உலகில் ஒரே வல்லரசா? பல வல்லரசுகளா?
அய்யம்பேட்டை A. நஜ்முதீன்
எந்தவொரு நாடு உலக அரசியலில், பொருளாதாரத்தில், இராணுவ வலிமையில், பெரிய தாக்கம் செலுத்தும் திறன் கொண்டவையாக இருக்கிறதோ அதையே வல்லரசான நாடு எனச் சொல்லுவார்கள். மிக நீண்ட காலமாக அமெரிக்காவை வல்லரசு நாடு என சொல்லுகிறார்கள்.
அமெரிக்கா வல்லரசு நாடா?
ஆம்! இருந்தது. எவ்வாறு என்றால்,
முதற் காரணம் : இரண்டாம் உலகப் போருக்கு பின் (Second World War) பொருளாதார ரீதியாக ஐரோப்பா மிகவும் பலவீனமடைந்தது. அந்த நேரத்தில் (1949ல்) NATO (North Atlantic Treaty Organisation) என்ற அமைப்பை உருவாக்கி ஐரோப்பா நாடுகளுக்கு பாதுகாப்பை வழங்கியது. அதன் காரணமாக அன்று முதல் இன்று வரை ஐரோப்பா நாடுகள் பாதுகாப்பு விசயத்தில் உண்மையான நண்பனாக அமெரிக்காவை நம்புகிறது. அதாவது European Unionகள் பலவும் பாதுகாப்பு விசயத்தில் அமெரிக்க இராணுவ சக்தியை நம்புகின்றன.
குறிப்பாக Russiaவில் 1991ல் ஏற்பட்ட சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியினால் அமெரிக்கா வையே சார்ந்திருக்கிறது. மேலும் சோவியத் ஒன்றியம் வீழ்ந்த பின் அமெரிக்கா மட்டுமே உலகில் மிகப்பெரிய வல்லரசு நாடாக காட்டப்பட்டது.
இரண்டாவது காரணம் :
உலகில் மிகப் பெரியவற்றில் முக்கியமானது பொருளாதாரமாகும். அமெரிக்கா டாலர் பரிவர்த்தனை (Exchange) மிக முக்கியமான நாணயமாக உலக முழுவதும் இருப்பதால் அமெரிக்கா வல்லரசு நாடு என பேசப்படுகிறது.
மூன்றாவது காரணம் :
அமெரிக்கா அதிநவீன இராணுவ தளவாடங்களை வைத்துள்ளது. அதுமட்டுமல்ல உலகில் பல நாடுகளில் இராணுவ தளங்களை வைத்துள்ளது.
நான்காவது காரணம் :
Google, Apple, Microsoft போன்ற முன்னனி தொழில் நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் அமெரிக்காவில் உள்ளன. மேலும் A1 விண்வெளி, மருத்துவம் போன்ற தொழில்நுட்பமான துறைகளில் முன்னனியில் இருக்கின்றது.
ஐந்தாவது காரணம் :
பல உயரிய கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் அமெரிக்காவில் உள்ளன.
ஆறாவது காரணம் :
CNN & BBC போன்ற ஊடகங்கள்தான் (MEDIA)உலக கட்டமைப்பை உருவாக்கும் அளவுக்கு செல்வாக்கு மிக்கவையாக உள்ளன. இத்தகைய ஊடகங்கள் அமெரிக்கா மட்டுமே வல்லரசு நாடாகவும், மற்றும் வேறு சில ஊடகங்களின் உதவியாலும், செல்வாக்காலும் பெரிதாக அமெரிக்கா பேசப்படுகிறது.
ஏழாவது காரணம் :
சினிமா துறையில் அதிநவீன வளர்ச்சி. Holywoodக்கு இணையாக எதுவுமில்லை என்ற நிலை.
எட்டாவது காரணம் : (Top Powerful Intelligence)
உளவு அமைப்பு திறனில் மிகப் பெரிய Networkஐ அமெரிக்கா வைத்துள்ளது. ஏனைய நாடுகளில் உள்ள உளவு அமைப்பை காட்டிலும் மிகப்பெரிய Network CIAவிடம் உள்ளது.
உதாரணம் :
A. MOSSAD= இஸ்ரேல்
B. M16 = இங்கிலாந்து
(Secret Intelligence Service)
C. RAW = இந்தியா (Research and Analysing Wing)
D. FSB = ரஷ்யா (Federal Security Service)
E. MSS = சீனா (Ministry of State Security)
F. ISS = பாகிஸ்தான் (Inter Services Intelligences)
G. DGSE = பிரான்ஸ் (Directorate General for External Security)
H. BIND = ஜெர்மனி (Bundesnach rich tendienst)
ஆனால் இப்போது அமெரிக்கா எல்லா நாடுகளையும் கட்டுப்படுத்தும் நிலையில் உள்ளதா? என்றால் இல்லை. அதாவது இப்போது உலகில் அமெரிக்கா ஒரே வல்லரசு என்ற நிலையில் இல்லை. உலகத்துக்கே வல்லரசு என்று பில்டப் பண்ணுற அமெரிக்காவிற்கு இப்போது சோதனை வந்துள்ளது.
அமெரிக்காவின் உண்மை முகம் இப்போது ஈரான் போரின் போது வெட்டவெளிச்சமாகி விட்டது. “கூடா நட்பு கேடா முடியும்” என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டாக உள்ளது.
அதாவது, வளைகுடா நாடுகளை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது அமெரிக்கா இதில் உச்சகட்டம் என்னவென்றால் சுமார் 5 நாட்களில் நடந்த போரில் 2.6 பில்லியன் டாலர் இழப்பு வளைகுடா நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது. இது மலைப்பாக இருக்கும்.
ஆனால் உண்மை. எவ்வாறு என்றால்;
ஈரான் அனுப்பும் ஒரு ஷாயசட் (Shahed) டிரோனின் மதிப்பு சுமார் 20 ஆயிரம் டாலர் மட்டுமே. ஆனால் அதை வான்வெளியில் அழிக்க வளைகுடா நாடுகள் பயன்படுத்தும் அமெரிக்காவின் ஒரு பேட்ரியாட் (Patriot) ஏவுகனையின் விலை சுமார் 4 மில்லியன் டாலர் ஆகும்.
மேலும்,
1. CHINAவின் எழுச்சி.
பொருள் உற்பத்தியிலும், பொருளாதாரத் திலும், இராணுவ வலிமையிலும் கண்ட எழுச்சி.
2. RUSSIA இராணுவ வலிமையை மீட்டுள்ளது.
மேலும் சிறு சக்திகளை கொண்டதாக, North Koreia, Japan, United Kingdom, France, Iran போன்ற நாடுகளின் வளர்ச்சி.
அமெரிக்கா “வல்லரசு” என்ற ஆதிக்கம் ஏன் குறைந்தது?
1. பல போர்களில் தோல்வி,
2. புதிய பொருளாதார சக்திகள்
3. பிராந்திய கூட்டணிகளின் ஆதிக்கம்.
4. மற்றும் அமெரிக்கா பெற்ற வல்லரசு பட்டம் (உலக நாட்டாண்மை) நேர்மையாக பெற்றதா என்றால் இல்லை.
அதாவது வரலாற்று முழுவதும் பார்த்தால் ஒரு உண்மை தெரிந்துவிடும்.
அது முழுமையாக நேர்மையாக உருவாக்க வில்லை அதுபோல் முழுமையாக அநீதியாகவும் இல்லை. நல்லதும், கெட்டதும் கலந்ததே!
5. இஸ்ரேல் அமெரிக்காவின் மிகப் பெரிய நேச நாடு, வலிமை வாய்ந்தது என்றெல்லாம் மீடியாவால் சொல்லப்பட்டது. இப்போது அது இல்லை என்று நிருபணமாகிவிட்டது.
தற்போது ஒரே வல்லரசு நாடு என்ற நிலை மாறி பல மைய சக்திகளை கொண்ட 5 நாடுகள் வல்லரசாக பேசப்படுகிறது.
1. USA
2. CHINA
3. RUSSIA
4. EUROPEAN UNION
5. INDIA
மேற்கண்ட பல மைய சக்திகளை (Multi Polar World) கொண்ட 5 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருப்பதாக பேசப்படுகிறது.
அதற்கு காரணம் :
1. உலகின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு.
2. IT மற்றும் விண்வெளியில் வளர்ச்சி
3. பிராந்திய சக்தி.
மேற்கண்ட மூன்று காரணங்கள் உண்மை என்றாலும் இந்தியா வல்லரசாக வரமுடியுமா?
கீழ்கண்ட மாற்றங்கள் நிகழாத வரை வல்லரசாக வரமுடியாது.
எவ்வாறு என்றால்,
1. கல்வி அறிவு வளர்ச்சியில் பெரும் பின்னடைவு. பெரும் பகுதியான மக்கள் கல்வி அறிவு அற்றவர்கள்.
2. மத ரீதியான (இந்து) மதத்திலுள்ள பல பிரிவுகள்.
3. கற்பனைக்கு எட்டாத பல மத மூட நம்பிக்கைகள்.
4. அரசியலில் நேர்மை இல்லை.
5. நீதி நிலையாக இல்லை.
6. வரி வருவாயை முறையற்ற வழிகளில் செலவுகள்.
7. ஊழல், லஞ்சம் பல்வேறான ரூபத்தில் உள்ளது.
8. நடுநிலையான ஊடகங்கள் மிக குறைவு.
9. அடிமை தனம் இன்னும் நீங்கவில்லை.
10. தாழ்வு மனப்பான்மை அதிகமுள்ள மக்கள்.
11. பொருளாதாரத்தில் சீரான வளர்ச்சி இல்லை.
12. பெண் அடிமை தனம்
13. தேர்தலில் நேர்மை வேண்டும்.
14. வறுமை
15. வேலை வாய்ப்பு பிரச்சனைகள்
“என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்,
ஏன்கையைஏந்தவேண்டும்அயல்நாட்டில்”
என்பது வெறும் கதையாகவே இந்தியா நிலை உள்ளது.