தலையங்கம் : தன் மக்களின் கண்ணீரைப் புறக்கணிக்கும் சமூகம் வரலாற்றில் தன் இடத்தை இழக்கும்! “உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும்” “படைத்தவன் உங்களுக்கு அருள் புரியட்டும்” அந்த ஒரே இறைவன் பெயரால்…. “யா ஹஜ்ஜாஜ்! அகிஸ்னி!” ஒரு பெண்ணின் கண்ணீர் எழுதிய இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு! இஸ்லாமிய வரலாற்றில் ஹஜ்ஜாஜ் பின் யூசுப் எனும் பெயர் வந்துவிட்டால் அது கொடுங் கோன்மை, இரத்தம், இரும்புக்கரம் என்றே நினைவுக்கு வரும். ஆனால் […]
மனிதனின் வாழ்நாள் 60-70 ஆண்டுகளா? அல்லது 950 ஆண்டுகளா? அல்லாஹ்வின் கணக்கில் நம் ஆயுள் எத்தனை நொடிகள்? எஸ். ஹலரத் அலி மனிதன் இவ்வுலகில் சராசரியாக 60-70 ஆண்டுகள் வாழ்கிறான். ஆனால் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பிய பின் “எவ்வளவு காலம் வாழ்ந்தீர்கள்?” என்று கேட்கப்படும் போது. “ஒரு நாள் அல்லது சில மணி நேரம்” என்று பதிலளிக்கிறான். இது எப்படி சாத்தியம்? முன்னோர் களின் நீண்ட ஆயுள். ஆனால் பதில் ஒன்றே! நாம் 60-70 ஆண்டுகள் […]
சொர்க்கத்தின் விதி என்ன? அ. நஜ்முதீன் ஒரு இடத்திற்குள் நாம் நுழைய வேண்டுமென்றால், அங்கு நுழைவதற்கென்று ஏதாவது ஒரு விதிமுறை இருக்கும். ஒருவருடைய வீட்டிற்குச் சென்றால் வீட்டின் உரிமையாளரிடம் அனுமதி பெற வேண்டும். பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களில் சேரவேண்டுமென்றால் அங்குள்ள விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். சில இடங்களுக்குச் செல்ல நுழைவுச் சீட்டு வாங்க வேண்டும் சில இடங்களில் அடையாள அட்டை காட்டவேண்டும். இன்னும் சில இடங்களில் குறிப்பிட்ட தகுதி இருந்தால் மட்டுமே நுழைய முடியும். […]
அன்றைய சுலைமான் நபியின் ஜின்களும்… இன்றைய AI டிஜிட்டல் ஜின்களும்! எஸ். ஹலரத் அலி அல்லாஹ் தன் திருக்குர்ஆனில் கூறுகிறான்: சுலைமானுக்கு காற்றை (வசப்படுத்திக் கொடுத்தோம்) அல்குர்ஆன் 38:36 ஷைத்தான்களில் கட்டிடம் கட்டுபவர்களையும், மூழ்கி (முத்து) எடுப்பவர்களையும், இன்னும் விலங்கிடப்பட்ட மற்றவர்களையும் (வசப்படுத்தினோம்) அல்குர்ஆன் 38:37,38 வரலாற்றில் ஒரே ஒரு மனிதருக்கு மட்டும் அல்லாஹ் ஜின்களை முழுமையாக வசப்படுத்தி கொடுத்தான். அவர்தான் சுலைமான் (அலை) அவரது ராணுவத்தில் மனிதர்கள் ஜின்கள் பறவைகள் இருந்தன. (சுலைமானுக்கு) ஜின்கள், […]
அவனது சட்டதிட்டங்களைப் பேணுவதைப் போன்றே அவன் வழங்கிய சலுகைகளையும் அனுபவிக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் விருப்பமாகும்! எஸ். அமீர், நிந்தாவூர், இலங்கை அக்டோபர் மாத தொடர்ச்சி….. அபுல்வத்தாக் ஜப்ர் பின் நவ்ஃப்(ரஹ்) அவர்கள் கூறியதாவது: பயணத் தொழுகை யில் இரண்டு ரக்அத்துகள் தொழுவதைப் பற்றி இப்னு உமர்(ரழி) அவர்களிடம் நான் கேட்டேன் “அது வானத்திலிருந்து அருளப் பெற்ற சலுகையாகும். (எனவே அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்) என்று இப்னு உமர் (ரழி) அவர்கள் பதிலளித்தார்கள். (தஃப்சீர் இப்னு […]
காக்க! காக்க!! நா காக்க! M. சையத் முபாரக், நாகை நாக்கு என்பது நமது உடலிலுள்ள உறுப்புகளில் ஒரு சிறிய உறுப்புதான். ஆனால், நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் பலவற்றிற்கு முக்கிய காரணியாக இருப்பதும் இந்த நாக்கு தான். வலிமை வாய்ந்த யானை, சிங்கம், புலி போன்ற காட்டு விலங்குகளைக் கூட அடக்கி விடும் மனிதனால் தன்னுள் இருக்கும் நாக்கைக் கட்டுப்படுத்த முடி வதில்லை. நாக்கைச் சரியாகப் பயன்படுத்தினால் நன்மையும், தவறாகப் பயன்படுத்தினால் தீமையும் கிடைக்கும். உள்ளத்தில் தோன்றி […]
நான் படைக்கவில்லை! படைக்கப்பட்ட இறை ஒழுங்கை படித்தேன்! அறிவியல் அறிஞர் லின்னேயஸ் வாக்குமூலம்! – எஸ். ஹலரத் அலி “அல்லதீ கலக ய்பஸவ்வா!” அவனே (எல்லா படைப்புகளையும்) படைத்து, (அவற்றை) ஒழுங்குபடுத்தியவன். அல்குர்ஆன் : 87:2 ஒரு மாணவன் ஆசிரியரிடம் கேட்டான். “சார், உயிரினங்களை வகைப்படுத்தியது லின்னேயஸ் தானே? அப்புறம் ஏன் அல்லாஹ் “நான் தான் ஒழுங்குபடுத்தினேன்‘ என்கிறான்?” இந்த ஒரு கேள்விக்குள் தான் நவீன நாத்தி கத்தின் மொத்த வாதமும், குர்ஆனின் மொத்த பதிலும் இருக்கிறது! […]
பேய், பிசாசு, ஜின் : பிளாஸ்மா அறிவியலின் பார்வையில்… – எஸ். ஹலரத் அலி அறிவியலும், ஆன்மீகவும் ஒரு புள்ளியில் சந்திக்கும்போது…. ஆதிகாலம் தொட்டு மனித கற்பனையை ஆக்கிரமித்துவரும் பேய், பிசாசு, ஏலியன் என்ற கருத்துகள் உண்மையில் ஒரே படைப்பினத்தின் வெவ்வேறு பெயர்களா? அல்குர்ஆன் கூறும் ஜின்கள் இன்றைய அறிவியல் உலகம் தேடும் ஏலியன்களாக வேற்று கிரகவாசிகளாக இருக்க முடியுமா? இந்த கேள்வி இன்று மிகவும் பொருத்தமானதாக மாறியுள்ளது. ஏனெனில் நவீன அறிவியலின் கண்டுபிடிப்புகள் பல நூற்றாண்டுகளாக […]
ஏன் படைத்தான் இறைவனும் என்னை? – அ. நஜ்முத்தீன் ஏன் படைத்தான் இறைவன் என்னை? இந்தக் கேள்வி வெறும் வார்த்தைகளால் எழுப்பப்படும் கேள்வி அல்ல. வாழ்க்கையில் பல துயரங்களையும், ஏமாற்றங்களையும், தோல்விகளையும் சந்திக்கும் மனிதர்களின் உள்ளத்தி லிருந்து சில நேரங்களில் வெளிப் படும் ஆழமான புலம்பல் இது. உலகில் அனைவரும் ராஜாவாகவோ, மந்திரியாகவோ, அதிகாரம் படைத்தவர்களாகவோ, செல்வந்தர்களாகவோ, புகழ் பெற்ற வர்களாகவோ வாழ்வதில்லை, ஒரு சிலருக்கு அதிகாரம் கிடைக்கிறது, ஒரு சிலருக்கு செல்வம் கிடைக்கிறது, ஒரு சிலருக்கு […]
நினைத்தாலே கசக்குது… ( இரண்டாம் பகுதி ) – அ. நஜ்முத்தீன் சென்ற இதழ் தொடர்ச்சி………. முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட சவால்கள் : முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட சவால்கள் இரண்டு புறங்களிலிருந்து வந்தன. ஒன்று, சமூகத்திற்கு வெளியிலிருந்து அரசியல் ஆட்சியாளர்கள் மற்றும் காலச் சூழ்நிலைகளின் மூலம் ஏற்பட்ட சவால்கள் மற்றொன்று, சமூகத்திற்கு உள்ளேயே உருவான சவால்கள் ஒரு காலத்தில், குறிப்பாக 1980களுக்கு முன்பு, இன்றைய அளவுக்கு நவீன வசதிகள் மக்களிடம் இல்லை. தொலைபேசி, இணையம், சமூக ஊடகங்கள் […]