ஜோடி…!!! 

in 2026 ஏப்ரல்

ஜோடி…!!! 

A. சையத் இல்யாஸ்

பொதுவாகஜோடிஎன்பதற்கு உலகில் இரண்டு நபர்கள், இரண்டு பொருட்கள் இணைந்து இருப்பதைஜோடிஎன்பார்கள்.

உதாரணம் : 

இறைவனும்ஜோடியைப் பற்றி இறைநூல்  மூலம்  கூறியிருப்பது; 

அவனே பூமியை விரித்தான், மலைகளையும், நதிகளையும் அதில் அமைத்தான். ஒவ்வொரு கனி வகைகளிலும் ஒருஜோடியை அமைத்தான். இரவைப் பகலால் மூடுகிறான். சிந்திக்கும் மக்களுக்கு இதில்  பல  சான்றுகள்  உள்ளன.”  (13:3)

மேலும், “பூமி முளைக்கச் செய்வதிலிருந்தும், அவர்களிலிருந்தும், அவர்கள் அறியாத வற்றிலிருந்தும்ஜோடிகள் அனைத்தையும் உருவாக்கியவன் தூயவன்” (36:36) என்பதாக இறைநூலில் இறைவன் குறிப்பிடுகிறான்.

இதில் சிந்தித்துப் படிப்பினை பெறுவதற்கு என்ன இருக்கிறது? எல்லோருக்கும் தெரிந்தது தானே என பலரும் நினைக்கலாம்.

ஆம்! எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆயினும்சிந்தித்து படிப்பினை பெறுவதற்குஎன்று  இறைவன்  கூற  காரணம் என்ன?

நிச்சயமாக இறைநூலில்(குர்ஆனில்) எங்கெல்லாம்சிந்தித்து படிப்பினை பெறுவதற்காகஎன்று கூறப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் பல்வேறு விளக்கங்கள் மறைமுகமாகவும், சிந்திப்பவர்களுக்கே அவைகள் விளங்கும் என்ற பொருளில் கூறப்பட்டவையாகும்.

உதாரணம் : வசனம் 13:3ல்ஒவ்வொரு கனி வகைகளிலும்ஜோடியை அமைத்தான்என்று இறைநூலில் இறைவன் கூறுகிறான்.

உயிரினங்களில்ஜோடிஇருக்கும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. ஆனால் கனி வர்க்கங்களில்ஜோடிஇருக்குமா என்பது குர்ஆன் அருளப்பட்ட 1447 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களுக்கு தெரியுமா? என்றால் தெரியாது.

அனைத்து கனி வர்க்கங்களிலும்ஜோடிஇருக்கு என்பது அறிவியல் வளர்ச்சி மூலம் சிந்தித்தவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறைவாக்கு ஒருபோதும்  பொய்யாகாது.

மேலும், மற்றொரு வசனத்தில் (36:36)ல்;

அவர்கள் அறியாதவற்றிலிருந்தும்ஜோடிகள் அனைத்தையும் உருவாக்கியவன் தூயவன்என்று இறைநூலில் இறைவன்  கூறுகிறான்.

அவனுடைய சான்றுகளில் இதுவும் ஒன்றாகும். அவன் உங்களுகாக உங்கள் (மனித) இனத்திலிருந்தே மனைவியரைப் படைத்தான். நீங்கள் அவர்களிடம் அமைதி பெற வேண்டும் என்பதற்காக! மேலும் உங்களிடையே அன்பையும் கருணையும் தோற்றுவித் தான். நிச்சயமாக சிந்திக்கும் மக்களுக்கு இதில் நிறைய சான்றுகள்  உள்ளன. (.கு.30:21)

மேற்கண்ட வசனம் மூலம் மனித வாழ்க்கையில்ஜோடிஎன்பது முக்கியமான ஒன்றாகும். “‘ஒருவருக்கொருவர் (கணவன் மனைவி) நேர்மையான உறவுகள் இருந்தால் மனதளவில் பெரும் அமைதி கிடைக்கும், ஆதரவும் கிடைக்கும். கஷ்ட நேரங்களில்  துணையாகவும்  இருக்கும்.”

அதாவது தனியாக இருப்பதற்குப் பதிலாக வாழ்க்கையில் பகிர்ந்துகொள்ள துணையாக ஒருவர் இருப்பது மன அமைதியை தரும். எனவேதான் இறைவன் மேற்கண்டவாறு  கூறியுள்ளான்.

அது  மட்டுமல்ல,

குடும்ப பொறுப்புக்களை (வேலை, செலவுகள்) பகிர்ந்து கொள்ளலாம். சில சின்ன சின்ன விசயங்கள் கூட மகிழ்ச்சியை  இரட்டிப்பாகும். இருவரும் கலந்து ஆலோசித்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும். இன்னும் ஏராளமான நன்மைகள்ஜோடிகள் மூலம் உள்ளன. எனவேதான் சிந்திக்கும் மக்களுக்கு இதில் சான்றுகள் உள்ளன என்பதாக இறை நூலில்  கூறப்பட்டுள்ளது.

ரூஹ் (SOUL) ஆன்மா…!!

A. நஜ்முதீன்

(நபியே!) ரூஹைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்.

அதற்கு நீர் கூறும் :

அது எனது இறைவனின் கட்டளையால் ஏற்பட்டது. அதைப் பற்றிய சொற்ப ஞானமே தவிர உங்களுக்கு கொடுக்கப்படவில்லை. ஆதலால், அதன் நுட்பங்களை நீங்கள் அறிந்து கொள்ள முடியாது.” என்று கூறுவீராக.

இந்த உலகத்தில் பிறந்து, வாழ்ந்து மறைந்து சென்றவர்கள் வாழ்கின்றவர்கள் அனைவருக்கும்ரூஹ்‘ (ஆன்மா /உயிர்) என ஒன்று உண்டு.

அதாவது மனிதன் என்பவன் வெறும் உடல் மட்டுமல்ல. ஏக இறைவனால் மனித உடலில் ஊதப்பட்ட ஒரு பகுதிரூஹ்ஆகும். ஆனால் அது மறைக்கப்பட்ட ஒரு மாபெரும் ரகசியமாகும்.

அதாவதுரூஹ்என்பதை மனித அறிவால் கண்டுபிடிக்க முடியாத ஒரு ரகசியமாகும்.  (DIVINE SECRET)

முதல் மனிதரான ஆதம்(அலை) அவர்களை படைத்து பின்பு அந்த முதல் மனிதர் மூலம் உலகில் தோன்றி, மறைகின்ற அனைத்து மனிதர்களுக்கும் ஊதப்பட்டதாகும். (பார்க்க வசனம்: 7:172,173)

ரூஹ்இருக்கும் வரை மட்டுமே உடலுக்கு மதிப்பு. “ரூஹ்வெளியேறி விட்டால் உடல் வெறும் ஜடம்/பிணம்/மையத்  ஆகும்.

எப்படிப்பட்ட தவறை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்வேன். ஆனால் பொய் சொன்னால் மட்டும் என்னால்  தாங்கிக்கவே  முடியாது         

இவ்வாறு கூறுவதை அடிக்கடி கேட்டிருக்கலாம் ஏன்? நாமே கூட சொல்லியிருக்கலாம்.

ஆனால் உண்மை என்னவென்றால்;

நான் பொய்யே சொல்ல மாட்டேன்என்பதுதான் உலகில் நம்பர் 1 பொய். அதுபோலரூஹ்யைப் பற்றி நான் நன்கு அறிவேன் என்று யாராவது சொன்னால் அதைவிட உலகில்  பொய்  வேறு  ஒன்றுமில்லை.

மனிதர்களுக்குரூஹ்ஏன் வழங்கப்பட்டது?

உங்களில் யார் செயல்களில் சிறந்தவர் என்பதை சோதிப்பதற்காகவே அவன் மரணத்தையும், வாழ்க்கையையும் (பிறப்பு இறப்பு) படைத்தான்.” (அல்குர்ஆன் 67:2) என்று படைத்த ரப்பில்  ஆலமின்  கூறியுள்ளான்.

அதாவது உலக ஆசைக்கும், உலகமே சதம் என அடிமையாகி விடக்கூடாது என்பதும் சில சோதனைகள் மூலம் சுத்தப்படுத்துவதற்காகவுமாகும்.

அதாவது தங்கத்தை சுத்தப்படுத்த நெருப்பில் சுடுவது போல் சோதனையில் நம்முடையரூஹ்‘ (REFINE) சுத்தமாகும்.

இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், “ரூஹ்நம் உடலுடன் தொற்றிக் கொண்டிருக் கின்ற ஒரு உணர்வு.

 

Previous post:

Next post: