இந்த திருடர்கள் பூட்டை உடைப்பதில்லை!

in 2026 மார்ச்

அய்யம்பேட்டை A. நஜ்முதீன்

மனிதர்கள் ஏமாறுவது அல்லது ஏமாற்றப்படுவது வரலாற்றில் புதிய ஒன்று அல்ல. காலம் காலமாக நடந்து வருவதுதான். காலத்திற்கேற்ப வடிவங்களும்  பெயர்களும்  மாறுகின்றன.

டிஜிட்டல் காலத்திலும் கூட மக்கள் ஏமாறு கிறார்கள், ஏமாற்றப்படுகிறார்கள். அதாவது மனிதர்களை டிஜிட்டல் அடிமையாக மாற்றி ஏமாற்றி  வருகிறார்கள்.

ஆனாலும் மக்களில் பெரும்பாலோர் தன்னை யாரும் ஏமாற்றிவிடக்கூடாது, ஏமாறவும் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். அதன் காரணாக சின்ன சின்ன விசயங்களில்  கூட  கவனம்  செலுத்துவார்கள்.

உதாரணமாக தள்ளுவண்டி வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள், மற்றும் சிறு கடைகளில் கூட பேரம் பேசுவார்கள். அதுவே சூப்பர் மார்க்கெட், பெரும் மால்களில் அதிக விலை  கொடுத்து  வாங்குவார்கள்.

இது  அன்றாடம்  நடக்கும்  நிகழ்வுகள் :

பொதுவாக மக்கள் ஏமாறுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் கீழ்கண்ட சில பொதுவான காரணங்கள் மிக முக்கியமாகும்.

1. அறிவு குறைவு

2. தகவல்  பற்றாக்குறை,

3.பயம்,

4. உணர்ச்சி அடிப்படையிலான முடிவுகள்

5. அதீத  மத  நம்பிக்கை,

6. மத குருமார்கள் மீது குருட்டு நம்பிக்கை, 

7. சமூக அழுத்தம்,

8. போலி கெளரவம்,

9. காலம் காலமாக இருந்து வருகின்ற சில மூடநம்பிக்கைகள்,

10. ஆராயும் குணம் இல்லாமை,

11. குறுகிய காலத்தில் உழைப்பு இல்லாமல்  செல்வம்  சேர்க்கவேண்டும்.

இன்னும்  பல  உள்ளன.

உலகில் அதிகமான மக்கள் ஏமாற்றப்படுவது  இரண்டு  விசயத்தில்தான்.

ஒன்று : மத ரீதியாக (எல்லா மதங்களிலும்) 

மற்றொன்று : மருத்துவ ரீதியாக

மதரீதியாக : ஏன் அதிகமாக ஏமாற்றப்படுகிறார்கள்  என்றால்;

மதம் என்பது மக்களின் மனதில் மிக உயர்ந்த உணர்ச்சிகள் நிறைந்ததாகும். ஆனால் எந்த மதமும் தானே மக்களை ஏமாற்றுவது இல்லை. மதத்தை தவறாக பயன்படுத்தும் சில மதகுருமார்களால்  ஏமாற்றப்படுகிறார்கள்.

எவ்வாறு  என்றால் :

1. நோயை குணமாக்குவோம்,

2. துரதிர்ஷ்டம் நீங்கும்,

3. செல்வம் பெருகும்,

4. பேய் / பிசாசு விலகும்,

5. பாவமன்னிப்புக்கு கட்டணம் செலுத்தினால்  மன்னிப்பு.

6. சொர்க்கத்திற்காக பாஸ்

7. ஜோசியம்,

8. பஞ்சாங்கம்

9. தாயத்து, தட்டு, கயிறு

இன்னும்  சில,

அரசியல் ரீதியாக : உணர்ச்சிகளுக்கு அடிமையாகி சிந்திக்க மறந்து சில தலைவர்களை  கண்மூடித்தனமாக  நம்புவது.

வணிக ரீதியாக : சில னிஸினி திட்டங்கள், ஆன்லைன் ஏமாற்றம், குறுகிய காலத்தில் உடனே பணக்காரர் ஆகலாம் என்ற ஆசை, ஷேர் மார்கெட்,  சூது,  லாட்டரி.

மருத்துவ ரீதியாக : ஏமாறுவதற்கு இரண்டு மிக  முக்கிய  காரணம்.

ஒன்று : உயிர்  பயம்

மற்றொன்று : மருத்துவர்கள் படித்தவர்கள், மருந்து மாத்திரைகள் குணமாக்கும் என்ற நம்பிக்கை.

(இந்த நம்பிக்கையில் ஓரளவில் தான் உண்மை உண்டு. முழுமையான நம்பிக்கை தவறானது)

உணவு முறை : விற்பனையில் கலப்படம், தரம் இல்லாததை தரமானது போல் காட்டுவது.

உற்பத்தியிலேயே உடலுக்கு கேடு தருவதை சேர்ப்பது.

கல்வி ரீதியாக : போலியான (சர்டிபிகெட்) சான்றிதழ், கல்வி நிறுவனங்கள் தங்களை மிகைப்படுத்துதல், தரமற்ற கல்வி, அதிக கட்டணம்.

தொழில் ரீதியாக :  உழைப்பை  சுரண்டுதல்

ஊடகம்  சோசியல்  மீடியா :

வதந்திகள், கற்பனை செய்திகளை உண்மை போல் கூறுவது. தொழில்நுட்பத்தை தவறாக  பயன்படுத்துவது.

திருடர்கள் பூட்டை மட்டுமே உடைப்பார்கள், ஆனால் நாம் மேலே குறிப்பிட்ட இந்த திருடர்கள் பூட்டை உடைப்பது இல்லை. மாறாக மக்களின் அறியாமையை, ஆசையை உணர்ச்சிகளை தூண்டி அறிவு, ஆற்றல், பொருளாதாரம் அனைத்தையும் திருடுகிறார்கள்.

தீர்வு : தனி மனிதனும், சமூகமும் முன்னேற்றம் (விழிப்புணர்வு) அடைய மக்களின் அறிவு, புரிதல், ஆராய்தல், மட்டுமே ஏமாற்றத்திலிருந்து பாதுகாக்கும்  தடுப்பு  சுவராகும்.

ஏமாற்றத்தை எப்படித் தடுக்க முடியும் :

1. கல்வி அறிவு 

2. ஆதாரம் தேடுதல் 

3. ஊடக அறிவு 

4. நிதியை பெருக்குதல் 

5. மத ரீதியான மூடநம்பிக்கைகளை அறிவியலோடு இணைத்து பார்ப்பது. 

6. சிந்தித்தல்/சிந்தனையை வளர்த்தல்

7. இறைநூல்(குர்ஆனை) தாய்மொழியில் படித்தல், சிந்தித்துப் பார்த்தல்.

உயிருக்காக பயந்து ஓடும் மானின் வேதனையை எப்படி உணவுக்காக துரத்தி செல்லும் புலி உணர்வதில்லையோ, அதுபோல் பிற மனிதர்களை ஏமாற்றுபவர்கள் ஏமாறும் மனிதர் களின்  வேதனையை  உணர்வதில்லை.

எனவே இந்த திருடர்களிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

Previous post:

Next post: