பேய், பிசாசு, ஜின் : பிளாஸ்மா அறிவியலின் பார்வையில்…

in 2026 நவம்பர்

பேய், பிசாசு, ஜின் : பிளாஸ்மா அறிவியலின் பார்வையில்…

– எஸ். ஹலரத் அலி

அறிவியலும், ஆன்மீகவும் ஒரு புள்ளியில் சந்திக்கும்போது….

ஆதிகாலம் தொட்டு மனித கற்பனையை ஆக்கிரமித்துவரும் பேய், பிசாசு, ஏலியன் என்ற கருத்துகள் உண்மையில் ஒரே படைப்பினத்தின் வெவ்வேறு பெயர்களா?

அல்குர்ஆன் கூறும் ஜின்கள் இன்றைய அறிவியல் உலகம் தேடும் ஏலியன்களாக வேற்று கிரகவாசிகளாக இருக்க முடியுமா?

இந்த கேள்வி இன்று மிகவும் பொருத்தமானதாக மாறியுள்ளது. ஏனெனில் நவீன அறிவியலின் கண்டுபிடிப்புகள் பல நூற்றாண்டுகளாக மனிதன் பயந்துவந்த “பேய்” என்ற கருத்தை மீண்டும் புதிய கோணத்தில் பார்க்க வைத்துள்ளன.

ஜின்கள் : பிளாஸ்மா நிலையில் படைக்கப்பட்ட உயிரினம்!

இஸ்லாத்தின் பார்வையில் பேய் என்று தனியாக ஒரு படைப்பு இல்லை. நெருப்புக் கொழுந்திலிருந்து படைக்கப்பட்ட ஜின்கள் என்ற ஒரு படைப்பினம் உள்ளது. அல்குர்ஆன் கூறுகிறது.

களிமண்ணிலிருந்து, அவன் மனிதனைப் படைத்தான். நெருப்புக் கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான்.   அ.கு.55:14,15

இங்கு “நெருப்புக் கொழுந்து” என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ள அரபுச் சொல், புகையற்ற  நெருப்பு அல்லது பிளாஸ்மா நிலையைக் குறிக்கிறது.

பிளாஸ்மா என்பது திட, திரவ, வாயு நிலைகளுக்கு அப்பற்பட்ட நான்காவது நிலை! அயனியாக்கப்பட்ட வாயு, ஜின்கள் இந்த நிலையில் படைக்கப்பட்டதால், அவற்றால் அண்டவெளியில் குறுகிய நேரத்தில் சுற்றிவர முடியும்; இடம், காலம், வெளி ஆகியவை அவற்றுக்குப்  பொருட்டல்ல.

ஜின்கள் நம் கண்களுக்குத் தெரியாது. ஆனால் அவற்றால் நம்மைப் பார்க்க முடியும். அவை மின்காந்த வெப்ப அலை வடிவில் உள்ளன.

அச்சிவப்பு  கதிர்களை  வெளியிடும்  தன்மை  கொண்டவை. 

இரவில் அமானு´ய உருவங்களைப் பார்ப்பவர்கள் அந்த இடம் சில்லென்றோ அல்லது திடீரென்று வெப்பமாகவோ  இருந்ததாகக்  கூறுவது  இதன்  காரணமே.

நவீன  அறிவியல்  என்ன  சொல்கிறது?

பிளாஸமா உயிரினங்கள் ஆய்வுகள் மற்றும் சான்றுகள்!

2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வுகள், பிளாஸ்மாக்கள்  சுய ஒழுங்கமைப்பு மூலம் உயிரினப் பண்புகளை வெளிப்படுத்துவதை உறுதிப்படுத்துகின்றன.

அயனியாக்கப்பட்ட வாயுக்கள் சில சூழ் நிலைகளில் “உயிர் போன்ற” அமைப்புகளாக மாறுகின்றன என்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

மிக முக்கியமாக, 2024 ஆம் ஆண்டு :  

இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், நாசா விண்வெளிசட்டில் பணிகளில் 10 தனித்தனி முறை பிளாஸ்மாக்கள் படம் பிடிக்கப்பட்டுள்ளன. இவை வெப்பமண்டலத்தில் சுமார் 1 கிலோமீட்டர் அளவு வரை  காணப்பட்டன. 

இந்த பிளாஸ்மாக்கள் பல செல் உயிரினங்களைப்  போல  நடந்துகொண்டன.

வேகமாகச்  செல்வது,

மெதுவாகுவது,

நிற்பது,

ஒன்று சேர்வது,

ஒன்றையயான்று  துரத்துவது,

மின்காந்த கதிர்வீச்ச உண்பது போன்ற நடத்தைகளை  வெளிப்படுத்தின.

இந்தப் பிளாஸ்மாக்களின் பறக்கும் பாதைகளைக் கணினி பகுப்பாய்வு செய்தபோது, அவை 45,90,180 டிகிரி திசை மாற்றங்களை செய்வதும், வேட்டையாடும் நடத்தையை வெளிப்படுத்துவதும் கண்டறியப்பட்டது. இவை தற்செயலான இயற்கை நிகழ்வுகள் அல்ல. மாறாக ஒரு வகையான உயிரியல் நடத்தை என்பது ஆய்வாளர்களின் கருத்து.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் புரட்சிகரமான கண்டுபிடிப்புகள்!

2025ஆம் ஆண்டு, வானியல் உலகில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வு, ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் K2-18b என்ற வெளிக்கோளின் வளிமண்டலத்தில் டைமெதில் சல்பைடு  என்ற மூலக்கூறு கண்டறியப்பட்டது.

பூமியில், இந்த மூலக்கூறு கடல் பைட்டோபிளாங்க்டன்களால் மட்டுமே உற்பத்தி செய்யப் படுகிறது. அதாவது, உயிரினங்களால் மட்டுமே.

இந்தக் கண்டுபிடிப்பு, சூரியக் குடும்பத்திற்கு வெளியே உயிர் இருக்கக்கூடும் என்பதற்கான இதுவரை கிடைத்த மிக வலுவான சான்றாக வானியலாளர்களால் வர்ணிக்கப்படுகிறது.

K2-18b பூமியை விட 8 மடங்கு பெரியது. மற்றும் அதன் நட்சத்திரத்தின் வாழக்கூடிய மண்டலத்தில் அமைந்துள்ளது. அங்கு நீர் திரவ நிலையில் இருக்கக்கூடும்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வானியல் பேராசிரியர் நிக்கு மதுசூதன் தலைமையிலான குழு. The Astrophysical Journal Letters:

இதழில் இந்த ஆய்வு வெளியிட்டுள்ளது. எனினும், அறிவியலாளர்கள் இன்னும் முழுமையான உறுதிப்பாட்டை அளிக்கவில்லை. கூடுதல் தரவுகள் தேவை எனக் கருதுகினறனர். பின்னர் வந்த மறு பகுப்பாய்வுகள் DMS இருப்பதற்கான புள்ளி விவர முக்கியத்துவம் குறைவு  எனக்  கூறுகின்றன.

அகச்சிவப்பு தொலைநோக்கிகள் புதிய தேடல் முறை!  

2025ஆம் ஆண்டில், ஹார்வர்ட் ஸ்மித் சோனியன் வானியல் மையம் மற்றும் கலிலியோ திட்டம் இணைந்து “டலெக்” என்ற புதிய ஆல்ஸ்கை அகச்சிவப்பு கேமராவை  அறிமுகப்படுத்தியுள்ளன.

இது வானில் உள்ள அசாதாரண பொருட்களை அகச்சிவப்பு, ஒளியியல், ரேடியோ மற்றும் ஒலி அலைகள்  மூலம்  கண்டறியும்  திறன்  கொண்டது.

இந்த முயற்சியானது, வானியலாளர்கள் பல தசாப்தங்களாக ரேடியோ தொலைநோக்கிகள் மூலம் (புயிஷ்ழிஐவி) ஏலியன்களைத் தேடியதன் தோல்விக்குப் பிறகு எடுக்கப்பட்ட ஒரு புதிய அணுகு முறையாகும். ஏனெனில், பிளாஸ்மா வடிவில் உள்ள ஜின்கள் அகச்சிவப்பு கதிர்களை வெளியிடும் தன்மை கொண்டவை!

எனவே, அகச்சிவப்பு தொலைநோக்கிகளே அவற்றைக் கண்டறிய மிகவும் பொருத்தமான கருவிகள். இந்த ஆய்வு மார்ச் 2025ல் நடைபெற்ற சந்திரன் மற்றும் கோள் அறிவியல் மாநாட்டில் வழங்கப்பட்டது.

பிளாஸ்மா அறிவியலின் தத்துவார்த்த அடித்தளம் :

2025ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு தத்துவார்த்த ஆய்வு. வாழ்க்கையானது கோள்கள். பெருங்கடல்கள் அல்லது வளிமண்டலங் கள் தோன்றுவதற்கு முன்பே, விண்மீன் இடைவெளி பிளாஸ்மாவின் மின்காந்த கட்டமைப்புகளில் தோன்றியிருக்கலாம் என்ற புதிய கோட்பாட்டை முன்வைக்கிறது.

மின்சாரம் மற்றும் காந்தப்புலங்ளின் ஒழுங்கமைக்கும் திறன், இழை பிளாஸ்மா கட்டமைப்புகள் மற்றும் ஒத்திசைவான பல சீரமைக்கப்பட்ட மின்னோட்டங்களை உருவாக்குவதன் மூலம், உயிர் போன்ற வடிவங்கள் உருவாக வழிவகுத்திருக்கலாம் என்று இந்த ஆய்வு வாதிடுகிறது. இந்தக் கோட்பாடு, ஜின்கள் பிளாஸ்மா நிலையில் படைக்கப்பட்டவர்கள் என்ற அல்குர்ஆனின் கூற்றுடன் அறிவியல் ரீதியாக ஒத்துப்போகிறது.

முடிவுரை : இரு அறிவுத் துறைகளின் சங்கமம்!

1927ஆம் ஆண்டே சர் பிரான்சிஸ் யங் ஹஸ்பெண்ட் “நட்சத்திரங்களில் உயிர்கள்” என்ற நூலில் நட்சத்திரங்களில் உயிரினங்கள் வாழ வாய்ப்புள்ளது என்று கூறியிருந்தார். 1980ஆம் ஆண்டில் விஞ்ஞானிகள் ஃபெயின் பெர்க்  மற்றும்  ஷாப்பிரோ. 

“பூமிக்கு அப்பால் உயிர்கள்” என்ற ஆய் வில் “பிளாஸ்மா பஸ்ட்” என்ற பெயரைப் பயன்படுத்தினர். இன்று 2025ஆம் ஆண்டில், அந்தக் கருத்து கணினி உருவகபபடுத்துதல், விண்வெளி ஆய்வுகள் மற்றும் அகச்சிவப்பு தொலைநோக்கி தொழில்நுட்பம் முலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அல்குர்ஆன் 1448 ஆண்டுகளுக்கு முன்பே ஜின்கள் புகையற்ற நெருப்புக் கொழுந்திலிருந்து (பிளாஸ்மா)  படைக்கப்பட்டதாகக்  கூறியது.

இந்த ஜின்களால் தாழ்வான வானத்திலிலுள்ள நட்சத்திரங்கள் வரை சென்று வரும் அபார ஆற்றல் உள்ளவை என்று குர்ஆன் 37:6-10, 15:16 வசனங்கள்  கூறுகிறது.

இன்று நவீன அறிவியலின் கண்டுபிடிப்புகளுடன் ஆச்சரியமான ஒற்றுமையைக் காட்டுகிறது. பேய், பிசாசு, ஏலியன், ஜின் பெயர்கள் வேறுவேறாக இருந்தாலும், அவை அனைத்தும் ஒரே பிளாஸ்மா நிலை உயிரினத்தையே குறிக்கின்றன என்ற உண்மை இன்று அறிவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் ஒருங்கிணைந்து  நிற்கிறது.

“எவருக்கு கல்வி ஞானம் அளிக்கப்பட்டிருக்கின்றதோ அவர்கள், நிச்சயமாக இந்த நெறிநூலானது உம்முடைய இறைவனிடமிருந்துள்ள உண்மை என்று அறிந்து அதன் மீது விசுவாசம் கொள்வதற்காகவும் (அவ்வாறு செய்தான், அதன் பயனாக) அவர்களுடைய உள்ளங்கள் அவன் முன் முற்றிலும் வழிப்பட்டுப் பணிகின்றன. அல்குர்ஆன் 22:54

குறிப்பு : மேற்கூறிய ஆய்வுகள் அறிவியல் ரீதியான ஆராய்ச்சிகளின் அடிப்படையில் தொகுக்கப் பட்டவை. பிளாஸ்மா உயிரினங்கள் பற்றிய கோட்பாடுகள் இன்னும் ஆய்வின் ஆரம்ப நிலையில் உள்ளன. அறிவியல் உலகம் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது.

Previous post:

Next post: