நான் படைக்கவில்லை! படைக்கப்பட்ட இறை ஒழுங்கை படித்தேன்!
அறிவியல் அறிஞர் லின்னேயஸ் வாக்குமூலம்!
– எஸ். ஹலரத் அலி
“அல்லதீ கலக ய்பஸவ்வா!”
அவனே (எல்லா படைப்புகளையும்) படைத்து, (அவற்றை) ஒழுங்குபடுத்தியவன். அல்குர்ஆன் : 87:2
ஒரு மாணவன் ஆசிரியரிடம் கேட்டான்.
“சார், உயிரினங்களை வகைப்படுத்தியது லின்னேயஸ் தானே? அப்புறம் ஏன் அல்லாஹ் “நான் தான் ஒழுங்குபடுத்தினேன்‘ என்கிறான்?”
இந்த ஒரு கேள்விக்குள் தான் நவீன நாத்தி கத்தின் மொத்த வாதமும், குர்ஆனின் மொத்த பதிலும் இருக்கிறது!
யார் இந்த லின்னேயஸ்?
கார்ல் லின்னேயஸ் 1707-1778. ஸ்வீடன் நாட்டை சேர்ந்த தாவரவியல் விஞ்ஞானி. 1735ல் தனது (இயற்கையின் ஒழுங்கு) என்ற புத்தகத்தில் முதன் முதலில் உயரினங்களை ஒழுங்காக பிரித்தார். அவர் தான் இன்று நாம் பள்ளியில் படிக்கும்.
Kingdom>Phylum>Class>Order>Family>Genus>Species என்ற 7படி வகைப்பாட்டை உருவாக்கியவர்.
மனிதனுக்கு Homo Sapiens என்று அறிவியல் பெயர் வைத்ததும் இவர்தான்!
ஆச்சரியம் என்னவென்றால் :
இவர் ஒரு தீவிர கிறிஸ்தவர்! இவர் தனது புத்தகத்தின் முதல் பக்கத்தில் எழுதினார்.
”Deus Creavit, Linnaeus Disposult”
“படைத்தது இறைவன், வகைப்படுத்தி யது லின்னேயஸ்” அதாவது, அவரே ஒத்துக் கொண்டார்.
“நான் படைக்கவில்லை, படைப்பின் ஒழுங்கை நான் வகைப்படுத்தினேன்.”
இவர் வாழ்ந்தது நபி(ஸல்) அவர்களுக்கு 1000 வருடம் பின்! ஆனால் குர்ஆன் 1400 வருடம் முன்பே “படைத்து ஒழுங்குபடித்தினான்” என்று சொல்லிவிட்டது.
இதுதான் குர்ஆனின் முன்னறிவிப்பு :
1. இரண்டு வார்த்தைகளுக்கு இடையே ஒரு பிரபஞ்சம்!
குர்ஆன் இரண்டு வார்த்தைகளை பயன்படுத்துகிறது. (கலக)-படைத்தான், (பஸவ்வா) –ஒழுங்கு படுத்தினான்.
படைப்பது வேறு, ஒழுங்குபடுத்துவது வேறு!
சித்தாள், கொத்தனார்–செங்கல், மணல், சிமெண்டை கொண்டு வந்துபோடுவது–கலக. அதை வைத்து அழகான வீடாக, கதவு ஜன்னல் சரியாக காற்றோட்டத்துடன் கட்டுவது – ஸவ்வா!
அல்லாஹ் வெறும் படைப்பாளன் மட்டும் அல்ல (Perfectionist Designer)
2. நாம் செய்வது Classification அல்ல, Identification) மனிதன் இதுவரை ஒரு புதிய உயிரையும் படைக்கவில்லை. நாம் செய்வதெல்லாம். Already Organized-ஆக இருப்பதை கண்டுபிடித்து Board வைப்பது!
ஒரு உதாரணம் : காட்டில் ஒரு யானை நடந்து போகிறது. அதன் கால் தடம் பதிகிறது. நீங்கள் வந்து அந்த தடத்தை பார்த்து “இது யானை தடம்” என்று சொல்கிறீர்கள்.
நீங்கள் யானையை படைத்தீர்களா? தடத்தை பதித்தீர்களா? இல்லை! இருந்த தடத்தை கண்டுபிடித்தீர்கள். அதுபோல தான் Taxonomy! அல்லாஹ் ஒவ்வொரு உயிருக்கும் Genetic Barcode வைத்துவிட்டான். நாம் அந்த Barcode படித்து “இது பூனை குடும்பம். இது நாய் குடும்பம் என்கிறோம். லின்னேயஸ் ஒழுங்கு படுத்தவில்லை. ஒழுங்கை வகைப்படுத்தினார். அதனால் தான் அவரே சொன்னார்.
“System Natural is a Window to See God’s Order!”
“இயற்கை அமைப்பு என்பது இறைவனின் ஒழுங்கைக் காணும் ஞானம்.”
3. “பஸவ்வா‘ – வின் நான்கு அதிசய ஒழுங்குகள்!
அ. Engineering – ஒழுங்கு.
மனித கண்ணில் 13 கோடி ஒளி செல்கள். ஒரு செல் கெட்டாலும் பார்வை போகும்! ஆனால் அல்லாஹ் ஒவ்வொரு செல்லையும் இரத்த நாளத்துடன் இணைத்து, கண்ணீரால் கழுவி, இமையால் பாதுகாத்து என்ன ஒரு Engineering.
ஆ. Genetic – ஒழுங்கு :
இதுதான் Species Barrier பூனை+பூனை= பூனை தான்! 1000 வருடம் முயன்றாலும் பூனைக்கு நாய் பிறக்காது. இந்த Lock-ஐ வைத்தது யார்? இந்த Lock-ஐ தான் நாம் “Species”- (இனங்கள்) என்கிறோம். அதை நாம் கண்டு பிடித்தோம். அல்லாஹ் Lock –ஐ பூட்டினான்!
இ. Software – ஒழுங்கு :
அடுத்த வசனம் சொல்கிறது :
விதியை நிர்ணயித்து வழிகாட்டினான்.
பிறந்த குழந்தைக்கு பால் குடிக்க யார் சொல்லிக் கொடுத்தது?
தேனீக்கு ஆறு கோண கூடு கட்ட யார் Engineering படிப்பு கொடுத்தது?
பறவைக்கு திசையறிந்து போக யார் GPS பொருத்தியது? இது எல்லாம் Hardware-ல் பொருத்தப்பட்ட Software.
ஈ. Cosmic – ஒழுங்கு :
யானை சாணம் போட்டால் அதில் வண்டு முட்டையிடும். அந்த வண்டை பறவை தின்னும் ஒன்று இல்லாமல் மற்றொன்று இல்லை. இது தான் Food Web!
இதை Design செய்தவன் அல்லாஹ்! நாம் பிறகு வந்து “Ecology” என்று பெயர் வைத்தோம்.
4. ஒரு கேள்வி நாத்திகர்களுக்கு !
ஒழுங்கு இல்லாத இடத்தில் வகைப்படுத்த முடியுமா? உங்கள் வீட்டு குப்பை தொட்டியை Kingdom, Phylum, Class என்று வகைப்படுத்த முடியுமா? முடியாது! ஏன்? அங்கு ஒழுங்கே இல்லை! ஆனால் ஒரு நூல கத்தை வகைப்படுத்த முடியும்! ஏன்? அங்கு ஏற்கனவே ஒழுங்கு இருக்கிறது!
பிரபஞ்சத்தை நம்மால் வகைப்படுத்த முடிகிறது என்றாலே, அது ஏற்கனவே ஒழுங்கு படுத்தப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்! அதை ஒழுங்குபடுத்தியவன் தான் அல்லாஹ்! நாம் நூலகர்கள் அல்லாஹ் நூலகத்தை கட்டியவன்
முடிவுரை : மனிதனின் வீeமுலிஐலிதுதீ என்பது அல்லாஹ்வின் வீழிவிழஷ்தீழிஜு–வுக்கு (ஒழுங்குக்கு) சாட்சி சொல்லும் ளீerமிஷ்க்ஷூஷ்உழிமிe! அதனால் தான் அல்லாஹ் கேட்கறான்.
ஒவ்வொன்றையும் கச்சிதமாக செய்த அல்லாஹ்வின் படைப்பு இது! அல்லாஹ் படைக்கவில்லை என்றால், நீங்கள் எதை வகைப்படுத்துவீர்கள்?
இன்னும், நீர் மலைகளைப் பார்த்து அவை மிகவும் உறுதியாக இருப்பதாக எண்ணுகிறீர்; (எனினும் அந்நாளில்) அவை மேகம் நகர்வது போல் நகரும், ஒவ்வொரு பொருளையும் உறுதியாக்கிய அல்லாஹ்வின் செயலாக (அவ்வாறு நிகழும்); நிச்சயமாக அவன் நீங்கள் செய்வதை நன்கு அறிவான். (27:88)