நிரூபிக்கப்பட்ட அறிவியலுக்கு ஒருபோதும் இஸ்லாம் எதிரானது அல்ல!

in 2026 செப்டம்பர்

நிரூபிக்கப்பட்ட அறிவியலுக்கு ஒருபோதும் இஸ்லாம் எதிரானது அல்ல!

– நிந்தாவூர் அமீர், இலங்கை

அல்குர்ஆன்  அல்லாஹ்வின்  சொல் :

நிரூபிக்கப்பட்ட அறிவியல் சான்றுகள் அல்லாஹ்வின் செயல். ஆகவே அல்லாஹ்வின் சொல்லும், அவனது செயலும், ஒன்றுதான்; நிரூபிக்கப்பட்ட அறிவியலுக்கு ஒருபோதும் இஸ்லாம்  எதிரானது  அல்ல.

முதல் மனிதரும் இறைத்தூதருமாகிய ஆதம்(அலை) அவர்களது காலத்திலிருந்து அவ்வப்போது மார்க்கமும் அறிவியலும் அந்த அந்தக் காலத்திற்கு ஏற்பப் பொருத்தமாக அல்லாஹ் மாற்றியே வந்துள்ளான். அவ்வப்போது மார்க்கத்தையும், அறிவியலையும் தேவைக்கேற்ப கற்றுக்கொடுத்தவன் அல்லாஹ் தான் என்பதற்கு ஏராளமான சான்றுகள் குர்ஆன், ஹதீத்கள் வாயிலாக நிரூபிக்கப்பட்டுள்ளன. (பார்க்க : அல்குர்ஆன் : 11:37, 5:31, 22:27, 2:125, 3:97, 21:80, 34:10,11, 21:81, 38:36, 34:12, 27:20-44, 18:83-89) 

இரும்புத் தொழில்நுட்பம் கற்றுக் கொடுக்கப்பட்ட ஆதம்(அலை) அவர்கள் :

எனது வல்லமை மீது சத்தியமாக! உறுதியாக உம்மை நான் பூமிக்கு அனுப்பப் போகிறேன். அதன் பின்னர் நீர் கடின உழைப்பின் மூலமே வாழ்வாதாரத்தைப் பெறுவீர் என்றான். பின்னர் ஆதம்(அலை) அவர்கள் தமது துணைவியாருடன் பூமிக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். அங்கு அவருக்கு இரும்புத் தொழில் நுட்பம் கற்றுக் கொடுக்கப்பட்டு வேளாண்மை செய்யுமாறு கட்டளையிடப்பட்டது, பின்னர் பயிரிட்டார், அதற்கு நீர் பாய்ச்சினார், பயிர் நன்கு வளர்ந்து முற்றியதும் அதை அறுவடை செய்து கதிரடித்துக் காயவைத்தார். பின்னர் அதை மாவாக அரைத்துக் குழைத்து ரொட்டி சுட்டு உண்டார். (தஃப்சீர் இப்னு கஸீர் : 3:720-723)

ஜனாஸாவை நல்லடக்கம் செய்யும் முறையைக் கற்றுக் கொடுத்த காகம் :

நபி ஆதம்(அலை) அவர்களது நேரடி வாரிசான மகன் காபீல் தனது உடன் பிறந்த சகோதரனைக் கொலை செய்துவிட்டு அதை எவ்வாறு மறைப்பது, அழிப்பது என்பதை அறியாமல் பல நாட்கள் தடுமாறிய போது அல்லாஹ் அங்கே அனுப்பி வைத்த ஒரு காகம் பூமியைத் தோண்டிப் பிணத்தை மூடியதைக் கண்ட “காபீல்” அவ்வறிவியலைச் செயல்படுத்தித் தனது சகோதரனின் பிணத்தை மண்ணில் புதைத்தான். (இப்னு அப்பாஸ்(ரழி), இப்னு மஸ்ஊத்(ரழி), அபூபக்ரா(ரழி), அல்குர்ஆன் 5:31, புகாரி, பாகம்2, பக்கம்  70,71, பாடம் 32, மற்றும் பாகம் 7, பக்கம் 344, பாடம்2, புகாரி : 3335, 6867,7321, முஸ்லிம் : 1677,3465, தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 3, பக்கம் 135-149)

கடல் பிரயாணத்திற்கான கப்பல் கட்டும் தொழில்நுட்பம் :

நபி நூஹ்(அலை) அவர்கள் அல்லாஹ்வுடைய உத்தரவின் பிரகாரம் அல்லாஹ் கற்றுக் கொடுத்த அளவுப் பிரமாண அறிவியலின்படி அவனது நேரடி கண்காணிப்பில் கப்பலை நேர்த்தியாகச் செய்து அதன் மூலம் தன்னையும் தன்னை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்களையும் அவர்களின் பின் தோன்றல்களாகிய நம்மையும் உலக அழிவு வரை வரக்கூடிய மற்ற மனிதர்களையும் பாதுகாத்துக் கொண்டார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி), கத்தாதா(ரஹ்), ஹசன் அல்பஸ்ரி(ரஹ்), அல்குர்ஆன் 11:37,7:64, 10:73, 29:15, 21:76,77, 37:76, 26:119)

உயர்ந்த கட்டடங்கள் கட்டுவதற்கான தொழில்நுட்பம் :

இறைத்தூதர் இப்ராஹிம்(அலை) அவர்கள் புனித கஃஅபாவைப் புதுப்பித்துக் கட்டும் போது ஒரு உயரமான சாதனத்தின் தேவைக்காக நாற்காலி போன்றதொரு உயரமான கல்லின் மீது ஏறி நின்று புனித கஃஅபாவின் உயரமான சுவர்களை நாலாபுறமும் உயரமாகக் கட்டி முடித்தார்கள். இப்ராஹீம்(அலை) அவர்களின் இரு பாதச் சுவடுகளும் பதிந்துள்ள அந்தக் கல்லானது இன்று “மகாமே இப்ராஹிம்” என்று அழைக்கப்படுகிறது. (இப்னு அப்பாஸ் (ரழி), உமர்(ரழி), ஜாபிர்(ரழி), அதாஉ(ரஹ்), சயீத் பின் ஜுபைர்(ரஹ்), அல்குர்ஆன் 2:125, 3:97, தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 1, பக்கம் 400412, பாகம் 2, பக்கம் 160-170, தஃப்ஸீர் இப்னு அபீஹாத்திம்)

உறுதியான அணைகள் கட்டுவதற்கான தொழில்நுட்பம் :

ஒரே நேரத்தில் முழு உலகையும் ஆட்சி செய்த அரசர்கள் நால்வர்களில் ஒருவராகிய, மன்னர் துல்கர்னைன் “இஸ்க்கந்தர்” தமது நீண்ட பிரயாணத்தின்போது இரு மலைகளுக்கிடையே இடைவெளி உள்ள ஓர் இடத்தை அடைந்தபோது “யஃஜூஜ் மஃஜூஜ்” கூட்டத்தினரின் கொடுமைகளுக்கு ஆளாகி அங்கே வசித்து வந்த அப்பாவி மனிதர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களுக்கு அவ்வப்போது உயிர்களையும், உடமைகளையும், பயிர்களையும், நாசப்புத்தித் தொல்லை கள் கொடுத்து அட்டூழியம் செய்து வந்த “யஃஜூஜ் மஃஜூஜ்” என்னும் கொள்ளைக் கூட்டத்தாரின் குழப்பத்தை அடக்கவேண்டி இரு மலைகளுக்கிடையில் இரும்பையும், செம்பையும், உருக்கி ஓடவைத்து வலுவான அணையைக் கட்டி யுக முடிவு நாள் வரை “யஃஜூஜ் மஃஜூஜ்” கூட்டத்தார் அதில் ஏறவும் துளையிடவும் முடியாதவாறு உதவி செய்து கொடுத்து அந்த அப்பாவி மக்களுக்கு “யஃஜூஜ் மஃஜூஜ்” கூட்டத்தாரின் தொல்லை யிலிருந்து உலக அழிவு வரை பாதுகாப்பு அரண் அமைத்துக் கொடுத்தார் என்று பரிசுத்தக் குர்ஆன் பேசுகிறது. (18:83-99, தஃப்ஸீர் இப்னு கஸீர், பாகம் 5, பக்கம் 520-529, பாகம் 5, பக்கம் 653, சிறு குறிப்பு ஐந்தாவது, பாகம் 5, பக்கம் 897, சிறு குறிப்பு 49ஆவது)

கவச ஆடைகள் தயாரிப்பதற்கான தொழில் நுட்பம் :

இரும்பை உருக்கித் தண்ணீரைப் போல ஓடவைத்து உலகில் முதன் முதலாவதாகச் சிறந்த கவச உடைகளைத் தயாரிக்கும் தொழில்நுட்ப அறிவியலை அல்லாஹ் இறைத் தூதர் தாவூத் (அலை) அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தான். (அல்குர்ஆன் 21:80, 34:10,11 இப்னு அப்பாஸ்(ரழி), கத்தாதா(ரஹ்), ஹஸன் அல்பஸ்ரி(ரஹ்), அப்துல்லாஹ் பின் சிவ்தப்(ரஹ்), முஜாஹித்(ரஹ்), ஹகம் பின் உயைனா(ரஹ்), தஃப்ஸீர் தபரீ, தஃப்ஸீர் இப்னு அபீஹாத்திம், தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 5, பக்கம் 903,904,907, பக்கம் 460-463) அல்குர்ஆனில் 29, வசனங்களைக் கொண்ட 57வது அத்தியாயத்தின் பெயரே! “ஸூரத்துல் ஹதீத்” இரும்பு ஆகும். அதன் 25ஆவது இரும்பையும் நாம் அருளினோம் அதில் கடுமையான ஆற்றலும், மக்களுக்குப் பயன்களும் உள்ளன என்று கூறுகின்றான். அதுபோலவே  மற்றொரு  வசனத்தில், 

பாத்திரங்கள் செய்வதற்கான தொழில்நுட்பம்: இறைத்தூதர் தாவூத்(அலை) அவர்களுக்கு அல்லாஹ் செம்பை உருக்கித் தண்ணீரைப் போல ஓடவைத்துப் பலவிதமான பாத்திரங்களைச் செய்யும் தொழில்நுட்ப அறிவியலைக் கற்றுக்கொடுத்தான். அதன் பயனாக; இன்று யமன் நாட்டில் இருந்து உலகின் பல பாகங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் செம்பால் உற்பத்தி செய்து பயன் பெறுகின்ற பாத்திரங்கள், மற்றுமுண்டான உபயோகப் பொருட்கள் அனைத்துமே அன்று இறைத்தூதர் தாவூத் (அலை) அவர்களுக்காக மூன்று நாட்களாக உருகி ஓடிய செம்பு ஊற்றின் அருட்கொடை தான். (34:12, இப்னு அப்பாஸ்(ரழி), முஜாஹித்(ரஹ்), கத்தாதா(ரஹ்), கத்தீ(ரஹ்), தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 7, பக்கம் 464,465) ஹஸன் அல்பஸ்ரி(ரஹ்), சயீத் பின் ஜுபைர்(ரஹ்), தஃப்ஸீர் தபரி, தஃப்ஸீர் இப்னு அபீஹாத்திம், தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 5, பக்கம் 904, 905, பாகம் 7, பக்கம் 846, 847, 464, 465)

Previous post:

Next post: