தலையங்கம் :
அந்நஜாத்தும்… – 41 ஆம் ஆண்டும்…
“உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும்”
“படைத்தவன் உங்களுக்கு அருள் புரியட்டும்”
அந்த ஒரே இறைவன் பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் “அந்நஜாத்” தனது 40 ஆண்டுகள் பணியை தொய்வின்றி முடித்துக்கொண்டு 41ஆம் ஆண்டில் பணியை துவங்குகிறது.
எல்லாப் புகழும் இறைவனுக்கே!
1986ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் “அந்நஜாத்” என்ற இஸ்லாமிய இலட்சிய மாத இதழ் தொடங்கப்பட்டது.
“அந்நஜாத்” தொடங்கிய சமயம் நமது சமுதாயத்திற்கு வழிகாட்ட பல மாத இதழ்கள் வந்து கொண்டிருந்தன.
ஆனால் எந்தவொரு சமுதாய மாத இதழுக்கும் இல்லாத எதிர்ப்புக்கள் “அந்நஜாத்‘திற்கு மட்டும் ஏற்பட்டது.
அதற்கு காரணம்; நமது சமுதாயத்தில் நிறைந்து கிடந்த அனாச்சாரங்கள் அத்தனைக்கும் அரபி மதரஸாவில் பயின்று பட்டங்களை பெற்று வந்த பெரும்பாலான ஆலிம்கள்தான் மூல காரணம் என்பதை எடுத்துரைத்தது.
அதன் விளைவு அதுவரை நமது சமுதாயத்தில் புரையோடிக் கிடந்த சிர்க்(இணை வைத்தல்) பித்அத் (புதுமை/வழிகேடு), தனி நபர் வழிபாடு, மற்றும் தர்ஹா வழிபாடு போன்ற அனாச்சாரங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பரவலாக ஏற்பட்டது.
அத்தகைய விழிப்புணர்வு பரவலாக மக்களிடையே ஏற்பட்டதால் பல முனைகளிலிருந்தும் எதிர்ப்பு இது அன்றும் இன்றும் 40 ஆண்டுகளாக தொடர்கிறது.
சென்ற 12.07.2017ஆம் ஆண்டு அந்நஜாத்தில் ஆசிரியரான அபூ அப்தில்லாஹ்வை அல்லாஹ் தன்பால் அழைத்துக்கொண்டான். மர்ஹும் அபூ அப்தில்லாஹ்விற்கு பிறகு “அந்நஜாத்” வருமா? என்பதாக பலராலும் கேள்வி தொடக்கப்பட்டது. அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கொள்கையில் எந்தவித உடன்பாடும் செய்யாமல் அதே இலட்சியத்தோடு 41ஆம் ஆண்டை தொடர்கிறது.
மேலும் பணி சிறக்க சந்தாதாரர்கள் சந்தாக்களை தவறாது செலுத்தி ஆதரவு தாருங்கள். புதிய சந்தாக்களை சேர்க்க ஆவன செய்யுங்கள். மேலும் உங்கள் ஊரிலுள்ள இஸ்லாமிய பொது நூலகத்தின் முகவரியை எங்களுக்கு அனுப்பிவையுங்கள்.
அத்தகைய நூலகத்திற்கு “அந்நஜாத்” இலவசமாக அனுப்பி வைக்கப்படும். இன்ஷா அல்லாஹ்.
வாசகர்கள் குர்ஆன் ஹதீத் ஆதாரங்களுடன் கட்டுரைகளை வாட்ஸ்ஆப் மூலமோ, மூலமோ எழுதி அனுப்பி வையுங்கள். பரிசீலனைக்கு பிறகு பிரசுரம் செய்யப்படும்.
வல்ல ரஹ்மான் இம்மையிலும், மறுமையிலும் நம் அனைவருக்கும் மாபெரும் வெற்றியை (நஜாத்தை) வழங்க துஆச் செய்தவர்களாக பணியை துவங்குகின்றோம்.
– ஆசிரியர் குழு