அறிந்து கொள்வோம்!

in 2026 மார்ச்

ரஹிமுத்தீன்,  குண்டூர்

1. மது மற்றும் சூதாட்டத்தினால் என்ன விளைவு ஏற்படும் என அல்லாஹ் கூறுகிறான்?

சிறியபலனும்,  பெரும் பாவமும்.  அல்குர்ஆன் : 2:219

2. எதைச் செய்தால் நேரான வழி என அல்லாஹ்  கூறுகிறான்?

அல்லாஹ்வைவணங்குவதால். அல்குர்ஆன் : 3:51

3. படர்தாமரை இருந்தால் என்ன செய்ய நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

ஓதிப்பார்க்க  கூறினார்கள்.  முஸ்லிம்:4422

4. நபி(ஸல்) அவர்கள் தனது கையால் யாரையும்  அடித்தார்களா?

அடித்தது  இல்லை.  முஸ்லிம் : 4651

5. நபி(ஸல்) அவர்களின் வியர்வைத் துளிகள்  எவ்வாறிருந்தன?

முத்துக்களைப்போல். முஸ்லிம் : 4654

6. ஷைத்தானின் அடிச்சுவடுகளை என்ன செய்யவேண்டாம் என அல்லாஹ் கூறு கிறான்?

பின்பற்றாதீர்கள்.  அல்குர்ஆன் 6:142

7. பூமி இறந்தபின் எதன்மூலம் உயிரூட்டு வதாக அல்லாஹ் கூறுகிறான்?

மழையின்மூலம். அல்குர்ஆன் 30:24

8. மனிதர்களை எவ்வாறு படைத்ததாக அல்லாஹ்  கூறுகிறான்?

ஒரு  ஆண்,  ஒரு பெண்ணிலிருந்து.  அல்குர்ஆன் 49:13

9. ஜும்ஆ நாளில் குளிப்பது யார் மீது கடமை என நபி(ஸல்) அவர்கள் கூறி னார்கள்?

பருவவயதைஅடைந்தஒவ்வொருவர்மீதும்  கட்டாயமாகும்.  புகாரி : 879

10. கேள்வி கணக்கின்போது துருவித் துருவி விசாரிக்கப்படுபவன் நிலை என்ன என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

அழிக்கப்படுவான்.  புகாரி: 4939

11. தமது வாழ்க்கை வசதிகள் விசாலமாக்க விரும்புகிறவர் என்ன செய்யவேண் டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

தமது  உறவை  பேணவேண்டும்.  முஸ்லிம் 4998

12. அநீதியிழைப்பதை எனக்கு நானே தடை செய்து கொண்டதாக யார் கூறினார்கள்?

அல்லாஹ்  கூறினார்.  முஸ்லிம் : 5033

13. பெற்றோர்களை எப்படி சொல்ல வேண்டாம் என அல்லாஹ் கூறுகிறான்?

சீ(உஃப்)  என்று  கூறவேண்டாம். அல்குர்ஆன் 17:23

14. முஸ்லிமின் துன்பத்தை நீக்குபவரின் நிலை எவ்வாறு இருக்கும் என நபி(ஸல்)  அவர்கள்  கூறினார்கள்?

மறுமைநாளில்அல்லாஹ்அவருடையதுன்பத்தைநீக்குவான்.  முஸ்லிம்: 5036

15. இறை நம்பிக்கையாளர்கள் ஒருவருக் கொருவர் ஒத்துழைத்து நடப்பவர் எதைப் போன்றவர்கள் என நபி(ஸல்) அவர்கள்  கூறினார்கள்?

கட்டடத்தை  போன்றவர்கள்.   முஸ்லிம் : 5043

16. இறை வழியில் செல்பவரின் பாதங் களில் புழுதி படிந்தவரின் நிலை என்ன வாக இருக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

நரகை  விட்டு  விலக்கு  பெறுவான். புகாரி: 907

17. வறுமைக்கு அஞ்சி பிள்ளைகளை என்ன செய்யவேண்டாம் என அல்லாஹ்  கூறுகிறான்?

கொலைசெய்யவேண்டாம். அல்குர்ஆன் 17:31

18. எவர்கள் நன்மைகளை இழந்தவர் என நபி (ஸல்)  அவர்கள்  கூறினார்கள்?

நளினத்தைஇழந்தவர்.   முஸ்லிம் 5054

Previous post:

Next post: