பின்பற்றக்கூடாத இமாமும் இருக்கிறார்களா?

in 2022 செப்டம்பர்

பின்பற்றக்கூடாத இமாமும் இருக்கிறார்களா?

K.M.H. அபூ அப்தில்லாஹ்

ஆகஸ்ட் மாத தொடர்ச்சி …….

31:23 இந்த வசனம் என்ன சொல்கி றது? நபிக்கே அப்படிப்பட்டவர்கள் வி­ யத்தில் இந்த உலகில் தீர்ப்புச் செய்ய அதி காரம் கொடுக்கப்படவில்லை. அவர்கள் பற்றி விசனப்பட்டு செயல்படுவதை அல் லாஹ் தடுக் கிறான், நாளை மறுமையில் அவர்களுக்குரிய தீர்ப்பு இருப்பதாகச் சொல்கிறான். அவர் களுடைய உள்ளத்தில் இருப்பதை அல்லாஹ்வே அறிபவன்; நீர் அல்ல என்று நபியையே கடுமையாக எச்சரித்துள்ளான். இறுதி நபிக்கே குஃப்ர், ´ர்க் செய்யும் குற்றவாளிகள் வி­யத்தில் இவ்வு லகில் தீர்ப்புச் செய்ய அதிகாரமில்லை எனும்போது, அவர்களுக்கே அவர்களு டைய உள்ளத்தில் இருப்பது தெரியாது என்று சொல்லும்போது, இவர்களுக்கு இவ்வுலகில் அவர்கள் வி­யத்தில் தீர்ப்ப ளித்து அவர்கள் பின்னால் தொழக்கூடாது என்று ஃபத்வா கொடுக்கும் அதிகாரம் இருக்கிறதா? நபி(ஸல்) அவர்கள் காஃபிர்க ளின் குஃப்ரான செயல்களைப் பார்த்தே விசனப்படுகிறார்கள். அந்த நிலையில்தான் அது உமது வேலையில்லை. உமக்கு அதில் அதிகாரம் இல்லை.

அது நமது அதிகாரத்தி லுள்ளது என்று அல்லாஹ் எச்சரித்துள்ளான். இந்த நிலையில் இவர்கள் இந்த இமாம்கள் ´ர்க், பித்அத் செய்வதை எங்கள் கண்ணால் பார்க்கிறோம்; அவர்கள் தர்ஹா-சடங்குகளைச் செய்யத்தான் செய்வோம் என்று தங்கள் நாவினாலேயே பிர கடனப்படுத்துகிறார்கள்; எனவே அவர்கள் முஷ்ரிக்கின்கள்தான். எனவே அவர்கள் பின்னால் தொழக்கூடாது என்று ஃபத்வா கொடுப்பதை அல்லாஹ் ஏற்பானா? அவர்க ளின் உள்ளத்தில் உள்ளதை அவர்களே வெளிப்படுத்துகிறார்கள். அதை வைத்தே அவ்வாறு ஃபத்வா கொடுக்கிறோம் என்று சொல்ல முடியுமா? அன்றும் நபி(ஸல்) அவர் களது முன்னிலையில் அவர்கள் தங்கள் வாயால் தங்கள் உள்ளத்திலுள்ளதை வெளிப் படுத்தத்ததான் செய்தார்கள். அதனால் தான் நபி(ஸல்) அவர்கள் வேதனைப்பட் டார்கள் அதை மறுத்தே அல்லாஹ் இந்த 31:23 வசனத்தை இறக்கி நபியை எச்சரித்துள்ளான்.

இன்னும் பாருங்கள்: “அல்லாஹ் மார்க்கத்தில் விதிக்காததை விதிக்கக் கூடிய இணையாளர்கள் அவர்களுக்கிருக்கின்ற னரா? மேலும் (மறுமையில் விசாரணைக் குப் பிறகு தக்க கூலி கொடுக்கப்படும் என்னும் இறைவனின்) தீர்ப்புப் பற்றிய வாக்கு இல்லாதிருப்பின் (இதுவரை இவ்வுலகி லேயே) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக்கப் பட்டிருக்கும். நிச்சயமாக அநியாயக்காரர் களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு” அல்குர்ஆன் 42:21

எத்தனைக் கடுமையான எச்சரிக்கை பாருங்கள். அல்லாஹ் விதிக்காததை விதிப்பவன் யார்? தன்னை அல்லாஹ்வுக்கு இணையாக ஆக்கிக் கொண்டவன்; பக்கா முழு முதல் முஷ்ரிக், அந்த முஷ்ரிக்குடைய வி­யத்தில் கூட தீர்ப்பளிக்கும் அதிகாரம் பெற்ற அல்லாஹ்வே இவ்வுலகில் தீர்ப்ப ளிக்கவில்லை. நாளை மறுமைக்கென்று ஒத்தி வைத்துள்ளான்; தீர்ப்பளிக்கும் அதிகாரம் பெற்ற அல்லாஹ்வே தீர்ப்பை இவ்வுலகில் இல்லை; நாளை மறுமைக்கென்று ஒத்திவைத்துள்ள நிலையில் இவர்கள் தங்க ளுக்கு அதிகாரம் இல்லாத நிலையில் இவ்வுலகிலேயே அவர்களுக்கு முஷ்ரிக் என்று தீர்ப்பளித்து அவர்கள் பின்னால் தொழு வதைத் தடுத்து ஃபத்வா கொடுத்தால் இவர் களின் நிலை என்ன? இவர்களும் அல்லாஹ் விதிக்காததை விதிக்கும் இணையாளர் களாக ஆகிவிடுகிறார்களா? இல்லையா? அல்லாஹ் 42:21ல் கூறியுள்ளதுபோல் கருணை காட்டுவதால் இவர்கள் தப்பிப் பிழைத்திருக்கிறார்கள். இல்லையயன்றால் இங்கேயே இப்போதே இவ்வுலகிலேயே இந்த அதிகப்பிரசங்கிகள் வி­யத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கும். அல்லாஹ் வின் கருணையால் தப்பி இருக்கிறார்கள். இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள ஒரு உதாரணம் சொல்லுகிறோம்.

ஒரு கல்லூரியில் ஒரு வகுப்பறையில் 50 மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்க ளில் ஒருசிலரே நன்றாகப் படிக்கிறார்கள். அதில் ஒரு மாணவன் மிகமிகக் கெட்டிக் காரன். பெரும்பாலான பாடங்களில் நூற் றுக்கு நூறு மதிப்பெண் வாங்குகிறான். அதற்கு நேர்மாறாக இன்னொரு மாணவன் படிப் பில் மிகமிக மோசம், படிப்பதே இல்லை. சினிமா, டிராமா என்று ஊர் சுற்றி வருவதே அவனது வாடிக்கை. வகுப்பறையிலுள்ள மற்ற 49 மாணவர்களும் இவனைப் பற்றிப் பலவிதமாகப் பேசிக் கொள்வார் கள். இந்த வரு­ம் அவன் கண்டிப்பாக கோட் அடிப்பான் என்றெல்லாம் பேசிக் கொள்வார்கள். காரணம் நிச்சயமாக அவன் இந்த வருடம் ஃபெயில் ஆகிவிடுவான் என்று உறுதியாகத் தெரிந்திருக்கிறது. இந்த நிலையில் அவர்களில் மிகமிகக் கெட்டிக் காரமாணவன் இருக்கிறானே அவனுக்குத் தனது அபாரத் திறமையால் தலைக்கணம் அதிகம். மற்ற மாணவர்கள் தன்னை மெச்சிக் கொள்வார்கள் என்ற இறுமாப்பு எண் ணத்தில் அந்த ஃபெயில் என்று சொல்லப்பட்ட மாணவனின் ரெக்காட் Uட்டைப் பிடுங்கி அதில் ஃபெயில் என்று எழுதி இவனது கையயழுத்தை அகம்பாவத்துடன் போட்டுக் கொடுத்து அந்த மாணவனைக் கல்லூரியை விட்டு வெளியே போகும்படி உத்திரவு போட்டான். அதாவது தீர்ப்பளித்தான்.

இந்க வி­யம் கல்லூரி முதல்வர் வரை சென்றுவிட்டது. இப்போது என்ன நடக் கும் என நினைக்கிறீர்கள்? அந்தக் கல்லூரி யிலிருந்து முதலில் வெளியேற்றப்படுவது படிப்பில் மோசமான அந்த மாணவன் அல்ல; மிகத் திறமையாகப் படித்து பெரும் பாலான பாடங்களில் நூற்றுக்கு நூறு மார்க் எடுத்த அந்த மிக மிகக் கெட்டிக்கார மாண வனே முதலில் வெளியேற்றப்படுவான். காரணம் தனது அகம்பாவம் காரணமாக; நான் நன்றாகப் படிக்கிறேன் என்ற தலைக் கணம் காரணமாக கல்லூரி முதல்வரின் அதிகாரத்தில் இவன் தலையிட்டு அந்த மாணவனின் ரெக்கார்ட் சீட்டில் ஃபெயில் என்று எழுதி கையயழுத்துப் போட்டு அவனை வெளியேற்ற முற்பட்டதேயாகும்.

´ர்க் செய்யும் இமாம்களுக்கு குஃபர், ´ர்க், ஃபத்வா கொடுப்பதன் மூலம் அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிட்டுள்ள இந்த அதிகப் பிரசங்கித்தனமான மவ் லவிகளின் நிலையும் இதுதான். அகம்பாவம் பிடித்த மிகமிகத் திறமையுள்ள மாணவ னின் நிலையைப் போன்றதே. இவர்கள் என்னதான் தவ்ஹீத்வாதிகளாக இருந்தா லும், எப்போது இவர்கள் அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிட்டு, அதிகாரமுள்ள அல்லாஹ்வே எப்படிப்பட்ட கொடியவர்களாக இருந்தாலும் அவர்கள் பற்றிய தீர்ப்பை நாளை மறுமைக்கென்று ஒத்தி வைத்திருக்கும் நிலையில், இவர்கள் இவ்வுலகிலேயே இவர்களது ஆணவத்தால் அகம்பாவத்தால் “´ர்க்’ செய்யும் இமாம் கள் “காஃபிர்’ “முஷ்ரிக்’ அவர்கள் பின்னால் தொழக்கூடாது என்று அதிகாரமற்ற நிலையில் ஃபத்வா கொடுத்தால், நிச்சயமாக அந்த அகம்பாவம் பிடித்த திறமையுள்ள மாணவன் தூக்கி வெளியே வீசப்பட்டது போல் இவர்களும் அல்லாஹ்வின் தர்பாரிலிருந்து தூக்கி வீசப்படுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்கமுடியுமா? அல்லாஹ் பாதுகாப்பானாக. தங்களின் தவறை உணர்ந்து திருந்திக் கொள்வார்களாக. யாராக இருந்தாலும் எப்படிப்பட்டவர்க ளாக இருந்தாலும் நமது பார்வையில் எப்படிப்பட்ட கொடியவர்களாக, காஃபிர்க ளாக முஷ்ரிக்களாகத் தெரிந்தாலும் அது வி­யத்தில் ஃபத்வா கொடுக்க அஞ்ச வேண்டும். இதுவே உண்மை விசுவாசிகளின் தக்வாதாரிகளின் நடைமுறையாகும். உள்ளச்சமற்ற தான்தோன்றிகளே இப்படி ஃபத்வா கொடுக்கத் துணிவார்கள். இதோ மூஸா(அலை) அவர்களது நபித்துவ காலத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவம்.

பிர்அவ்ன் மூஸா(அலை), ஹாரூன் (அலை) இருவரையும் பார்த்து “மூஸாவே! உங்களிருவருடைய இறைவன் யார்? என்று கேட்டான்’ அல்குர்ஆன் 20:49

“ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கான அமைப்பை வழங்கி, பின்னர் வழிகாட்டி யிருக்கிறானே அவன்தான் எங்கள் இறைவன்” என்று கூறினார். அல்குர்ஆன்20:50

“அப்படியயன்றால் முன் சென்ற தலை முறைகளின் நிலைமை என்ன? என்று கேட்டான்.” அல்குர்ஆன் 20:51

“இது பற்றிய அறிவு என்னுடைய இறைவனிடம் (பதிவுப்) புத்தகத்தில் இருக் கிறது; என் இறைவன் தவறுவதுமில்லை; மறப்பதுமில்லை” என்று (மூஸா பதில்) சொன்னார். அல்குர்ஆன் 29:52

பிர்அவ்ன் என்ன நோக்கத்தோடு இக் கேள்வியைக் கேட்டான்? இவர்கள் இருவ ரும் ஒரே தெய்வம் என்கிறார்கள். நமது முன் சென்ற தலைமுறை பல தெய்வ வழி பாடுடையவர்களாகத்தானே இருந்தார் கள்; அவர்களது முடிவு என்ன என்றே கேட்கிறான். “´ர்க்’ செய்யும் இமாமுக்கு “முஷ்ரிக்’ ஃபத்வா கொடுக்கும் நமது இந்த மவ்லவிகளோ உடனே எடுத்தவுடன் அவர் கள் “காஃபிர்கள்’ நரகத்திற்குரியவர்கள் என்று ஃபத்வா கொடுத்து விடுவார்கள்.

ஆனால் மூஸா(அலை) அவர்கள் ஒரு நபியாக இருந்தும்; அவர்களுக்கு அல்லாஹ் விடமிருந்து வஹி வந்து கொண்டிருக்கும் நிலையில் எவ்வளவு அடக்கமாக, “”அது எனது இறைவனின் தீர்ப்பில் இருக்கிறது” என்று கூறுகிறார்கள். இந்த நிலையில் தன்னை முஸ்லிம் என்று பிரகடனப்படுத்திக் கொண்டு முஸ்லிம் மஹல்லாவில் வாழ்ந்து கொண்டு, அவர் இறந்து போனால் ஜனாஸா தொழுகை தொழ வைத்து முஸ்லிம்களின் கப்ரஸ்தானத்தில் அடக்கஞ் செய்யப்பட இருக்கும் ஒரு பள்ளி இமா முக்கு “முஷ்ரிக்’ ஃபத்வா கொடுத்து அவர் பின்னால் தொழுவதைத் தடுப்பவர்கள். மேலும் அந்த ஜனாஸா தொழுகைகளிலும் கூட கலந்து கொள்ளாதவர்கள் எந்த அளவு அல்லாஹ்வை மறந்தவர்களாக, ஆணவம் பிடித்தவர்களாக இருக்க முடியும்? என்பதை நிதானமாகச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

எனவே குர்ஆனிலுள்ள எந்த வச னத்தை ஆதாரமாகக் காட்டியும் ஒருவ ருக்கு குஃப்ர் ஃபத்வா கொடுக்க முடியாது. அப்படிக் கொடுப்பவர்கள் பெரும் தவறு செய்கிறார்கள். உலகில் யாருக்கும் “குஃப்ர்’ “´ர்க்’ ஃபத்வா கொடுக்கச் சொல்லி எந்த குர்ஆன் வசனமும் இல்லை என்பதே உண்மையாகும்.

அடுத்து “´ர்க்’ “குஃப்ர்’ செய்கிறவர் களைப் புறக்கணித்து விடுங்கள். அவர்களுக் கும், உங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை போன்ற கருத்துக்களையுடைய ஆயத்துக் களைக் காட்டி அப்படிப்பட்ட இமாம்கள் பின்னால் தொழுவது கூடாது என்று ஃபத்வா கொடுப்பதும் தவறாகும். இந்த ஆயத்துக்கள் 31:23ல் அல்லாஹ் கூறியிருப் பது போல் அவர்கள் வி­யத்தில் மன வேதனைப்பட்டு அதுபோன்ற ஃபத்வா கொடுப்பதை தவிருங்கள். புறக்கணியுங்கள் என்று கூறுகின்றனவே அல்லாமல் அவர்கள் பின்னால் தொழக்கூடாது என்ற கருத்தில் அல்ல. இன்னும் தெளிவடைய 3:128 வச னத்தைப் பாருங்கள்.

(நபியே!) உமக்கு இவ்வி­யத்தில் ஒரு சம்பந்தமும் இல்லை; அவன் அவர்களை மன்னித்து விடலாம்; அல்லது அவர்களை வேதனைப்படுத்தலாம்; நிச்சயமாக அவர் கள் கொடியோராக இருப்பதின் காரண மாக”. d அல்குர்ஆன் 3:128

இந்த இறைவாக்கு அவர்கள் கொடிய வர்கள், நபி(ஸல்) அவர்களை எதிர்த்த காஃபிர்கள், முஷ்ரிக்குகள் என்பது தெளி வான நிலையிலும் நபி(ஸல்) அவர்களுக்கு அவர்கள் வி­யத்தில் தீர்ப்புச் சொல்லவோ, சபிக்கவோ அதிகாரம் இருக்கவில்லை என் பதையே உறுதிப்படுத்துகிறது. எனவே அவர்களைப் புறக்கணித்து விடுங்கள்; அவர் கள் வி­யத்தில் உங்களுக்குச் சம்பந்த மில்லை போன்ற கருத்திலுள்ள ஆயத்துக் களை வைத்தும் அவர்கள் பின்னால் தொழு வதை மறுத்து ஃபத்வா கொடுக்க முடியாது.

முஷ்ரிக்குகள் நஜீஸானவர்கள்; நஜீஸை முன்னால் வைத்துக் கொண்டு தொழ முடியுமா? எனவே தர்ஹா சடங்கு கள் செய்து முஷ்ரிக்காக இருப்பவர்கள் பின் னால் தொழக்கூடாது என்று ஃபத்வா கொடுப்பதும் தவறேயாகும். அதாவது அவர்களை இங்கேயே இவ்வுலகிலேயே முஷ்ரிக்குகள் என்று ஃபத்வா கொடுத்து அல்லாஹ்வின் தனி அதிகாரத்தில் தலையிடு வதாகும் இது. ஆக குர்ஆனின் எந்த வச னத்தை ஆதாரமாகக் காட்டி முஸ்லிம் என்று சொல்லும் ஒருவருக்கு “குஃப்ர்’ அல் லது ´ர்க் ஃபத்வா கொடுக்க முடியாது. அப் படி ஃபத்வா கொடுப்பது இவர்களின் சொந்த யூகமே அல்லாமல் மார்க்கச் சட்டம் ஆகாது.

நாங்கள் எங்கே அவர்களுக்கு “குஃப்ர்’ ´ர்க் ஃபத்வா கொடுக்கிறோம்? அவர்க ளின் செயல்பாடுகளிலுள்ள சந்தேகம் காரணமாக அவர்கள் பின்னால் தொழு வதைத் தவிர்த்துக் கொள்கிறோம் என்று கூறி தங்களின் தவறான ஃபத்வாவை நியா யப்படுத்தலாம். இதுவும் பெருந்தவறாகும். ஒருவரின் பின்னால் தொழுவதைத் தவிர்ப் பதே அவரை இவர்கள் முஸ்லிமாக ஏற்றுக் கொள்ளவில்லை என்றுதானே பொருள் படும். இதுவும் தவறுதானே. இதோ நபி (ஸல்) அவர்களே இதைத் தெளிவுபடுத்து வார்கள்.

எவர்கள் நமது தொழுகையைத் தொழுகிறாரோ, நமது கிப்லாவை முன் னோக்குகிறாரோ, நாம் அறுத்ததைச் சாப்பிடுகிறாரோ அவர் முஸ்லிம்; அவர் அல்லாஹ்வினதும், அல்லாஹ்வின் தூதரி னதும் பாதுகாப்பில் உள்ளார். எனவே இந்த பாதுகாப்பில் இருப்பவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்வது கொண்டு அல்லாஹ் வுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யாதீர் கள்” dஅறிவிப்பாளர்: அனஸ்(ரழி), நூல்: புகாரி, அபூதாவூத் திர்மிதி, இப்னு மாஜா, தாரமி, அஹ்மத்.

இன்னொரு அறிவிப்பு இவ்வாறு முடிகிறது.

“அப்படியானால் அவர் ஒரு முஸ்லிம், மற்ற முஸ்லிம்களுக்கிருக்கும் அதே உரிமை களும், கடமைகளும் அவருக்கும் உண்டு” நூல்: புகாரி : 1387.

நபி(ஸல்) அவர்கள் இவ்வளவு தெளி வாக அறிவித்த பின்னரும், முஸ்லிம் என்று சொல்லும் ஒருவரை முஸ்லிம் இல்லை காஃபிர் என்று சொல்வதற்கோ அல்லது அவ ருக்குள்ள உரிமைகளை பறித்து அவர் பின் னால் தொழக்கூடாது என்று சொல்வ தற்கோ இவர்களுக்கு எப்படி மனத்துணிச் சல் வந்தது? இது அல்லாஹ்வுக்கே நம்பிக் கைத் துரோகம் செய்யும் மாபெரும் குற்றச் செயல் என்பதை இவர்களால் புரிய முடிய வில்லையா?

இந்த ஹதீஃதை நபி(ஸல்) அவர்கள் தொழுதது போல் தொழுபவர்கள் என்று இவர்கள் தங்கள் மனோ இச்சைக்கு ஏற்றவாறு இல்லாமல் இருக்க நபி(ஸல்) அவர்கள் எவ்வளவு அழகாக தாழ்ப்பாள் இட்டிருக்கிறார்கள் அவர்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுதது போல் தொழுவதாக இருந்தால் கண்டிப்பாக கிப்லாவை நோக்கித்தான் தொழ வேண்டும். “”தமது கிப்லாவை முன் னோக்குகிறாரோ” என்று சொல்ல வேண்டி யதில்லை. அப்படி இருக்க நபி(ஸல்) அவர்கள் அதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண் டிய காரணம் என்ன? பொருளற்ற ஒரு வாசகம் கூட நபி(ஸல்) அவர்களின் கட்டளை யில் இருக்கமுடியாது.

அதாவது அவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் சரி. அவனது ஈமான் எவ்வளவு பலகீனமானதாக இருந்தாலும், அல்லது இவர்கள் சொல்வது போல் ஈமானே இல்லாத நிலையில் இருந் தாலும் அவன் கிப்லாவை முன்நோக்கி நிற்பவனாக இருந்தால் போதும் அவனை முஸ்லி மாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றே நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருக்கிறார்கள். இவர்கள் யார் பின்னால் தொழக் கூடாது என்று சொல்கிறார்களோ அவர்கள் கிப்லாவை முன்நோக்கித்தான் தொழுகி றார்கள் என்பதில் சந்தேகம் இருக்க முடியுமா? இத்துடன் கூட நபி(ஸல்) அவர்கள் விட்டுவிடவில்லை. முஸ்லிம்களில் 99% இன்று தொழுகையே அற்றவர்களாக இருக் கிறார்கள். தொழுகை இல்லாத நிலையில் மரணிப்பவர்கள், குஃப்ருடைய நிலையிலேயே மரணிக்கிறார்கள். நாளை நரகில் எறியப்படுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ஆயினும் அவர்களுக்குக் கூட இவ்வுலகில் குஃப்ர் ஃபத்வா கொடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்பதை உணர்த்த, நபி(ஸல்) அவர்கள் இன்னும் கீழிறங்கி “”நாம் அறுத்ததைச் சாப்பிடு கிறாரோ” அவரும் முஸ்லிமே என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.

இன்று முஸ்லிம்களில் ஏதாவது ஒரு பிரிவினரை அல்லாஹ்வின் பெயர் சொல் லப்படாமல் அறுக்கப்பட்டதை சாப்பிடுகிறார்கள் என்று இவர்களால் காட்ட முடி யுமா? அப்துல் காதிர் ஜீலானிக்கும், நாகூரா ருக்கும் ´ர்க்கான முறையில் நேர்ச்சை செய்து கிடாய் வளர்ப்பார்கள். ஆயினும் அதை அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயர் சொல்லித்தான் அறுப்பார்கள். அவர்கள் அல்லாஹ் அல்லாத அல்லாஹ்வின் அடி யார்களுக்கு நேர்ச்சை செய்ததன் மூலம் அல்லாஹ்வுக்கு இணை வைத்துவிட்டார் கள் என்பதில் அணுவளவும் சந்தேகமில்லை. நாளை மறுமையில் அல்லாஹ் அவர்களை மிகக் கடுமையாகத் தண்டிப்பான் என்பதிலும் சந்தேகமே இல்லை. ஆயினும் அந்த நிலையிலும் இவ்வுலகில் அவர்களையும் முஸ்லிமாக ஏற்று அரவணைத்துச் செல்வதன் மூலம், உம்மத்தை-சமுதாயத்தைப் பிளவுபடாமல் பாதுகாக்க வேண்டும் என் பதே நபி(ஸல்) அவர்களின் கட்டளையாக இருக்கிறது. அதையே இரத்தினச் சுருக்கமாக மற்ற முஸ்லிம்களுக்குள்ள எல்லா உரிமைகளும் அவர்களுக்கும் உண்டு என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் நம் இந்திய நாட்டிலுள்ள பெரும்பாலான பள்ளி இமாம்கள் முஷ்ரிக்காக ஆகிவிட்டார்கள்; அவர்கள் பின்னால் தொழக்கூடாது; அந்த தொழுகை நிறைவேறாது என்று ஃபத்வா கொடுப்பது எந்த அளவு கொடூரமான செயல்? சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் செயல்? என்பதை உணராமல் செயல்படுகிறவர்களின் நாளைய நிலை என்ன? அல்லாஹ்வின் மிகக் கடுமையான பிடியிலிருந்து இவர்கள் தப்ப முடியுமா? உண்மையான உள்ளச்சம் உடையவர்கள் ஒருபோதும் இப்படி ஃபத்வா கொடுக்கத் துணிய மாட்டார்கள்.

எப்படி இவர்கள் சில குர்ஆன் வசனங்களுக்கு இவர்களது சொந்த விளக்கங் களைக் கொடுத்து ´ர்க் செய்யும் இமாம் பின்னால் தொழக்கூடாது என்று ஃபத்வா கொடுத்தார்களோ, அதுபோலவே சில ஹதீஃத்களையும் இவர்கள் இஷ்டத்திற்கு திரித்து வளைத்து சொந்த விளக்கம் கொடுத்து ´ர்க் செய்யும் இமாம் பின்னால் தொழக்கூடாது என்று ஃபத்வா கொடுத்து வருகிறார்கள். அந்த ஹதீஃத்களையும் பார்ப்போம்.

“உங்களில் ஒருவர் உங்களுக்கு இமா மத் செய்யட்டும்” என்ற நபிமொழியை ஆதாரமாகக் கொண்டு ´ர்க் செய்யும் இமாம் பின்னால் தொழக்கூடாது என்று ஃபத்வா கொடுக்கின்றனர். உங்களில் ஒரு வர் என்பதற்கு ´ர்க் செய்யாத பக்கா தவ் ஹீத்வாதி என்று எந்த அகராதியிலிருந்து பொருள் எடுத்தார்கள்? பொதுவாக முஸ்லிம்களில் ஒருவர் என்றுதான் பொருள் கொள்ளவேண்டும். அல்லது “”கூலிக்கு ஒரு இமாமை அமர்த்துவதை விட கூலி வாங் காத நிலையில் உங்களில் ஒருவர் இமாமத் செய்யட்டும்” என்று பொருள் கொள்வதற் கும் முடியும். மற்றபடி எந்த நிலையிலும் ´ஃக் செய்யாத இமாமை எங்கு தேடுவது? அப்படிப் பார்த்தால் 42:21 வசனப்படி இவர்களும் இணை வைக்கக் கூடியவர்களா கத்தானே-´ர்க் செய்பவர்களாகத் தானே இருக்கிறார்கள். எனவே இந்த ஹதீஃதுக்கு இவர்கள் கொடுப்பது இவர்களின் சொந்த யூகமான விளக்கமே.

“உங்களிடம் ஒரு கூலியும் கேட்காத இவர்களை நீங்கள் பின்பற்றுங்கள்; இன்னும் இவர்களே நேர்வழி பெற்றவர்கள்” (என்றும் அவர் கூறினார்) 36:21. இந்த இறை வசனத் தைக் காட்டி இந்த இமாம்கள் சம்பளம் வாங்கிக் கொண்டு கூலிக்குத் தொழ வைக்கி றார்கள். எனவே அவர்களைப் பின்பற்றித் தொழக்கூடாது என்று வாதிட்டார்கள். இவர்களது போட்டிப் பள்ளிகளில் தொழ வைக்கும் இமாம்களும் கூலிக்கே தொழ வைப்பதை மறந்துவிட்டனர். இங்கு இக்திகா பற்றி சொல்லப்பட்டிருக்கிறதே அல்லாமல் இக்திகா பற்றிச் சொல்லப்பட வில்லை. கூலிக்காக மாரடிக்கும் அமீர் தனது மனோ இச்சைப்படி குர்ஆன், ஹதீஃ துக்கு முரணானதையும் செய்யும்படி ஏவ லாம். ஆனால் தொழுகையில் கூலிக்கு மாரடித்தாலும் தொழுகையில் இல்லாததை அவர் செய்யமுடியாது. பின்னால் தொழுப வர்களைச் செய்ய வைக்கவும் முடியாது. மேலும் இந்த வசனம் எப்படிப்பட்ட பண் புடையவர்களைப் பின்பற்ற (இத்திபா) வேண்டும் என்று சொல்கிறதே அல்லாமல் எப்படிப்பட்டவர்களைத் தொழுகையிலும் பின்பற்ற (இக்திகா) கூடாது என்று சொல்ல வில்லை.

“தலைவருக்குக் கட்டுப்படவேண்டும்; செவிதாழ்த்த வேண்டும்; அவருக்கு எதிரா கக் கிளர்ச்சி செய்யக்கூடாது; அல்லாஹ் விடமிருந்து உங்களிடம் ஆதாரம் இருக்கக் கூடிய தெளிவான குஃப்ரைக் கண்டால் தவிர” நூல் : புகாரி.

இந்த ஹதீஃதை ´ர்க் செய்யும் இமாம் பின்னால் தொழகூடாது என்பதற்கு ஆதாரமாகத் தருகிறார்கள். இவர்கள் எந்த அளவு தங்களின் மனோ விருப்பங்களுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள் என்பது புரிகிறதா? தலைவருக்குக் கட்டுப்படுவதற் கும் இமாமைப் பின்பற்றித் தொழுவதற்கு முள்ள வேறுபாடு தெரியாதவர்களா இவர் கள்? இத்திபாவுக்கும், இக்திதாவுக்கும் வேறுபாடு தெரியாதவர்களா? அமீர் சில சமயங்களில் குர்ஆன், ஹதீஃதில் இல்லாத ஒரு வி­யத்தில் கூட புதிதாகக் கட்டளை யிட முடியும். இரவு நடுநிசியில் நடுங்கும் குளிரில் வெளியே போய் ஒரு காரியத்தைச் செய்து விட்டு வர உத்திரவிட முடியும். ஆனால் தொழுகையில் ஒரு இமாம் அந்த குறிப்பிட்ட தொழுகைக்கு உள்ள வி­யங் களைச் செய்ய முடியுமே அல்லாமல் தொழு கைக்கு வெளியில் எதனையும் செய்ய முடி யுமா? இரண்டு ரகாஅத் என்ற இடத்தில் மூன்று ரகாஅத் தொழுதால் கூட பின்னால் இருப்பவர்கள் அதை உணர்த்தி இரண்டு ரகாஅத் மட்டுமே தொழ வைக்கச் செய்ய முடியும். அரபி படித்த பண்டிதர்கள் இத்தி பாவுக்கும், இக்திதாவுக்கும் உள்ள வேறு பாடு தெரியாமல் பிதற்றினால் எங்கே போய் முட்டிக் கொள்வது?

இந்த ஹதீஃதை ஆதாரமாகக் கொண்டு ´ர்க் செய்யும் இமாமை அகற்றிவிட்டு ´ர்க் செய்யாத இமாமை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டாலும் பாராட்டலாம். அதற்குக் கையாலாகதவர்கள் காலங்கால மாக இருந்து வரும் ´ர்க் செய்யும் இமாம் பின்னால் தொழுவது கூடாது என்று ஃபத்வா கொடுத்து ஊரை இரண்டாக்கு கிறவர்கள், பெரும் பாவிகளாக மட்டுமே இருக்க முடியும். எனவே, இந்த ஹதீஃதில் அவர்களது கூற்றுக்கு ஆதாரமானதல்ல. அந்தத் தீய தலைவர் அமீர் கூட குர்ஆன், ஹதீதுக்கு மாற்றமாக உத்திரவிட்டால் அதற்குப் பணியக் கூடாதே தவிர தொழுகை போன்ற குர்ஆன், ஹதீதுக்கு உட்பட்டு கட் டளையிட்டால் அதற்கு அடிபணிந்தே ஆக வேண்டும். இதுவே முஃமின்களின் பண்பாடு என்பதையும் இங்கு சுட்டிக்காட் டக் கடமைப்பட்டுள்ளோம்.

அடுத்து “”முஃமின்களை விட்டு விட்டு காஃபிர்களை தலைவர்களாக்க வேண்டாம்” என்ற இறைச் சட்டத்தைக் காட்டி ´ர்க் இல்லை. இமாம் பின்னால் தொழக்கூடாது என்று ஃபத்வாவை கொடுக்கின்றனர். முதலில் ஒரு பள்ளியில் தொழவைத்துக் கொண்டி ருக்கும் இமாமை காஃபிர் என்று கூறுவது 42:21 வசனப்படி இவர்களையே காஃபிராக் கும் ஃபத்வா என்பதை முன்பே விளக்கி விட்டோம். “”ஒரு முஸ்லிம் இன் னொரு முஸ்லிமை காஃபிர் என்று கூறினால் இருவரில் ஒருவர் காஃபிராகி விடுகிறார்” என்ற நபிமொழியும் இதையே ஊர்ஜிதம் செய்கிறது. ´ர்க் செய்யும் இமாம் முஷ்ரிக் என்பது எங்களுக்கு மிக உறுதியாகத் தெரி யும். அதனால்தான் அவ்வாறு ஃபத்வா கொடுக்கிறோம் என்று இவர்கள் சொன் னால், நபி(ஸல்) அவர்களைவிட இவர்கள் ஞானமிக்கவர்கள் மறைவானவற்றை அறிந் தவர்கள் என்பதுதான் அதன் பொருளாகும். காரணம் 31:23ல் நபிக்கே இருதயங்களில் உள்ளவை தெரியாது; அல்லாஹ் மட்டுமே அறி வான் என்று அல்லாஹ் கூறியிருப்ப தற்கு முரணாக இவர்களுக்கும் இருதயங் களில் உள்ளவை தெரியும் என்று வாதிடு கிறார்கள். இன்னொரு கோணத்தில் சொன் னால் அல்லாஹ்வுக்குரிய ஞானம் தங்களுக் கும் இருக்கிறது என்று வாதிடுவதாகும். இவர்கள் எங்கே போய்க் கொண்டிருக் கிறார்கள்? என்பதை உணர்வார்களாக.

அதேபோல் “”உங்களில் சிறந்தவர் இமாமத் செய்யட்டும்” என்ற ஹதீஃதை ஆதாரம் காட்டி ´ர்க் செய்யும் இமாம் பின்னால் தொழக்கூடாது என்று ஃபத்வா கொடுக்கிறார்கள். இதிலும் தவறே செய்கி றார்கள். புதிதாக ஒருவரை இமாமாக நியமனம் செய்தால், அல்லது ஒருசிலர் எங்கே யாவது ஜமாஅத்தாக தொழ நேரிட்டால் எப்படிப்பட்டவர் இமாமாக நிற்கத் தகுதி யுள்ளவர் என்பதை இந்த ஹதீஃத் தெளிவுபடுத்துகிறதே அல்லாமல், ஏற்கனவே ஒரு பள்ளியில் இமாமாக நியமனம் பெற்று வழ மையாக தொழவைத்துக் கொண்டிருக்கும் இமாமுக்குப் பின்னால் தொழுவது பற்றிய சட்டம் சொல்வதற்குரிய ஹதீஃத் அல்ல இது. இங்கும் சம்பந்தமில்லாத ஒரு ஹதீஃதை சம்பந்தமில்லாத ஒரு இடத்தில் பொருத்தப் பார்க்கிறார்கள்.

இப்படித்தான் அவர்கள் எடுத்து வைக்கும் குர்ஆன் வசனங்களாக இருக்கட்டும். ஹதீஃத்களாக இருக் கட்டும் அவை ஒரு பள்ளியில் நிரந்தரமாக இமாமாக நியமிக்கப்பட்டு வழமையாக தொழவைத்துக் கொண்டிருக்கும் இமாமை பின்பற்றித் தொழுவது சம்பந்தப்பட்டதாக இருக்காது. புதிதாக ஒரு இமாமையோ அல்லது அமீரையோ நியமனம் செய்வது பற்றியதாக இருக்கும். அல்லது அந்த சமயத்தில் ஜமாஅத்தாக தொழுவதற்கு எப்படிப்பட்ட தகுதியுள்ளவரை இமாமாக ஏற்படுத்தித் தொழுது கொள்ளலாம் என் பதை தெளிவுபடுத்தும் ஹதீத்களாக மட்டுமே இருக்கும். சம்பந்தமே இல்லாத ´ர்க் செய்யும் இமாம் பின்னால் தொழுவது பற்றிய சட்டத்தில் நுழைத்து பெருங்குழப் பத்தை ஏற்படுத்தி உணர்வுக்கு அடிமை யாகும் இளம் இரத்தங்களை கொதிப் படையச் செய்து ஊரை இரண்டாக்கி தனிப்பள்ளிக் கட்டி ஆதிக்கம் செலுத்த விரும்புகிறவர்கள் மட்டுமே இப்படி குர்ஆன், ஹதீஃதை திரித்து சட்டம் சொல்ல முடியும். அல்லாஹ்வுக்கு உண்மையிலேயே அஞ்சுபவர்கள் சமுதாயத்தைப் பிளவுபடுத் தும் இந்த கொடுஞ் செயலை ஒருபோதும் செய்ய முற்படமாட்டார்கள்.

பரம்பரைப் பள்ளிகளிலுள்ள பழமைவாதிகளான நிர்வாகிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் என்னதான் கடுமையான முறையில் நடந்து கொண்டாலும் பள்ளிக்கு வரவிடாமல் அடித்துத் துரத்தினாலும், அடித்தாலும், உதைத்தாலும் அவற்றைப் பொறுமையுடன் சகித்துக் கொண்டு ஊர் ஒற்றுமைக்குப் பங்கம் வராமல் பார்த்துக் கொள்வார்களே அல்லாமல், ஊரை இரண்டாக்கத் துணிய மாட்டார்கள்.

இவர்களது ஆரம்ப நிலையை நினைத் துப் பாருங்கள், ஊர் ஊருக்கு இரண்டு பேர், மூன்று பேர் இருக்கும் போது ஜமா அத்தார் என்னதான் தொந்தரவு கொடுத் தாலும், அடித்தாலும், உதைத்தாலும் அவை அனைத்தையும் பொறுமையுடன் சகித்துக் கொண்டு அந்தப் பரம்பரைப் பள்ளிகளில் “”எங்களுக்கும் உரிமை இருக்கிறது; எங் களை நீங்கள் அடித்து விரட்டினாலும் நாங்கள் இங்கு வந்து தொழத்தான் செய் வோம்” என்றுதான் பிடிவாதமாகத் தொழுது கொண்டிருந்தார்கள். ஆனால் இவர்களுக்கென்று ஒரு கூட்டம் கூடிய பின்னரே அதாவது இவர்களுக்கென்று ஆதிக்கம் செலுத்தவும், தலைமைத்தனத் திற்கு ஆசைப்பட்டும் ´ர்க் செய்யும் இமாம் பின்னால் தொழக்கூடாது என்ற ஃபத்வாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஊர்களைப் பிளவுபடுத்தினார்கள். அப் போது ஒன்றுபட்டிருந்தவர்களே இப் போது மீண்டும் பிளவுபட்டு அந்தப் போட் டிப் பள்ளிகளில் இரண்டு சாராருமே ஆதிக் கம் செலுத்தும் பேராசையில் சண்டையிட் டுக் கொள்கிறார்கள். கோர்ட்டு படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்து அவர்களின் ஆதிக்க வெறியும், தலைமைத்தன ஆசையும் உள்ளங்கை நெல் லிக்கனி போல் குன்றிலிட்ட தீபம் போல் மற்றவர்களுக்கு வெட்ட வெளிச்சமாகிக் கொண்டிருக்கிறது.

பரம்பரைப் பள்ளிகளிலுள்ள நிரந்தர இமாம்கள் ´ர்க் செய்கிறார்கள். அவர்கள் பின்னால் தொழக்கூடாது என்று ஃபத்வா கொடுத்து சமுதாயத்தைப் பிளவுபடுத்து வது எவ்வளவு பெரிய ஹிமாலயக் குற்றம் என்பதைத் தெளிவாக விளக்கிவிட்டோம். இதன் பின்னரும் அது வி­யத்தில் வெறி பிடித்தவர்களாக இருந்தால் அவர்கள் திருந்த துஆ செய்கிறோம். இன்றைய இந்திய சூழ்நிலை இங்கு முஸ்லிம்கள் வேரோடு வேரடி மண்ணோடு அழிக்கப் படுவதற்குரிய அனைத்து வேலைகளும் அரசு தரப்பிலும், மேல் அதிகாரிகள் தரப்பிலும் கனகச்சிதமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் முஸ்லிம்களில் ஒரு சாரார் மற்ற முஸ்லிம்களை “முஷ்ரிக்’ என்று ஃபத்வா கொடுப்பவர்களாகவும், அவர்கள் பின்னால் தொழுவதை தடுப்ப வர்களாகவும், அடுத்த சாரார் இவர்களைப் பள்ளிக்கு வந்து தொழுவதை தடுப்பவர்களாகவும், திருமண ரிஜிஸ்டர் தரமாட்டோம். கப்ரஸ்தானில் மையித்தை அடக்க விடமாட்டோம் என்று தடுப்பவர்களாகவும் அதன் மூலம் ரகளைகள் ஏற்பட்டு காவல்துறை தலையிட்டு மேலும் முஸ்லிம்களை பலகீனப்படுத்தி அவர்களை அழித் தொழிக்க முஸ்லிம்களே வழிவகுத்துக் கொடுக்கும் அக்கிரமங்கள் நடைபெறாமல், அவரவர்களின் அமல்களுக்கேற்ப அல்லாஹ் மறுமையில் கூலி தருவான் தீர்ப்பளிப்பான், இவ்வுலகில் நாம் அனைவரும் முஸ்லிம்கள் என்று ஒன்றுபடுவோம் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஒன்றுபட முன் வருவார்களாக. இல்லை என்றால் அவர்களது சந்ததிகள் இந்திய திருநாட்டில் முஸ் லிம்களாக வாழும் வாய்ப்பை இழக்க நேரி டும் என்பதை மிக மனவேதனையுடன் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

Previous post:

Next post: