ஆழ்ந்த அறிவில்லையேல் கண்ணும் சில வேளை பொய் சொல்லும்…

in 2026 ஜூன்

ஆழ்ந்த அறிவில்லையேல் கண்ணும் சில வேளை பொய் சொல்லும்

எஸ்.எம்.அமீர், இலங்கை

மே  2026  தொடர்ச்சி

அன்றியும், அக்கடலைப் பிளவுள்ளதாகவே விட்டுச் செல்லும், நிச்சயமாக அவர்கள் (அதில்) மூழ்கடிக்கப்படவேண்டிய படையினராகவே இருக்கின்றார்கள். (அல்குர்ஆன் 44:24) என்று உயர்ந்தோனாகிய அல்லாஹ்; இறைத்தூதர் மூஸா(அலை) அவர்களுக்குக் கட்டளையிட் டான். அதனால்தான் கடல் பிளவுபட்ட நிலையிலேயே உலர்ந்த பாதையாக இருக்க கடலினை மூஸா(அலை) அவர்கள் விட்டுச் சென்றார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி), முஜாஹித் (ரஹ்), தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 8, பக்கம் 321-326)

கடல் பிளந்து கொண்ட கட்டாந்தரையின் தெருவினிலே கடந்து சென்ற இஸ்ரவேலர் களையும் இறைத்தூதர் மூஸா(அலை), ஹாரீன்(அலை) அவர்களையும், விசாலமான ஏழு பாதைகளையும்கண்ணால்கண்ட ஃபிர்அவ்னும், அவனுடைய படையினரும், ஒருவர் விடாமல் எல்லோரும் கடலுக்குள் இறங்கினார்கள். அப்போது கடல் அவர்கள் அனைவரையும் மூடிக்கொண்டது அன்றைய தினத்தை விட அதிகமானதொரு பெரும் கூட்டம் ஒரு போதும் காணப்பட்டதேயி ல்லை. அவர்கள் அனைவரதுகண்களும்பொய்தான் சொன்னது. பிறகு அவர்களுக்காக வாகனமும் (அழவில்லை) பூமியும், அழவில்லை. (பாவமீட்சி தேடிடச்) சிறிது அவகாசம் கூட அவர்களுக்கு அளிக்கப்படவில்லை. (44:29,24,20:78,10:90, 2:50, இப்னு அப்பாஸ்(ரழி), அனஸ்(ரழி), யஸீத் பின் ஜுபைர் (ரழி), அலீ(ரழி), உப்பாதா பின் அப்தில்லாஹ் (ரஹ்), கத்தாதா(ரஹ்), முஜாஹித்(ரஹ்), இப்னு அபீஹாத்தம்(ரஹ்), தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 8, பக்கம் 321-331)

இறைத்தூதரான ஈஸா(அலை) அவர்களின் “”கண்ணும்தான் பொய் சொன்னது:

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இறைத்தூதரான, மர்யமின் மகன் ஈசா(அலை) அவர்கள், (ஒருநாள்) ஒருவர் திருடிக் கொண்டிருப்பதைக் (கண்ணால்) கண்டார்கள். அவனிடம், “நீ திருடினாயாஎன்று கேட்டார்கள். அதற்கு அவன், “இல்லை, எவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லையோ அவன் மீதாணையாக! (நான் திருடவே இல்லை) என்று பதிலளித்தான். உடனே ஈசா(அலை) அவர்கள், “அல்லாஹ்வின் மீது நான் நம்பிக்கை கொண்டு, எனதுகண்ணைநான்) நம்ப மறுத்துவிட்டேன்என்று கூறினார்கள். (அபூ ஹுரைரா (ரழி), அறிவித்தார், புகாரி : 3444இன் சிறு குறிப்பு : 123ஆவது)

உண்மையிலேயே ஆரம்பத்தில் (தமது கண்ணால் பார்த்த வேளையில்) அந்த மனிதர் திருடியதாக(த்தான்) இறைத்தூதர் ஈஸா(அலை) அவர்கள் கருதினார்கள். அவர்தான் திருடவில்லை என்று ஏகனாகிய அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சொன்னவுடன் தனது கருத்தை ஈஸா(அலை) அவர்கள் மாற்றிக் கொண்டார்கள். ஏனெனில் அந்தப் பொருள் அந்த மனிதருக்கே சொந்தமானதாக இருந்து ஏதோ ஒரு காரணத்திற்காக அதனை அவர் ஒளித்து வைத்து (விட்டுப் பின்னர் வந்து) எடுத்திருக்கலாம். அதனைப் பார்த்த ஈஸா(அலை) அவர்கள், திருடுகிறார் என்று அவரை எண்ணியிருக்கலாம் அல்லது பிறருடைய பொருளாகவே அது இருந்து திருடவேண்டும் என்ற எண்ணமின்றி வேறு(நல்ல) நோக்கத்திற்காக அதனை அவர் எடுத்திருக்கலாம். எப்படியானாலும், நமது கண்ணால் பார்ப்பதோ, காதால் கேட்பதோ மட்டும் போதாது, தீர விசாரித்தே முடிவு செய்ய வேண்டும் என்பது இதிலிருந்து தெரிகிறது. (ஃபத்ஹுல் பாரீ, உம்தத்துல் காரீ, புகாரி 3444இன் சிறு குறிப்பு: 123ஆவது) இதனால் தான் எனதுகண்ணைநான் நம்ப மறுத்துவிட்டேன் என்று இறைத் தூதர் ஈஸா(அலை) அவர்கள் கூறினார்கள்.

சந்திரன் பிளவுபட்டதை பார்த்து இறை நிராகரிப்பாளர்களான மக்கா குறைகளின்கண்களும்பொய்தான் சொன்னது:

இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களது காலத்தில், அவர்கள் மக்காவைத் துறந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்வதற்கு ஐந்து ஆண்டு களுக்கு முன்னர், மக்கா வாழ்க்கையில் ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நபித் தோழர்களுடன் மினாவில் இருந்து கொண்டிருந்தபோது குறை´ இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர் களிடம், ஓர் அற்புதச் சான்றைக் காட்டும்படி கேட்டார்கள். ஆகவே, சந்திரன் (இரண்டாகப்) பிளவுபட்ட நிகழ்ச்சியைத் (தமது நபித்துவ உண்மைக்குச் சான்றாக) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காட்டினார்கள். அப்போது சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளவுபட்டது எந்த அளவுக்கு எனில் அவ்விரு துண்டுகளுக்கு இடையே ஹிரா மலையை மக்காவாசிகள் கண்டார்கள்.

உடனே நபி(ஸல்) அவர்கள்நீங்கள் சாட்சியாக இருங்கள்என்று (மக்களை நோக்கிக்) கூறினார்கள். (பிளவுபட்ட சந்திரனின்) ஒரு துண்டு இந்த மலையின் மீதும், அந்த(ப் பக்கமாக உள்ள) மலையின் மீது இன்னுமொரு துண்டும் இருந்தது. அதன் இரண்டு துண்டுகளை மக்கள் கண்கூடாகப் பார்த்தார்கள். அப்போதும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் யா அல்லாஹ் நீ சாட்சியாக இரு என்று கூறினார்கள். அப்போது இது அபூகபஷாவின் மகன் முஹம்மது எங்களுக்குச் சூனியம் செய்துவிட்டார் என்று இறை நிராகரிப்பாளர்களான குறைசிகள் கூறினார்கள். மேலும் கூறினார்கள் நமக்கு முஹம்மது நபி சூனியம் செய்தார் எனில் நிச்சயமாக மக்கள் அனைவருக்கும் சூனியம் செய்துவிட அவ ரால் முடியாது. எனவே;

தூரதேசங்களுக்குச் சென்ற உங்களுடைய பயணக் குழுவினர் என்ன செய்தியைக் கொண்டு வருகிறார்கள் என்று பாருங்கள். ஏனெனில் மக்கள் அனைவருக்கும் சூனியம் செய்துவிட நிச்சயமாக முஹம்மதால் முடியாது தானே என்று குறைசிகள் கூறிக் கொண்டார்கள். அப்போது ஒவ்வொரு திசையிலிருந்தும் பயணக் குழுவினர் வந்தார்கள். அவர்களும் நாங்கள் பார்த்தோம்! நாங்கள் பார்த்தோம்! சந்திரன் பிளவுண்டது என்றுதான் கூறினார்கள். ஆனாலும் குறைசியர்கள் நபியவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. இது குறித்தே (யுக முடிவு) நேரம் நெருங்கிவிட்டது. (அதன் அறிகுறியாகச்) சந்திரனும் பிளந்துவிட்டது. ஆனால் (அதனை ஏற்க மறுக்கும்) இவர்களோ (நபியின் தூதுத்துவம் மீதான) எந்த ஒரு சான்றைக் கண்டாலும் புறக்கணிக்கின்றார்கள். இது தொடர்ந்து நடைபெறக்கூடிய சூனியம்தான் என்றும் சொல்கிறார்கள். (எனும் குர்ஆன் வசனங்களின் விசயத்தில் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள் (54:1,2, 16:1, 21:1, அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரழி), அனஸ் பின் மாலிக்(ரழி), இப்னு அப்பாஸ்(ரழி), அலீ பின் அபீதாலிப்(ரழி), ஹுதைஃபா(ரழி), ஜுபைர் பின் முத்இம்(ரழி), இப்னு உமர்(ரழி), இப்னு ஜரீர்(ரஹ்), இப்னு ஜரீர்(ரஹ்), முஜாஹித்(ரஹ்) லைஸ்(ரஹ்), புகாரி: 4864, 4868, 3636-3638இன் அடிக்குறிப்பு 154ஆவது ஃபத்ஹுல் பாரீ, உம்தத்துல் காரீ, முஸ்லிம் 5398, திர்மிதி, பைஹகீ, அபூதாவூத், தஃப்ஸீர் தபரீ, தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 8, பக்கம் 792-801)

சந்திரன் பிளவுபட்டதைக் குறை´ இணைவைப்பாளர்களான மக்கத்துக் காஃபிர்கள் அவர்களது கண்களால் பார்த்தார்கள். ஆனாலும் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இது வழமை போன்ற சூனியமே என்றார்கள். காரணம் அவர்கள், அறிவுக் கண்கொண்டு, ஆய்வுக் கண்கொண்டு, சிந்தனைக் கண்கொண்டு, தூரநோக்குக் கண் கொண்டு பார்க்கவில்லை வெறும் பெருமைக் கண்கொண்டு மாத்திரமே பார்த்தார்கள். இதனால் அவர்களது கண்களும் பொய்தான் சொன்னது.

அவதூறு பரப்பியவர்களது கண்ணும் பொய் தான்  சொன்னது :

கற்பொழுக்கமுள்ள (பத்தினித்தனமான) பெண்கள் மீது (வீண்) பழி சுமத்தி, பிறகு (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களுக்கு நீங்கள் எண்பது சாட்டையடி வழங்குங்கள். (அத்துடன்) அவர்களின் சாட்சியத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். (ஏனெனில்) அவர்கள்தான் பதவிகள் ஆவார். (24:4) எனும் இவ்வசனம் அருளப்பெற்றதற்கான காரணம்.

தபூக் போரில் கலந்து கொள்ளாமல் இருந்து விட்டுப் பின்னர் பாவமன்னிப்பு வழங்கப்பட்ட மூவரில் ஒருவரான, ஹிலால் பின் உமய்யா(ரழி) அவர்கள், வேலைக்காகக் காலையில் கிளம்பி வயலுக்குச் சென்றிருந்தார்கள். மாலைப் பொழுதில் தமது வீட்டிற்கு வந்தபோது கர்ப்பிணியான தமது மனைவியோடு அன்னிய ஆடவரானசரீக்பின் சஹ்மாஎன்பவருடன் தகாக உறவு கொண்ட நிலையில் இருக்கக் கண்ணால் பார்த்து விட்டார். காதாலும் தெளிவாகக் கேட்டுவிட்டார்.  அடுத்த நாள் காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்த ஹிலால் பின் உமய்யா(ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! என்று விளித்து, தமது மனைவியைக் குறித்தும், அவரோடு தகாத உறவு கொண்ட நிலையில் இருந்தசரீக் பின் சஹ்மாவிற்கும் தகாத உறவு இருப்பதாகவும்கர்ப்பிணியானதமது மனைவி சுமந்திருப்பது தன்னுடைய குழந்தை இல்லை என்பதாகவும் குற்றம் சாட்டினார். அவரது கண்ணாலும் கண்டு அவரது காதாலும் கேட்ட விசயத்தை விபரித்து அந்தக் காட்சியை எனது கண்ணால் பார்த்தேன். எனது காதால் செவியுற்றேன் என்றார். அவர் கூறிய செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிடிக்கவில்லை.

அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள்உனது ஆதாரத்தைக் கொண்டுவா! இல்லையயன்றால் உனது முதுகில்(80) சாட்டையடி வழங்கப்படும்என்று சொன்னார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி), அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரழி), அனஸ் பின் மாலிக்(ரழி), இக்ரிமா(ரஹ்), புகாரி 4747,4745, 5259,5308, 7304, முஸ்லிம் 2994,2995,2985, அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜா, முவத்தா மாலிக், முஸ்னத் மகமத், முஸ்னத் அபீயஅலா, தஃப் ஸீர் இப்னு கஸீர் பாகம் 6, பக்கம் 263-277) உண்மையிலேயே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்னது அல்லாஹ்வின்  சட்டமாகும்.

மானமும், நெஞ்சில் ஈரமும் உள்ள எந்த ஆணும் தனது மனைவி மீது தானே பொய்யான குற்றச்சாட்டைச் சுமத்தி தனது குடும்பத்தின் மானத்திற்கு ஊனம் ஏற்படுத்தமாட்டான். இந்நிலையிலும் ஹிலால் பின் உமய்யா(ரழி) அவர்கள், தமது மனைவி மீது சுமத்திய குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டுமானால் அவர்,

எட்டு கண்களாலும் பார்த்த நான்கு சாட்சிகளைக் கொண்டுவரவேண்டும்(24:4) அல்லது

தமது துணைவியர் மீது பழி சுமத்தியவர்களுக்கு (அதை நிரூபிக்கத்) தம்மைத் தவிர (வேறு) சாட்சிகள் இல்லாதபோது அவர்களில் ஒருவர்நிச்சயமாக தாம் (தமது குற்றச்சாட்டில்) உண்மையாளர்தான்என அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து சாட்சியம் அளிக்க வேண்டும் (24:6) அத்துடன்,

ஐந்தாவது தடவை (தமது குற்றச்சாட்டில்) தாம் பொய்யராக இருந்தால், அல்லாஹ்வின் சாபம் தன்மீது உண்டாகட்டும்” (என்று அவர் கூற வேண்டும். (24:7)

(அப்போது அவரது) மனைவி, “நிச்சயமாக இவர் (தமது குற்றச்சாட்டில்) பொய்யரே என்று அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து சாட்சியம் அளிப்பது அவள் மீதான தண்டனையைத் தவிர்க்கும்.  (24:8)

ஐந்தாம் தடவைஇவர் (தமது குற்றச்சாட்டில்) உண்மையாளராக இருந்தால், என்மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகட்டும்” (என்று அவர் கூறவேண்டும்) 24:7

(அப்போது அவரது) மனைவி, “நிச்சயமாக இவர் (தமது குற்றச்சாட்டில்) பொய்யரே என்று அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து சாட்சியம் அளிப்பது அவள் மீதான தண்டனையைத் தவிர்க்கும். (24:8)

ஐந்தாம் தடவைஇவர்(தமது குற்றச்சாட் டில்) உண்மையாளராக இருந்தால், என்மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகட்டும்” (என்று அவள் கூற வேண்டும் 24:9) இல்லையேல் ஹிலால் பின் உமய்யா(ரழி) அவர்களுக்கு,

1. என்பது சாட்டையடிகள் வழங்கப்படும். 

2. அவரது சாட்சியும் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்படாது.

3. அவர் பாவியாவார். (எனும் தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது)

ஸுப்ஹானல்லாஹ் ஹிலால் பின் உமய்யா (ரழி) அவர்கள் தமது கண்களால் பார்த்ததும், தமது காதால் கேட்டதும் உண்மைதான். ஆனாலும் இறை நீதியில் அது பொய் என்று ஆகிவிட்டது. அல்லாஹு அக்பர் (சுருக்கம்) (இப்னு அப்பாஸ்(ரழி), அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரழி), அனஸ் பின் மாலிக்(ரழி), இக்ரிமா(ரஹ்), புகாரி 4747,4745,5259,5308, 7304, முஸ்லிம் : 2994, 2995,2985, அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜா, முவத்தா மாலிக், முஸ்னத் அகமத், முஸ்னத் அபீயஅலா, தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 6, பக்கம் 263-277) இச்சம்பவமானது பல ஆதாரபூர்வமான நூல்களிலும், பல ஆதாரபூர்வமான அறிவிப்புகள் மூலமாக வந்த நீண்ட சம்பவமாகும்)

Previous post:

Next post: