ஆழ்ந்த அறிவில்லையேல் கண்ணும் சில வேளை பொய் சொல்லும்…

in 2026 ஏப்ரல்

ஆழ்ந்த அறிவில்லையேல் கண்ணும் சில வேளை பொய் சொல்லும்

எஸ்.எம்.அமீர், இலங்கை

மார்ச்  2026  தொடர்ச்சி

ஆனாலும் நபி(ஸல்) அவர்களை அந்த மக்கள் கடுமையாக மறுத்ததுடன் அந்த ஒட்டகத்தை யும் கொலை செய்யத் திட்டமிட்டு; அது வரும் பாதையிலுள்ள ஒரு பாறையின் அடிப்பகுதி யில் ஒளிந்திருந்துகுதார்என்பவன் தனது வாளால் அந்த ஒட்டகத்தைப் பலமாகத் தாக்கி அதன் பின்னங்கால் தொடைப் பகுதியிலுள்ள தசைநாரை வெளியே எடுத்தான். உடனே அது பிடிமானம் இல்லாது தரையில் சரிந்து விழுந்தது. தனது குட்டியை எச்சரிக்கும் வகையில் ஒருமுறை கத்தியது. உடனே அதன் குட்டியானது ஓடிப்போய் யாருமே வந்துசேர முடியாத ஒரு மலைக்கு வந்து அதன் உச்சியிலுள்ள ஒரு பாறையின் மீது ஏறி நின்றுகொண்டு கத்தியது. கொலைவெறித் தாக்குதல் நடத்தி அதன் தாயைக் கொன்றுவிட்டார்கள். ஸாலிஹ் (அலை) அவர்கள் ஒட்டகத்தைப் பார்த்ததும்; அழலானார்கள். பின்னர் அந்த மக்களை நோக்கி நீங்கள் உங்கள் இல்லங்களில் மூன்று நாட்கள் வேண்டியதை அனுபவித்துக் கொள்ளுங்கள். (11:65) என்று கூறினார். ஆனால் அவர்களோ ஸாலிஹ்(அலை) அவர்களையும் கொல்வதற்குத் திட்டம் தீட்டினார்கள். இவ்வாறு அவர்கள் ஒருமனதாக முடிவு செய்து அல்லாஹ்வின் தூதர் ஸாலிஹ்(அலை) அவர்களை வஞ்சகமாகப் படுகொலை செய்வதற்காக இரவு நேரத்தில் சென்றார்கள்.

அப்போது தூயவனும், உயர்ந்தோனுமாகிய, அல்லாஹ் அக்கும்பலின் மீது கல்மாரியைப் பொழியச் செய்தான். அது அவர்களைச் சின்னாபின்னமாக்கியது. அவகாசம் வழங்கப்பட்ட முதலாவது நாளில் காலை வேளையில் ஸமூத் சமுதாயத்தவர்களின் முகமானது ஸாலிஹ்(அலை) அவர்கள் எச்சரிக்கை செய்ததைப் போலவே மஞ்சள் நிறமாக மாறியது. இரண்டாவது நாள் காலையில் அவர்களது முகம் சிவப்பு நிறமாக மாறியது. மூன்றாவது நாள் காலை அவர்களின் முகங்கள் கறுப்பு நிறமாக மாறியது. நான்காவது நாள் சூரியன் உதயமான போது வானத்திலிருந்து அவர்களை இடிமுழக்கம் தாக்கியது அவர்களுக்குக் கீழே கடுமை யான அதிர்வுடனும், பேரிரைச்சலுடனும், நிலநடுக்கம் ஏற்பட்டது. அவர்களின் இருதயங் களைக் கழற்றிப் போட்டபோது அதனால் ஒரே நேரத்தில் அவர்களது அனைவருடைய உயிர்களும் வெளியேறின. தமது இல்லங்களில் உயிரற்ற வெற்றுச் சடலங்களாக வீழ்ந்து மாண்டுபோய்க் கிடந்தார்கள். சுருக்கம் (7:7378, முஸ்னது அஹ்மத், தஃப்ஸீர் தபரீ, தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 3, பக்கம் 807-816, பாகம் 6, பக்கம் 599-601) அவர்களாகவே வேண்டிக் கொண்டதற்கு ஏற்பவே பாறையிலிருந்து வெளிவந்த ஒட்டகத்தை வெறுமனே பெருமைக் கண்கொண்டு பார்த்தார்கள்,  அழிவுக்குள்ளானார்கள்.

மத்யன் வாசிகளுடைய கண்களும் பொய்யே  சொன்னது:

நீர் உண்மையாளர்களில் ஒருவராக இருந்தால் வானம் (இடிந்து) துண்டு துண்டுகளாக எங்கள் மீது விழச் செய்வீராக! (28:187, 17:92, 8:32) என்று அவர்கள் நபியிடம் கூறியபோது; அல்லாஹ் அச்சமூகத்தார் மீது இடியையும், ஏழு நாட்களாகக் கடுமையான வெப்பத்தையும் அனுப்பினான். அவர்களுக்கு மூச்சு முட்டியது தமது வீடுகளில் இருந்து வெட்டவெளிக்கு ஆசுவாசத்திற்காக ஓடினார்கள். கடுமையான சூரிய வெப்பம் சுட்டெரிக்கும் அவ்வேளையில் அவர்களுக்கு நிழல் தர எதுவும் இருக்கவில்லை. பின்னர் அவர்களுக்காக நிழல் போன்ற ஒரு மேகத்தை அல்லாஹ் உருவாக்கினான்.

அதனை அவர்கள் கண்ணால் பார்த்த போது தமக்கு நிழலாக வந்த மேகம் என்று கருதினார்கள். அவர்களது கண்களும் பொய் தான் சொன்னது அப்போது அவர்களில் ஒருவர் அந்த மேகத்தின் கீழே நிழல் பெறச் செல்வார். அம்மேகத்தின் இதமான குளிர்ச்சியையும், நிம்மதியையும் அனுபவிப்பார். அது குறித்துத் தமது சமூகத்தாருக்கும் தெரியப்படுத்துவார்.

அப்போது அவர்கள் அனைவரும் அங்கு வந்து அந்த மேகத்தின் கீழே நின்று நிழல் பெறுவார்கள். அந்நேரத்தில் அவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்த பின்னர் அவர்களிடமிருந்து அந்த குளிரான நிழலை அல்லாஹ் அகற்றிவிடு வான். அதிலிருந்து அவர்கள் மீது நெருப்புத் துண்டுகளை அம்மேகம் உமிழும். சூரியன்  சுட்டெரித்து அவர்கள் அனைவரும் வறுக்கும் சட்டியில் போடப்பட்ட வெட்டுக் கிளியைப் போன்று எரிந்து கருகிப் போனார்கள். (அப்துல்லாஹ் பின் உமர்(ரழி), இப்னு அப்பாஸ்(ரழி), அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல் ஆஸ்(ரழி), அப்துர் ரஹ்மான் பின் ஸைத்(ரஹ்), யஸீத் அல்பாஹிலீ(ரஹ்), தஃப்ஸீர் இப்னு அபீஹாத்திம், தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 6, பக்கம் 610-613) இத னைத்தான்; மேகம் நிழலிட்ட நாளின் வேத னையாகும். அது மகத்தான நாளின் வேதனையாக அமைந்தது என்று ஏகனாகிய இறைவன் கூறுகின்றான். (26:189) இதுபோலத்தான்;

இறைத்தூதர் நூஹ்(அலை) அவர்களுடைய சமுதாயத்தவர்களின் கண்களும் பொய்தான்  சொன்னது :

நபி நூஹ்(அலை) அவர்கள் அல்லாஹ்வுடைய உத்தரவின் பிரகாரம் அல்லாஹ் கற்றுக் கொடுத்த அளவுப் பிரமாண அறிவியலின்படி அவனது நேரடி கண்காணிப்பில் அறுநூறு முழம் நீளமும், முப்பது முழம் அகலமும், முன்னூறு முழம் உயரமும், மூன்று அடுக்குகளையும் கொண்டதாக; ஓர் நீராவிக் கப்பலை நேர்த்தியாகக் கட்டிக்கொண்டிருந்தார்கள். அப்போது அவருடைய சமுதாயத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் யாரேனும் கப்பலைக் கட்டிக் கொண்டிருக்கும் நபியவர்களைக் கடந்து செல்லும் போதெல்லாம் அவரை ஏளனம் செய்தனர் என்று அல்லாஹ் தெரிவிக்கின்றான். (இப்னு அப்பாஸ்(ரழி), கத்தாதா(ரஹ்), ஹசன் அல்பஸ்ரி (ரஹ்), அல்குர்ஆன் 11:37,38, 7:64, 10:73, 29:15, 21:76,77, 37″76, 26:119, தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 3, பக்கம் 796, பாகம் 4, பக்கம் 540,622,623, 628, தஃப்ஸீர் இப்னு அபீஹாத்திம், தஃப்ஸீர் மாஜிதீ) 

காரணம் அவர்கள் வெறும்கண்ணால்மாத்திரமே பார்த்தார்கள். அறிவுக் கண்கொண்டு, சிந்தனைக் கண்கொண்டு, தூர நோக்குக் கண்கொண்டு, ஆய்வுக் கண்கொண்டு பார்க்கவில்லை. வெறும் பெருமைக் கண்கொண்டு மாத்திரமே பார்த்தார்கள். இதனால் அவர்கள் அனைவரும் இரு உலக அழிவுக்கும் கைசேதத்திற்கும் ஆளானார்கள்.

கொடியோனான ஃபிர்அவ்னுடையதும், அவனுடைய உயர் சபையோரினதும்கண்கள்பொய் தான்  சொன்னது:

கைத்தடி பாம்பாக மாறுதல்: அந்தக் கைத்தடியைக் கீழே போட்டதும் உடனே அதன் உடலமைப்பு மிகப் பெரிய பிரமாண்டமானதாகவும், அதன் வாய் பெரியதாகவும், மிக நீளமானதாகவும், உள்ள பாம்புகளிலேயே அதி வேகமான நகர்வும், அதிகமானதுள்ளலும், உடையஜான்னுஎனும் ஒரு வகைப் பாம்பாக மாறி பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டு மிக விரைவாக நெளிந்து வளைந்து, செல்லக்கூடிய, ஒரு பெரிய மரத்தின் அருகே சென்றால் அதை அப்படியே தின்று முடித்துவிடக்கூடிய, ஒரு பெரிய பாறைக்கு அருகே சென்றால் அதையும் விழுங்கி விடக்கூடிய, விழுங்கிய அந்தப் பாறை அதன் வயிற்றுக்குள் உருண்டு செல்லும்போது ஒரு பள்ளத்திற்குள் விழுவதைப்  போன்று  ஓசை  வரக்கூடிய;

மேலும் ஃபிர்அவ்னுடைய அவையில் போட்டபோது அது தனது வாயைத் திறந்த வண்ணம் ஃபிர்அவ்னை நோக்கி வேகமாகச் சென்றபோது பாம்பு தன்னை நோக்கி வரு வதைக் கண்ட ஃபிர்அவ்ன் தனது அரியணை யிலிருந்து வேகமாகக் குதித்தெழுந்து அதைத் தன்னைவிட்டுத் தடுத்து நிறுத்துமாறு மூஸா(அலை) அவர்களிடம் உதவி கோரக்கூடிய அளவிற்கு ஃபிர்அவ்னுக்கு அச்சத்தை ஏற்படுத்த  வல்லதான; 

மேலும், ஒரு சந்தர்ப்பத்தில், அது தனது வாயைத் திறந்தவாறு ஃபிர்அவ்னைப் பிடிப்பதற்காக அவனை நோக்கி வேகமாக வந்ததும் அதனைக் கண்ட ஃபிர்அவ்ன் பயந்து போய்த் துள்ளி எழுந்து தனது அரச சிம்மாசனத்தை விட்டும் ஓடியதுடன் பயத்தால் சிறுநீரும் கழித்துவிட்ட அளவிற்கு அச்சத்தை ஏற்படுத்த வல்லதான;         

மேலும், ஃபிர்அவ்னுடைய மைதானத்தில் கூடியிருந்த கைதேர்ந்த சூனியக்காரர்கள் மொத்தம், பன்னிரண்டாயிரம் பேர் என்பதாக, கஅபுல் அஹ்பார்(ரஹ்) அவர்களும், பதினைந்தாயிரம் பேர் என்பதாக; முஹ்ம்மத் பின் இஸ்ஹாக்(ரஹ்) அவர்களும் மற்றுமோர் அறிவிப்பில்; முப்பதாயிரத்திற்கும் அதிகமானவர்கள் என்பதாக; சுத்தீ(ரஹ்) அவர்களும், எழுபதாயிரம் என்பதாக, இப்னு கஸீர்(ரஹ்) அவர்களும், எண்பதாயிரம் பேர் என்பதாக, முஹம்மத் பின் கஅப்(ரஹ்) அவர்களும் கூறியுள்ளார்கள். ஆனாலும் அவர்களின் சரியான எண்ணிக்கையை அல்லாஹ்வே அறிந்தவன், 

ஏதாயினும்; சூனியக்காரர்கள் ஒவ்வொரு வரும் தமது கையிலிருந்த பருமனான கயிறு களையும், நீளமான கழிகளையும், கீழே போட்டபோது அவை மலையளவுக்குப் பெரிய பாம்புகளாக மாறி அவற்றில் ஒன்று மற்றொன்றின் மீது ஏறி வளைந்து, நெளிந்து, ஊர்ந்து சென்று அந்தப் பள்ளத்தாக்கையே நிரப்பின அப்போது மூஸா(அலை) அவர்கள் தமது கைத்தடியைக் கீழே போட்டபோது உடனே அது நிஜமான பெரும் பாம்பாக மாறி ஒன்றையேனும் விடாமல் அவை அனைத்தையும் விழுங்கியபோது, (26:32,35, 20:19,20, 7:107,108,117,118, 27:10,12, 26:32,45, 28:31, இப்னு அப்பாஸ்(ரழி), முஜாஹித்(ரஹ்), கத்தாதா (ரஹ்), சுத்தீ(ரஹ்), அப்துர் ரஹ்மான் பின் கைஸத் பின் அஸ்லம் (ரஹ்), வஹ்ப் பின் முனப்பிஹ்(ரஹ்), இமாம் மாலிக்(ரஹ்), இப்னு ஜரீர்(ரஹ்), தாரகுத்னீ(ரஹ்), தஃப்ஸீர் இப்னு அபீஹாத்திம், தஃப்ஸீர் தபரீ, தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 5, பக்கம் 684-687, பாகம் 6, பக்கம் 752,770-775, பாகம் 3, பக்கம் 851, 852, 856-860, பாகம் 6, பக்கம் 644-651, 546-553)

அனைத்து அற்புத காட்சியையும் தமதுகண்களால்பார்த்தார்கள். ஆனாலும் அவர்களது கண்களும் பொய்தான் சொன்னது:

இறைத்தூதர் மூஸா(அலை) அவர்களுடைய ஒளிரும் கை அதை சட்டைப் பைக்குள் நுழைத்து வெளியே எடுத்தால் அது இலங்கிக் கொண்டு முழுமதி நிலவின் ஒரு துண்டுபோல ஒளிரும் கையாகப் பளிச்சிட்டுக் காட்சியளிக்கக்கூடிய ஒளிரும் கையை; (20:19,20, 7:107,108, 117,118, 27:10,12, 26:32,45, 28:31, இப்னு அப்பாஸ்(ரழி), முஜாஹித்(ரஹ்), கத்தாதா(ரஹ்), சுத்தீ(ரஹ்) அப்துர் ரஹ்மான் பின் கைஸத் பின் அஸ்லம்(ரஹ்), வஹ்ப்பின் முனப்பிஹ்(ரஹ்), இமாம் மாலிக்(ரஹ்), தஃப்ஸீர் இப்னு அபீஹாத்திம், தஃப்ஸீர் தபரீ, தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 5, பக்கம் 684-687, பாகம் 7, பக்கம் 752,770-775, பாகம் 3, பக்கம் 851,852, 856-860, பாகம் 6, பக்கம் 644-651, 546-553)

அவர்களும் தமது கண்களால் பார்த்தார்கள். ஆனாலும் அவர்களது கண்களும் பொய்தான் சொன்னது:

வெள்ளப்பெருக்கு : நாம் அவர்கள் மீது பெருவெள்ளத்தைஅனுப்பினோம். (7:133) என்று அல்லாஹ் கூறுகின்றான். இங்குவெள்ளம்என்பதைக் குறிக்க மூலத்தில்அத்தூஃ பான்எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. அது குறித்து, மனிதர்களை மூழ்கடித்து, அதிகமான உயிர்சேதங்களையும் உண்டுபண்ணி, பயிர்களையும், பழங்களையும் நாசமாக்கக் கூடிய பெருவெள்ளம் ஆகும் என்பதாக; இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களும், ளஹ்ஹாக் பின் முஸாஹிம்(ரஹ்) அவர்களும், வெள்ளமும், கொள்ளைநோயும் என்பதாக, முஜாஹித் (ரஹ்) அவர்களும், குறிப்பிட்டுள்ளார்கள். அது குறித்து, பைபிளில், நீ பூமியில் இராமல் நாசமாயப் போகும்படி நான் என் கையை நீட்டி உன்னையும், உன் ஜனங்களையும், கொள்ளை நோயினால் வாதிப்பேன்.  (9:15)

மேலும் அல்லாஹ் பெருவெள்ளத்தை அனுப்பினான். அத்தோடு பூமியிலிருந்தும் தண்ணீர் பீறிட்டு வந்தது ஊர் முழுவதும் வெள்ளக்காடானது அந்தத் தண்ணீர் அப்படியே தேங்கி நின்றது. அதனால் மக்கள் பயிர் செய்ய முடியவில்லை. எந்தவொரு வேலையும் செய்ய இயலவில்லை. இறுதியில் உண்ண உணவின்றி பட்டினியால் மிகவும் சிரமப்பட்டார்கள். இதனையும் (7:33, தஃப்ஸீர் தபரீ, தஃப் ஸீர் இப்னு கஸீர் பாகம் 3, பக்கம் 870,876,877)

அவர்களது “”கண்களால்பார்த்தார்கள்; ஆனாலும் அவர்களது கண்களும் பொய்தான் சொன்னது :

வெட்டுக்கிளிகள்நாம்வெட்டுக்கிளி களையும்அவர்கள் மீது அனுப்பினோம் (7:33) என்று அல்லாஹ் கூறுகின்றான். வெட்டுக்கிளிகள் என்பதைக் குறிக்கஅல்ஜராத்எனும் சொல் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது; ஃபிர்அவ்னுக்கும் அவனுடைய சமூகத்தாருக் கும் சோதனையாக அனுப்பப்பட்ட அந்த வெட்டுக்கிளிகள் மரத்தையே தின்றன; எந்த அளவிற்கெனில் அவர்களது வீட்டுக் கதவுகளில் அடிக்கப்பட்டிருந்த இரும்பாலான ஆணிகளைக் கூட அவை சாப்பிட்டு விடும். இறுதியில் அவர்களின் வீடுகளும், குடியிருப்புகளும், பிடிமானம் எதுவுமின்றி அப்படியே கீழே விழுந்து விடும்.

Previous post:

Next post: