பெண் எண்ணம் நோய் கண்டு வாடுகிறேன்!

in 2026 ஆகஸ்ட்

பெண் எண்ணம் நோய் கண்டு வாடுகிறேன்!

ஹராமின் புதைகுழியில் விழச்செய்யும் நோய்க்குகுர்ஆன் கூறும் மருந்து!

எஸ். ஹலரத் அலி

முன்னுரை : 

மூன்று ஆசைகளில் மிக ஆபத்தானது எது?

நபி(ஸல்)  சொன்னார்கள் :

எனக்குப் பின் ஆண்களுக்கு பெண்களை விட அதிக குழப்பம் தரும் சோதனையை நான் விட்டுச் செல்லவில்லை”.  புகாரி : 5096, முஸ்லிம் :2740

மண்ணாசை வயதானால் அடங்கும். பொன்னாசை போதும் என்ற மனம் வந்தால் நிற்கும். ஆனால் பெண்ணாசை அது பால்யம் முதல் முதுமை வரை துரத்தும் ஷைத்தானின் மாய வலை.

இளைஞன் பார்வையால் விழுகிறான். நடுத்தர வயது சாட்டிங்கில் விழுகிறான். முதியவர்  கற்பனையில்  விழுகிறார்.

இதுஆசைஇல்லை. இது “”நோய்பெயர்: “”பெண் எண்ணம் நோய்!” சதா பெண்ணைப் பற்றியே  எண்ணமும்  நினைப்பும்!

அறிகுறி : நெஞ்சு படபடப்பு, தூக்கம் கெடு தல், தொழுகையில் கவனம் சிதறல், ஹராமை ஹலாலாக்க  மனம்  துடித்தல்.

முடிவு :  துன்யாவில்  இழிவு,  ஆகிரவிதில்  நரகம்.

1. அல்லாஹ் ஏன் இத்தனை தடுப்பு சுவர் கட்டினான்?

ஒரு பேங்க் லாக்கருக்கு 7 கதவு. சைரன் வைப்பாங்க. ஏன்? உள்ளே வைரம் இருக்கிறது. ஒரு முஸ்லிமின் கற்பும், ஒரு பெண்ணின் மானமும் அல்லாஹ்விடம் வைரத்தை விட பெரியது! அதனால் தான் ஏழு தடுப்பு.

1. பார்வையை  தாழ்த்து! 

முஃமினான ஆண்கள் தம் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளட்டும்!  அல்குர்ஆன் 24:30

ஒரு செகன்ட் பார்த்தா குறையவா போகுது? இது ஷைத்தானின் தூண்டில் முள்!

2. தனிமையை  தவிர்!

ஒரு ஆணும் பெண்ணும் தனித்திருந்தால் மூன்றாவது ஆள் ஷைத்தான். புகாரி: 3006

நாங்க  ஷைத்தானின் ஊசலாட்டம்.

3. பேச்சில்  குழைவு  வேண்டாமா?

பேச்சில் நளினம் காட்டாதீர், நோயுள்ள உள்ளம்  ஆசைப்படும்.  அல்குர்ஆன் 33:32

ஷைத்தான் கொக்கியை போடுவான்! ஜாக்கிரதை! 

4. ஆடையில்  ஒழுக்கம்!

ஹிஜாப், ஜில்பாப் போடுவதும், போடாத தும்  என்  இஷ்டம்,  நீ  ஏன்  பார்க்கிறாய? அல்குர்ஆன் 24:31, 33:59

ஹிஜாப் அணியாமல் இருப்பதை நியாயப்படுத்தும்  ஷைத்தான்.

5. திரை  இல்லாமல்  வீட்டில்  நுழையாதே!

அனுமதி கேட்டு ஸலாம் சொல்லி வீட்டில் நுழை. அல்குர்ஆன் 24:27

சொந்தக்காரங்கதானே! ஏன் சொல்லிவிட்டு நுழையனும்? இதுவும் ஷைத்தானின் ஃபித்னா.

6. திருமணத்தை  எளிதாக்கு!

நபி(ஸல்):  திருமணம்  என்  சுன்னத்”. இப்னு மாஜா : 1846

வாழ்க்கையில் இன்னும் செட்டில் ஆகாமல் கல்யாணமா? என்று ஷைத்தான் திருமணத்தை  தடுக்க  தூபம் போடுவான்.

7. நோன்பு  பிடி!

திருமணம் செய்ய சக்தி இல்லாதவன் நோன்பு நோற்கட்டும். அது அவனுக்கு கேடயம்!   (புகாரி : 1905)

நோன்பு வைத்தால் நம்ம பாடியை வீக் ஆக்கிடும் பாய் பாஸ். இது நம்ம ஷைத்தானின் அட்வைஸ்.

ஏழு சுவர் தாண்டி தான் ஒருவன் ஸினாவில் விழுகிறான்!

ஏழு தடவை அலாரம் அடித்தும் திருடன் உள்ளே  போனால்  தவறு  யாருடையது?

2. பெண் வண்ணம் நோய் கண்டு வாடுகிறேன்!

இந்த நோயின் நான்கு நிலைகள்:

நிலை 1 : பார்வை ஸினா. 

கண் செய்யும் விபச்சாரம் பார்வை!  முஸ்லிம் : 2657

ரீல்ஸ், இன்ஸ்டா, டிவி சீரியல், வாட்ஸ்அப், பேஸ்புக், இதுதான் இனிப்பா இருக்கும்.

நிலை 2 : கற்பனை ஸினா!

உள்ளம் ஆசைப்படும், விரும்பும்: அதே ஹதீத், தனியா இருக்கும்போது இரவு தூக்கம் போச்சு.

நிலை 3 : பேச்சு செயல் ஸினா!

நாவு பேசுவது, கை தொடுவது, கால் நடப்பது, சாட்டிங், வாட்ஸ்அப் கால், பார்க், பைக் ரைடு. 

நாங்க தப்பு பண்ணல, இதுதான் ஷைத்தானின் குளோராபாம் கொடுக்கும் மயக்கம்!

நிலை 4 : உண்மை ஸினா!

விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்காதீர்கள்! (அல்குர்ஆன் 17:32)

அல்லாஹ் விபச்சாரம் செய்யாதே என்று சொல்லவில்லை, அருகில் கூட போகாதே என்கிறான். ஏன் என்றால் போனால் விழுந்துடுவாய்.

இன்று  90% வாலிபர் நிலை 1,2,3ல் மாட்டிநான் தூய்மையாதான் இருக்கேன்என்று தன்னையே ஏமாற்றுகிறார்கள்.

3. மருந்து இல்லாத நோயா இது? ஆறு மருந்துகள் குர்ஆன் தருகிறது!

மருந்து 1 :  நோன்பு :

நபி(ஸல்) : வாலிபர்களே திருமணம் முடியுங்கள்! முடியாதவர் நோன்பு நோற்கட்டும். அது அவருக்கு ஆசையை அறுக்கும் சக்தி!  புகாரி : 5066

1400 வரு­ம் முன் நபி(ஸல்) சொன்ன Medical Prescription.

மருந்து 2 :  திருமணம் – Halal Channel

அல்லாஹ் சொல்கிறான்:

உங்களிலிருந்தே மனைவியரை படைத்தான், நீங்கள் அவர்களிடம் அமைதி பெற. அல்குர்ஆன் 30:21

ஆசை Drain ஆகாத சாக்கடை :

Halal Drainஐ திறந்து விடு. மஹர் 1000 ரூபாய் போதும்! திருமணம் செய்துகொள்!  பெற்றோர்கள்செட்டில் ஆகுஎன்று ஹராமை மூடி வைத்து, ஹலாலை திறக்கிறார்கள்.

மருந்து 3 : பயம் Jahannam Fire Wall.

ஸினா செய்பவன் மறுமையில் நெருப்ப குண்டத்தில் நிர்வாணமாக எரிவான்! புகாரி 1386

ஐந்து நிமிட சுகம், கோடி வருடம் நரகம், Business Loss கணக்கு போடு, கூடுமா?

மருந்து  4 : அர்ஸின் நிழல்! 50,000 வரு­ வெயிலுக்கு 1 நாள் AC

நபி சொன்னார்கள் :

ஏழு நபர்களுக்கு அல்லாஹ் தன் அர்ஸின் நிழலை கொடுப்பான். அந்த நாளில் அவன் நிழலைத் தவிர வேறு நிழலே இருக்காது.

அவர்களில் ஒருவன்; அழகும் அந்தஸ்தும் உள்ள ஒரு பெண் தவறுக்கு அழைத்தபோது, நான் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறேன் என்று சொன்ன வாலிபர். புகாரி: 660, 1423,முஸ்லிம் 1031.

நிலைமையை கற்பனை செய் :

இடம் : மஹ்சர் மைதானம்.

வெயில் : சூரியன் ஒரு மைல் தூரத்தில் 50,000 வருசம் நிற்கவேண்டும். மண்டை கொதிக் கும். மூளை உருகும், வேர்வை கழுத்தளவு வரும். புளீ கிடையாது, மர நிழல் கிடையாது, கட்டிடம் கிடையாது.

அன்று 7 பேருக்கு மட்டும்அர்ஸின் நிழல், அதில் 1 சீட் யாருக்கு தெரியுமா?

பள்ளிக்கூடம், காலேஜ், ஆபீஸ், இன்ஸ்டா ம்னிவா மச்சான்என்று அழகான பெண் கூப்பிட்டபோது, “ஸ்கிரீன்ஷாட் எடுத்து வச்சுக்கோ, நான் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறேன்என்று போனை Switch off செய்த வாலிபனுக்கு!

யூசுப்(அலை) அவர்கள் நமது ரோல் மாடல் :

ராணி கதவை பூட்டி, “ஹைத லக வா!” என்றாள். அவர்மஆதல்லாஹ்என்று ஓடினார். அல்குர்ஆன் 12:23

நீ யூசுப் இல்லை. உனக்கு ராணி இல்லை, ரீல்ஸ் தான். ஆனா நீ : “மஆதல்லாஹ்என்று பண்ணாமல் தூக்கி எறிந்தால், நீயும் யூசுப் (அலை) கூட அர்ஸின் நிழலில் நிற்பாய்!

கணக்கு போடு : 

5 நிமிட ஹராம் சுகம் = 50,000 வருச வெயில்.

5 நிமிட சபர் = 50,000 வருச AC நிழல்.

எது லாபம்?

மருந்து 5 : தவ்பா – Control Z Button!

அல்லாஹ்வின் அருளில் நிராசை ஆகாதீர்! எல்லா பாவத்தையும் மன்னிப்பான்! அல்குர்ஆன் 39:53

இன்றே இரண்டு ரக்அத் தொழுது தவ்பா செய்! யா அல்லாஹ், நான் பெண் எண்ணம் நோயாளி! நீயே ´ஃபா தரணும் என்று அழுது கேளுங்கள்.

மருந்து 6 : சகவாசம் மாற்று – Environment Change!  

நண்பன் Reels அனுப்புகிறான், நீ Unfriend பண்ணிவிடு. Office–ல் தனியா பேச சான்ஸ் இருக்கிறது என்றால், நீ Transfer கேள். மொபைலில் Instagram இருக்கு. நீ Delete பண்ணிவிடு!

விசம் குடிக்கும் கிண்ணத்தை உடைக்காமல், விசம் குடிக்க மாட்டேன் என்று சபதம் போடுவது முட்டாள்தான்!

5. நான் ஏற்கனவே மையலில் விழுந்து விட்டேன் என்பவருக்கு

நபி(ஸல்) காலத்து வாலிபர் வந்தார்:

அல்லாஹ்வின் தூதரே! ஸினா செய்ய அனுமதி கொடுங்கள்! ஸஹாபாக்கள் அடிக்க பாய்ந்தார்கள். நபி(ஸல்) சிரித்து அருகில் அழைத்தார்கள்

உன் அம்மாவுக்கு ஒருவன் இப்படி செய்தால் ஒப்புக்கொள்வாயா?

இல்லை யா ரசூலல்லாஹ்! உன் மகளுக்கு? இல்லை. உன் சகோதரிக்கு? இல்லை. அப்படி தான் மக்கள் தங்கள் மகள், சகோதரிக்கு விரும்பமாட்டார்கள்! என்று அவர் நெஞ்சில் கை வைத்து துஆ செய்தர்கள். அவர் வெளியே போகும்போது ஸினா தன் அவருக்கு மிக வெறுக்கத்தக்கதாக ஆகிவிட்டது! அஹ்மத் 22211.

பாடம் : தீர்ப்பு சொல்லாதே, தீர்வு சொல்லு. உன் மனசாட்சியை கேள். நீ ஒரு பெண்ணை ஏமாற்றினால், நாளை உன் மனைவி, மகளை ஒருவன் ஏமாற்ற அல்லாஹ் நாடலாம்.

தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்!

முடிவுரை : வாடுகிறேன் என்று சொல்லாதே, மீள்கிறேன் என்று சொல்!

யூசுப்(அலை) அழகர், எகிப்து நாட்டு பெண்கள் கை அறுத்துக்கொண்ட அழகர். ராணி கதவை பூட்டிவாஎன்றாள். அவர் சொன்னார்: “மஆதல்லாஹ்அல்லாஹ் பாதுகாப்பான்.” அல்குர்ஆன் 12:23

ஜெயில் போனார், ஜன்னத் வாங்கினார்!

நீ யூசுப் இல்லை! உன்னை கதவை பூட்டி யாரும் கூப்பிடவில்லை. மொபைலை நீயே திறக்கிறாய்அப்புறம்வாடுகிறேன்என்று பாட்டுப்பாடி ம்rழிதுழி போடுகிறார்!

இன்றே செய்ய வேண்டிய மூன்று வேலை!

1. நோன்பு : வாரம் திங்கள், வியாழன்

2. துஆ: அல்லாஹும்ம ஹஸ்ஸின் ஃபர்ஜீ யா அல்லாஹ் என் கற்பை பாதுகாப்பாயா!

3. திருமண முயற்சி: பெற்றோர்களிடம் பேசு. “ஹராமில் விழுந்துவிடுவேனோ? என்று பயமாக இருக்குஎன்று அழு.

அல்லாஹ் சொல்கிறான்: நீ மருந்து சாப்பிடாத கோளாறு. மருந்து இதோ, சாப்பிடு. சிஃபா நிச்சயம்!

வாடுகிறேன்என்று வசனம் எழுதாதே. “வா அர்சின் நிழலுக்குஎன்று அல்லாஹ் கூப்பிடுகிறஆன். ஏழு சீட்டில் 1 சீட் உனக்கு Book பண்ணு. Booking Charge.

இன்னீ அகாஃபுல்லாஹ் நான் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறேன்!” என்ற ஒரே ஒரு வார்த்தைஓஹோன்று வாழ்க்கை!

அல்லாஹ் நம் எல்லோரையும் அந்த ஏழு பேரில் ஒருவராக ஆக்குவானாக! ஆமீன்.

வ அல்லாஹு ஷாஃபிஅல்லாஹ்வே குணப்படுத்துபவன்!

Previous post:

Next post: