உமிழ்நீர்! என்னும் உயிர்நீர்!!
அ. நஜ்முத்தீன்
மனித உடலில் மிகவும் சாதாரணமாகத் தோன்றும் ஒரு வகை திரவம் உமிழ்நீர். ஆனால் அது மனித உடலின் பல முக்கிய செயல்பாடுகளுடன் தொடர்புடைய ஒரு உயிரியல் நீராகும்.
உமிழ் நீரைப் பற்றி ஆய்வு செய்த அறிவியல் நம்மை ஆச்சரியப்படுத்தும் பல விசயங்கள் உள்ளதாக கூறுகிறது.
ஒரு ஆரோக்கியமான மனிதரின் உடலில் ஒரு நாளைக்கு சுமார் ½ லிட்டர் முதல்1 ½ லிட்டர் வரை உமிழ்நீர் சுரப்பதாக கூறுகிறார் கள். அது உண்மையும் கூட. அது இறைவனின் ஏற்பாடு.
எவ்வாறு என்றால்;
1. உணவை ஈரமாக்கி, அதை மென்று உருண்டையாக மாற்றி எளிதாக விழுங்குவதற்கு உதவுகிறது.
2. உமிழ்நீரில் உள்ள திரவம் உண்ணும் உணவுப் பொருட்களின் செரிமானத்தை வாயிலேயே தொடங்குகின்றன.
3. உணவில் உள்ள மூலக்கூறுகள் உமிழ் நீரில் கரையும்போது உணவின் சுவையை அறிய உதவுகிறது.
4. வாய் மற்றும் தொண்டை உலராமல் இருக்கவும் பல மணி நேரம் பேசுவதற்கும் பெரும் பங்கு வகிக்கிறது.
5. உமிழ்நீரில் சில நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்திகள் உள்ளதாக அறிவியலும் ஒப்புக்கொண்டுள்ளன. அதாவது சில தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களைக் கட்டுப்படுத்தும் பாதுகாப்புப் பணியும் செய்கிறது.
6. வாயின் மென்மையான பகுதிகளில் ஏற்படும் சில சிறிய காயங்கள் ஆறுவதற்கு உமிழ் நீரே பெரும் பங்களிக்கின்றன.
இவ்வாறு பல பயன்களை அளிக்கக் கூடிய உமிழ்நீர் எப்போது பலன் தரும் என்பதை அறியாதவர்களாக பலரும் உள்ளனர்.
அதற்கு காரணம்; வாழ்க்கை முறை அவசரமானதாக மாறிவிட்டது.
வேலை,
பயணம்,
நேரமின்மை
போன்ற காரணங்களால் பலரும் உணவை அவசரமாக உண்டு முடிக்கிறார்கள்.
அது வாயில் சுரக்கும் வெறும் தண்ணீர் அல்ல. மாறாக மேலே நாம் குறிப்பிட்ட பல முக்கியமான பணிகளை செய்ய இறைவன் தந்த இயற்கை மருந்தாகும்.
அந்த இயற்கை மருந்தின் பலனை அறிந்த தால் நமது முன்னோர்கள் மற்றும் இன்றும் சிலரும் உண்ணும் உணவுடன் அதிக அளவு எடுத்துக் கொள்கின்றனர்.
அதாவது வாழ்வதற்காக உண்டனர், உண்கின்றனர்.
எப்படி என்றால்;
பொறுமையுடனும், பொறுப்புடனும் உணவருந்தினர்.
அதனால் அவர்கள் சாப்பிடும்/குடிக்கும் உணவுடன் அதிக அளவு உமிழ்நீர் கலந்து வயிற்றுக்குள் சென்றது. உணவு உண்பதற்கு முன்பு சிறிது அளவு இனிப்பு எடுத்துக் கொண்டனர். இனிப்பின் பலன் தெரியாமல் உணவு உண்டபின்பு சிலர் இனிப்பை எடுத்துக் கொள்கின்றனர். இது ஒரு தவறான உணவு பழக்கமாகும்.
சாப்பிடும் பொழுது கூடுதல் உமிழ்நீர் சுரக்க செய்வதற்காக இடையே ஊறுகாயைச் சிறிதளவு எடுத்துக் கொண்டனர்.
ஆனால் சாப்பிடுவதும் ஒரு வேளை போல் நினைத்து உணவை ரசித்து, ருசித்து சாப்பிடாமல் அவசர அவசரமாக வாயில் போட்டு விழுங்குகிறார்கள்.
அதில் உமிழ்நீர் இல்லாததால் இன்சுலின் சுரப்பதில்லை. பெரும்பாலோருக்கு நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) உண்டாகுவதற்கு இதுவே காரணமாகும். முன்னோர்களுக்கு நீரிழிவு நோய் இல்லை. எனவேதான் நம்மை படைத்த இறைவன் கூறுகிறான்.
“உங்களுக்குள்ளேயும் பல சான்றுகள் உள்ளன. சிந்திக்க மாட்டீர்களா?” (51:21)
மேற்கண்ட இந்த வசனம் மனிதன் தன்னையே சிந்தித்துப் பார்க்க சொல்கிறது.
நமது உடலுக்குள் நடைபெறும் ஆயிரக் கணக்கான செயல்களில் உமிழ்நீர் சுரத்தலும் ஒன்று. அவ்வாறு சிந்திக்கும்போது உமிழ்நீரின் அவசியத்தையும் உணரமுடியும்.
மேற்கண்ட வசனம் அல்லாமல் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையிலும் சில வழி காட்டுதல்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் சாப்பிட்ட பின்பு விரல்களை சுவைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸஹீஹ் புகாரியில் இடம் பெற்ற ஹதீத்:
“நபி(ஸல்) அவர்கள் உணவுக்குப் பிறகு விரல்களை சுவைக்குமாறும், மற்றொரு அறி விப்பில் உணவு உண்ட பிறகு தமது விரல்களைச் சுவைத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. (ஹதீத் 5456)
இதற்கு இரண்டு காரணங்களும் உள்ளன.
ஒன்று : உணவை வீணாக்காமல் இருப்பது.
இரண்டாவது : விரல்களில் ஒட்டிக்கொண்ட சிறு துளிகள் எடுத்து சுவைக்கும் போது உமிழ்நீர் அந்த உணவுடன் கலக்கிறது.
அறிவியலும் ஆரம்ப செரிமானத்தில் உமிழ்நீர் பங்கு வகிக்கிறது என்ற உண்மையை சொல்லி உள்ளது.
ஆனால் அதை செய்வதை (இறுதியில் விரல்களை சுவைப்பதை) அநாகரிகம் என நினைத்து பலர் தவிர்க்கின்றனர்.
சிறு குழந்தைகள் விரலை வாயில் வைத்து உறிஞ்சுவதை நாம் பார்த்து இருக்கிறோம். ஏன்? நாமே கூட அதை செய்திருப்போம்.
நாம் சாதாரணமாக கருதும் ஒரு சிறிய உடல் திரவத்தில் இறைவன் பல நன்மைகளை வைத்துள்ளான்.
வசனம் 51;21ல் இறைவன் குறிப்பிட்டுள்ளதுபோல் நம் உடலுக்குள்ளேயே சிந்திக்க வேண்டிய பல அற்புதங்கள் நிறைந்திருக்கின்றன.
எனவே குர்ஆன் மற்றும் ஹதீத்களை சரியான முறையில் சிந்தித்து நம்முடைய உடலையும், நம்மை சுற்றியுள்ள படைப்புகளையும் சிந்திப்போம்.