இஸ்லாம் எப்படிப்பட்ட மார்க்கம்?
சையத் A. இல்யாஸ்
இஸ்லாம் என்பது, இனிமையானது, எளிமையானது என்று சிலர் கூறுவார்கள். இஸ்லாம் என்பது பெயர் தாங்கிய முஸ்லிம்களுக்கும், மற்றும் வீV-ல் நிகழ்ச்சி நடத்தி மக்களின் செல்வத்தை கொள்ளை அடிப்பவர்களுக்கு மட்டுமே இனிமையா னது, எளிமையானதாக இருக்கலாம். ஆனால் முமீன்களுக்கு இனிமையானதோ, எளிமையானதோ அல்ல.
எவ்வாறு என்றால்;
இஸ்லாம் ஒரு முழுமையான வாழ்க்கை முறையை கூறுகிறது, வழிகாட்டுகிறது. வெறும் சடங்கு சம்பிரதாயங்களாக செய் யக் கூடியவர்களுக்கே இஸ்லாம் எளிமை யானதாக இருக்கும். அதாவது வழிபாட்டு முறையாக இஸ்லாத்தில் ஏற்படுத்தப் பட்ட,
1. இறை நம்பிக்கை (ஈமான்),
2. தொழுகை,
3. நோன்பு,
4.ஜகாத்,
5.ஹஜ்
மேற்கண்டவைகள் மட்டுமே இஸ்லாம் என்று கூறவில்லை.
அதாவது;
1. இறை நம்பிக்கை (ஈமான்)
உலகிலுள்ள பெரும்பாலோர் தடம் புரள்வது ஏக இறை நம்பிக்கையில்தான். இதில் முஸ்லிம்களும் உள்ளனர். முஸ்லிம் அல்லாதவர்களும் உள்ளனர்.
(நபியே) என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், “”நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன். பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கின்றேன்; அவர்கள் என்னிடமே (பிரார்த்தித் துக்) கேட்கட்டும். என்னையே நம்பட்டும், அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக! (2:186)
2. தொழுகை (ஸலாத்)
ஐந்து நேர தொழுகையை இஸ்லாம் வழியுறுத்துகிறது என்பது உண்மை. அது சடங்காக செய்ய சொல்லவில்லை. அதை (தொழுகையை) நிறைவேற்றினால் என்ன நடக்கும் / நடக்கவேண்டும் என்று கூறுகிறது.
“… தொழுகையை நிலைநாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும்…” (அ.கு.29:45)
தொழுகையை நிறைவேற்றும் பெரும் பாலோரிடம் மேற்கண்ட தவறு (29:45) நீங்கவில்லை. அது (தொழுகை) சடங்காகவே இருக்கிறது.
3. நோன்பு :
இது சுமார் 14 மணி நேரம் பட்டினியாகவும், தாகத்தை பொறுத்துக்கொண்டும் இருப்பதற் காக ஏற்படுத்தப்பட்ட வழிபாட்டு முறை அல்ல, மாறாக, மனித சமுதாயத்திற்கு நேர்வழி காட்ட ரமழானில் அருளப்பட்ட இறைநூலை(குர்ஆனை) தாய்மொழியில் பொருள் உணர்ந்து படித்து பின்பற்றினால் மட்டுமே நோன்பின் பலன் கிடைக்கும்.
“இந்த குர்ஆன் ரமழான் மாதத்தில் அருளப்பட்டது. இது (குர்ஆன்) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும், நேர்வழியை தெளிவாக கூறும் என்று இறைவன் கூறுகிறான். (அ.கு. 2:185)
4. ஜகாத் (தர்மம்) :
பாடுபட்டு சேர்த்த செல்வத்தை தேவையானவர்களுக்கு கொடுத்து உதவவேண்டும் என்பது ஜகாத்தின் நோக்கமாக இருந்தாலும், அதற்காக மட்டும் ஏற்படுத்தப்பட்ட வழிமுறை அல்ல. மாறாக எனது செல்வம், என்னால் சம்பாதிக்கப்பட்டது, எனக்கு மட்டுமே உரியது என்ற எண்ணம் நீங்கி ஈகை குணம் உடையவராகவும், பிறருக்கு நன்மை செய்பவராகவும் மனித நேய முள்ளவர்களாகவும் இருப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட வழிபாட்டு முறையாகும்.
“அல்லாஹ்வின் பொருத்தத்தைத் தேடியும், தமக்குள்ளே இருக்கும் உறுதியான நம்பிக்கை யோடும் யார் தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உவமை யாவது” உயரமான (வானமுள்ள) பூமியில் ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் மேல் பெரு மழை பெய்கிறது. அப்பொழுது அதன் விளைச்சலை இரட்டிப்பாக்கி தருகிறது. இன்னும், அதன் மீது பெருமழை பெய்யாவிட்டாலும், சிறு தூறலே (அதற்குப் போதுமானது; அல்லாஹ் நீங்கள் செய்வதை எல்லாம் பார்க்கின்றவனாக இருக்கின்றான்.” (அ.கு.2:265)
ஹஜ் 5 :
ஹஜ் கடமையாக்கப்பட்ட நோக்கம், வெயிலிலும், குளிரிலும் சடங்காக நிறைவேற்று வதற்காக ஏற்படுத்தப்பட்டதல்ல மாறாக குலம் கோத்திரம், இனம், நிறம், மொழியால் நீங்கள் வேறுபட்டவர்களாக இருந்தாலும் ஒரே இறைவன் மூலம் படைக்கப்பட்ட மனிதர்கள்தாம் என்பதை அறிந்து கொள்ளமுடியும்.
“அதில்(மக்காவில்) தெளிவான சான்றுகளும், மகாமு இப்ராஹீம் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது சென்றுவர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை….” (அ.கு. 3:97)
மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ்வின் சான்றுகள் உள்ளன என இறைவன் கூறுகிறான்.
அல்லாஹ்வின் சான்றுகளாக பல உள்ளன: அதில் மனிதர்கள் இனம், நிறம், மொழி யால் வேறுபட்டவர்களாக இருந்தாலும் ஏக இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்கள் தாம் என்பதையும், ஒற்றுமையை வழியுறுத்தியும், பிரிவை தடை செய்தும் ஏற்படுத்தப்பட்டதே ஹஜ் வழிமுறையாகும்.
இஸ்லாம் எளிதானது, இனிமையானது என்று மட்டும் இருக்குமேயானால் மேற்கண்டவைகளை சடங்குகளாக மட்டுமே கூறியிருக்கும். ஆனால் அதற்கு மாறாக ஒவ்வொரு கடமையிலும் ஒரு காரணத்தை (நோக்கத்தை) கூறி அதற்காகத்தான் இதை கடமையாக்கினோம் என்று இறைவன் கூறுகிறான்.
A இஸ்லாம் என்பது:
B ஆன்மீகம்,
C ஒழுக்கம்,
D குடும்ப வாழ்க்கை,
E சமூக நீதி,
F அரசியல் நெறிமுறைகள்
என அனைத்திலும் கடைபிடிக்கவேண்டும் என்று வழிகாட்டுகிறது.
அது மட்டுமல்ல;
A அமைதி
B நீதி
C கருணை
D சமத்துவம்
E பொறுப்பு
என்றுஅனைத்துவிசயங்களையும்பேசுகிறது.
அதாவது வெறும் சடங்கு சம்பிரதாயங்களை செய்ய வலியுறுத்தவில்லை.
மாறாக மேற்கண்ட அனைத்திலும் யாரெல்லாம் நற்செயல்கள் செய்கின்றார்களோ அவர்களையே உயர்ந்தவர்கள் எனக் கூறுகிறது.
எனவேதான் இஸ்லாம் இனிமையானது, எளிதானது என்று கூறாமல், சரியானது, உயர்வானது என்று கூறுகிறோம்.
அறிந்து கொள்வோம்!
ரஹிமுத்தீன், குண்டூர்
1. வானத்தையும், பூமியையும் அவற்றுக்கு இடையே உள்ளதை எந்த நிலைக்காக படைக்கவில்லை என அல்லாஹ் கூறுகிறான்?
விளையாட்டுக்கான நிலையில். அ.கு. 21:16
2. அல்குர்ஆனை எந்த மொழியில் இறக்கினதாக அல்லாஹ் கூறுகிறான்?
தெளிவான அரபு மொழியில். அகு 26:195
3. மானக்கேடான விசயங்கள் பரவ பிரியப்படுபவர்களின் நிலை என்னவாக இருக்கும் என்று அல்லாஹ் கூறுகிறான்?
நோவினை தரும் வேதனை உண்டு. அல்குர்ஆன் 24:19
4. அல்லாஹ்வையன்றி வணங்கியவர்கள் என்னவாக இருப்பார்கள் என அல்லாஹ் கூறுகிறான்?
நரகத்தின் விறகுகள். அல்குர்ஆன் 21:98
5. அல்லாஹ்வை நினைவு கூர்வதை மறந்தவர்களின் நிலை என்ன என அல்லாஹ் கூறுகிறான்?
அழிந்து போகும் கூட்டத்தார். அ.கு. 25:18
6. அல்குர்ஆனை ஒரே தொகுப்பாக இறக்கப்படாததற்கு காரணம் என்ன என அல்லாஹ் கூறுகிறான்?
இதயத்தை உறுதிப்படுத்துவதற்காக நபிக்கு. அல்குர்ஆன் 25:32
7. ஸபா நாட்டிலிருந்து சிம்மாசனத்தை கண் இமைப்பதற்குள் கொண்டு வந்தவர் யார் என அல்லாஹ் கூறுகிறான்?
வேத ஞானம் பெற்ற ஒருவர். அ.கு.27:40
8. முஸ்லிமின் மையத்தை தொடர்ந்து சென்று தொழுது அடக்கம் செய்யும் வரை இருந்த வருக்கு கிடைக்கும் பலன் என்ன என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
இரண்டு கிராத் அளவு நன்மை. அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரழி), புகாரி 1325
9. நபி(ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை எத்தனை வருடத்திற்கு பின் தொழுதார்கள்?
8 வருடத்திற்குபின். ஆதாரம் : புகாரி 4042
10. அல்–ஆனி என்றால் என்றால் என்ன என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
சிறைப்பட்டவர். அறிவிப்பவர் : அல்அஷ்அரீ (ரழி), சுனன். அபூதாவூத் 3105
11. திடீர் மரணம் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறுவது என்ன?
வருத்தத்திற்குரிய பிடி. அறிவிப்பவர்: உபைத் இப்னு காஜித் அஸ்ஸீல்மி(ரழி) சுனன் அபூதாவூத் 3110
12. நபி(ஸல்) அவர்கள் தன் மரணத்திற்கு என்ன கூறினார்கள்?
அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் கொண்டவராகவே மரணம் கொள்ள வேண்டும். அறிவிப்பவர்: ஜாபிர்பின் அப்துல்லாஹ்(ரழி), சுனன் அபூதாவூத் 3113
13. பெருநாள் தொழுகைக்கு பின் நபி(ஸல்) என்ன செய்வார்கள்?
குத்பா(பயான்) நிகழ்த்துவார்கள். ஜாபிர் பின் அப்துல்லாஹ், புகாரி 958
14. பூமி முழுவதும் எங்களுக்கு எதுவாக இருந்தது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
தொழுமிடமாக. அறிவிப்பவர்: ஹுதைஃபா(ரழி), ஸஹீஹ் முஸ்லிம் 522
15. மரணத் தருவாயில் இருப்பவர்களுக்கு என்ன நினைவூட்டவும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
லாயிலாஹ இல்லல்லாஹ். அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ(ரழி), முஸ்லிம்:916
16. பேரீட்சை பழங்களில் எந்த அளவு அடையும் வரை ஸகாத் கடமை இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
ஐந்து வஸ்க்குகள். அறிவிப்பவர்: அபூ ஸயீத் அக்ருத்ரீ(ரழி) முஸ்லிம் 979
17. ஃபிர்அவ்ன் பூமியில் பெருமை கொண்டபடி செய்த செயல்கள் என்ன என அல்லாஹ் கூறுகிறான்?
ஆண் குழந்தைகளை அறுத்துக் கொலை செய்து கொண்டிருந்தான். அ.கு. 28:4
18. அல்லாஹ்வை பற்றி தர்க்கம் செய்கிறவனின் நிலை பற்றி அல்லாஹ் என்ன கூறுகிறான்?
ஷைத்தானை பின்பற்றுவர். அ.கு. 22:3
19. மூஸா(அலை) அவர்கள் தம் குடும்பத்தாரை நோக்கி என்ன கூறினார்?
ஒருநெருப்பைகாண்கிறேன். அ.கு. 27:7
20. மூஸா(அலை) அவர்கள் எதைப் பார்த்து பயந்து ஓடலானார்?
அவரதுகைத்தடிபாம்பாகமாறியதைபார்த்து. அல்குர்ஆன் : 27:10