விமர்சனம்: நீங்கள் அக்டோபர் 2011 அந்நஜாத் விமர்சன விளக்கத்தில் நஜ்ரான்
தேசத்துப் பாதிரிகள் மதீனாவில் நபி(ஸல்) அவர்களுடன் விவாதிக்க வந்தபோது, பள்ளியிலேயே
அவர்களது முக்கடவுள் கொள்கைப்படி வணக்க வழிபாடு செய்ய நபி(ஸல்) அவர்கள்
அனுமதித்தார்கள் என்று எழுதியுள்ளீர்கள். நான் பலரிடம் விசாரித்தேன். அப்படி எவ்வித
ஆதாரமும் இல்லை என்றே சொன்னார்கள். எஸ்.கே.யிடமும் கேட்டேன். அவர், “´ஷிர்க்
செய்யும் இமாம் பின்னால் நின்று தொழலாம்” என்று எழுதுகிறவருக்கு இப்படி எழுதுவது
இயலாத காரியமா? என்று கேட்டார். எனவே ஆதாரமில்லாத இந்தச் செய்தியை நீங்கள்
எழுதியதற்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று மிகக் கடுமையாக
செல்பேசியில் விமர்சித்தவர்,

ஜபருல்லாஹ், குட் யஹல்த் மெடிக்கல், சென்னை-5.

விளக்கம்: குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களையே எடுத்துக் கொடுத்தாலும், குர்ஆன்
39:32ல் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்து தன்னிடம் உண்மை வந்தபோது அதனைப்
பொய்ப்பிப்பவனை விட பெரும் அநியாயக்காரன் யார்? (அத்தகைய) நிராகரிப்பாளர்களுக்குத்
தங்குமிடம் நரகம் இல்லையா? என்ற எச்சரிக்கையையும், அடுத்து குர்ஆன், ஹதீஸில் உள்ளதை
உள்ளபடி சுய விளக்கம் கொடுக்காமல் மக்களிடம் எடுத்து வைப்பவர்கள் பற்றி 39:33-35
வசனங்களில் கூறுவதையும் படித்துப் பாருங்கள். மேலும் குர்ஆனின் நேரடிக் கருத்துக்களை
திரித்து வளைத்து 2:159 சொல்வது போல் மறைத்துப் பொய்ப்பிக்கும் பொய்யர்களைப் பற்றி
மேலும் 6:21, 157, 7:37, 10:17, 11:18, 16:105, 51:10, 77:15 இறை வாக்குகளையும்
நீங்களே படித்துத் தெளிவு பெறுங்கள்.

இவை குர்ஆன் வசனங்கள் இல்லை என்றோ, குர்ஆன் வசனங்கள்படி நடக்க மாட்டேன் என்றோ
கூறுவது மட்டுமல்ல குர்ஆன் வசனங்களை நிராகரிப்பது; குர்ஆன் வசனங்களை சுய விளக்கங்கள்
மூலம் வளைத்து நேரடிக் கருத்துக்களை மறைப்பதும் அவ்வசனங்களை நிராகரிப்பதேயாகும். இதை
2:159-162 இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன.

இப்படி எழுதுவதற்குக் காரணம், 1987 ஜூனில் அந்நஜாத்தை விட்டு 2:213, 42:14 சொல்வது
போல் பொறாமையினால் வெளியேறிய இந்த மவ்லவிகள் மவ்லவி அல்லாத நாம் குர்ஆனில் உள்ளதை
உள்ளபடி நேரடியாகச் சொல்லும் எம்மீதுள்ள பொறாமையின் காரணமாக (பார்க்க 2:213, 3:19,
42:14, 45:17) ஜூலை 1987 அந்நஜாத் இதழில் இடம் பெற்ற முஸ்லிம் மன்னர்கள் இந்துக்
கோயில்களுக்கு உதவிகள் செய்த பல சம்பவங்கள் பற்றி குஸ் வந்த்சிங் எழுதி இந்துமதியில்
இடம் பெற்றக் கட்டுரையையும், ஐயமும், தெளிவும் பகுதியில் 5:5 வசனத்தின் நேரடிக்
கருத்தை ஆதாரமாகக் காட்டி முஸ்லிம்கள் கிறித்தவப் பெண்களை மணமுடிக்க குர்ஆன்
அனுமதிக்கிறது என்றும் எழுதி இருந்ததையும் மறுத்து உங்களைப் போன்றதொரு மவ்லவி
பக்தரைத் தூண்டிவிட்டு மதுரையிலிருந்து கடுமையாக விமர்சிக்க வைத்தார்கள்.

அதற்கு ஆகஸ்டு, செப்டம்பர் 1987 விமர்சனங்கள் விளக்கங்கள் பகுதியில் தெளிவுபடுத்தி
இருந்தோம். செப்டெம்பர் 1987, பக்கம் 60, 61-ல் இது பற்றி விளக்கம் கொடுத்திருந்தோம்.
அதில் உங்களின் சந்தேகத்திற்குப் பதில் இதோ!

நபி(ஸல்) அவர்கள் வாழ்வில் இடம் பெற்ற ஒரு சம்பவம்:

முஹம்மது பின் இஸ்ஹாக் கூறுகிறார்கள், நஜ்ரான் பிரதேசத்தின் கிறித்தவ தூதுக்குழு
மிக அழகிய ஆடை அணிந்தவர்களாக மஸ்ஜிதுந்நபவிக்குள் பிரவேசித்தார்கள். அப்பொழுது
அஸ்ருடைய நேரம் வந்து விட்டது. உடனே அவர்கள் கிழக்குத் திசையை நோக்கித் தொழ
ஆரம்பித்தார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், அவர்களை (எதுவும் சொல்லாது) விட்டு
விடுங்கள் என்று கூறினார்கள்.

நூல்: அல்பிதாயா வன்னிஹாயா பாகம் 5, பக்கம்56.

மேலும் கிறித்தவ பாதிரிகள், துறவிகளுக்குப் பலவிதமான சலுகைகள், அனுமதிகள் நபி (ஸல்)
அவர்களால் கொடுக்கப்பட்ட செய்தி யையும் முகீரத்பின்ஷிஃபா(ரழி) அவர்களால் நபி(ஸல்)
அவர்களின் கடிதமாக எழுதப்பட்டது அதே அல்பிதாயா வன்னிஹாயா, பாகம் 5, பக்கம் 55-ல்
இருப்பதையும் எடுத்து எழுதி இருந்தோம்.

நம்மை விட்டு வெளியேறியுடன் பொறாமையினால் கடுமையான அவதூறுகளைக் கூறி அவர்களது
பக்தர்கள் அந்நஜாத்தைப் படிப்பதை விட்டும் தடுப்பதில் மிகமிகக் குறியாக இருந்தவர்கள்,
அந்த நேரத்தில் அல்பிதாயா வன்னிஹாயாவில் இடம் பெற்றுள்ள இந்த விபரங்களை மறுக்கத்
துணியாத எஸ்.கே. இன்று அப்படி ஒரு ஆதாரமே இல்லை; ´ஷிர்க் செய்யும் இமாம்கள் பின்னால்
நின்று தொழலாம் என்று கூறுபவர் இப்படி எழுதுவதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்று
கேட்டால் அதன் பொருள் என்ன?

உங்களைப் போன்ற மவ்லவி பக்தர்களுக்கு 1987-ல் அந்நஜாத்தில் இடம் பெற்றது தெரியாது;
அல்லது மறந்திருக்கலாம் என்ற அசட்டுத் துணிச்சல்தானே இப்படி அவர்களை பிதற்ற
வைக்கிறது. தர்கா சடங்குகள் மூலம் ஷிர்க் செய்யும் இமாம்கள் பின்னால் நின்று தொழக்
கூடாது என்பதற்கு நேரடியான ஒரயொரு ஆதாரபூர்வமான ஹதீஸையாவது இவர்களால் காட்ட
முடியுமா? அல்லது இமாமின் தொழுகை பின்னால் நிற்பவர்களின் தொழுகையைப் பாதிக்கும்
என்று கூறும் ஒரு ஹதீஸையாவது இவர்களால் காட்ட முடியுமா? ஒருவரின் சுமையை பிரிதொருவர்
சுமக்க மாட்டார். இமாமின் தொழுகை இமாமுக்கு; முக்ததியின் தொழுகை முக்ததிக்கு
என்பதற்கே ஆதாரம் கிடைக்கிறது.

இன்றைய இந்த இமாம்கள் தர்கா சடங்குகளைத் தான் செய்கிறார்கள். நபி காலத்து நய வஞ்சக
முஸ்லிம்கள் ஹுபல், லாத் மனாத், உஜ்ஜா போன்ற சிலைகளையும் வணங்கிக் கொண்டிருந்தார்கள்
என்பதை குர்ஆன் 8-20 வசனங்களும், மேலும் பல குர்ஆன் வசனங்ளும் கூறிக்
கொண்டிருக்கின்றன. அவர்களில் சிலர் சில கோத்திரங்களுக்குத் தலைவர்களாக வும்
இருந்தார்கள்.

அப்படிப்பட்ட கொடிய ஷிர்க்கை செய்யும் நய வஞ்சக முஸ்லிம்கள் பின்னால் நின்று தொழக்
கூடாது என்றால் 33:21 இறைவாக்கு சொல்வது போல் நபி(ஸல்) அழகாக வழி காட்டி
இருப்பார்கள். இந்த மூட முல்லாக்களின் கோணல் புத்தியின்படி அவர்கள் பின்னால் நின்று
தொழலாம் என்று ஹதீஸ் இருக்கிறதா? என்று மூடத்தனமாகக் கேட்பார்கள்.

எதையெல்லாம் உடுத்தக் கூடாது; எதை எல்லாம் உண்ணக் கூடாது என்றிருப்பது போல் இங்கும்
அவர்கள் பின்னால் தொழக் கூடாது என்பதற்கே ஹதீஸ் ஆதாரம் வேண்டும். நபி (ஸல்) அவர்கள்
அந்த நயவஞ்சக முஸ்லிம்களை முஸ்லிம்களாக ஏற்று முஸ்லிம்களுக்குரிய அனைத்து
உரிமைகளையும் கொடுத்தார்கள் என்பதற்குத் தெளிவான ஆதாரங்கள் இருக்கும் போது, ஷிர்க் செய்யும் இமாம்கள் பின்னால் நின்று தொழக்கூடாது எனறு குர்ஆன், ஹதீஸில் இல்லாத
சட்டத்தைச் சொல்ல இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?

42:21, 49:16 இறைவாக்குகள் மண்டையில் ஓங்கி அடிப்பது போல் கூறுவதை கூலிக்கு
மாரடிக்கும் இந்த மவ்லவிகள் உணரமாட்டார்கள். காரணம் 2:74, 5:13, 6:125 இறைவாக்குகள்
கூறுவது போல் இவர்களின் உள்ளங்கள் இருளடைந்து இறுகிக் கல்லாகிவிட்டன. சத்தியத்தை
ஒரு போதும் உணரமாட்டார்கள்.

கூலிக்கும் மாரடிப்பதாலும் இவ்வுலக அற்ப உலக ஆதாயங்களில் குறியாக இருப்பதாலும்
21:92, 23:52 இறைக் கட்டளைகளுக்கு முரணாக இந்த மவ்லவிகள் சமுதாயத்தைப் பிளவுபடுத்து
வதிலேயே குறியாக இருப்பார்கள். வெள்ளைக்காரன் பிரித்தாளும் சூழ்ச்சியை
(Divide and Rule)  இந்த மதகுருமார்களிடமிருந்துதான் கற்றுக் கொண்டான் போலும்.

ஆனால் நபி(ஸல்) அவர்கள் உலக மக்கள் அனைவரையும் விட சத்தியத்தை அறிந்திருந்ததாலும்,
நம் அனைவரையும் விட அல்லாஹ்வை மிகமிக அஞ்சியதாலும் அல்லாஹ்வின் 21:92, 23:52
கட்டளைகளுக்கு மிகமிகப் பயந்தார்கள். அஞ்சி நடுங்கினார்கள். அதனால்தான் அன்றைய
உதட்டளவில் ஈமான் கொண்ட நயவஞ்சக முஸ்லிம்களை-சிலைகளை வணங்கிய முஸ்லிம்களை
முஸ்லிம்கள் இல்லை என ஃபத்வா கொடுத்து தமது உம்மத்திலிருந்து வெளியேற்றவோ, அவர்கள்
பின்னால் நின்று தொழக்கூடாது என்று சட்டம் சொல்லவோ துணியவில்லை.

அல்லாஹ்வின் இறுதித் தூதருக்கே இல்லாத அதிகாரம், மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக்
கொண்ட இந்த மவ்லவிகளுக்கு இருக்க முடியுமா? என்று சிந்திப்பவர்கள் மட்டுமே இம் மவ்லவிகளின் இழிநிலையைப் புரிய முடியும்.

உகத் யுத்த களத்தில் தன்னைக் கடுமையாகத் தாக்கிப் பல்லுடையச் செய்த (நயவஞ்சக முஸ்லிம்களை அல்ல) காஃபிர்களை, “”அல்லாஹ்வே அவர்களை உன் கருணைப் பார்வையிலிருந்து
அகற்றிவிடு” என்று நபி(ஸல்) அவர்கள் துஆ கேட்டபோது அல்லாஹ் இறக்கியருளிய 3:128
வசனத்தைப் படித்துப் பாருங்கள்.

“”(நபியே!) உமக்கு இது விஷயத்தில் எவ்வித அதிகாரமும் இல்லை; அவன் அவர்களை மன்னித்து
விடலாம், அல்லது அவர்களை வேதனைப் படுத்தலாம்;-நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே!”
(3:128)

அன்றைய நிலையில் அவர்கள் யார்? இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத காஃபிர்கள்; சிலைகளை
தெய்வங்களாக வணங்கிக் கொண்டிருந்தவர்கள். இஸ்லாத்தையும், இறுதித் தூதரையும்
அழித்தொழிப்பதற்காகப் படை திரட்டி வந்தவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கே அல்லாஹ்
அருள் புரியக் கூடாது; அல்லாஹ்வின் கருணையிலிருந்து அவர்களை அகற்றிவிட வேண்டும் என
அல்லாஹ்விடமே துஆ கேட்ட இறுதி நபிக்கே இப்படிப்பட்ட மிகக் கடுமையான எச்சரிக்கை
என்றால்,

இன்று, அல்லாஹ்வையும், குர்ஆனையும், இறுதி நபியையும் அன்றைய நயவஞ்சக முஸ்லிம்கள்
போல் உதட்டளவில் அல்லாமல் உளப் பூர்வமாக ஏற்ற முஸ்லிம்கள் என்ற நிலையில், இவர்களது
பங்காளிகளான இன்னொரு மதகுருமார்களான புரோகிதக் கூட்டத்தாரின் தவறான வழிகாட்டலில்,
நன்மை பயக்கும் செயல் எனக் குருட்டுத்தனமாக நம்பி தர்கா-சமாதிச் சடங்குகளில்
ஈடுட்டிருக்கும் முஸ்லிம்களுக்கு இவ்வுலகிலேயே காஃபிர்-முஷ்ரிக், அவர்கள் பின்னால்
நின்று தொழக் கூடாது என இவர்களாகவே எவ்வித குர்ஆன், ஹதீஸ் ஆதாரமுமின்றி ஃபத்வா
கொடுக்கிறார்கள் என்றால், இவர்களின் உண்மையான நிலை என்ன?

இந்த மவ்லவிகள் 42:21 குர்ஆன் வசனம் கூறுவது போல் அல்லாஹ்வுக்கு இணையாளர்களாக
ஆகிறார்களா? இல்லையா? 49:16 குர்ஆன் வசனப்படி அல்லாஹ்வுக்கே மார்க்கம் கற்றுக்
கொடுக்கிறார்களா? இல்லையா? 9:31 குர்ஆன் வசனப்படி இந்த மவ்லவிகளின் ஃபத்வாவை ஏற்று
அதன்படி நடப்பவர்கள் இம் மவ்லவி களை தங்களுடைய வணக்கத்திற்குரிய ரப்பாக ஆக்கி கொடும்
முஷ்ரிக்களாக ஆகிறார்களா? இல்லையா?

10:19, 11:110, 42:14,21 இறைவாக்குகள்படி அல்லாஹ்வே தீர்ப்பை மறுமைக்கென்று ஒத்தி
வைக்காமல், இவ்வுலகிலேயே தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை மனிதர்களுக்கும் கொடுத்திருந்தால், தர்கா புரோகித மவ்லவிகளை விட முதலில் அத்தீர்ப்புக்கு ஆளாக வேண்டியவர்கள்
இந்த தவ்ஹீத் புரோகித மவ்லவிகளே. காரணம் தர்கா மவ்லவிகள் குற்ற உணர்வு காரணமாக
அல்லாஹ்வை நேரடியாக நெருங்க முடியாது. அவுலியாக்கள் மூலமே நெருங்க முடியும் என்ற
குருட்டு நம்பிக்கையில் அல்லாஹ்வுக்கும் தங்களுக்கும் இடையில் 2:186, 33:36 இறைக்
கட்டளைகளுக்கு முரணாக அவுலியாக்களை இடைத்தரகர்களாக (வசீலாவாக) மட்டுமே
நம்புகிறார்கள்.

ஆனால் இந்த தவ்ஹீத் மவ்லவிகளோ, 2:210, 3:128,154,159, 4:47, 6:58,
7:54, 33:38, 42:14,21 போன்ற எண்ணற்ற குர்ஆன் வசனங்களைத் துச்சமாக மதித்துத் தூக்கி
எறிந்துவிட்டு (நவூதுபில்லாஹ்) அல்லாஹ்விற்கு மட்டுமே சொந்தமான பிரத்தியேகத் தனி
அதிகாரத்தை தங்கள் கையில் எடுத்து முஷ்ரிக் காஃபிர் ஃபத்வா கொடுப்பதாலும், அவர்கள்
பின்னால் நின்று தொழக்கூடாது என்று சட்டம் கூறுவதாலும், தர்கா முஸ்லிம்களை விட
இந்த தவ்ஹீத் மவ்லவிகளே மிகமிக இழிவுக்கும் கேவலத்திற்கும் ஆளாக வேண்டியவர்கள்,
அவர்களை விட கொடிய ஷிர்க் செய்கிறவர்கள் என்பதில் சந்தேகமுண்டா?

தர்கா மவ்லவிகள் பின்னால் நின்று தொழக் கூடாது என்றால் இந்த தவ்ஹீத் மவ்லவிகள்
பின்னால் நின்று தொழுவது அதைவிட ஆயிரம் மடங்கு கூடவே கூடாது என்று உறுதியாகச்
சொல்ல முடியுமல்லவா?

ஆனால் இறைவனின் ஆணைப்படியும், நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல் படியும் ஒருவர்
முஸ்லிம் என்ற நிலையில் தொழ வைத்தால் அவர் பின்னால் நின்று தொழுவதில் எவ்விதத்
தடையும் மார்க்கத்தில் இல்லை. காரணம் அவர் தொழுகை அவருக்கு; பின்னால் நின்று
தொழுபவர்களின் தொழுகை அவர்களுக்கு. இமாமின் தொழுகை சுருட்டி அவர் முகத்தில்
எறியப்பட்டாலும் மஃமூம்களின் தொழுகைக்கு அணுவளவும் பாதிப்பு ஏற்படாது. காரணம் ஒருவரது சுமையை மற்றவர்கள் சுமக்க மாட்டார்கள் என்று 6:164, 17:15, 35:18, 39:7 இத்தனை
இடங்களில் அல்லாஹ் கூறி இருக்க அவர்கள் பின்னால் நின்று தொழும் தொழுகை கூடாது என்று
சொல்லும் இவர்கள் எந்த அளவு திமிரும் அகம்பாவமும் உடையவர்கள்; அல்லாஹ்வின் தெளிவான
நேரடியான கட்டளைகளை நிராகரித்து 2:39 குர்ஆன் வசனம் கூறும் பரிதாப குஃப்ருடைய
நிலைக்கு ஆளாகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

6:58 இறைவாக்கு என்ன கூறுகிறது என்று அவதானியுங்கள். (நபியே!) நீர் கூறும், “”நீங்கள்
எதற்கு அவசரப்படுகிறீர்களோ அது என் அதிகாரத்தில் இருந்திருக்குமானால், உங்களுக்கும்
எனக்குமிடையேயுள்ள விவகாரம் உடனே தீர்க்கப்பட்டேயிருக்கும்; மேலும், அல்லாஹ்
அநியாயம் செய்வோரை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். (6:58)

நபி(ஸல்) அவர்களை மிகக் கடுமையாக எதிர்த்த குறைஷ் காஃபிர்கள்
விஷயத்திலேயே
தீர்ப்பளிக்கும் அதிகாரம் தமக்கில்லை என்பதை நபி(ஸல்) அவர்களையே பகிரங்கமாக
அறிவிக்க அல்லாஹ் கட்டளையிட்ட நிலையில், தங்களை முஸ்லிம்கள் எனச் சொல்லி, முஸ்லிம்
சமுதாயத்தில் வாழ்ந்து மரித்து முஸ்லிம் மைய வாடியில் அடக்கப்படும் முஸ்லிம்களை,
முஸ்லிம்கள் இல்லை; காஃபிர், முஷ்ரிக் அவர்கள் பின்னால் நின்று தொழக் கூடாது என்று
ஃபத்வா கொடுக்கும் இந்த மவ்லவிகள் எப்படிப்பட்ட மெகா பாவிகளாகவும், நாளை 2:39
குர்ஆன் வசனம் கூறுவது போல் நிரந்தரமாக நரகில் தங்கக் கூடியவர்களாகவும்
இருப்பார்கள் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

தங்களுக்கு அதிகாரம் இல்லாத நிலையில் 21:92, 23:52 இறைக் கட்டளைகளுக்கு முரணாக
சமுதாயத்தைப் பிளவுபடுத்தித் தனித்தனி மத்ஹபுகளாக, தரீக்காக்களாக, மஸ்லக்களாக, பல
பிரிவுகளாக, இயக்கங்களாகக் கற்பனை செய்து ஆதிக்கம் செலுத்தி அற்ப உலக ஆதாயம்
அடைவதை நோக்கமாகக் கொண்ட ஒவ்வொரு பிரிவாரும், 23:53, 30:32 குர்ஆன் வசனங்கள் கூறுவது
போல் தாங்கள்தான் நேர்வழி நடப்பவர்கள். தவ்ஹீத்வாதிகள், மற்ற பிரிவுகள் அனைத்தும்
வழி கெட்ட பிரிவுகள், முஷ்ரிக்கள், காஃபிர்கள் எனத் தற்பெருமை அடிக்கும்
கட்டாயத்தில் இருக்கிறார்கள். அவர்களின் தற்பெருமையே அவர்கள் நேர்வழியில் இல்லை,
கோணல் வழிகளில் சென்று நரகை நிரப்ப இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது. “”
அவர்கள் ஒரு காலம் வரை அவர்களது அறியாமையிலேயே, ஆழ்ந்திருக்க விட்டுவிடும்” என்று
அடுத்த 23:54 குர்ஆன் வசனம் கூறுவதை ஆழ்ந்து சிந்தித்து விளங்குங்கள். 22:78 இறைக்
கட்டளைப்படி “”முஸ்லிம்கள்” என்றும், 41:33 இறைக் கட்ட ளைப்படி “”முஸ்லிம்களில்
உள்ளவன்” என்றும், பல ஹதீஸ் நூல்களில் காணப்படும் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டல்படி
“”ஜமாஅத்துல் முஸ்லிமீன்” என்றும் சொல்வதை விட்டு ஏனைய இவர்களாகக் கற்பனை செய்து
அதை முழக்கமிடும் அனைத்துப் பிரிவினைவாதி களின் இறுதி முடிவும் இதுவாகத்தான் இருக்கிறது என்பதில் சந்தேகம் உண்டா?

இவர்களின் இவ்வழிகேட்டிற்குக் காரணம் அவர்கள் தூய மார்க்கத்தை மதமாகக் கற்பனை
செய்து அதையே வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டதுதான். இன்று உலகில் ஆதத்தின்
சந்ததிகளைக் கவ்விப் பிடித்திருக்கும் ஏட்டில் எழுத முடியாத அனைத்து வகைச் சீர்கேடுகளுக்கும், சீரழிவுகளுக்கும், மகாக் கொடிய இணைவைப்பிற்கும் அடிப்படைக் காரணமே
இம்மதகுருமார்கள் அல்லாஹ்வுக்கும் அடியார்களுக்குமிடையில் இடைத்தரகர்களாகப்
புகுந்து, கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றி அவர்களின் பொருள்களை அநீதமான முறைகளில்
சாப்பிடுவதுதான். மத குருமார்கள் ஒரு போதும் நேர்வழியை போதிக்க மாட்டார்கள்.
மக்களிடையே பிரிவினைகளையே கற்பனை செய்வார்கள், கோணல் வழிகளையே நேர்வழியாகக்
காட்டுவார்கள் என்பதை எப்போது மக்கள் உணர்கிறார்களோ அன்றுதான் மக்கள்
மவ்லவிகளிலிருந்து விடுபட்டு ஈடேற்றம் பெறுவார்கள்.

மக்கு மண்டூகங்களாக இல்லாமல் கொஞ்சம் மூளையைச் செலுத்திச் சிந்தித்துப் பாருங்கள்.
குர்ஆன், ஹதீஸ் சொல்லாத எத்தனை ஹராம்களை இந்த மவ்லவிகள் அடுக்குகிறார்கள். இணை
வைக்கும் இமாம்கள் பின்னால் தொழக் கூடாது, கைக்கூலி வாங்கும் திருமணத்தில் கலந்து
கொள்ளக் கூடாது. வாழ்க்கைக்காக ஏங்கும் குமர்களை உடைய ஏழைப் பெற்றோர்கள்,
செல்வந்தர்களிடம் வந்து உதவி கேட்டால், அவர்களுக்கு ஜகாத், சதக்காவிலிருந்து பணம்
கொடுத்து உதவுவது ஹராம். பெண் வீட்டுச் சாப்பாடு சாப்பிடுவது ஹராம்; வட்டித் தொழில்
செய்பவனின் அன்பளிப்பை வாங்குவது ஹராம்; கோயிலுக்கு முன்னால் தேங்காய் விற்பது ஹராம்;
திருவிழா கூட்டங்களுக்குப் போய் வியாபாரம் செய்வது ஹராம்; சாராய வியாபாரிக்கு
வெல்லம் விற்பது ஹராம்; மாற்றுமத, மாற்றுக் கொள்கை உடையோர் போன்றோருக்கு அவர்களது
நூல்களை அச்சடித்துக் கொடுப்பது ஹராம், அண்ணன் தம்பி, அக்காள் தங்கை போன்ற மிகமிக
நெருங்கிய சொந்தமாக இருந்தாலும் அவர்கள் கைக்கூலி வாங்கி அல்லது கொடுத்து திருமணம்
முடித்தால் அதில் கலந்து கொள்வது ஹராம் இப்படி 16:116 கண்டிப்பது போல் மனம் போன
போக்கில் ஹராம், ஹலால் எனக் கூறி அல்லாஹ் மீது பொய்யை இட்டுக் கட்டுகிறார்கள்.

மக்களிடையே விரோத குரோதத்தையும், அதனால் பிரிவினைகள் ஏற்படும் விதமாக எல்லாம்
குர்ஆன், ஹதீஸ் சொல்லாத பல பல ஹராம்களை அடுக்குகிறார்கள். இவற்றிற்கு அடிப்படைக்
காரணம் 16:117 வசனம் கூறுவது போல் இவ்வுலக அற்ப சொற்ப இன்பந்தான். மறுமையிலோ நரகமே
கூலி.
அதே சமயம் மார்க்கத்தை வயிற்றுப் பிழைப் பாகக் கொள்வது கொடிய ஹராம்; அதனால் தான்
சமூகத்தில் பல சீர்கேடுகளும், சீரழிவுகளும் ஏற்படுகின்றன என்று நேரடியாகச் சொல்லும்
ஐம்பதுக்கும் மேற்பட்ட குர்ஆன் வசனங்களையும், பல ஹதீஸ்களையும் துச்சமாக எண்ணி
தூக்கி எறிந்து விட்டுப் பல நொண்டிச் சாக்குகளைக் கூறி 2:174 இறை வாக்கு சொல்வது
போல் தங்கள் வயிறுகளை நரக நெருப்பால் நிரப்புகிறார்களே இந்த மவ்லவிகள். இவர்கள்
குர்ஆன், ஹதீஸ் போதனைகளைச் சொல்கிறார்களா? அல்லது ஷைத்தானின் நேரடி ஏஜண்டுகளாக
இருந்து ஷைத்தானின் துர்போதனைகளை நேர்வழி-சுவர்க்கத்திற்கு இட்டுச் செல்லும் வழி என
மெகா பொய்யைக் கூறி மக்களை வழிகெடுக்கிறார்களா? சிந்தியுங்கள்!

இந்த குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் நடுநிலையுடன் சுய சிந்தனையுடன் படித்து விளங்க
முற்பட்டால் அல்லாஹ் 29:69-ல் வாக்களித்துள்ளபடி நேர்வழியை விளங்க வைப்பான்.
அதற்கு மாறாக மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட இந்த மவ்லவிகளே உங்களின்
பாதுகாவலர்கள், வழிகாட்டிகள், ஆபத்பாந்தவான்கள் எனக் குருட்டுத் தனமாக நம்பி அவர்கள் பின்னால் சென்றால் உங்களின் இறுதி முடிவு என்ன என்பதை 7:3, 33:21, 33:36,66-68,
18:102-106 இறைவாக்குகளை நீங்களே படித்துப் பார்த்து முடிவு செய்து கொள்ளுங்கள்.
இந்த இறைவாக்குகள் முஸ்லிம் அல்லாதாருக்குக் கூறப்பட்டவை என இந்த சுயநல மவ்லவிகள்
கூறுவதை நம்பி மோசம் போகாதீர்கள். எச்சரிக்கை! அவை முஸ்லிம்களாகிய உங்களுக்கும் தான்!

————————————————

விமர்சனம்: ஹிஜ்ரி கமிட்டி காலண்டரில் துல்ஹஜ் 1-ம்தேதி மதுரை மஃறிப் 6.10 என்றும்
JAQH காலண்டரில் 5.54 என்றும் உள்ளது. எது சரி? அல்லது அச்சுப்பிழையா? 16
நிமிடங்கள் வித்தியாசப்படுகிறதே?
S. உமர் சாதிக், மதுரை.

விளக்கம்: JAQH காலண்டரிலுள்ள 5:54 தான் சரி. ஹிஜ்ரி காலண்டரில் தவறுதலாக
துல்கஃதா மாதத்தில் இடம் பெற்றது அப்படியே துல்ஹஜ் மாதத்திலும் இடம் பெற்று விட்டது.
கவனக் குறைவால் ஏற்பட்ட தவறு. தவறுக்கு வருந்துகிறோம்.

————————————————

விமர்சனம்: முதல் பிறையை நேரத்தை வைத்து கணக்கில் எடுக்கிறீர்களா? அல்லது நாளை
வைத்து கணக்கில் எடுக்கிறீர்களா? ­வ்வால் பிறை திங்கட்கிழமை 29.08.11 UT 03.04 முதல் பிறை என்கிறீர்கள். துல்ஹஜ் பிறை 26.10.11 UT 19.56 முதல் பிறை என்கிறீர்கள்.
அப்பொழுது இந்தியாவில் நேரம் என்ன? பிற நாடுகளில் நேரம் என்ன என்று தெளிவுபடுத்த
வேண்டும். ஷ்வ்வால் முதல் பிறை 3.04 இந்திய நேரம் என்றால் பஜ்ருக்கு முன்னதாக பிறை
தெரிந்தும் அடுத்த நாள் கணக்கிற்கு ஏன் சென்றீர்கள்?

S உமர் சாதிக், மதுரை.

விளக்கம்: உங்களின் இந்த சந்தேகத்தைப் போக்கிக் கொள்ள UT சர்வதேச நேரம் என்றால்
என்ன? நாம் வாழும் இந்திய நாட்டின் ணூறீவீ நேரம் என் றால் என்ன என்பதை விளங்க
வேண்டும். அந்த விபரம் தெரியாததால UT 3.04 ஐ இந்திய நேரம் என்று
குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

தேதிக் கோட்டிற்கு மேற்குப் பகுதி அதாவது உலகின் கிழக்குப் பகுதி
0, 0 hrs என்றிருக்கும் போது தேதிக்கோட்டின் கிழக்குப் பகுதி அதாவது உலகின் மேற்குப் பகுதி
360, 24 hrs என்றிருப்பதையே UT சர்வதேச நேரம் என்று குறிப்பிடு கிறோம். உலகம்
உருண்டையாக இருப்பதால் உலகில் கிழக்குப் பகுதியும் மேற்குப் பகுதியும் மிக அருகேதான்
இருக்கின்றன. கிழக்குப் பகுதி எந்த நிலையில் சூரியனைப் பார்க்கிறதோ அதே நிலையில்
தான் மேற்குப் பகுதியும் பார்க்கிறார் கள். அதாவது கிழக்குப் பகுதி பஜ்ர் தொழும் அதே
நேரத்தில் மேற்குப் பகுதியும் பஜ்ர் தொழுவார்கள். இப்படி ஐங்கால தொழுகைகளையும் அதே
நேரத்தில்தான் தொழுவார்கள். ஆனால் அதே நாளில் அல்ல; கிழக்குப் பகுதியினர் வெள்ளிக்
கிழமை ஐங்காலத் தொழுகைகளை நிறைவேற்றும் அதே நேரத்தில் மேற்குப் பகுதியினர் வியாழன்
ஐங்கால தொழுகைகளை நிறைவேற்றுவார்கள். இது கிழக்குப் பகுதி வெள்ளி ஜுமுஆ தொழும்போது
மேற்குப் பகுதி வியாழன் ளுஹர் தொழுவது கொண்டு உறுதிப்படும்.

கிழக்குப் பகுதிக்கும் மேற்குப் பகுதிக்குமிடையில் சில டிகிரிகள் வித்தியாசம்
இருப்பதால் தொழுகைகளில் சில, பல நிமிடங்கள் வித்தியாசம் இருக்கலாம். அத்துடன்
கிழக்குப் பகுதியினர் மேற்கு நோக்கியும் மேற்குப் பகுதியினர் கிழக்கு நோக்கியும்,
ஒருவர் பின்னால் ஒருவர் என்றில்லாமல், எதிரும் புதிருமாக முதுகைக் காட்டிக் கொண்டு
தொழுவார்கள். இது அல்லாஹ் இயற் கையாக வகுத்த நியதி. இதை உலகில் யாராலும் மாற்ற
முடியாது. பக்கத்தில் மிகமிக அருகில் இருக்கிறோம். எப்படி ஒரு சாராருக்கு வெள்ளியாகவும் மறு சாராருக்கு வியாழனாக இருக்க முடியும் என விதண்டாவாதம் செய்ய முடியாது.

இந்த நியத்திக்குக் கட்டுப்பட்டு கிழக்குப் பகுதியினர்
0, 0 hrsவிலும் மேற்குப்
பகுதியினர் 3600, 24
hrsவிலும் இருக்கும் நிலையில் கணக்கிடப் படுவதேUT-சர்வதேச
நேரமாகும். 29.8.11 திங்கள் UT 3.04 நேரத்தில் சங்கமம்
(Conjunction) ஆகிறதென்றால் அந்த இடம் தேதிக் கோட்டிலிருந்து 46
டிகிரி தூரத்திலிருக்கிறது. இன்னும்
UT
3.04 மணி நேரத்தில் அந்த இடம் சங்கமம் ஆகும்போது தேதிக்கோடு இருந்த இடத்தை அடைந்து
விடும் என்பதே அதன் பொருளாகும். ஆனால் அவர்களது லோக்கல் நேரப்படி காலை பஜ்ரை
அடைவார்கள்.

கன்ஜங்சன் ஆகும்போது நமது நாட்டு UT-சர்வ தேச நேரம் 6.30 ஆகும். அதாவது நமது நாடு
சங்கமம் ஆகும்போது தேதிக்கோடு இருந்த இடத்தை அடைய இன்னும் 6 1/2 மணி நேரம் ஆகும்
என்பதே. நமது IST நேரப்படி நாம் பஜ்ரை அடைவோம்.UT-சர்வதேச நேரத்தையும்
அந்தந்த நாடுகளின் லோக்கல் நேரத் தையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது. அதுவே
வீண் சர்ச்சையை ஏற்படுத்துகிறது.

அதற்கு மாறாக என்று சங்கமம் ஆகின்றதோ அன்று கழியும் மாதத்தின் இறுதிப் பகுதியும்
வரும் மாதத்தின் ஆரம்பப் பகுதியும் அதாவது தேய் பிறையும் வளர்பிறையும் கலந்திருப்ப
தாலும், ஒரு நாள் என்பது முழுமையான 24 மணி நேரம் கொண்டதாக இருக்க வேண்டும்.
அப்போதுதான் மாதத்தின் நாட்களைத் திட்ட மாக எளிதாகக் கணக்கிட முடியும் என்ற
அடிப்படையிலும் சங்கமம்
(Conjunction)  இடம் பெறும் நாளை முழுமையாகக் கழியும்
மாதத் துடன் சேர்த்துவிட்டு அடுத்த நாள் பஜ்ரிலி ருந்து புதிய மாதத்தின் முதல்
நாளாக முதல் பிறையாகக் கணக்கிட வேண்டும் என்பதை கத்ருடைய அந்த நாள் விடியற்காலை (பஜ்ர்)
உதயமாகும் வரை இருக்கும் என்ற 97:5 குர்ஆன் வசனமும், ஒரு நாளின் ஐங்காலத்
தொழுகைகளில் நடுத் தொழுகை அஸர் தொழுகை என்பது 2:238 குர்ஆன் வசனத்தின் விளக்கமாக
புகாரீ ஹதீஸ்கள் 4533, 6396 மற்றும் அல் ஹதீஸ் 1481, 1482 எண்களிலுள்ள ஹதீஸ்களும்
உறுதிப்படுத்துகின்றன.

சங்கமம் ஆகும் நாளில் சில நாடுகள் பஜ்ருக்கு முன்னால் இருந்தாலும், சிலநாடுகள்
அடுத்த நாள் பஜ்ரைத் தாண்டி இருந்தாலும் சங்கமத்திற்கு அடுத்த நாள் பஜ்ரிலிருந்து
முதல் பிறையைக் கணக்கிட்டாதான் உலக முழுவ தும் வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகை போல்
பெருநாள் தொழுகைகளும் ஒரே நாள் 24 மணிக்குள் ஏற்படும்.

சுன்னத் ஜமாஅத்தினர் ரமழான் மாத இரவுத் தொழுகைக்குப் பின்னர் சொல்லிக் கொடுக்கும்
பித்அத்தான நோன்பு நிய்யத்திலும் “”நாளைப் பிடிக்க நிய்யத் செய்கிறேன்” என்று
சொல்லிக் கொடுப்பதே ஹிஜ்ரி 400க்கு பின்னர் மத்ஹபுகள் இந்த மதகுருமார்களால் கற்பனை
செய்யப்பட்டக் காலத்திலும் நாள் அதிகாலை-பஜ்ரிலிருந்து ஆரம்பிக்கிறது என்ற சரியான
கருத்தே இருந்துள்ளது. மத்ஹபுகள் கற்பனை செய்யப்பட்ட அக்காலத்தில் நாள் மஃறிபில்
ஆரம்பிக்கிறது என்ற தவறான கருத்து முஸ்லிம்களிடையே புகுத்தப்பட்டிருக்குமானால், “”நாளைப்
பிடிக்க நிய்யத் செய்கிறேன்” என்று நிய்யத் சொல்லிக் கொடுப்பதற்கு மாற்றமாக “”இன்று
பிடிக்க நிய்யத் செய்கிறேன்” என்றே சொல்லிக் கொடுத்திருப்பார்கள். அப்படிச்
சொல்லிக் கொடுக்கவில்லை.

இதிலிருந்து என்ன உறுதியாகத் தெரிகிறது என்றால் நபி(ஸல்) காலத்திலிருந்து சுமார்
400 ஆண்டுகள், மரியாதைக்குரிய நான்கு இமாம்களின் காலத்திலிருந்து சுமார் 200
ஆண்டுகள் கழித்து மதகுருமார்களால் கற்பனை செய்யப் பட்ட மத்ஹபுகள் நடைமுறைக்கு வந்த
காலக் கட்டத்திலும் நாள் மஃறிபில் ஆரம்பிக்கிறது என்ற யூத மூடக் கொள்கை முஸ்லிம்களிடையே புகுத்தப்படவில்லை என்பது உறுதியாகத் தெரிகிறது.

அதன் பின்னரே யூதர்களாக இருந்து முஸ்லிம்களாக மதம் மாறிய யூத மதகுருமார்களால்
முஸ்லிம்களிடையே புகுத்தப்பட்ட யூத மத மூடக் கொள்கைதான் நாள் மஃறிபில் ஆரம்பிக்கிறது என்ற குர்ஆனுக்கும், ஹதீஸ்களுக்கும் நேர்முரணான மூடக் கொள்கையாகும்.இதை நம் நாட்டு மதகுருமார்களின் நடை முறைகளைக் கொண்டு எளிதாக விளங்க முடி யும்.
ஆரிய மதகுருமார்களால் பெருங்கொண்ட இந்திய மக்களிடம் சுயநலத்துடன் புகுத்தப் பட்ட
ஜாதி வேற்றுமை காரணமாக தீண்டாமை என்ற பேய் இன்று வரை கோரத் தாண்டவ மாடி வருகிறது.
அதனால் பெருங்கொண்ட இந்திய மக்கள் நாயிலும் கேடாக மதிக்கப்படுகிறார்கள்.  உயர்
ஜாதியினர் நாயைத் தொடுவதையோ, நாய் தங்கள் வீட்டினுள் நுழைவ தையோ தீட்டாக
எண்ணமாட்டார்கள்.

ஆனால் ST, SC மக்கள் அடங்கிய தலித்கள் அனைவரும் தீண்டத் தகாதவர்களாக ஆக்கப்பட்டு நாயிலும் கேடாக மதிக்கப்படுகிறார்கள். இந்த தீண்டாமைப் பேயை விட்டு விடுதலை
அடைய அன்றைய இந்து மக்கள் முஸ்லிம் களாக மதம் மாறினார்களே அல்லாமல் மனம் மாறவில்லை.
அதன் விளைவு தீண்டாமைப் பேயை விட்டு அவர்களுக்கு விடுதலை கிடைத் ததே அல்லாமல், ஆரிய
மதகுருமார்களால் சுயநலத்துடன் இந்துக்களிடையே புகுத்தப் பட்ட மூட நம்பிக்கைகள்,
மூடச் சடங்கு சம்பிர தாயங்கள் இவற்றை விட்டு அவர்கள் விடுதலை பெறவில்லை. அத்தனை
அனாச்சாரங்களையும் பெயர்கள் மாற்றங்களோடு அரங்கேற்றி வருகிறார்கள்.

இந்துக்கள் சிலை வடித்து செய்து வரும் அனைத்து மூடச் சடங்கு சம்பிரதாயங்களையும்
மதமாறிய முஸ்லிம்கள் (தர்கா) சமாதி வடித்து செய்து வருகிறார்கள். இந்து மக்களிடம்
காணப் படும் அனைத்து வகை மூட நம்பிக்கைகள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும்
சிந் தாமல், சிதறாமல் பெயர் மாற்றங்களோடு மதம் மாறிய முஸ்லிம்களிடையேயும் காலம் கால
மாகக் காணப்படுகிறது. மவ்லவிகள், ஆலிம்கள், அல்லாமாக்கள் எனத் தற்பெருமையடிக்கும்
இந்த முஸ்லிம் மத குருமார்கள் இவை அனைத்தையும் சுயநலத்துடன் அற்ப உலக ஆதாயத்தை
நோக்கமாகக் கொண்டு நெய்யூற்றி வளர்த்து வருகிறார்கள். இதை இங்கு நாம் கண்கூடாகப்
பார்க்கிறோம்.

இதேபோல் தான் யூதர்களாக இருந்து முஸ்லிம்களாக மதமாறியவர்களும் மதம் மாறினார்களே
அல்லாமல் மனம் மாறவில்லை. அதன் விளைவு யூத மதத்தில் காணப்படும் அனைத்து வகை மூட
நம்பிக்கைகள் சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் முஸ்லிம்களிடையேயும் நுழைந்து விட்டன.
இஸ்ராயிலியத் என்ற கட்டுக் கதைகள் அனைத்தும் அங்கிருந்து இறக்குமதி செய்தவையே!
அப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளில் ஒன்றுதான் நாள் மஃறிபில் ஆரம்பிக்கிறது என்ற மூட
நம்பிக்கையுமாகும். முஸ்லிம்கள் இந்த மூட நம்பிக்கையை விட்டு தவ்பா செய்து மீண்டு
குர்ஆன், ஹதீஸ் கூறும் நாள் பஜ்ரில் ஆரம்பிக்கிறது என்ற சரியான நம்பிக்கைக்கு
வந்துவிட்டால், சவுதி அரேபியா முதல் அனைத்து நாட்டு முஸ்லிம்களும் ஜுமுஆ தொழுகை
உலகம் முழுதும் ஒரே நாள் 24 மணி நேரத்திற்குள் வருவதுபோல் பெருநாள் தொழுகையும் ஒரே
நாள் 24 மணி நேரத்திற்குள் கண்டிப்பாக வந்துவிட வேண்டும் என்பதையும், மாதம் பிறப்பதை அறிவியல் முன்னேற்றம் காரணமாக முன் கூட்டியே அறிய முடியும் என்பதையும் ஏற்றுக்
கொள்வார்கள். ஆனால் இந்த மதகுருமார்கள் ஒருபோதும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். மக்களே
உஷார்! சுயமாகச் சிந்தித்து ஈடேற்றம் (நஜாத்) பெறுங்கள்!!

Previous post:

Next post: