தலையங்கம் :
ரபியுல் அவ்வல் வந்தால் மட்டும் ரசூல்(ஸல்) அவர்கள் நினைவுக்கு வருவார்களா?
“உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும்” “படைத்தவன் உங்களுக்கு அருள் புரியட்டும்” அந்த ஒரே இறைவன் பெயரால்….
1. மீலாத் கொண்டாட்டம் – இஸ்லாத்தின் தராசில்!
ரபியுல் அவ்வல் பிறை 1 வந்துவிட்டால் போதும். பேனர்கள், பந்தல்கள், மீலாது மஜ்லிஸ்கள்.
“யா நபி ஸலாம் அலைக்கா”
ஒலிகள்…. ஆலிம்கள் முப்பது நாளும் “மீலாது பயான்” செய்வார்கள்.
ஆனால், ரபியுல் ஆகிர் வந்தால்?
ஜமாஅத்துல் அவ்வல் வந்தால்?
அதே ஆலிம்கள், அதே மஸ்ஜித், அதே உம்மத்… ஆனால் அமைதி.
கேள்வி : ரசூல்(ஸல்) அவர்கள் ரபியுல் அவ்வல் மாதத்திற்கு மட்டும்தான் சொந்தமா?
1. அடிப்படை கேள்வி : இது தீன்–ஆ அல்லது துன்யாவா?
இஸ்லாத்தில் எந்த அமலும் இரண்டு வகைதான்:
“இபாதத் / வணக்கம்”
“அதத் / பழக்கம்”
ஆதாரம் : குர்ஆன் + ஸஹீஹ் ஹதீத் வேண்டும். மார்க்கத்திற்கு முரணில்லாமல் இருக்கலாம்.
நன்மை : அல்லாஹ் தருவான்… துன்யா பலன் மட்டும் மீலாத் கொண்டாட்டத்தை எந்த பிரிவில் வைப்பீர்கள்?
இது நபி(ஸல்) அவர்கள் மீது கொண்ட அன்பின் அடையாளம், நன்மை கிடைக்கும்! என்றால் அது இபாதத்.
அப்படியானால் ஆதாரம் எங்கே?
2. நபி(ஸல்) அவர்கள் செய்தார்களா? ஸஹாபாக்கள் செய்தார்களா?
இதுதான் இஸ்லாத்தின் அளவுகோல்,
“குல்லு பித்அதின் ழாலாலா!” ஒவ்வொரு புதிய விசயமும் வழிகேடு! முஸ்லிம் : 867
வரலாற்று உண்மைகள்!
1. நபி(ஸல்) தன் பிறந்த நாளில் என்ன செய்தார்கள்?
“அது நான் பிறந்த நாள் என்று சொல்லி திங்கள்கிழமை நோன்பு நோற்றார்கள். முஸ்லிம் : 1162
மீலாது மஜ்லிஸ் செய்யவில்லை. கேக் வெட்டவில்லை, மவ்லிது ஓதவில்லை.
2. குலபாஃஉர் ராசதீன் நான்கு கலீஃபாக்களும்…
25 வருடம் ஆட்சி. ஆனால் ஒரு முறை கூட மீலாத் கொண்டாடவில்லை. அவர்கள் நம்மை விட நபியை குறைவாக நேசித்தார்களா? நவூதுபில்லாஹ்!
3. முதன் முதலில் :
மீலாத் கொண்டாட்டம் ஹிஜ்ரி 4ம் நூற்றாண்டில் எகிப்து “பாத்திமிசயா” ஆட்சியாளர்களால் ஆரம்பிக்கப்பட்டது. நபி(ஸல்) வஃபாதாகி 400 வருடம் கழித்து வந்த புதிய விஸயம்.
கேள்வி: நபியும், ஸஹாபாக்களும் விட்டுவிட்ட நன்மையை நாம் மட்டும் கண்டுபிடித்து விட்டோமா?
3. அன்பு இருந்தால் கொண்டாடலாமே? என்ற வாதத்திற்கு பதில்!
அன்பு = வார்த்தை அல்ல. அன்பு = வழிபடுதல்.
அல்லாஹ் சொல்கிறான்:
“நீங்கள் அல்லாஹ்வை நேசித்தால் என்னை பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான்!” என்று நபியே நீர் கூறுவீராக! ஆல இம்ரான் 3:31
அன்பின் மூன்று அடையாளம் :
1. அவர்கள் வாழ்ந்தபடி வாழ்வது!
சுன்னத், தாடி, ஹிஜாப், வியாபார நேர்மை.
2. அவர்கள் தடுத்ததை விடுவது: பித்அத், மூட நம்பிக்கை, இசை, கலப்பு…
3. அவர்கள் காட்டியபடி அல்லாஹ்வை வணங்குவது : ஐந்து நேர தொழுகை, ஜமாத்.
ரபியுல் அவ்வலில் மட்டும் பேனர் கட்டுவது அன்பா?
365 நாளும் சுன்னத்தை உயிர்ப்பிக்காமல் 12ம் பிறை மட்டும் “மீலாது” கொண்டாடுவது அன்பா?
4. ரபியுல் அவ்வலின் உண்மையான சோகம்!
இந்த மாதம் பிறந்த மாதம் மட்டுமல்ல. இதே மாதம் 12ம் பிறை தான் நபி(ஸல்) அவர்கள் வஃபாத்தான நாள் என்பது ஜம்ஹூர் உலமாக்களின் கருத்து. ஸஹாபாக்கள் இந்த மாதம் வந்தால் அழுதார்கள். நாம் இனிப்பு சாப்பிடுகிறோம்.
ஒரு தாய் இறந்த நாளில் பிள்ளைகள் பார்ட்டி செய்தால் அதற்கு பெயர் என்ன?
5. அப்போது என்ன செய்யவேண்டும்?
நபி(ஸல்) அவர்களின் அன்பை நிரூபிக்க மூன்று வழிகள் இருக்கிறது. அதுவே சுன்னத்:
1. திங்கள் வியாழன் நோன்பு!
நபி(ஸல்) அவர்கள் பிறந்ததற்காக…
2. தினமும் ஸலவாத்!
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மத்…
3. சீரத் படித்து அதன்படி வாழ்வது!
வீட்டில், கடையில், குடும்பத்தில்….
இதற்கு பந்தலும் பேனரும் தேவையில்லை. நிய்யத்தும் அமலும் போதும்.
முடிவுரை : ஒரே ஒரு கேள்வி !
ரபியுல் அவ்வல் முடிந்து 13ம் பிறை வந்தால் நபி(ஸல்) அவர்கள் மேல் கொண்ட அன்பு முடிந்துவிடுமா?
இல்லை! நபி(ஸல்) நமக்கு 12 மாதமும், 24 மணி நேரமும் சொந்தம்! அவர்களை நேசிப்பது மீலாது மஜ்லிஸில் அல்ல. அவர்கள் காட்டிய இஸ்லாத்தின் வழியில் வாழ்ந்து காட்டுவதில் தான்! இன்று உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை நான் பூரணப்படுத்திவிட்டேன்!
அல்மாயிதா 5:3
மார்க்கம் பூரணமான பிறகு நாம் எதை புதிதாக சேர்க்கிறோம்?
அல்லாஹ் நம் அனைவருக்கும் சுன்னத்தின் மீது உறுதியையும், பித்அத்தை விட்டு விலகும் பாக்கியத்தையும் தருவானாக. ஆமீன்!