இறைவனின் திருவிளையாடல்…!
– அ. நஜ்முத்தீன்
பொதுவாக “விளையாடல்” என்பது உடல் நலனுக்காகவும், மன மகிழ்ச்சிக்காகவும் செய்யப்படும் ஒரு செயலாகும். அதுவே உலக நலனுக்காகவும், மனிதர்களுக்கு படிப்பினை அளிப்பதற்காகவும் இறைவன் நிகழ்த்தும் அற்புத நிகழ்வுகளை “திருவிளையாடல்” என்று கூறுவது வழக்கம்.
திருவிளையாடல்கள் குறித்து பல்வேறு கருத்துக்கள் உள்ளன. அவை உண்மை என்று சிலரும், புராணங்களில் கூறப்பட்டுள்ள கற்பனை கதைகள் என்றும் சிலரும் கூறுகிறார்கள். அதுவே மனித வரலாற்றில் உண்மையாக நிகழ்ந்த, சில சம்பவங்களை திருவிளையாடல்கள் என்று ஏற்றுக் கொண்டுள்ளார்.
என்னைப் பொறுத்தவரை, இறைவன் தனது வல்லமையை வெளிப்படுத்தவும், மனிதர்களின் அகந்தையை அகற்றவும், மனிதர்களுக்கு நல்வழி காட்டவும் நிகழ்த்திய அற்புதங்களும் திருவிளையாடல் ஆகும்.
அவை வெறும் கதைகளாக அல்லாமல், இறை நம்பிக்கை, பணிவு, பொறுமை மற்றும் அறநெறி ஆகியவற்றைப் போதிக்கும் வாழ்க்கை பாடங்களாக இறைநூலில் (குர்ஆனில்) கூறப்பட்டுள்ளன.
அவ்வாறு கூறப்பட்ட ஒருசில சம்பவங்களை மட்டும் மிகமிக சுருக்கமாக தந்துள்ளேன்.
1. கடவுள் உருவச் சிலைகளை செய்யும் தொழில் ஈடுபட்டிருந்தவரும் அதை சில காலங்கள் விற்பனை செய்து தந்தைக்கு உதவியாக இருந்தவருமான குடும்பத்தில் பிறந்தவர்தான்.
“நபி இப்ராஹீம்(அலை) அவர்கள் கல், மண் மற்றும் உலோகங்களால் செய்யப்பட்ட சிலைகளுக்கு எந்தவித சக்தியும் இல்லை என்பதை அவர் உணர்ந்தார்.”
அதனை வெளிப்படுத்தவும் செய்தார். அதாவது ஏக இறைவன் ஒருவனே வணக்கத் திற்குரியவன் என்ற உண்மையை தைரியமாக தந்தையிடமும், ஊர் மக்களிடமும் எடுத்துரைத்தார்.
இதன் காரணமாக அவர் தந்தையாலும், ஊர் மக்களாலும், அன்றைய அரசனாலும் ஊரை விட்டு வெளியேற்றப்பட்டார். நெருப் பில் வீசப்பட்டார் இருந்த போதிலும் அவர் தனது இறை நம்பிக்கையில் கடுகளவும் மாறவில்லை.
சிலை வணக்கக் குடும்பத்திலிருந்தே ஏக இறைவன் ஒருவன்தான் என்ற கொள்கையை (உண்மையை) உலகிற்கு அறிவிக்க ஒருவரைத் தேர்ந்தெடுத்தது இறைவனின் திருவிளை யாடல் அல்லவா?
2. ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோல் அரசன் தனது ஆட்சிக்கு பிறக்கும் ஆண் குழந்தை களால் ஆபத்து ஏற்படும் என்று ஜோதிடர்கள் கூறியதன் காரணமாக புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைகளை கொன்று வந்தான்.
அந்தக் காலத்திலேயே பிறந்த நபி மூஸா (அலை) அவர்களை ஃபிர்அவ்னுடைய அரண் மனையிலேயே இறைவன் வளரச் செய்தான். பின்னர் அவரை அவனுக்கு எதிராக மக்களை வழிநடத்தும் தலைவராக ஆக்கினான். இறுதியில் ஃபிர்அவ்னையும், அவனது படை களையும் கடலில் மூழ்கடித்து உலகிற்கு ஒரு பாடமாக்கினான்.
இது இறைவனின் திருவிளையாடல் அல்லவா?
3. நபி யாகூஃப்(அலை) அவர்களுக்கு பதி னோறாவது பிள்ளையாக பிறந்த நபி யூசுஃப் (அலை) அவர்கள் மீது தந்தைக்கு அளவு கடந்த பாசம் இருந்தது. இதனால் பொறாமை கொண்ட அவரது மற்ற சகோதரர்கள் அவரைக் கிணற்றில் தள்ளிவிட்டு ஓநாய் அடித்துக் கொன்றுவிட்டதாக கூறினார்கள்.
கிணற்றில் போடப்பட்ட அவரை ஒரு பயணக் கூட்டம் மூலம் காப்பாற்றப்பட்டு எகிப்தின் அன்றைய மன்னரால் விலைக்கு வாங்கப்பட்டு அரண்மனையில் வளர்ந்து வந்த அவரை எகிப்தின் அரச சபையில் உயர் பதவியில் அமரச் செய்தான். அவரை துன்பு றுத்திய சகோதரரர்களை பின்னர் அவரிடமே உதவி கேட்கும் நிலையை உருவாக்கினான்.
இதுவும் இறைவனின் திருவிளையாடல் அல்லவா?
4. ஆண் துணையின்றி பிறந்த (அதாவது ஒரு குழந்தை பிறப்பதாக இருந்தால் ஆண்டவன் ஆண்–பெண் சேர்க்கையின் மூலமே சாத்தியம் என நம்பப்பட்ட காலத்தில்) நபி ஈசா(அலை) அவர்களின் பிறப்பு அன்றைய மனித அறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு அற்புதமாகும். பிறந்த சில நாட்களிலேயே அவர் பேசியதும், இறைவனால் இன்ஜீல் என்ற இறைநூல் (பைபிள்) வழங்கப்பட்டு அதை மக்களிடம் எடுத்துவைத்ததும் இறைவனின் வல்லமையை வெளிப்படுத்து கின்றன. அவரது பிறப்பும் மறுமை நாளுக்கு முன்பு இறப்பும், அவரைச் சூழ்ந்த அற்புதங்களும் இறைவனின் திருவிளை யாடல் அல்லவா?
5. யூதர்களாகவும் உயர்கல்வியில் தேர்ச்சிப் பெற்ற ஒருவராகவும் இருப்பவர்தான் இறுதி நபியாக வருவார் என நம்பிக்கொண்டிருந்த மக்களிடையே எழுதவும், படிக்கவும் தெரியாத ஆனால் ஒழுக்கத்தில் உயர்ந்தவருமான சிறந்து விளங்கிய முகம்மது நபி(ஸல்) அவர்களை அரபி குலத்திலிருந்து இறைவன் இறுதித் தூதராக தேர்ந்தெடுத்தான்.
அவரை மனித சமுதாயத்திற்கு முன்மாதிரியாகவும் ஆக்கினான். அரபு மக்களிடமே இருந்த அவரது அழைப்பு இன்று சுமார் 220 கோடி மக்களின் வாழ்க்கையை வழிநடத்து கிறது. மேலும் அவர் காலத்திலேயே அவரை எதிர்த்தவர்களில் பலரை அவரது உயிர் தோழராகவும், அவருக்காக உயிரையும் கொடுக்க துணிந்தவர்களாகவும் மாற்றியது.
இறைவனின் திருவிளையாடல் அல்லவா?
அன்றும் இன்றும் என்றும் தொடரும் மேலும் சில இறைவனின் திருவிளைடால்கள்:
சமகாலத்தில் நம் கண்முன்னே “இறைவன் இல்லை” என்று பேசிவந்த பலரை நாத்திகக் கொள்கைகளிலிருந்தும் மற்றும் பல்வேறு தவறான கொள்கைகளிலிருந்தும் விலகி ஏக இறைவன் ஒருவனே என்பத ஏற்றுக்கொள்ளச் செய்தது இறைவனின் வழிகாட்டுதலால் ஆன திருவிளையாடலே.
“விசம் அருந்தியவன் உயிர் பிழைக்கிறான்; வாழ மருந்து உட்கொண்டவன் உயிரிழக்கிறான்” மனிதனின் மற்றும் மருத்துவர்களிலும் கணிப்புக்களை கடந்து பல நிகழ்வுகள் அன்றாடம் நடப்பது இறைவனின் வல்லமையையும், திருவிளையாடலுமாகும்.
முடிவுரை : எனவே குர்ஆனில் மற்றும் அன்றாடம் நடக்கும் சம்பவங்களும் வெறும் கதைகளாகவும், நிகழ்வுகளாகவும் மட்டும் பார்க்காமல் அவற்றின் பின்னணியில் உள்ள படிப்பினைகளை உணர்ந்து இறைவன் ஒருவனே என்பதை உணர்ந்து வாழ்வதே உண்மையான அறிவாகும்.