அறிந்து கொள்வோம்!
ரஹிமுத்தீன், குண்டூர்
1. எவருடைய மரணித்திற்காகவும் எது பிடிப்பதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
கிரகணம். புகாரி : 1041
2. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் கிரகணம் ஏற்பட்டபோது தொழுகை எவ்வாறு தொழப்பட்டது?
ஜமாஅத்தாக. புகாரி : 1045,1046
3. நபி(ஸல்) அவர்கள் தஹ்ஜத் தொழுகை தொழாமல் இருந்தார்களா?
ஆம்! ஓர் இரவு, இரண்டு இரவுகள் நோயின் காரணமாக. புகாரி : 1124
4. அலிபின் அபிதாலிப்(ரழி) அவர்கள் பற்றி நபி(ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள்?
அதிகமாக தர்க்கம் செய்பவராக இருப்பதாக. புகாரி : 1127
5. மஸ்ஜிதுல் ஹரம்–மஸ்ஜிதுல் அக்ஸா இவ்விரண்டிற்கு எத்தனை ஆண்டுகள் கழித்து கட்டப்பட்டது?
40 ஆண்டுகள். முஸ்லிம் : 1155
6. மற்ற நபிமார்களை விட எத்தனை விசயங்களில் நான் சிறப்பிக்கப்பட்டுள்ளதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
6 வியங்களில். முஸ்லிம் : 1161
7. மதினாவின் பனூ அம்ர் இப்னு அவ்ஃப் குலத்தாரிடம் எத்தனை இரவுகள் தங்கினார்கள்?
பதினான்கு இரவுகள். முஸ்லிம் : 1167
8. கப்ரின் மீது உருவப்படங்களை வைப்பவர்கள், வரைபவர்கள் மறுமை நாளில் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
படைப்பினங்களிலேயே மோசமானவர்கள். முஸ்லிம் : 1175
9. நபி(ஸல்) அவர்களின் கடைசி தொழுகையின் இமாமாக இருந்தவர் யார்?
அபூபக்கர்(ரழி) அவர்கள். சுனனுந் நஸாயீ :785
10. அம்ர் பின் ஸலமா அல்ஜர்மீ(ரழி) அவர்கள் எந்த வயதில் இமாமாக இருந்து தொழவைத்தார்கள்?
எட்டு வயதில். சுனனுந் நஸயீ : 789
11. இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களின் தாயாரின் சகோதரி யார்?
மைமூனா(ரழி) அவர்கள். சுனனுந் நஸயீ : 806
12. நபி(ஸல்) அவர்களுக்கு ஜமாஅத் தொழுகையில் ஒரு சிறப்பு ஆற்றல் அல்லாஹ் வழங்கியது எது?
முன்னால் பார்ப்பதைப் போல் பின்னால் பார்க்கும் ஆற்றல். சுனனுந் நஸயீ : 813
13. தொழுகை திக்ர், குர்ஆன் ஓதுதல் போன்ற வணக்கங்களுக்காக பள்ளிவாசல் கட்டுப வருக்கு என்ன அல்லாஹ் தருவான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
சொர்க்கத்தில் ஒரு வீடு தருவான். சுனன் இப்னு மாஜா : 735
14. மஸ்ஜிதுகளை அதிகமாக அலங்கரித்தால் என்ன நடக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக உமர் இப்னு கத்தாப்(ரழி) அவர்கள் கூறினார்கள்?
சமூகத்தின் செயல்கள் சீர்கெடும். சுனன் இப்னு மாஜா : 741
15. மல ஜலம் கழிக்கும்போது எதனை நோக்கி இருக்கக் கூடாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
கஅபா, பைத்துல் மக்திஸ். சுனன் அபூதாவூத் : 10
16. இருவர் மலம் கழிக்க திறந்த வெளியில் சென்றால் எதனை செய்ய வேண்டாம் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
பேச வேண்டாம். சுனன் அபூதாவூத் : 15
17. எந்த வகையான தர்மத்தை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
கையாடல், மோசடி செய்தவற்றிலிருந்து வழங்கப்படுவதை. சுனன் அபூதாவூத் : 59
18. தேங்கி நிற்கும் நீரில் எதனை செய்ய வேண்டாம் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
சிறுநீர் கழிப்பது, குளிப்பது. சுனன். அபூதாவூத் : 69
19. பெருநாள் தொழுகையில் தக்பீர் எந்த தொழுகையில் கூறக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
மழை வேண்டித் தொழும் தொழுகையில். ஜாமிஉத் திர்மிதி : 559