டளை யிட்டிருக்கிறார்கள். இவர்கள் யார் பின்னால் தொழக்கூடாது என்று சொல்கிறார்களோ அவர்கள் கிப்லாவை முன்னோக்கித்தான் தொழுகிறார்கள் என்பதில் சந்தேகம் இருக்க முடியுமா? 

இத்துடன் கூட நபி(ஸல்) அவர்கள் விட்டுவிடவில்லை. முஸ்லிம்களில் 99% இன்று தொழுகையே அற்றவர்களாக இருக்கிறார்கள், தொழுகை இல்லாத நிலையில் மரணிப்பவர் கள், குஃப்ருடைய நிலையிலேயே மரணிக்கிறார்கள். நாளை நரகில் எறியப்படுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ஆயினும் அவர்களுக்குக் கூட இவ்வுலகில் குஃப்ர்ஃபத்வா கொடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்பதை உணர்ந்த, நபி(ஸல்) அவர்கள் இன்னும் கீழிறங்கிநாம் அறுத்ததைச் சாப்பிடுகிறாரோஅவரும் முஸ்லிமே என்று  தெளிவுபடுத்தி  இருக்கிறார்கள்.

இன்று முஸ்லிம்களில் ஏதாவது ஒரு பிரிவினரை அல்லாஹ்வின் பெயர் சொல்லப்படாமல் அறுக்கப்பட்டதை சாப்பிடுகிறார்கள் என்று இவர்களால் காட்டமுடியுமா? அப்துல் கதிர் ஜீலானிக்கும், நாகூராருக்கும் சிர்க்கான முறையில் நேர்ச்சை செய்து கிடாய் வளர்ப்பார்கள். ஆயினும் அதை அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயர் சொல்லித்தான் அறுப்பார்கள். அவர்கள் அல்லாஹ் அல்லாத அல்லாஹ்வின் அடியார்களுக்கு நேர்ச்சை செய்ததன் மூலம்  அல்லாஹ்வுக்கு இணை வைத்துவிட்டார்கள் என்பதில் அணுவளவும் சந்தேகமில்லை. நாளை மறுமையில் அல்லாஹ் அவர்களை மிகக் கடுமையாகத் தண்டிப்பான் என்பதிலும் சந்தேகமே இல்லை. 

ஆயினும் அந்த நிலையிலும் இவ்வுலகில் அவர்களையும் முஸ்லிமாக ஏற்று அரவணைத்துச் செல்வதன் மூலம், உம்மத்தைசமுதாயத்தைப் பிளவுபடாமல் பாதுகாக்க வேண்டும் என்பதே நபி(ஸல்) அவர்களின் கட்டளையாக இருக்கிறது. அதையே இரத்தினச் சுருக்கமாக மற்ற முஸ்லிம்களுக்குள்ள எல்லா உரிமைகளும் அவர்களுக்கும் உண்டு என்று தெளிவுபடுத்தி  இருக்கிறார்கள்.

Previous post:

Next post: