பிரபஞ்ச இயக்கவியலும்! வாழ்வியலின் புதிய செயல் இலக்கணமும்!!
S.M. அப்துல் ஹமீது
1. இறைவனின் நற்செய்தியும் விவசாயத் தொடர்புடை சொல்லாடலும்:
“உர்ஹூனில் கதீம்” (காய்ந்த பேரீத்தம் மட்டையின் வளைந்த பாலை, காம்பு) என்பது அரேபியர்களின் விவசாயப் பழக்க வழக்கங்களில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு அற்புதமான சொல். இதன் வழியாக, ஏக இறைவனான அல்லாஹ் உலக மக்கள் அனைவருக்கும் காலத்தின் கணக்கீட்டைப் பற்றிய ஒரு மாபெரும் நற்செய்தியை வழங்குகிறான்.
2. சந்திரனின் துவக்கமும் ஹிலால் முதல் பிறையின் தோற்றமும் :
சந்திரனின் பயணம் ஒரு மெல்லிய கீற்றாக, அதாவது “ஹிலால்‘ பிறையாகத் தெரிகிறது. இது ஒரு புதிய மாதத்தின் உதயத்தை உலகுக்கு அறிவிக்கும் முதல் சிக்னல் ஆகும். இது ஒரு தொடக்கப் புள்ளி மட்டுமல்ல. ஒரு புதிய நம்பிக்கையின் பிறப்பும் கூட,
3. வளர் பிறையும் முழு நிலவின் பொலிவும்:
பிறை படிப்படியாக வளர்ந்து (வளர் பிறை), தன் முழுமையான ஆற்றலையும் ஒளியையும் பெற்று பெளர்ணமி நிலையை அடைகிறது. இது வாழ்வின் முதிர்ச்சயையும், இறைவனின் படைப்பில் உள்ள பூரணத்துவத் தையும் நமக்குக் காட்டுகிறது.
4. தேய் பிறை நிலையும் அதன் இறுதிச் சுழற்சியும் :
முழுமை பெற்ற சந்திரன் மீண்டும் தேயத் தொடங்குகிறது. இது இயற்கையின் ஒரு மாறாத விதி. எவ்வளவு உயரத்தில் சென்றாலும் மீண்டும் ஒரு சமநிலைக்குத் திரும்புவது படைப்பின் தத்துவமாகும். இந்தத் தேய்மானம் சந்திரனை “உர்ஜூனில் கதீம்‘ எனும் நிலையை நோக்கி அழைத்துச் செல்கிறது.
5. அமாவாசை; சூரியன், சந்திரன், பூமி சங்கமிக்கும் சங்கமம்:
சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் சங்கமிக்கும் நிலையை நாம் “அமாவாசை‘ என்கிறோம். இது ஒரு மாதத்தின் மாற்றுக் கட்டம். இந்த நிலையில் சந்திரன் நம் கண்களுக்குத் தெரியாது. ஆனால் அது தன்னை அடுத்த சுழற்சிக்குத் தயார்படுத்திக் கொள்ளும் ஒரு அமைதியான உறக்க நிலை.
6. உர்ஜூனில் கதீம் : பழைய பிறையா? புதிய திருப்புமுனையா?
இந்தச் சொல்லாடலை வெறும் “பழைய பிறை‘ என்று மட்டும் சுருக்கிவிட முடியாது. உர்ஜூனின் என்பது காய்ந்த பிறகு வளைந்து சுருங்கும் பேரீச்சம் காம்பு போன்றது. இது சந்திரன் மறைந்து, சங்கம நிலை கடந்து தூக்கம் கலைந்து விழிப்பு மீண்டும் அதே பழைய நிலையில் புதிய பிறையாகப் பிரசவிப்பதற்கு உரிய நிலையை அடையாளப்படுத்தும் ஒரு மாபெரும் திருப்புமுனையாகும்.
7. திரும்பி வரும் தொடர் சுழற்சி :
“உர்ஜூன்‘ எனும் சொல்(லில்)
“ரிடன், யூடன், ரிபிட்‘
மீளுதல் திரும்பி வருதல்
உதித்தல் – எனும் (தத்துவ) அர்த்தம் பொதிந்துள்ளது. சந்திரன் மறைந்து போன நிலையைத் தாண்டி ஒரு புதிய உதயத்திற்கான அடையாளமாகிறது. இது முடிவற்ற ஒரு சங்கிலித் தொடர் போன்றது.
8. அல்குர்ஆனில் சந்திரனின் “மனாஸில்‘ காட்சியுடன் பயணிக்கும் நிலைகள் :
அல்லாஹ் சந்திரனுக்குப் பல நிலைகளை (னிழிஐழிகுஷ்யி) ஏற்படுத்தியிருப்பதாகக் கூறுகிறான். ஒவ்வொரு நிலையும் மனிதர்களுக்கு ஒரு செய்தியைச் சொல்கிறது. காலம் என்பது தேக்கமடைந்த ஒன்றல்ல, அது ஓடிக் கொண்டே இருக்கும் ஒரு நீரோட்டம் என்பதை இது உணர்த்துகிறது.
9. பிரபஞ்ச இயக்கவியலும் மாறாத வட்டப் பாதையும் :
“சூரியன் சந்திரனை எட்ட முடியாது. இரவு பகலை முந்த முடியாது. அனைத்தும் ஒரு குறிப்பிட்ட வட்டப் பாதையில் நீந்தி (முடிவை நோக்கி பயணிக்கின்றன” (38:40). இந்த வானியல் இயக்கவியல் இறைவனின் படைப்பு எவ்வளவு துல்லியமானது என்பதையும், அதில் குழப்பங்களுக்கு இடமில்லை என்பதையும் நமநக்குத் தெளிவுபடுத்துகிறது.
10. மவாகீத் : தினசரி தேதியல்ல: 12 மாதங்களின் தொடர் தொகுப்பு வாக்கியம் :
பொதுவாக மக்கள் “மவாகீத்‘ என்பதை தினசரி தேதியாக மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால், இது 12 மாதங்களின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் குறிக்கும் “கால இலக்கணம்”, ஒரு வாக்கியத்தில் சொற்கள் இணைவது போல, 12 மாதங்களும் இணைந்து ஒரு முழுமையான “கால வாக்கியமாக‘ இயங்குகின்றன.
11. மெல்லிய கீற்று : காலத்தின்
சந்திரன் எப்போதும் முழு நிலவாகவே தெரிந்தால் தேதி நாட்களை கண்டறிய முடியாது. அல்லாஹ் பிறைகளை மெல்லிய கீற்றாகத் தெரிய வைத்தது. மனிதர்கள் காலத்தைக் கணக்கிட எளிமையாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான். அந்த மெல்லிய “ஹிலால்‘ கீற்றுதான் மார்க்கக் கடமைகளுக்கான “டைமர்” ஆகும் சிக்னல்.
12. ஹஜ் : கால வாக்கியத்தின் மகுடமும் சிகரமும் :
12 மாதஹ்களை ஒரு வாக்கியமாகக் கருதினால், அதில் 12வது மாதத்தில் நிகழும் ஹஜ் என்பது அந்த வாக்கியத்தின் முற்றுப்புள்ளி அல்லது உச்சக்கட்ட சிகரம் ஆகும். பிறையின் ஒவ்வொரு சுழற்சியும் ஒரு மனிதனை இந்த மாபெரும் ஆன்மீகச் சங்கமத்தை நோக்கி நகர்த்துகிறது.
13. விசா மற்றும் பயணச்சீட்டு: புனிதப் பயணத்தின் அறிவிப்பு :
ஹஜ் சர்வதேசப் பயணம், உலகின் கடைக் கோடியில் இருக்கும் ஒரு முஃமினுக்கு, வானில் தோன்றும் அந்த மெல்லியப் பிறை தான் அவனது புனிதப் பயணத்திற்கான “விசா மற்றும் பயணச்சீட்டு” இதுவே அவனுக்கு ஒரு தெய்வீக அழைப்பிதழாகும்.
14. காலத்தின் அறுவடையும் ஆன்மீக முதிர்ச்சியும் :
முதல் பிறையை ஒரு “வித்து‘ என்று கொண்டால், ஹஜ் என்பது அதன் “அறுவடை‘ ஆகும். ஒரு முஃமின் ஒவ்வொரு மாதப் பிறையைக் கடக்கும்போதும் வெறும் நாட்களைக் கடப்பதில்லை. மாறாகத் தனது ஆன்மீக முதிர்ச்சியை அடைகிறான்.
15. மரணமும் மறுவாழ்வும், ஒரு சூசகமான அறிவிப்பு :
சந்திரன் மறைவதையும் மீண்டும் தோன்றுவதையும், மனிதனின் மரணத்தையும் அதற்குப் பிறகு அவன் மீண்டும் எழுப்பப்படுவதையும் உணர்த்துகிறது. சந்திரன் மறைவாக இருப்பது மரணம்; அது மீண்டும் புதிய பொலிவுடன் தெரிய வருவது மறு வாழ்வு ஆகும்.
16. பழையது மறைந்து புதியது வருதல் மீளுருவாக்கத் தத்துவம் :
“உர்ஜூனில் கதீம்” என்பது அழிவல்ல. அது ஒரு முடிவற்ற தொடர்ச்சி. சந்திரன் பழைய நிலையை நிறைவு செய்துவிட்டு மீண்டும் புதிய பிறையாக வருவது. இறைவனுடைய படைப்பு ஒருபோதும் நின்று விடுவதில்லை என்பதற்கான சான்று.
17. மஸாயில்களின் பின்னணியில் உள்ள அறிவியல் :
மார்க்க சட்டங்களை (மஸாயில்களை) விளக்கும்போதும், வெறும் சடங்காகப் பார்க்காமல் அதன் பின்னணியில் உள்ள இறைவனின் படைப்பு இயக்க ஆற்றலை விளக்குவது நமது ஈமானை அதிகப்படுத்தும். பிறை பார்ப்பது என்பதும் ஒரு மாபெரும் அறிவியலோடு இணைந்த தெளிவான மார்க்கப் பார்வை.
18. சமூக ஒற்றுமையும் சமத்துவ இலக்கணமும் :
வானில் தோன்றும் அந்தப் பிறை அரசன் முதல் ஆண்டி வரை அனைவருக்கும் ஒரு செய்தியைச் சொல்கிறது. இது ஜாதி, மத, பொருளாதார பாகுபாடின்றி உலக மக்கள் அனைவரையும் ஒரே சம நிலையில் (திசையில்) இயங்க வைக்கும் ஒரு “சமூக இலக்கணம்‘ ஆகும்.
19. விடுதல் குறையற்ற தொடர் இறை இலக்கணம் :
இறைவன் காட்டிய இந்த “வானியல் இலக்கணம்‘ மனிதர்கள் உருவாக்கிய இலக்கணங்களை விட மிகத் துல்லியமானது. இது காலத்தை வெறும் எண்களாகப் பார்க்காமல், ஒரு புனிதமான கட்டமைப்பாகப் பார்க்கத் தூண்டுகிறது.
20. கால மேலாண்மையும் மனித ஒழுக்கமும்:
பிறையை அடிப்படையாகக் கொண்ட காலமுறை, மனிதனை எப்போதும் விழிப்புடன் இருக்கச் செய்கிறது. 28ம் நாள் மாலையில் வானத்தைப் பார்ப்பது என்பது மனிதனை இயற்கையோடு ஒன்றிணைத்து, அவனுக்குத் துல்லியமான எதிர்பார்ப்புணர்வுடன் திட்டமிடக் கற்றுக்கொடுக்கிறது.
21. மவாகீத் எனும் பிரபஞ்சப் பாலம் :
அல்லாஹ் மெல்லிய பிறையை ஹஜ்ஜோடு இணைத்திருப்பது, விண்ணுலகையும், மண்ணுலகையும் இணைக்கும் ஒரு கண்ணுக்குத் தெரியாத பாலம் போன்றது. கணக்கீட்டாளர்கள் எண்களைப் பார்க்கும்போது மூஃமின் இறைவனின் அதிகாரத்தைப் பார்க்கிறான்.
22. புதிய மனிதனாகப் (திருந்தி, திருப்பி) பிறத்தல் (முஹ்ஸின்)
சந்திரன் எப்படித் தேய்வது போலவும், மறைவது போலவும் புதுப் பொலிவுடன் வருகிறதோ, அதுபோல ஹஜ் முடித்து வருபவர். தனது பழைய பாவங்களை அழித்துவிட்டு, “தாயின் வயிற்றில் இருந்து பிறந்த பாலகனைப் போல” தூய்மையான புதிய மனிதனாக (முஹ்ஸின்) சமூகத்திற்குள் மீண்டும் திரும்(ப வேண்டும்)புகிறான்.
23. நிலவின் வடிவ மாற்றம் ஒரு வில்லின் உவமை :
சந்திரனின் அந்த மெல்லிய வளைவு ஒரு வில் வளைந்திருப்பதைப் போன்றது. அது மனிதனின் அலட்சியத்தை உடைத்து அவனை ஒரு “ஒழுக்கமான படைப்பாக‘ மாற்றுவதை நோக்கியே அம்பெய்கிறது.
24. திட்டமிடலும் அதன் நுணுக்கமான முடிவுகளும் :
சந்திரனைப் பற்றிய இந்தத் தெளிவான புரிதல், பிறை பார்ப்பதில் ஏற்படும் தேவையற்ற குழப்பங்களைத் தவிர்த்து, தெளிவான ஒரு திட்டமிடலைச் சமூகம் மேற்கொள்ள உதவுகிறது. இதுவே “திட்டமிடுவோம் திட்டமிடாமல்‘ என்பதன் ஆழமான அர்த்தம்.
25. முடிவுரை: புதிய சொல் மற்றும் செயல் இலக்கணம் :
இறைவன் சந்திரனை வெறும் அழகிற்காகப் படைக்கவில்லை. மனிதனுக்கு வழி காட்டவும், ஹஜ்ஜுக்கு வழிகாட்டவும் படைத்துள்ளான். பழையது மறைந்து புதியது. வருவது என்ற இறை நியதியைச் சந்திரனின் சுழற்சியின் வழியாக மனித இதயத்தோடு பிணைத்ததே குர்ஆன் காட்டிய அந்த “புதிய சொல் மற்றும் செயல் இலக்கணம்‘ ஆகும்.