மனப்போக்கு…

in 2026 மார்ச்

மனப்போக்கு… –

பசிர் அஹமது

மறு பதிப்பு :

அமல்கள் யாவும் எண்ணங்கள் பொறுத்தே”. அறிவிப்பவர்: உமர்(ரழி), நூல்கள்: புகாரி1, முஸ்லிம் 3530

இந்த ஹதீதை பெரும்பாலான முஸ்லிம்கள் அறிவார்கள். நிய்யத் என்று வார்த்தைகளால் மொழிய வேண்டியதில்லை. நினைத்தாலே போதும் என்ற அளவில் பல மார்க்க அறிஞர்கள் கூறும் விளக்கங்கள் நம் நெஞ்சில் நிறைந்தவை. மிஞ்சி மிஞ்சிப் போனால், தொழுமுன்உஸல்வீ ஸலாத்தஸ் ஸுப்ஹுஎன்பன போன்ற சில அரபி சொற்களை வாயால் மொழியும் சடங்காகநிய்யத்தைஆக்காதீர்கள். முழு மனதாக பொருள் உணர்ந்து நினையுங்கள் என்ற மேலதிக விளக்கத்தை மார்க்க அறிஞர்கள் நமக்கு சொல்லி தருகிறார்கள்.

ஒரு கடல், ஒரு சொட்டு தண்ணீருக்கு சமம் என்று யாராவது கூறினால் பைத்தியக்காரன் என்று தான் சொல்வார்கள். “நயாகராநீர் வீழ்ச்சியை இதோ காண்பிக்கின்றேன் பார் என்று யாராவது ஒருவர் ஒரு கப் தண்ணீரை எடுத்து சற்று உயரத்தில் நின்றுகொண்டு நம் தலையில் ஊற்றினால்ஆகா நயாகராவில் குளித்தது போல் உள்ளதுஎன்று சொல்வீர்களா? சொன்னால் என்ன அர்த்தம்? “நயாகரா நீர்வீழ்ச்சிஎன்றால் என்னவென்றே தெரியாது உனக்கு! என்று தானே கூறுவீர்கள். அப்படித்தான், இந்தக் கட்டுரையில் முதல் வாசகமான ஒரு ஹதீத் என்னவென்றே தெரியாது நம்மில் பலருக்கு என்று நான் கூறுவேன். இப்படி கூறுவதால் சிலர் விமர்சிக்கலாம்.

குர்ஆன் ஹதீத் சிந்தனையாளர்கள் இப்படிக் கூறலாம். நபி(ஸல்) அவர்களின் ஹதீதுக்கு உமது சொந்த வியாக்யானமா?

ஸலபி மன்ஹஜ்ஜில் உள்ளவர்கள் இப்படி விமர்சிக்கலாம், அதாவதுஸஹாபாக்களுக்கு தெரியாத  விளக்கம்,  உமக்கு  தெரிகிறதா?’

மற்ற மார்க்க அறிஞர்களிடம் பாடம் படித்தவர்கள் இப்படிக் கூறலாம். “உலமாக்கள், மாபெரும் ஆலிம்கள்கூறியதை விட உமக்கு என்ன தெரியும்? அரபி கூட நீ அரைகுறை. இதில் கட்டுரை எழுதி ஷோ காட்டுவதா?

எது எப்படி இருப்பினும் எனது சிந்தனை தவறாக இருப்பின் இறைவனிடம் மன்னிப்பு கோருகிறேன். சரியாக இருப்பின் இறைவனிடம் துஆவாக வைத்துவிட்டு மற்றவர்களிடம் வேண்டுகோலாக  சமர்ப்பிக்கிறேன்.

சர்வதேச அளவில் முஸ்லிம்களிடம் மட்டமான மனப்போக்கு நடைமுறையில் இருக்கின்றது என்பதை இக்கட்டுரையில் பட்டியலிடுகிறேன்  சரியா? தவறா? என்பதை கட்டுரையை படித்து முடித்துவிட்டு மதிப்பீடு செய்யுங்கள்.

இம்மை வாழ்க்கையில் வெற்றிபெற்ற பல்வேறு பெரிய விற்பன்னர்கள் தாங்களின் எண்ணங்களால் வெற்றியடைந்ததாக கூறுகிறார்கள். சரியாக சிந்தித்து, திட்டமிட்டு, எண்ணங்களை அமல்களாக மாற்றியதாக, உலகியல் ரீதியாக வெற்றி பெற்றதாக பில்கேட்ஸ், பிரேம்ஜி முதல் நம் கிராமத்து சாதாரண மளிகைக்கடைக்காரர் வரை கூறுகிறார்கள். முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் கூடஎண்ணங்களை விதைக்க வேண்டும்; கனவு காணவேண்டும்என்றெல்லாம் கூறினார். பல சிந்தனையாளர்களும்  இதைத்தான்  கூறுகிறார்கள்.

இப்பொழுது ஒருமுஸ்லிம்என்ற கண்ணோட்டத்திற்கு வருவோம். நம்மைப் பொறுத்தவரை இந்த உலகம் என்பது 50 சதவீதம் மட்டுமே. அற்புதமான மறுமை அடுத்து இருக்கிறது. அப்படி என்றால் 50 சதவீதம் கண்ணோட்டத்தில், பார்ப்பவர்களுக்கு சிந்திப்பவர்களுக்கு தெரிவதை விட, கிடைப்பதை விட நமக்கு கூடுதலாக பார்க்கவும், சிந்திக்கவும் முடியும். இது சரிதானே? ஆனால் துரதிஷ்டவசமாக நமது நிலை 20 சதவீதம் கூட தேரவில்லை என்பதை இப்பொழுது பட்டியலிடுகிறேன்.

சம்பவம் : 1 நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு மனிதன் பாதையில் நடந்து சென்ற போது கடுமையான தாகம் ஏற்பட்டது. ஒரு கிணற்றைக் கண்டு அதனுள் இறங்கி தண்ணீர் அருந்திவிட்டு வெளியேறினான். அப்போது அங்கு ஒரு நாய் தாகத்தால் நாக்கை தொங்க விட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருந்தது. அம்மனிதன்எனக்கு ஏற்பட்ட தாகத்தைப் போன்றே இந்த நாய்க்கும் ஏற்பட்டுவிட்டதுஎன்று நினைத்தவனாக கிணற்றினுள் இறங்கி தோலாலான தனது காலுறையில் நீரை நிரப்பிக் கொண்டு அதை தனது வாயில் கவ்வியபடி மேலே வந்து நாய்க்கு தண்ணீர் புகட்டினான். அல்லாஹ் அவனின் நற்செயலுக்கு பகரமாக அவனை மன்னித்துவிட்டான்என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது நபித்தோழர்கள்விலங்குகளுக்கு உதவும் விசியத்திலும் எங்களுக்கு நற்கூலி கிடைக்குமா?” என்று  வினவினர்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உயிருள்ள ஒவ்வொரு பிராணியின் விசயத்திலும் நற்கூலி உண்டு”.     நூல்கள் : புகாரி, முஸ்லிம்

இன்னொரு ஹதீதில் (நூல் : முஃஜமுத் தப்ராணி) நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

பூமியில் உள்ளோர் மீது இரக்கம் காட்டுங்கள் வானிலுள்ளவன் உங்கள் மீது இரக்கம் காட்டுவான்

இன்னொரு ஹதீதையும் பார்ப்போம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “நீங்கள் ஒவ்வொரு வரும் கருணையுடன் நடந்து கொள்ளாத வரை ஈமான் கொண்டவர்களாக மாட்டீர்கள்

தோழர்கள் பதில் : “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அனைவரும் கருணையோடுதான் நடந்து கொள்கிறோம்என்றார்கள்.

நபி(ஸல்) அவர்களின் பதில் : “கருணை என்பது நீங்கள் உங்கள் தோழரிடம் மட்டும் கருணை யுடன் நடந்துகொள்வதல்ல; எனினும் அது மக்களிடம் கருணை காட்டுவதாகும்; எல்லோருக் கும் பொதுவான கருணை யாகும்”. அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ் ஹரி(ரழி), நூல்: முஃஜமுத் தப்ராணி.

இந்த கருணை, முஸ்லிமான தனி மனிதனின் உள்ளம் பொங்கி எழுந்து உலக மக்கள் அனைவரையும் தழுவிக் கொள்ளும். ஒரு முஸ்லிமுடைய உள்ளத்தில் இஸ்லாம் இந்த நேசத்தை உருவாக்கி, இறுதியில் முஸ்லிம் சமுதாயத்தையே இரக்கமுள்ள சமுதாயமாக மாற்றுகிறது. பின்பு என்றென்றும் இந்த சமுதாயத்தில் தூய்மையான அன்பு, சுயநலமின்றி பிறர் நலம் பேணுதல், ஆழமான இரக்க சிந்தனை ஆகியவைகளின் அலைகள் ஓயாது அடித்துக் கொண்டே  இருக்கும்.

சம்பவம்  2  :

(இது ஒரு இடத்தில மட்டுமல்ல; பலரிடமும் பேசியதின் தொகுப்பு)

டென்மார்க் பத்திரிகை எழுதியதன் விளைவாக உலகம் முழுவதும் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர் கள்  உயிரிழந்தார்கள்.

உயிரினும் மேலாக தாங்கள் மதிக்கும் நபி(ஸல்) அவர்களை கேலிச்சித்திரம் வரைந்ததை எண்ணி முஸ்லிம்கள் உலகளாவில் வெகுண்டு எழுந்தனர். எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வன்முறை கலவரமாக உருவெடுத்தது. 100க்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் உயிரை எடுத்து விட்டது. பெரும்பாலான ஆலிம்கள் இப்படித்தான் உணர்ச்சிகரமாக தங்கள் கருத்துக்களை மெஜாரிட்டி முஸ்லிம்களின் உள்ளங்களின் பதிவு  செய்து  வருகிறார்கள்.

இந்த கட்டுரையில் 2 சம்பவத்தை எடுத்துக் காட்டியுள்ளேன். பெரும்பாலான மெஜாரிட்டி முஸ்லிம்களின் மனப்போக்கை உங்கள் முன் படம் பிடித்து காட்டியுள்ளேன். இந்த மெஜாரிட்டி மக்கள் மதிக்கும் ஆலிம், உலமாக்களின் பதிவுகளையும் பட்டியலிட்டுள்ளேன். ஒன்று தெரிகிறது; அதாவது, எதையுமே உணர்வுபூர்வமாகத்தான் அணுகுகிறார்கள். அறிவுபூர்வமாக அலசி, தொலைநோக்காக கருத்துக்களை  பதிவு  செய்வதே  இல்லை.

டென்மார்க் பத்திரிக்கை கார்ட்டூன் சமாச்சாரம் என்பது வேறு; தொடர்ந்து நடைபெற்ற கலவரமும் உயிர் பலியும் வேறு என்று ஒருவர் கூட  கூறவில்லை.

இன்றைய உலகம் முஸ்லிம்களின் செயல்களையும், மனப்போக்கையும் உற்றுப் பார்க்கிறது. இதைத்தான் இவர்களின் தலைவர் போதித்திருப்பார் போலும்என்று கற்பனை செய்து கார்ட்டூன் போடுகிறார்கள்ஆக இந்த உலகின் மாமனிதர் நம், உயிரினும் மேலான நபி(ஸல்) அவர்களை இழிவுபடுத்தி கார்ட்டூன் வெளியானதற்கு, இன்றைய மெஜாரிட்டி முஸ்லிம்களும் அவர்களை வழிநடத்தும் ஆலிம் உலமாக்களும் மூலகாரணம் என்றால் மிகையாகாது. கார்ட்டூன் தான் போட்டுவிட்டார்கள். இதை எப்படி அறிவுப்பூர்வமாக தொலைநோக்காக, தடுப்பது என்று போகாமல் உணர்வுப்பூர்வமாக இன்றைய தலைப்பு செய்தியாக்குவது என்று போனதால் வந்த விளைவு  நூற்றுக்கணக்கில்  உயிர்  பலி.

ஆக கூட்டிக் கழித்துப்பார்த்தால் நபி(ஸல்) அவர்களை, மெஜாரிட்டி முஸ்லிம்கள் அவ்வளவாக பின்பற்றவில்லை என்பது கசப்பான உண்மையாகும். மறுமை விசாரணை நாளில் ஒரு முஸ்லிமுக்கும் முஸ்லிம் அல்லாதவருக்கும் நடக்கும் வழக்கில், முஸ்லிம் அல்லாதவர் நியாயம் செய்திருப்பின், அவருக்குத்தான் சாட்சியாக நிற்பேன் முஸ்லிமுக்கு அல்ல! என்று சொன்ன மாமனிதர் நபி(ஸல்) அவர்கள் எங்கே? அவர்களின் உம்மத்தாகிய இன்றைய முஸ்லிம்கள் எங்கே?

ஒரு முஸ்லிம் குர்ஆன்சுன்னா அடிப்படையில் வாழவேண்டும். எந்தவொரு விசயத்திலும் ஒரு முஸ்லிமின் மனப்போக்கு குர்ஆன்சுன்னா வழியில் சிந்திக்க வேண்டும். அப்படி வாழ்கின்ற ஒரு முஸ்லிமின் இடம் அமைதியான, பாதுகாப்பான, உயரிய பூமியாக மற்ற வர்களின் பார்வையில் படவேண்டும். ஆனால் பரிதாபம், நடைமுறையில் எதிர்மறையாக உள்ளது. உயரிய லட்சியங்களுக்கும், சிந்தனைகளுக்கும் சொந்தக்காரனாக முன்மாதிரி முஸ்லிம் திகழவேண்டும். தொடர்ந்து இந்த உலகம் அமைதிப் பூங்காவாக தாருஸ் ஸலாமாக திகழ முஸ்லிம்களின் மனப்போக்கு மாறவேண்டும். ஒவ்வொரு முஸ்லிமும் நியாயத்திற்கு துணையாக நிற்பான்; அநீதிக்கு துணை போகமாட்டான் என்பதை வாழ்ந்து காட்டவேண்டும்.

அண்டைவீட்டுக்காரனுக்கு சொத்தில் பங்கு கொடுக்க சொல்லி விடுவார்களோ என்று அஞ்சுகிற அளவிற்கு அண்டை வீட்டுக்காரர்களின் உரிமைகளை பேணி நடக்கச் சொன்ன இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம்கள்நடைமுறையில்நியாயவான்களாக வாழ்ந்து காட்டவேண்டும்.

தாய், தந்தையருக்கு பணிவிடை செய்யவேண்டும். உற்றார் உறவினர்களிடம் சண்டை போட்டு கல்யாணம், மவுத்து ஆகியவைகளில் பங்கெடுத்துக் கொள்ளாமல் வாழும் முஸ்லிம்கள் மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம். நாம் எங்கேசமய நல்லிணக்கமுன்மாதிரிகளாய் திகழப் போகிறோம்? என்று,

நிராசை அடையவேண்டாம், ஊரை மாற்றி, உலகை மாற்றி, இதெல்லாம் ஆகிற காரியமா? நாம் தொழுதோமா, மனைவி மக்களை பார்த்தோமா, சொத்து சேர்த்தோமா என்று போய்க்கிட்டே இருக்கணும் என்ற மனப்போக்குதான் பெரும்பான்மை முஸ்லிம்களை ஆட்டிப்படைக்கிறது. இவர்களை திருத்தி கதைக்கு  உதவாது  என்று  நினைக்காதீர்கள்.

அல்குர்ஆனை, நபி(ஸல்) அவர்கள் எப்படி கற்றுத்தந்தார்களோ, அதனை நபி(ஸல்) அவர்களிடம் எப்படி சஹாபாக்கள் பாடம் படித்தார் களோ அப்படி நாமும் செய்ய நினைத்தால் அதுவே முதல்படி, இந்த மனப்போக்கு வேண்டும். இந்த மனப்போக்கை ஆசையாக உள்ளத்தில் வார்த்தெடுக்க வேண்டும். கற்றது போதும், இனி களப்பணி செய்வோம். அதாவது பொதுப்பணி செய்வோம் என்று கற்றுக்கொள்வதற்கு முற்றுப்புள்ள வைக்கக்கூடாது. உடலில் உயிர் இருக்கும் வரை குர்ஆனையும், சுன்னாவையும் கற்கவேண்டும் என்ற ஆசையை, மனப்போக்காக வைத்துக்கொள்ள வேண்டும். கற்கவும் வேண்டும், பணி செய்யவும் வேண்டும்.

நிறைவாக நபிமொழியும், வேதவரியும் :

எவருடைய நாவு, கரத்திலிருந்து முஸ்லிம்கள் நிம்மதி அடைகின்றார்களோ அவரே முஸ்லிமாவார்”. நுல் : புகாரி

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “சூரியன் உதிக்கும் ஒவ்வொரு நாளிலும் இருவருக்கு மத்தியில் நீ சமாதானம் செய்து வைப்பது தர்மமாகும். ஒருவரை அவரது வாகனத்தில் ஏறுவதற்கு அல்லது அவரது பொருளை அதன்மீது ஏற்றுவதற்கு நீ உதவி செய்வதும் தர்மமாகும். நல்ல வார்த்தைகளைக் கூறுவது தர்மமாகும். தொழுகைக்கு செல்ல எடுத்து வைக்கும் ஒவ்  வோர் அடியும் தர்மமாகும். இடையூறு அளிப் பவைகளை பாதையிலிருந்து அகற்றுவது தர்மமாகும்”.  நூல் : புகாரி,  முஸ்லிம்.

நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பிரகாசமும் தெளிவுமுள்ள ஒரு நெறிநூல் (இப்போது)  உங்களிடம்  வந்திருக்கிறது.

உங்களில்  எவர்கள்  அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பின்பற்றுகின்றார்களோ, அவர் களை அதன் மூலமாக அல்லாஹ் சமாதானத்துக்குரிய வழியில் செலுத்துகின்றான். அன்றி இருள்களிலிருந்தும் வெளிப்படுத்தி தன் அருளால் பிரகாசத்தின்பால் கொண்டு வருகிறான்.  தவிர, அவர்களை நேரான வழியில்  செல்லும்படியும்  செய்கின்றான்அல்குர்ஆன் 5:15,16

Previous post:

Next post: