மனிதனின் வாழ்நாள் 60-70 ஆண்டுகளா? அல்லது 950 ஆண்டுகளா? அல்லாஹ்வின் கணக்கில் நம் ஆயுள் எத்தனை நொடிகள்?

in 2026 நவம்பர்

மனிதனின் வாழ்நாள் 60-70 ஆண்டுகளா? அல்லது 950 ஆண்டுகளா?
அல்லாஹ்வின் கணக்கில் நம் ஆயுள் எத்தனை நொடிகள்?

எஸ். ஹலரத் அலி

மனிதன் இவ்வுலகில் சராசரியாக 60-70 ஆண்டுகள் வாழ்கிறான். ஆனால் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பிய பின் “எவ்வளவு காலம் வாழ்ந்தீர்கள்?” என்று கேட்கப்படும் போது. “ஒரு நாள் அல்லது சில மணி நேரம்” என்று பதிலளிக்கிறான். இது எப்படி சாத்தியம்? முன்னோர் களின் நீண்ட ஆயுள். ஆனால் பதில் ஒன்றே! நாம் 60-70 ஆண்டுகள் வாழ்கிறோம்.  ஆனால்  முன்னோர்கள்.

நூஹ்(அலை) தஃவா மட்டும் 950 ஆண்டுகள்  மொத்த  வாழ்க்கை  1000 + ஆண்டுகள்.

நூஹை நாம் அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம். அவர் அவர்களிடையே ஐம்பது ஆண்டுகள் குறைந்த ஆயிரம் ஆண்டுகள்  தங்கியிருந்தார். அல்குர்ஆன் 29:14

ஆது கூட்டம் : 60 முழம் உயரம், 400-500 ஆண்டுகள் வாழ்ந்தனர். ஆனால் அவர்களும் மறுமையில்  சொல்லும்  பதில்  அதேதான்!

நாங்கள் ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சில பகுதி தான் தங்கியிருந்தோம். அ.கு.23:113

அவர்கள் அதைப் பார்க்கும் நாளில், மாலை அல்லது காலை நேரம் தான் வாழ்ந்தது போல்  தோன்றும். அல்குர்ஆன் 79:46

2. அல்லாஹ்வின் கடிகாரம் வேறு! பூமியின் கடிகாரம் வேறு!

நிச்சயமாக உம் இறைவனிடம் ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடும் ஆயிரம் ஆண்டுகளுக்கு  சமம். அல்குர்ஆன் 22:47

ஒரு நாள் ஐம்பதினாயிரம் ஆண்டுகளுக்கு சமமாக  இருக்கும். அல்குர்ஆன் 70:4

இந்தக்  கணக்கில்  பாருங்கள் :

அல்லாஹ்வின் 1 நாள் = 1000 ஆண்டுகள் =24 மணி நேரம். நூஹ்(அலை) 950 ஆண்டு கள் = 22 மணி 48 நிமிடம் (ஒரு நாள் கூட இல்லை) நாம் 60 ஆண்டுகள்=1 மணி 26 நிமிடம் தான்! 70 ஆண்டுகள்=1 மணி 40 நிமிடம் தான்! சூத்திரம் : 60+1000மு24=1மணி  26  நிமிடம்.

ஆக, பூமியில் 1000 ஆண்டுகள் வாழ்ந்தாலும், அல்லஹ்விடம் ஒரு நாளுக்குள் தான்! அதனால் தான் 950 ஆண்டுகள் வாழ்ந்தவரும், 60 ஆண்டுகள் வாழ்ந்த நாமும் “ஒரு நாள் வாழ்ந்தோம்”  என்கிறோம்.

3. முழு காரணம்: மேலும் மூன்று உண்மைகள்!

அ) மறுமையின்  அதிர்ச்சி!  

மஹ்­ரின் நீளம் 50,000 ஆண்டுகள்! நரகத்தின் பயங்கரத்தைப் பார்த்த பின், மூளை துன்யா வாழ்க்கையை மறந்துவிடும் 10 மணி நேரம் வேலை செய்தவன் 1 மணி நேரம் தூங்கி எழுந்து 5 நிமிடம் தான் தூங்கினேன் என்பது போல!

ஆ. பர்ஸக்  (கப்ரு)  வாழ்க்கை :

மரணித்து கியாமத் வரை கப்ரில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள்! அதன் முன் 60 ஆண்டு துன்யா  ஒன்றுமே  இல்லை!

இ. நித்தியத்திற்கு  முன்  எல்லாம்  சிதறியது:

கடலுக்கு முன் ஒருதுளி போல! 950 ஆண்டும், 60 ஆண்டும், முடிவில்லா ஆகிராவுக்கு  முன்  ஒரு  நாள்  தான்!

4. குறைவான ஆயுள், அல்லாஹ்வின் ரஹ்மத்!

ரசூல்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :

என் உம்மத்தின் ஆயுள் 60 முதல் 70 வயதுக்கு இடையில் உள்ளது.  திர்மிதி: 3550

முன் சமூகம் 500 ஆண்டுகள் வாழ்ந்தால் 40 ஆண்டுகள் பாவம் செய்ய வாய்ப்பு! நமக்கு 60 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் தூக்கத்தில் சென்றுவிடுகிறது. மீதி 30 ஆண்டுகள் தான் கணக்கு! குறைவான வாழ்வு=குறைவான கணக்கு, ஹிஸாப்! அதே நேரம் நன்மைக்கு வாய்ப்பு  பெரியது!

லைலத்துல் கத்ர் ஒரு இரவு ஆயிரம் மாதங்களை (சுமார் 83 ஆண்டுகள்) விட சிறந்தது. அல்குர்ஆன் 97:3

நூஹ்(அலை) 950 ஆண்டுகளில் சம்பாதிக்காததை.  நாம்  ஒரு  இரவில்  சம்பாதிக்கலாம்!

முடிவுரை : 60 ஆண்டுகளோ, 950 ஆண்டுகளோ, அல்லாஹ்வின் கடிகாரத்தில் ஒரு நாள் தான்!  அந்த  ஒரு  இறுதி  நாள் வருவதற்குள்…

இந்த ஒரு நாளை வீணாக்கி விடாதீர்கள்! சந்தித்து சேமியுங்கள்!

Previous post:

Next post: