அறிந்து கொள்வோம்!

in 2026 ஜூன்

அறிந்து கொள்வோம்!

ரஹிமுத்தீன்,  குண்டூர்

1. அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள உலகை ஆண்ட நல்ல மன்னர்கள் யார்?

1. ஸுலைமான்(அலை) 2:102, 

2. துல்கர்னைன். 18:83

2. அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள இரண்டு கெட்ட மன்னர்கள் யார்? யார்? 

1. ஃபிர்அவ்ன். 7:103,   2. நம்ரூத்

3. நபி(ஸல்) அவர்கள் காலத்தின் ரோமாபுரிச் அரசனின்  பெயர்  என்ன?

யஹர்குலிஸ்.  புகாரி 7

4. இறைச்செய்தி எவ்வாறு வருகிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

மணிஓசைப்போன்று.    புகாரி: 2

5. பூமி எனக்கு தொழுகையிடமாகவும், தயம்மம் செய்யத் தக்க தூய்மையானதாக வும் ஆக்கப்பட்டுள்ளதாக கூறிய நபி யார்?

முஹம்மத்(ஸல்) அவர்கள். தப்ஸீர் இப்னு கஸீர். 3:149-15

6. நபி(ஸல்) அவர்கள் மதினாவில் இருக்கும் போது பைத்துல் மக்திஸை நோக்கி தொழுத  காலங்கள்  எத்தனை?

16 மாதங்கள்.        நூல்: சுனன் நஸயீ : 742

7. நபி(ஸல்) அவர்கள் வாகனத்தின் மீது அமர்ந்து அது செல்லும் திசை நோக்கி தொழுவது  எந்த  தொழுகை?

நஃபில், சுனன் நஸயீ : 744

8. தொழுபவரின் சுத்ராவின் (தடுப்பு) தரம் எப்படிப்பட்டது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

ஒட்டகத்தின்  திமில்  உயரம்  போன்றது.  சுனைன் நஸயீ : 747

9. சிறந்த முஸ்லிம் யார் என நபி(ஸல்) அவர் கள்  கூறினார்கள்?

நாவிலிருந்தும், கரத்திலிருந்தும் பிறருக்கு பாதுகாப்பு  அளிப்பவர்.   புகாரி : 11

10. நபி(ஸல்) அவர்களிடத்தில் வெண்மை யான ஆடையுடனும், கருமையான தலை முடியுடன் வந்து இஸ்லாம் பற்றி எனக்குச் சொல்லுங்கள் என்று கூறியவர் யார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஜிப்ரில்(அலை).   முஸ்லிம் : 82

11. லிஆன் என்றால் என்ன என நபி(ஸல்) அவர்கள்  கூறினார்கள்?

சாபப்பிரமாணம். ஸஹீஹ் முஸ்லிம்:1492

12. கஸாமா என்றால் என்ன என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

சத்தியம்.   முஸ்லிம் : 1670

13. கொசுவின் இறக்கை அளவுக்கு கூட எடை இல்லாதவர்கள் பற்றி நபி(ஸல்) அவர்கள்  கூறிய  விளக்கம்  என்ன?

எந்தமதிப்பும்இல்லாதவர். முஸ்லிம்:2785

14. என் சமுதாயத்தில் உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பிய நபர் யார் என நபி(ஸல்)  அவர்கள்  கூறினார்கள்?

அபூபக்கர்(ரழி) அவர்கள்.   முஸ்லிம்:2383

15. ஸக்கத்துல் அஃமா என்றால் என்ன?

கடும்வெப்பம்.  முஸ்னத் அஹ்மத். 391

16. அஸ்ஹாபுஸ் ஸுஃப்பா என்றால் என்ன?

திண்ணைத்தோழர்கள்.  முஸ்னது அஹ்மத் : 1704

17. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஸம்ஸம் நீரை நின்று கொண்டு குடித்தார் கள்  என  கூறிய  நபி  தோழர் யார்?

இப்னுஅப்பாஸ்(ரழி)அவர்கள். முஸ்னத் அஹ்மத் : 1838

18. நபி(ஸல்) அவர்கள் பயணம் மேற்கொண் டால் நான்கு ரக்அத் தொழுகைகளை எவ்வாறு தொழுவார்கள்?

இரண்டுரக்அத்தாகசுருக்கிதொழுவார்கள். இப்னு அப்பாஸ்(ரழி) ஜமாஉத் திர்மிதி : 549

19. இஷா தொழுகைக்கு முன் உறங்குவதை நபி(ஸல்) அவர்கள் வெறுக்கத்தக்கது என கூறினார்கள் என யார் அறிவிக்கிறார்கள்?

ஸயீத்  இப்னு  முஸய்யப்.  முஅத்தா மாலிக். 260

20. மறுமை நாளில் எதிர்பார்க்கும் நிகழ்வு களில் ஒன்று எது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

தகுதியற்றவர்களிடம்பொறுப்புஒப்படைப்பது.      ஸஹீஹுல் புகாரி: 59

Previous post:

Next post: