மோசஸ் என்னும் மூஸா(அலை) அவர்களின் வரலாறு!
S.H. அப்துர் ரஹ்மான்
“உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும்”
“படைத்தவன் உங்களுக்கு அருள்புரியட்டும்”
அந்த ஒரே இறைவன் பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
இறைநூலில் அதிகமாக குறிப்பிடப்பட்ட இறைத்தூதர்களில் ஒருவர்தான் மோசஸ் என்னும் மூஸா(அவரை இறைவன் பொருந்தி கொள்வானாக!) அவர்களின் வாழ்க்கை சம்பவங்கள் இறைநூலில் பல இடங்களில் விரிவாக வருகிறது.
நம்பிக்கை கொள்ளும் மக்களுக்காக நாம் மூஸாவுடையவும் ஃபிர்அவ்னுடையவும் வரலாற்றிலிருந்து உண்மையைக் கொண்டு, உமக்கு வாசித்து காண்பிக்கின்றோம்.
நிச்சயமாக ஃபிர்அவ்ன் இப்பூமியில் பெருமையடித்துக் கொண்டு, அந்த பூமியிலுள்ளவர்களைப் (பல) பிரிவினர்களாக்கி, அவர்களிலிருந்து ஒரு கூட்டத்தாரை பலஹீனப்படுத்தினான்; அவர்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்)துக் கொலை செய்)து பெண் குழந்தைகளை உயிருடன் விட்டும் வைத்தான்; நிச்சயமாக அவன் குழப்பம் செய்வோரில் ஒருவனாக இருந்தான். ஆயினும் (மிஸ்ரு) பூமியில் பலஹீனப்படுத் தப்பட்டோருக்கு நாம் உபகாரம் செய்யவும், அவர்களைத் தலைவர்களாக்கிவிடவும் அவர்களை (நாட்டுக்கு) வாரிசுகளாக்கவும் நாடினோம்.
இன்னும், அப்பூமியில் அவர்களை நிலைப்படுத்தி ஃபிர்அவ்னும் ஹாமானும், அவ்விருவரின் படைகளும் இவர்களைப் பற்றி எ(வ் விசயத்)தில் பயந்து கொண்டிருந்தார்களோ அதைக் காண்பிக்கவும் (நாடினோம்)
நாம் மூஸாவின் தாயாருக்கு “”அவருக்கு (உன் குழந்தைக்குப்) பாலூட்டுவாயாக; அவர் மீது (ஏதும் ஆபத்து வரும் என்று) நீ பயப்படுவாயானால், அவரை ஆற்றில் எறிந்துவிடு அப்பால் (அவருக்காக) நீ பயப்படவும் வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம்; நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம்; இன்னும், அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்” என்று இறைச்செய்தி அறிவித்தோம்.
(நதியில் மிதந்து வந்த) அந்த குழந்தையை அவரை ஃபிர்அவ்னுடைய குடும்பத்தினர் எடுத்துக் கொண்டார்கள்; (பிற்காலத்தில் அவர்) அவர்களுக்கு விரோதியாகவும், துக்கந்தருபவராகவும் ஆவதற்காக! நிச்சயமாக ஃபிர்அவ்னும், ஹாமானும், அவ்விருவரின் படைகளும் தவறிழைப் பவர்களாகவே இருந்தனர்.
இன்னும்: (குழந்தையைக் கண்ட) ஃபிர்அவ்னின் மனைவி (இக்குழந்தை) எனக்கும் உங்களுக் கும் கண் குளிர்ச்சியாக இருக்கிறது. இதை நீங்கள் கொன்றுவிடாதீர்கள், நமக்கு இவர் பயன் அளிக்கக்கூடும்; அல்லது நாம் இவரை நம் புதல்வராக்கிக் கொள்ளலாம்” என்று சொன்னார். இன்னும் அவர்கள் (இதன் விளைவு என்னவாகும் என்பதை) உணர்ந்து கொள்ளவில்லை.
மூஸாவின் தாயுடைய இருதயம் (துக்கத்தால்) வெறுமையாகிவிட்டது. நம்பிக்கை கொண்ட வர்களில் நின்றுமுள்ளவளாய் இருப்பதற்காக நாம் அவள் உள்ளத்தை உறுதிப்படுத்தாது இருந்திருந்தால் அவள் (மூஸா ஆற்றில் விடப்பட்டதை) வெளிப்படுத்த முனைந்திருப்பாள்.
இன்னும் மூஸாவின் சகோதரியிடம்: “அவரை நீ பின் தொடர்ந்து செல்” என்றும் (தாய்) கூறினாள். அவ்வாறே சென்று ஃபிர் அவ் னின்) ஆட்கள் காண முடியாதபடி அவள் தூரத்திலிருந்து அவரை கவனித்து வந்தாள்.
நாம் முன்னதாகவே அவரை(ச் செவிலித் தாய்களின்) பாலருந்துவதை தடுத்துவிட் டோம். (அவருடைய சகோதரி வந்து) கூறி னாள். “”உங்களுக்காக பொறுப்பேற்று அவ ரை(ப் பாலூட்டி) வளர்க்கக் கூடிய ஒரு வீட் டினரை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? மேலும் அவர்கள் அவர் நன்மையை நாடு பவராக இருப்பார்கள்”.
இவ்வாறு அவருடைய தாயாரின் கண் குளிர்ச்சியடையவும், அவள் துக்கப்படாதிருக்கவும், நிச்சயமாக அந்த இறைவனின் வாக்குறுதி உண்மையானது என்பதை அவள் அறிந்து கொள்வதற்காகவும் நாம் அவரை அவர் தாயாரிடத்தே திரும்பச் சேர்த்தோம். எனினும், அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.
இன்னும், அவர் வாலிபமடைந்து, (பக் குவ) நிலை பெற்றபோது, நாம் அவருக்கு ஞானத்தையும், கல்வியையும் அளித்தோம். இவ்வாறே நல்லோருக்கு நாம்(நற்) கூலி வழங்குகிறோம்.
(ஒருநாள் மூஸா) மக்கள் அயர்ந்து (தூக் கத்தில் பாராமுகமாக) இருந்தபோது, நகரத்தில் நுழைந்தார். அங்கு இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார். ஒருவன் அவர் கூட்டத்தைச் சேர்ந்தவன். மற்றொருவன் அவர் பகைவன் கூட்டத்தைச் சேர்ந்தவன்; பகைவனுக்கெதிராக உதவி செய்யுமாறு அவர் கூட்டத்தான் கோரினான். மூஸா அ(ப்பகை) வனை ஒரு குத்துக் குத்தினார்; அவனை முடித்தார்; (இதைக் கண்ட மூஸா); இது சாத்தானுடைய வேலை; நிச்சயமாக அவன் வழி கெடுக்கக்கூடிய பகிரங்கமான விரோதியா வான்” என்று கூறினார்.
“என் இறைவா! நிச்சயமாக நான் என் ஆத்மாவுக்கே அநியாயம் செய்துவிட்டேன்; ஆகவே, நீ என்னை மன்னிப்பாயாக!” என்று பிராத்தித்தார்; அப்போது அவன் அவரை மன்னித்தான். நிச்சயமாக அவன், மிகவும் மன்னிப்பவனாகவும், கிருபை மிக்கவனாக வும் இருக்கின்றான்.
“என் இறைவா! என் மீது நீ அருள் புரிந்த தன் காரணமாக, நான் இனி ஒருபோதும் குற்றவாளிகளுக்கு உதவி செய்பவனாக இருக்கமாட்டேன்” என்று கூறினார்.
மேலும், (தமக்கு என்ன நடக்குமோ என்று மறுநாள்) காலையில் பயத்துடன் கவனித்துக் கொண்டு நகரத்தில் இருந்த போது, முன் தினம் அவரிடம் உதவி கோரிய வன் (மீண்டும்) அவரை (உதவிக்காக) கூச்ச லிட்டு அழைத்தான். அதற்கு, மூஸா “”நிச்சய மாக நீ பகிரங்கமான கலகக்காரனாக இருக் கின்றாய்” என்று அவனிடம் கூறினார்.
பின்னர், மூஸா நம்மிருவருக்கும் பகைவனாக இருந்தவனைப் பிடிக்க, நாடிய போது, அவர் இனத்தான் (தன்னையே அவர் பிடிக்க) வருகிறார் என்று எண்ணி) “”மூஸாவே! நேற்று ஒரு மனிதனை நீர் கொலை செய்தது போல், என்னையும் கொலை செய்ய நாடுகி றீரா? இப்பூமியில் அக்கிரமம் செய்பவரா கவே இருக்க நீர் நாடுகிறீர். மேலும், சீர்திருத் தம் செய்வோரில் (ஒருவராக) இருக்க நீர் நாடவில்லை” என்று கூறினான்.
பின்னர், நகரத்தின் ஒரு கோடியிலிருந்து (நன்) மனிதர் ஒருவர் ஓடிவந்து “மூஸாவே! நிச்சயமாக (இந்நகர்ப்) பிரமுகர்கள் ஒன்று கூடி உம்மைக் கொன்றுவிட வேண்டுமென ஆலோசனை செய்கிறார்கள். ஆகவே நீர் (இங்கிருந்து) வெளியேறி விடுவீராக! நிச்சய மாக நாம் உம் நன்மையை நாடுபவர்களில் ஒருவனாவேன்” என்று கூறினார்.
ஆகவே, அவர் பயத்துடனும், கவனமாகவும், அ(ந்நகரத்)தை விட்டுக் கிளிம்பி விட்டார். “என் இறைவா! இந்த அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீ என்னைக் காப்பாற்றுவாயாக!’;’ என்று பிரார்த்தித்தார். (28:3-21)
இறைநூலில் இருபதாவது அத்தியாயத்தில்:
“உம் தாயாருக்கு அறிவிக்க வேண்டியதை அறிவித்த நேரத்தை (நினைவு கூர்வீராக!)
அவரை (குழந்தையை)ப் பேழையில் வைத்து (அப்பேழையை நீல்) நதியில் போட்டு விடும்; பின்னர் அந்த நதி அதைக் கரையிலே கொணர்ந்து எறிந்துவிடும். அங்கே எனக்கு பகைவனும்; அவருக்குப் பகைவனுமாகிய (ஒரு)வன் அவரை எடுத்துக்கொள்வான்” (எனப் பணித்தோம்) மேலும், “(மூஸாவே!) நீர் என் கண் முன்னே வளர்க்கப்படுவதற்காக உம்மீது அன்பைப் பொழிந்தேன்.
(பேழை கண்டெடுக்கப்பட்ட பின்) உம் சகோதரி நடந்து வந்து, “இவரை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒருவரை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?” என்று கேட்டாள்; ஆகவே நாம் உம் தாயாரிடம், அவருடைய கண் குளிர்ச்சியடையும் பொருட்டும், அவர் துக்கம் அடை யாமல் இருக்கும் பொருட்டும் உம்மை (அவர்பால்) மீட்டினோம். பின்னர் நீர் ஒரு மனிதனைக் கொன்றுவிட்டீர். அப்பொழுதும் நாம் உம்மை அக்கவலையிலிருந்து விடுவித்தோம். மேலும் உம்மைப் பல சோதனைகளைக் கொண்டு சோதித்தோம். அப்பால் நீர் பல ஆண்டுகளாக மதியன்வாசிகளிடையே தங்கியிருந்தீர். மூஸாவே! பிறகு நீர் (நம் தூதுக்குரிய) தக்க பருவத்தை அடைந்தீர்.
இன்னும், “எனக்காகவே நான் உம்மைத் (தூதராகத்) தேர்ந்தெடுத்திருக்கின்றேன். “ஆகவே, நீரும் உம் சகோதரரும் என்னுடைய அத்தாட்சிகளுடன் செல்வீராகளாக! மேலும் என்னைத் தியானிப்பதில் (நீங்களிருவரும்) சளைக்காதீர்கள்.
“நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள். நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான்.”
“நீங்கள் இருவரும் அவனிடம் (சாந்தமாக) மென்மையாக சொல்லால் சொல்லுங்கள், அதனால், அவன் நல்லுபதேசம் பெறலாம். அல்லது அச்சம் கொள்ளலாம்.” (20:38-44)
இறைநூலில் 27வது அத்தியாயத்தில் :
மூஸா தம் குடும்பத்தாரை நோக்கி, “நிச்சயமாக நான் நெருப்பைக் காண்கிறேன். உங்களுக்கு நான் அதிலிருந்து (நாம் செல்ல வேண்டிய வழி பற்றிய) செய்தியைக் கொண்டு வருகிறேன். அல்லது நீங்கள் குளிர் காயும் பொருட்டு (உங்களுக்கு அதிலிருந்து) நெருப்புக் கங்கைக் கொண்டு வருகிறேன்” என்று கூறியதை தூதரே நினைவு கூர்வீராக!
அவர் அதனிடம் வந்தபோது; “நெருப்பில் இருப்பவர் மீதும், அதனைச் சூழ்ந்திருப்பவர் மீதும் பெரும் பாக்கியம் அளிக்கப் பெற்றுள்ளது. மேலும் அகிலங்களுக்கெல்லாம் இரட்சகனாகிய இறைவன் மிகவும் பரிசுத்தமானவன்” என்று அழைக்கப்பட்டார். “மூஸாவே! நிச்சயமாக நானே அந்த இறைவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம்மிக்கோன்.
“உம் கைத்தடியைக் கீழே எறியும்;” (அவ்வாறே அவர் அதை எறியவும்) அது பாம்பு போல் நெளிந்ததை அவர் கண்டபொழுது; திரும்பிப் பார்க்காது (அதனை விட்டு) ஓடலானார்; “மூஸாவே! பயப்படா தீர்! நிச்சயமாக (என்) தூதர்கள் என்னிடத்தில் பயப்படமாட்டார்கள்”.
ஆயினும், தீங்கிழைத்தவரைத் தவிர, அ(த்தகைய)வரும் (தாம் செய்த) தீமையை (உணர்ந்து அதை) நன்மையானதாக மாற்றிக்கொண்டால், நிச்சயமாக நான் மிக மன்னிப்பவனாகவும் மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றேன். (27:7-11)
இன்ஷா அல்லாஹ் தொடரும்…..