என் மகனும்  ஆலிமானால்…!

in 2026 மார்ச்

என் மகனும்  ஆலிமானால்…!

. நஜ்முத்தீன்

உலக அளவில் சுமார் 53 முஸ்லிம் நாடுகள் (.நா.சபையால் அங்கீகரிக்கப்பட்டவை) உள்ளன. இப்போதுள்ள (2025ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி) உலக மக்கள் தொகை சுமார் 800 கோடி பேரில் முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 200 கோடி பேருக்கு  மேல்  உள்ளனர்.

மேற்கண்ட முஸ்லிம்கள் இஸ்லாத்தை மார்க்கமாக ஏற்றுக்கொண்டதால் வழிபாடு செய்வதற்காக (தொழுகையை நிறைவேற்றுவதற்காக) உலக முழுவதும் சுமார் 37 லட்சம் பள்ளிவாசல்கள் உள்ளன. இந்தோனிசியாவில் மட்டும் சுமார் 8 லட்சம்  பள்ளிவாசல்கள்  உள்ளன.

அதேபோல் இந்தியாவில் சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் பள்ளிவாசல்கள் உள்ளன. இந்த எண்ணிக்கைகள் எல்லாம் பெரிய, நடுத்தர மற்றும் சிறிய பள்ளிவாசல்கள் அனைத்தும் சேர்த்து வக்ப் வாரியத்தில் பதிவில் உள்ளவையாகும். இதை அல்லாமல் கணக்கில் வராத, வக்ப் செய்யப்படாத சில பள்ளிகளும்  உள்ளன.

நமது தமிழ் நாட்டில் அதிகாரபூர்வமாக வக்ப் வாரியத்தில் பதிவில் உள்ள பள்ளிவாசல்கள் சுமார் 9 ஆயிரங்கள் உள்ளன. இவைகள் அனைத்தும் சுன்னத் வல் ஜமாத் பள்ளிவாசல்கள். மேற்கண்ட 9 ஆயிரம் பள்ளிவாசல் அல்லாமல் வக்ப் செய்யப்பட்ட, வக்ப் செய்யப்படாத அமைப்பு சார்ந்த சியா, காதியானி, கோரா) பள்ளி வாசல்கள் சுமார்  700  முதல்  1000  வரை உள்ளன.

மேலும் எந்தவொரு அமைப்பிலும் சாராத பள்ளிவாசல்களும்  உள்ளன.

உலக அளவில் அரபி கல்லூரிகள், மதரஸாக் களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது மிக சரி யான தரவுகள் இல்லை. அதுபோல் இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் அரபி கல்லூரிகள், மதரஸாக்களின் எண்ணிக்கையின் மிக சரியான தரவுகள் இல்லை. ஆயினும் இந்தியாவில் சுமார் 1000த்திற்கு உட்பட்ட அரபி கல்லூரிகளும்மதரஸாக்களும் உள்ளதாக  கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் சுமார் 100க்கு குறைவான அரபி  கல்லூரிகளும்மதரஸாக்களும்  உள்ளன.

மேற்கண்ட அரபி கல்லூரிகளும்மதரஸாக்களிலும் 7 வருடம் படித்து ஆலிம் பட்டம் (ஸனது) பெற்று ஒவ்வொரு வருடமும் சுமார் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை வெளி உலகிற்குஆலிம்‘ (அறிஞர்)  என  அறிமுகப்படுத்தப்படுகிறார்கள்.

இந்த ஆலிம் பட்டம் வழங்கப்படும் நிகழ்வுகள் ­ஃபான் மாதத்தில்பட்டமளிப்பு விழா  பாராட்டு விழா என்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. இந்த நிகழ்வுகளை (பட்டமளிப்பு விழா) பார்த்த சிலருக்குஎன் மகனும் ஆலிமாகவேண்டும்  என்ற  ஆசை  ஏற்படுகிறது.

இந்த  ஆசையும்  ஆர்வமும்  சரிதானா?

மேற்கண்ட அரபி கல்லூரிகளும் மதரஸாக் களிலும் நடத்துவதற்காக ஆண்டுதோறும் ரமழானில் கோடிக்கணக்கான ரூபாய் சமுதாயத்தினரிடமிருந்து  வசூலிக்கப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் பட்டம் (ஸனது) பெற்று வெளியாகும் ஆலிம்களின் அடுத்த கட்ட  நிலை  என்ன?

பட்டம் பெற்ற அனைவருக்கும் பள்ளி வாசல்களில், அல்லது அரபி கல்லூரிகளில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கின்றதா? மற்றும் அரசு பணியில்  சேர்கின்றார்களா?

ஆலிம் பட்டம் பெற்ற சுமார் 80 சதவீதம் பேரில் பணிபுரிய வாய்ப்பே இல்லாமல் ரமழான் தோறும் ஏழ்மை நிலையை சொல்லி, அல்லது குமர் காரியம் என சொல்லி வசூலிக்கத்தான் பெரும்பாலோர்  வருகிறார்கள்.

ஆலிம் பட்டம் பெற்றவர்கள் குர்ஆன் ஹதீத்களை பற்றிய அறிவை வளர்க்க, வளர்த்துக் கொள்ள பெரும்பாலோர் முயற்சி செய்வதில்லை. இந்திய சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகளில் பல ஆயிரக்கணக்கான ஆலிம்கள் பட்டம் பெற்றுள்ளனர்.

இதுவரை ஒரே ஒரு ஆலிம் மட்டுமே மாவட்ட கலெக்டர் (ஆட்சியாளராக) ஆகியுள்ளார். அது வும் கேரளாவிலுள்ள படித்த ஒருவர் மட்டுமே. இவரை அல்லாமல், மேற்படிப்பு படித்து மருத்துவராகவோ, இன்ஜினியராகவோ, வழக்கறிஞராகவோ, கணினி வல்லுநராகவோ, சார்ட்டர்டு அக்கவுண்டன்டராகவோ காவல் துறையிலோ அல்லது குர்ஆன்ஹதீத் ஆய்வு செய்துமுனைவர்பட்டம் பெற்றவர்கள் எத்தனை பேர்? தமிழகத்திலுள்ள பள்ளிவாசல்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பெரும்பான்மையான பள்ளிகளில் பணிபுரிபவர்கள் வட மாநிலத்தை  சார்ந்தவர்களாகவே  உள்ளனர்.

வட மாநிலத்திலிருந்துஆலிம்பட்டம் பெற்று வருபவர்களின் உண்மையான தகுதி என்ன? அவர்களின் சான்றிதழ்கள் (ஸனது) சரியானதுதானா? அவர்களில் பெரும்பாலோருக்கு ஜும்ஆ  பயான்  செய்யவும்  தெரியாது.

அவர்களுக்கு தமிழும் தெரியாது, தமிழ் தெரிந்துகொள்ளவும் முயற்சியும் செய்யமாட்டார்கள். வடமாநிலத்தவர்கள் விடுமுறை எடுக்காமல் வருட முழுவதும் குறைந்த சம்பளத்தில் பள்ளியிலேயே தங்கிகொண்டு சமைத்துகொண்டு பணிபுரிய தயாராக இருப்பதால் நிர்வாகிகள், ஜமாத்தார்கள் இதை அங்கீகரிக்கிறார்கள்.

இங்கு மற்றொரு வேதனையான உண்மையை தெரிவிக்க வேண்டியுள்ளது. பெரும்பாலோர் தங்கள் பிள்ளைகளை மதரஸாவிற்கு படிக்க அனுப்புவது பசி தீர்க்கவே! பாடம் கற்க அல்ல. அது மட்டுமல்ல வேலை கிடைக்கவில்லை என்றாலும்  கவலைப்படுவதும்  இல்லை.

இவை எல்லாவற்றையும் விட வேறொரு வேதனையான  விசயம்  என்னவென்றால்?

கொள்கை  குழப்பம்,

குர்ஆன் மட்டும் போதும் என சிலர்,

குர்ஆனும்ஹதீதும் தேவை என பலர்,

உலக கல்வியிலாவது பல்வேறு பாடத்திட்டங்கள் இருக்கின்றன. மார்க்க கல்வியில் குர்ஆன்ஹதீத் தவிர ஏன் வேறு வேறு பாடத்திட்டங்கள்? 

1.  ஒருவர் சில செயல்களை சிர்க்(இணை வைத்தல்) என்கிறார். மற்றொருவர் அது சிர்க் அல்ல. பித்அத் ஹஸனா(புதுமையில் நல்லது) என்கிறார்.

2.   ஒருவர் சூனியம் உண்டு என்கிறார் வேறுவொருவர் சூனியம் இல்லை என்கிறார்.

3.  பாத்திஹா, மெளலூது கூடும் என பெரும்பாலோர்  கருத்து.

இன்னும் ஏராளம் ஏராளம். நாம் சுருக்கமாக  குறிப்பிட்டுள்ளோம்.

சமுதாயத்தினரின் உழைப்பில் உண்டு, படித்து பட்டம் பெற்று வந்தவர்கள் சமுதாய மக்களுக்கு உண்மையை சொல்ல வேண்டாமா? அல்லது இவைகள் குர்ஆன்ஹதீதில் உள்ள முரண்பாடா? 

(அல்லது) உங்களுக்கிடையே உள்ள புரிதலில் உள்ள  முரண்பாடா?

மகனை  ஆலிமாக்க  ஆசைப்படும்.

அன்பர்களே!

ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். எந்தவொரு நபித்தோழரும் (ஸஹாபியும்) மதரஸாவிற்கு சென்று படித்து ஆலிம் பட்டம் வாங்கியவர்கள் அல்ல. ஆனால் ஜும்ஆ பயானில் ஸஹாபாக்களை இவர்கள்ஹஜ்ரத்என்று சொல்வது மக்களை ஏமாற்றவே. அவர்கள் அனைவரும் குர்ஆனின் வசனங்களையும், நபி(ஸல்) அவர்கள் வாழ்க்கை முறையும் பாடமாக படித்தவர்கள். அவர்கள் முஸ்லிமாக வாழ்ந்தார்கள். அதனால்தான் அவர்களின் பெரும்பாலோரை அல்லாஹ் தான் வாழும் பொழுதே பொருத்திக் கொண்டதாக கூறுகிறான். அவர்களுடைய (நற்)கூலி அவர்களுடைய இறைவனிடத்திலுள்ள நிலையான சுவர்க்கச் சோலைகளாகும். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும். அவற்றில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாகத் தங்கியிருப்பார்கள்; அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி திருப்தி  அடைந்தான்; அவர்களும் அவனைப் பற்றி திருப்தி அடைவார்கள்; அது, எவர் தம் இறைவனுக்குப் பயப்படுகிறாரோ அவருக்கு  உரியதாகும்.

குர்ஆன் ஹதீத்களை அனைவரும் படிக்க வேண்டும். அதில் நன்கு தேர்ச்சி பெறவேண்டும் என்பதில்  மாற்று  கருத்து  இல்லை.

ஆனால் உலக கல்வியை விட்டுவிட்டு சுமார் 7 வருடம் மதரஸாக்களில் பாடமாக இருக்கும் மஸாயில்களை மட்டும் படிப்பதால் உங்களுக்கும், சமுதாயத்திற்கும் எந்த பலனும் இல்லை. இன்னும் தெளிவாக சொல்லப் போனால் சமுதாயத்தினரின் பொருளாதாரம் தான் மிக பெரிய அளவில் வீண் விரையம்  ஆகின்றது.

எனவே உலக கல்வியோடு குர்ஆன் ஹதீத் இணைந்த கல்வி, மற்றும் மேற்படிப்பு கல்வி யையும் படித்து அதில் நீங்கள் தேர்ச்சிப் பெற்றால் (ஆலிமானால்) பள்ளிவாசலில் இமாமாக பணி புரிவதை மட்டும் நம்பிக்கொண்டு இல்லாமல் பல கல்லூரிகளில் அரபி ஆசிரியராக பணி புரியவும் வாய்ப்பு உண்டு. மேலும் வெளிநாடுகளில் குறிப்பாக அரபு நாடுகளில் ஆங்கிலமும் + அரபியும் தெரிந்தவர்களுக்கு பல துறைகளில் நிறைவான சம்பளத்தில், கெளரவமாக வாழவும் வழியும் உண்டு.

எனவே, மகனை/மகளை அவசியம் குர்ஆனை (ஓத) படிக்கச் சொல்லுங்கள். மேலும் அதன் பொருள் உணர்ந்து படித்து, சிந்தித்து, செயல்படுபவர்களாக, அல்லாஹ்வுக்கு மட்டுமே அஞ்சக்கூடிய வர்களாக  ஆக்குங்கள்.

ஏனெனில் அல்லாஹ் 7 வருடம் மதரஸாவில் படித்தவர்களை (ஓதினவர்களை)  ஆலிம் என்று சொல்லவில்லை.  மாறாக;

“…அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சக்கூடியவர்களே அறிஞர்(ஆலிம்)கள் ஆவார்கள்.  அல்லாஹ்  மிகைத்தவன்,  மன்னிப்பவன்    (அல்குர்ஆன் 35:28)

Previous post:

Next post: