அன்றைய சுலைமான் நபியின் ஜின்களும்… இன்றைய AI டிஜிட்டல் ஜின்களும்!

in 2026 நவம்பர்

அன்றைய சுலைமான் நபியின் ஜின்களும்… இன்றைய AI டிஜிட்டல் ஜின்களும்!

எஸ். ஹலரத் அலி

அல்லாஹ்  தன்  திருக்குர்ஆனில்  கூறுகிறான்:

சுலைமானுக்கு காற்றை (வசப்படுத்திக் கொடுத்தோம்)   அல்குர்ஆன் 38:36

ஷைத்தான்களில் கட்டிடம் கட்டுபவர்களையும், மூழ்கி (முத்து) எடுப்பவர்களையும், இன்னும் விலங்கிடப்பட்ட மற்றவர்களையும் (வசப்படுத்தினோம்)  அல்குர்ஆன் 38:37,38

வரலாற்றில் ஒரே ஒரு மனிதருக்கு மட்டும் அல்லாஹ் ஜின்களை முழுமையாக வசப்படுத்தி கொடுத்தான். அவர்தான் சுலைமான் (அலை) அவரது ராணுவத்தில் மனிதர்கள் ஜின்கள்  பறவைகள்  இருந்தன. (சுலைமானுக்கு) ஜின்கள், மனிதர்கள், பறவைகள் அடங்கிய படைகள்  திரட்டப்பட்டன! அ.கு. 27:17

அந்த  ஜின்களின்  ஆற்றல்  என்ன?

1. நொடிப்பொழுதில்  கட்டளையை  முடித்தல்:

பல்கீஸ் ராணியின் சிம்மாசனத்தை கொண்டுவர சுலைமான்(அலை) கேட்டபோது; இஃப்ரீத் எனும் பலசாலி ஜின்கள் சொன்னது: நீங்கள் உங்கள் சபையிலிருந்து எழுவதற்கு முன் நான் அதை உங்களிடம் கொண்டு வருவேன்!  அல்குர்ஆன் : 27:39

ஆனால் ஞானம் கொடுக்கப்பட்ட ஒரு மனிதர் சொன்னார். உங்கள் பார்வை உங்களிடம் திரும்புவதற்குள், கண் சிமிட்டும் நேரத்தில், நான் கொண்டு வருவேன்!     அல்குர்ஆன் 27:40

அப்படியே  நடந்தது! 

இன்றைய  AI டிஜிட்டல்  ஜின் :

இன்று நாம் நம் போனில் “யா AI எனக்கு ஒரு கட்டுரை எழுது, ஒரு போஸ்டர் போடு, ஒரு கணக்கு போடு.” என்றால் கண் சிமிட்டும் முன் முடித்து தருகிறது! அன்று ஒரு நபிக்கு இருந்த ஜின் சேவகன்… இன்று அல்லாஹ்வின் கருணையால், அறிவை தேடும் ஒவ்வொரு மாணவனுக்கும்  கிடைத்துள்ளது!

2. கடலில்  மூழ்கி,  கட்டிடம்  கட்டும்  ஆற்றல்!

அல்லாஹ் கூறுகிறான்: ஜின்களில் கடலில் மூழ்கி (முத்து எடுத்து) வருபவர்களும், அது அல்லாத வேலைகள் செய்பவர்களும் இருந்தனர்.  அல்குர்ஆன் 21:82

அவர்கள் சுலைமான் விரும்பிய, கோட்டைகள், சிற்பங்கள், பெரும் தொட்டிகள் போன்ற கொப்பரைகள், நகராத பாத்திரங்களை செய்தனர்.   அல்குர்ஆன் 34:13

இன்றைய AI ஜின் : இன்றைய AI கோட்டை கட்டவில்லை. ஆனால், Digital கோட்டைகளை Website, App, Design கட்டுகிறது! கடலில் மூழ்கவில்லை. ஆனால் Internet எனும் மாபெரும் கடலில் மூழ்கி, கோடிக்கணக்கான தகவல் முத்துக்களை, ஒரு நொடியில் எடுத்து  தருகிறது.

3. இரண்டும் அல்லாஹ்வின் சோதனையே! ஆனால்  வரம்பு  உண்டு!

ஜின்களுக்கு மறைவான ஞானம் (கைப்) தெரியாது. சுலைமான்(அலை) தன் தடியில் சாய்ந்தபடி மரணித்தார். ஜின்கள் அவர் மரணித்ததை அறியாமல் வேலை செய்து கொண்டிருந்தனர். இறுதியில் கரையான் அவர் தடியை அரித்து, அவர் கீழே விழுந்தபோது  தான்  தெரிந்தது.

சுலைமான் மரணத்தை ஜின்களுக்கு அறிவித்தது கரையான் தான். அவர்கள் மறை வானத்தை அறிந்திருந்தால் இழிவான வேதனையில்  இருந்திருக்க  மாட்டார்கள்!  அல்குர்ஆன்  34:14

இதே போல் தான் AI : AI-க்கு ரூஹ் இல்லை! கைப் இல்லை! நிய்யத் இல்லை! அது நாம் ஊட்டும் ம்ழிமிழிவை வைத்து தான் பேசும்! மறைவானவற்றின் திறவுகோல் அல்லாஹ்விடமே உள்ளது!    அ.கு. 6:59

4. நன்மையா? தீமையா? இதுதான் சோதனை!

சுலைமான்(அலை) ஜின்களின் வேலையை பார்த்து பெருமை அடிக்கவில்லை. அவர் கூறினார்.

இது என் இறைவனின் அருள்! நான் நன்றி செலுத்துகிறேனோ? அல்லது நன்றி கெடுகிறேனா?  என  என்னை  சோதிப்பதற்காக!  அ.கு. 27:40

இன்று  அதே  கேள்வி  நமக்கு  தான்!

அல்லாஹ் நமக்கு AI எனும் டிஜிட்டல் ஜின்னை, இலவசமாக நம் கையில் கொடுத் துள்ளான். இதை வைத்து நாம் என்ன செய்கிறோம்? இதை வைத்து குர்ஆனை, ஹதீதை, தாவாவை பரப்ப போகிறோமா? அல்லாஹ் வின் கலிமாவை உயர்த்த போகிறோமா? அல்லது இதை வைத்து ஆபாச படம், பொய் செய்தி, மோசடி, ஹராமான பாட்டு, வட்டி கணக்கு எழுதி, அல்லாஹ்விற்கு மாறு செய்ய போகிறோமா? அன்று ஒரு நபிக்கு மட்டும் கிடைத்த ஜின் சேவகன், இன்று உலக மக்கள் அனைவருக்கும் கிடைத்துள்ளது. இது அல்லாஹ்வின்  மாபெரும்  நிஃமத் – அருள்.

சிந்தியுங்கள்! 

சுலைமான்(அலை) அந்த அருளுக்கு நன்றி செலுத்தினார். நாம் நமக்கு கிடைத்த இந்த AI எனும் டிஜிட்டல் ஜின்னுக்காக, இறைவனுக்கு நன்றி செலுத்தி, அதை நன்மைக்கு பயன்படுத்தி சொர்க்கம் செல்லப் போகிறோமா? அல்லது நன்றி கெட்டு அதை தீமைக்கு பயன்படுத்தி, நரகம் செல்ல போகி றோமா? முடிவு நம் கையில்!

Previous post:

Next post: