பெண்கள்

in 2026 மார்ச்

பெண்கள்….

கமாலுத்தீன்

மறு பதிப்பு :

பெண் ஒரு கரு, கதை எழுத, கட்டுரை எழுத, கவிதை எழுத, விவாதம் பண்ணஇன்னும் நிறைய வி­யங்களுக்குகரு‘. பெண் விற்பனை பொருள், விபச்சாரத்தில், பெண் சளைக்காத உழைப்பாளி, ஊன், உறக்கம் இல்லாமல் தன் குடும்பத்திற்காக உழைப்பவள். பல பரபரப்பான விவாதங்களை ஏற்படுத்தி விட்டு விடை மட்டும் காணாமல் மீண்டும் புதிராகிப் போய்விடும் வி­யம், பெண்.

இந்த முறை இந்திய மக்கள் தொகை கணக் கெடுப்பின் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்தபோது பெரும் பிரச்சனையை கிளப்பி  உள்ளது.

1991ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது 6 வயதுக்கு உட்பட்ட 1000 ஆண் குழந்தைகளுக்கு 945 பெண் குழந்தைகள் என்று அந்த விகிதம் இருந்தது. ஆனால் பத்து ஆண்டுகளில் பெண் குழந்தைகளின் தொகை அபாயகரமான விகிதத்தின் குறைந்திருக்கிறது. இப்போது ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 927 பெண் குழந்தைகள் உள்ளார்கள் என்ற விபரம் 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பில்  தெரிய  வந்துள்ளது.

பொருளாதார வசதி இல்லாததால் தான் பெண் சிசுக் கொலை என்னும் பாதகச் செயல் நடக்கிறது என்பது தவறு; குறைந்த வருவாய்ப் பிரிவினர் மத்தியில் 1000 ஆண் குழந்தைக்கு 946 என்ற விகிதத்தில் பெண் குழந்தைகளும் வசதி படைத்த பிரிவினரில் 1000க்கு 804 என்ற விகிதத்திலேயே பெண் குழந்தைகள் உள்ளது.

திட்டமிட்ட முறையில் பெண் சிசுக்களைக் கொலை செய்வதும்,  கருவிலேயே சோதனை செய்து அது பெண் சிசுவாக இருந்தால் அழித்து விடுவதுமே இதற்கு முக்கிய காரணம். இவற்றைத் தடுக்கும் சட்டம் கடுமையாக இருக்கவேண்டும்; அதை உறுதியாக அமல்படுத்த வேண்டும். அதே நேரத்தில் இக் கொடும் பாதகத்தில் ஈடுபடுவோரை சமூகத்திலிருந்து தள்ளி வைப்பது போன்ற தண்டனைகளை உள்ளூர் பஞ்சாயத்து மூலம் இதை தடுக்க  உதவும்.

பெண் கல்வி, பெண்களைப் பொருளாதார ரீதியில் சுதந்திரமானவர்களாக ஆக்குதல், வன்முறையில்லாத பொருளாதார உரிமை அளித்தல் ஆகியவை பெண் குழந்தைகள் சிறப்பாக வாழ வழி வகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் வலுக்கட்டாயமாக குறைக்கப்பட்டதற்கு காரணம், காலம் காலமாகவே பெண் என்றாலே இழிவு! என்ற எண்ணம் இயல்பாகவே எல்லோரிடமும் உள்ளதுதான். இந்த எண் ணத்திற்கு வலு சேர்க்கும் விதமாக நம் சமூக அமைப்புகள்  உள்ளன.

பெண் என்றாலே பெரும் செலவு! பெண் என்றாலே பெரிய சுமை! பெண் என்றாலே பெரிய சிரமம்! இவ்வகையான எண்ணங்கள் இந்தியர்களின் அடி மனதில் ஆழ பதிந்து போய் உள்ளது. இத்தகைய எண்ணங்கள் அவசியம் அகலவேண்டும். இவை மனித நேயத்திற்கு  எதிரானவை.

பெண் குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதில் நிறைய சிரமம் இருக்கவே செய்கிறது. பச்சிளம் குழந்தை கூட பாலியல் பலாத்காரத்திற்கு பலியாகும் கொடுமை கூட பாலியல் பலத்காரத்திற்கு பலியாகும் கொடுமை எந்த சொல்லிலும் சொல்ல முடியாதவை. வயதுக்கு வந்த பெண்கள் வெளியே சென்று; பத்திரமாக வீடு திரும்புவதற்குள் பெற்றோருக்கு வயிற்றில் நெருப்பை கட்டிய நிலை, ஈவ்டீசிங் கொடுமைக்கு ஆளாகாத இளம் பெண்களே இல்லை என்னும் நிலை இங்கு நிலவுகிறது. (இந்த இடத்தில் ஒரு உண்மையை சொல்லியே ஆகவேண்டும். நாகரீகம் என்ற பெயரில் ஆபாசமான ஆடைகளை அணிவதை தவிர்த்து கண்ணியமாக ஆடைகளை அணியும்போது இக்கொடுமை  கணிசமாகக்  குறையும்)

திரைப்படங்களில் தாக்கத்தால் இளைஞர்கள் இச்செயலில் ஈடுபடுகிறார்கள். ஒரு உறுதியான உண்மையை இவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். உங்கள் சகோதரியை வேறு ஒருவன் கிண்டல் கேலி செய்வதை உங்களால் எப்படி ஜீரணிக்க முடியாதோ, அதேபோல் மற்றொருவரின் சகோதரியும்; இதை உணர்ந்து, தவிர்த்து கொள்வது சாலச்சிறந்தது.

இத்தனையும் தாண்டி பெண்களை படிக்க வைத்து ஆளாக்கி திருமணம் செய்து வைக்க முயலும்போதுவரதட்சனைஎன்ற வன்முறையாளரின்  தாக்குதலால் தடுமாறிப் போய் விடு கிறார்கள். திருமண சந்தையில் தங்கள் பெண் விலை போகாததால் எத்தனையோ பெற்றோர்கள் ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்கள். எவ்வளவோ இளம் பெண்கள் முதிர் கண்ணி களாய்…! இதை எல்லாம் பார்க்கும் போது பெண்ணுக்கு பெண்கள் மீதே வெறுப்பு வருகிறது; தனக்கு பெண் குழந்தையே வேண்டாம் என்ற முடிவுக்கு தள்ளப்படுகிறார்கள். கணவனும் அவன் குடும்பமும், உறவுகளும் இதற்கு உடந்தையாகிறது.

பிறக்கும் பெண் குழந்தை கள்ளிப் பாலுக்கும், நெல் விதைக்கும் நிதமும் பலியாகிறது ஏழைகள் வீட்டில், வசதியானவன்ஸ்கேன்மூலம் அறிந்து கருவறையிலே கல்லறை கட்டி விடுகிறான். பெண் என்ற சுமையை சுமக்க எவரும் தயாராக இல்லை.

ஆண் பிள்ளை முதுமையில் ஊன்று கோலாய் உதவுவான்! பெண் பிள்ளை என்ன செய்யும்? இந்த கேள்விக்கு, இறுதித் தூதர் (ஸல்) அவர்கள் பதில் சொல்கிறார்கள்.

பெண் பிள்ளைகள் மூலம் யாரேனும் சோதிக்கப்பட்டு அவர் அவர்கள் விசயத்தில் (நல்லவிதமாக) பொறுமையுடன் நடந்துகொண்டால் நரகிலிருந்து அவரைத் தடுக்கும் தடுப்பாக அவர்கள் திகழ்வார்கள்”. நபிவழி செய்தியாளர் : ஆயிஷா(ரழி), நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயி, திர்மிதி 1980.

தங்களுடைய சகோதரிகளின் திருமணத் திற்காக தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டு அல்லும் பகலும் அயராது பாடுபடும் அண்ணன்மார்களுக்கும் தம்பிமார்களுக்கும் சொர்க்கம் உண்டு என்ற சுப செய்தியை தூதர்(ஸல்) அவர்கள் சொல்கிறார்கள். அவர்கள்  சொல்கிறார்கள்.

யாருக்கேனும் மூன்று சகோதரிகள் அல்லது மூன்று புதல்விகள் அல்லது இரண்டு சகோதரி கள் அல்லது  இரண்டு புதல்விகள் இருந்து அவர்களிடம்  அழகிய முறையில் நடந்து, அவர்கள் வி­யத்தில் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொண்டால் அவர்களுக்கு சொர்க்கம் இருக்கிறது. நபிவழி செய்தியாளர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரழி), நூல்கள் : அபூதாவூத், திர்மிதி, 1977

பெண் குழந்தைகளை சுமையாக எண்ணக் கூடாது. அவர்கள் சொர்க்கம் பெற்று தரப் போகிறவர்கள். அவர்களிடம் நீதமாகவும், நேர்மையாகவும் நடந்துகொள்ள வேண்டும். ஆண் பிள்ளைகளுக்கு அதிக செல்லம் கொடுத்து அவர்கள் கேட்பதை வாங்கித் தருவது, பெண் பிள்ளைகளிடம் இதற்கு நேர்மாறாக நடந்து கொள்வதை பரவலாகப் பார்க்கிறோம். குழந்தைகளிடம் பாரபட்சம் காட்டவே  கூடாது.

எவருக்கு ஒரு மகள் பிறந்து அவளை உயிருடன் புதைத்து விடாமல், அதை அவமானப் படுத்தாமல் அவளை விட ஆண் மகனுக்கு அதிக சலுகை காட்டாமல் வளர்க்கிறாரோ அவரை இறைவன் சொர்க்கத்தில் நுழைய வைப்பான்என்று நபி(ஸல்) அவர்கள் கூறி னார்கள்.            நூல் : அஹ்மத்

பெண் குழந்தைகளைப் பற்றி சொல்லும்போது அல்லாஹ் இப்படி அழகாக சொல்கிறான். பெண் குழந்தைகள்சுப செய்திசொல்ல வந்தவர்கள் என்று அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறபட்டால் அவன் முகம் கறுத்துவிடுகிறது. அவன் கோபமுடைய வனாகிறான். எதைக்கொண்டுநற்செய்திகூறப்பட்டானோ (அந்த பெண் குழந்தை தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக (தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான். அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது (உயிரோடு கருவறையில் அல்லது) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்); அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா?”      (.கு.16:58,59)

பெண்களால் ஏற்படும் சோதனைகளையும் வேதனைகளையும் நாம் பொறுத்துக் கொண்டால், மிக உயர்ந்த பரிசான சொர்க்கம் கிடைக்கும்; உயர்ந்த பரிசை பெறவே அல்லாஹ் நமக்கு பெண் குழந்தைகளைக் கொடுத்துள்ளான். இதை அறிந்து கொள்ளாத அறிவீனர்கள் பெண் குழந்தைகளை கொலை செய்கிறார்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்! மறுமையில் இந்த கேள்விக்கு பதில் சொல்லியே தீரவேண்டும்.

உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும்போது, எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது? என்று  அல்குர்ஆன் 81:9,10

ஆணும், பெண்ணும் ஆண்டவன் தருவது; அதில் பேதம் பார்க்கக்கூடாது; உன் தாயும் ஒரு பெண்தான், உன் மனைவியும் ஒரு பெண் தான்; உன் சகோதரியும் ஒரு பெண்தான். இந்த எதார்த்தத்தை உணர்ந்து பெண் குழந்தைகளை வாழவிடுங்கள். அவர்களுக்கு நல்ல கல்வியும் நடுநிலையான போக்கையும் நாம் கைகொள்வதின் மூலம் எதிர்கால சமுதாயத்திற்கு நல்ல பெண்மணிகளை உருவாக்கி விட்டுச் செல்வது ஒவ்வொரு மனிதன் மீதும் கடமையாகும். இதை சட்டத்தின் மூலம் செய்யமுடியாது. இறையச்சத்தின் மூலமே முடியும். அல்லாஹ் இந்த நற்காரியத்தில் மனிதகுலத்திற்கு நேர்வழி காட்டுவானாக! ஆமீன்!

Previous post:

Next post: