ஏணி வைத்து வானம் ஏறு: குர்ஆன் காட்டும் விண்வெளி விஞ்ஞானமும், மனிதன் எல்லையும்!
எஸ். ஹலரத் அலி
1447 ஆண்டுகளுக்கு முன் இறங்கிய இரண்டு இறை வசனங்கள். இன்று மனிதன் ராக்கெட்டில் விண்வெளி ஏறு வதை அச்சு அசலாக படம் பிடிக்கின்றன. அது வெறும் தற்செயலா? அல்லது படைத்தவன் மனித அறிவின் எல்லையை முன்கூட்டியே அறிந்து வைத்த சவாலா?
1. இரண்டு வசனங்கள், ஒரே சவால்:
குர்ஆன் 38:10 : அல்லது வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அவர்களுக்கு உரியதா? அவ்வாறாயின் அவர்கள் ஏணிகளில் ஏறட்டும்!
குர்ஆன் 52:38: அல்லது அவர்களிடம் வானத்திற்கு ஏறி செவிமடுக்க ஏணி இருக்கிறதா? அவ்வாறாயின் அவர்களின் செவி யுறுபவன் தெளிவான ஆதாரத்தை கொண்டுவரட்டும்.
7ஆம் நூற்றாண்டு அரேபிய பாலைவனத்தில் வாழ்ந்த ஒரு சமூகத்திடம் “வானத்திற்கு ஏணி வைத்து ஏறு” என்று இறைவன் சவால் விடுகிறான். ஒட்டகமும், கூடாரமும் மட்டுமே அறிந்த அந்த மக்க ளுக்கு இது முடியாத காரியம். கேலிக்குரிய கற்பனை.
ஆனால் இறைவன் வீணான உதாரணம் கூறுபவன் அல்ல. மனித அறிவுக்கு எட்டக்கூடிய அல்லது ஒரு நாள் எட்டும் தகுதியுடைய உதாரணத்தையே அவன் கூறுவான். மனிதனால் இயலாததை இறைவன் உதாரணமாக கூறமாட்டான். இதுவே குர்ஆனின் அடிப்படை கோட்பாடு.
இமாம் ராஸி இப்ன் கதீர்(ரஹ்) போன்ற விரிவுரையாளர்கள் கூறுவது :
இறைவன் வீணான உதாரணம் கூறமாட்டான் அவன் கூறும். உதாரணம் மனித அறிவுக்கு எட்டக்கூடும். அல்லது எட்டும் தகுதி உடையது.
உதாரணம் : “கொசுவை உதாரணம் காட்ட அல்லாஹ் வெட்கப்படமாட்டான். 2:26 ஏனெனில் கொசு என்பது மனிதனுக்கு தெரிந்த உயிர். நூஹ் நபியின் கப்பல் 11:37. கப்பல் கட்டுவது மனிதனால் முடியும்.
ஒட்டகம் எப்படி படைக்கப்பட்டது என்று பாருங்கள். 88:17
ஒட்டகம் கண்ணால் காணக்கூடியது எனவே, “ஏணி வைத்து வானம் ஏறுதல்” என்பது ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த மனிதர்களுக்கு இயலாத காரியமே! என்றாலும் அவனால் கற்பனை செய்ய முடியும் காரியமே! இன்று அது மனிதனால் நிஜமாக முடியும் காரியமாகிவிட்டது.
2. கற்பனை முதல் கனவு வரை : மனிதனின் விண்ணேற்றம்!
20ம் நூற்றாண்டு வரை “வானம்‘ என் பது மனிதனுக்கு கவிதை. 1961ல் யூரி ககாரின் “பூமி நீலமாக இருக்கிறது‘ என்றார். 1969ல் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்தார்.
இன்று 2026ல் நாம் எங்கே நிற்கிறோம்?
1. ராக்கெட்–வானத்திற்கு நெருப்பு ஏணி.
2. சர்வதேச விண்வெளி நிலையம்– வானத்தில் மனிதன் கட்டிய கூடாரம்.
3. ஜப்பானின் றீஸ்ரீழிஉe சியிeஸழிமிலிr திட்டம் -2050ல் பூமியில் இருந்து 36,000 கி.மீ. உயரத்திற்கு நேரடியாக “ஏணி‘ கேபிள் வழியாக எஸ்க லேட்டர் போல விண்வெளிக்கு பயணம்.
மனிதன் இறைவன் சொன்ன “சுல்லம் –ஏணி‘யை உண்மையிலேயே செய்து காட்டிவிட்டான். 1447 வருட சவாலை ஏற்றுக்கொண்டான்.
3. ஏறினால் என்ன கிடைத்தது? தோல்வியா வெற்றியா?
மனிதன் வானம் ஏறினான். ஆனால் அங்கே அவன் இறைவனை வெல்ல வில்லை. மாறாக தானே தோற்றான்.
விண்வெளி வீரர்கள் கண்ட காட்சி.
1. Pழியிe யயிற்e ம்லிமி : வாயேஜர் 1 விண்கலம் 6 பில்லியன் கிமீ. தொவைவில் இருந்து பூமியை படம் பிடித்தது. ஒரு புள்ளி அந்த புள்ளியில் தான் நம் சண்டை, அரசியல், அகங்காரம் எல்லாம்.
2. 93 பில்லியன் ஒளி ஆண்டு: நாம் காணும் பிரபஞ்சத்தின் அகலம். மனிதனின் றீஸ்ரீழிஉe சியிeஸழிமிலிr 36,00 கி.மீ. கடலில் ஒரு துளி.
3. நேரத்தின் பிரம்மாண்டம் : பிரபஞ்ச வயது 13,8 பில்லியன் ஆண்டு. மனித நாகரிகம் 10,000 ஆண்டு. நம் வாழ்க்கை 70- 100 ஆண்டு.
ஏணி வைத்து ஏறிய மனிதன் கடைசியில் சொன்னது :
“சுப்ஹானல்லாஹ்–இறைவன் தூயவன் விண்வெளியில் இருந்து பூமியை பார்த்த பிறகு நாத்திகர்களாக இருக்க முடியாது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
இதுதான் 38:10 வசனத்தின் ஹிக்மத்.
“ஏறி பார். ஏறிய பிறகும் நீ தோற்றவன் தான்” என்ற இறைவனின் வார்த்தை நிறைவேறியது.
4. விண்வெளி ஆய்வு :
விஞ்ஞானமா? வணக்கமா?
குர்ஆன் 3:190ல் சொல்கிறது.
வானங்கள் பூமி படைப்பிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடை யோருக்கு அத்தாட்சிகள் உள்ளன.
விண்வெளி ஆய்வு மூன்று வியங்களை தருகிறது :
1. அறிவு : புதிய கோள்கள், புதிய மூலகங்கள் :
2. பணிவு : பிரபஞ்சத்தின் முன் மனிதன் எவ்வளவு சிறியவன் என்ற ஞானம்.
3. நன்றி : இந்த பூமியை வாழத்தகுந்த தாக படைத்த இறைவனுக்கு நன்றி செலுத் தும் மனநிலை.
அப்படி பார்த்தால், ராக்கெட் செய் யும் விஞ்ஞானியும், தொலைநோக்கியில் பார்க்கும் வானியலாளரும் இறைவனை தொழுகிறார்கள். அவர்கள் ஆய்வகம் தான் அவர்களின் பள்ளிவாசல்.
5. முடிவுரை : ஏணியின் முடிவில் என்ன இருக்கிறது?
ஜப்பான் றீஸ்ரீழிஉe சியிeஸழிமிலிr கட்டி முடித்தா லும், மனிதன் செவ்வாயில் குடியேறினா லும் 52:38 வசனம் பொய்யாகாது.
ஏனெனில் வசனத்தின் கேள்வி “உன் னால் ஏற முடியுமா?’ என்பதல்ல. “ஏறி என்ன செய்வாய்? என் ஆட்சியை பறிப் பாயா?’ என்பதே.
மனிதன் ஏறலாம், ஆராயலாம். ஆனால் ஒரு கொசுவின் இறக்கையை கூட அவனால் படைக்க முடியாது 22:73. ஒரு வினாடி முன்னோ பின்னோ சூரியனை உதிக்க வைக்க முடியாது.
எனவே விண்வெளி ஏணி மனிதனின் வெற்றி அல்ல. அது இறைவனின் வல்ல மைக்கு மனிதன் வைக்கும் சாட்சி.
ஏணியின் கடைசி படியில் இருப்பது இறைவனின் சிம்மாசனம் அல்ல. மனித னின் மண்டியிடல். அந்த மண்டியிடல் தான் உண்மையான விண்ணேற்றம்.
30:10, 52:38 வசனங்களை வைத்து பார்க்கும்போது, விண்வெளி ஆய்வு என்பது வெறும் அறிவியல் இல்லை. அது ஒரு ஆன்மீக பயணமும் கூட.
“ஏறி பார்த்த பிறகு பணிந்து விடு” என்ற செய்திதான் அதன் சாரம்.
வானத்தை அண்ணாந்து பார்க்கும் ஒவ்வொரு முறையும் அந்த ஏணியை நினைத்துக் கொள்ளுங்கள். நாம் ஏறலாம். ஆனால் படைத்தவனை மிஞ்ச முடியாது. அந்த உணர்வே போதும்.