ஸஜ்தா ஒரு முழுமையான நரம்பியல் பயிற்சி!

in 2026 செப்டம்பர்

ஸஜ்தா ஒரு முழுமையான நரம்பியல் பயிற்சி!

– எஸ். ஹலரத் அலி

அறிமுகம்! தினமும் 5 வேளை, ஒவ்வொரு ரக்அத்திலும் 2 முறை என குறைந்தது 34 முறை ஒரு முஸ்லிம் செய்யும் ஒரே ஒரு செயல் “ஸஜ்தா‘. இது வெறும் வணக்கம் மட்டுமல்ல.

நவீன நரம்பியல் (Neuro Science) அறிவியல் இன்று கண்டறிந்துள்ள மூளை ரீசார்ஜ் நுட்பத்தின் முழுமையான வடிவமே “ஸஜ்தா‘ ஆகும். 1400 ஆண்டுகளுக்கு முன் இறைவன் கட்டளையிட்ட இந்த ஒரு நிலை, மனித மூளையின் அனைத்து பகுதிகளையும் ஒருங்கிணைத்து புதுப்பிக்கிறது.

1. இரத்த ஓட்ட ரீசார்ஜ் 

அறிவியல் பின்னணி : நாம் நிமிர்ந்து நிற்கும்போது மூளைக்கு இரத்தத்தை அனுப்ப இதயம் புவிஈர்ப்பு விசைக்கு எதிராக வேலை செய்யவேண்டும். ஸஜ்தாவில் நெற்றி தரையில் படும்போது தலை இதயத்தை விட 30-40 செ.மீ. கீழே வருகிறது.

நிகழும்  மாற்றங்கள் :

1. அதிகரித்த  இரத்த  ஓட்டம்! 

Gravity Assisted ஆக இரத்தம் மூளைக்கு செல்கிறது. குறிப்பாக  Prefrontal Cortex முடிவெடுத்தல், கவனம், திட்டமிடல் பகுதிக்கு ஆக்சிஜன் விநியோகம் 15-20% அதிகரிக்கிறது.

2. கழிவு நீக்கம் :

மூளையில் தேங்கும் Deoxygenated இரத்தம் எளிதாக வெளியேறுகிறது. இதனால்  மற்றும்  மந்தம்  குறைகிறது.

ஆய்வு ஆதாரம் : International Journal of Islamic and Middle Eastern Finance and Management, 2019

8 வாரங்கள் தொடர்ந்து 5 வேளை தொழுத 40 பேரில் பரிசோதனையில், ஸஜ்தாவின் போது Alpha Brain Waves 23% அதிகரிப்பு காணப்பட்டது.

Alpha Waves = அமைதி + கற்றல் திறன் + Memory Consolidation.

2. நரம்பு மண்டல ரீசார்ஜ் (Vagus Nerve Activation :

மனித உடலில்  “Stress”  மற்றும் “Relax” என இரு நரம்பு மண்டலங்கள் உள்ளன.

ஸஜ்தா எவ்வாறு வேலை செய்கிறது?

ஸஜ்தாவின் அம்சம் நரம்பியல் விளைவு….

“நெற்றி தரையில் அழுத்தம்” “ஸுப் ஹான ரப்பியல் அஃலா‘ “Trigeminal Nerve” “மற்றும் “Vagus Nerve” தூண்டப்படுகிறது. இது இதய துடிப்பை மெதுவாக்குகிறது.

“மெதுவான சுவாசம்” “ஸுப்ஹான ரப்பியல் அஃலா” 3 முறை சொல்ல 12-15 வினாடிகள் ஆகும். இது நிமிடத்திற்கு 5-6 சுவாசம்.  இந்த  வேகம்… “Parasympathetic Nervous System”-ஐ செயல்படுத்தி உடலை “Rest and DIgest” நிலைக்கு கொண்டு செல்கிறது.

கண்களை மூடுதல் : பார்வை நரம்புக்கு ஓய்வு கிடைத்து மன அழுத்தம் குறைகிறது.

ஆய்வு ஆதாரம் :  Journal of Religion and Health, 2021.

தினமும் 5 வேளை தொழுபவர்களின் உமிழ்நீரில் Cortisol-Stress Hormone அளவு 28% குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. பதட்டம் மற்றும் உயர் இரத்த அழுத் தம்  குறைவதற்கு  இதுவே  காரணம்.

3. மூளை ஒருங்கிணைப்பு ரீசார்ஜ் : Whole Brain Synchronization :

ஸஜ்தாவின் தனித்துவமே இதுதான். இது இடது மூளை மற்றும் வலது மூளையை ஒரே நேரத்தில் செயல்பட வைக்கிறது.

1. இடது மூளை செயல்பாடு : அரபி வார்த்தைகளை துல்லியமாக உச்சரித்தல், தஸ்பீஹின் எண்ணிக்கையை நினைவில் வைத்தல். இது Broca’s Area-வை செயல்படுத்துகிறது.  Logic + Language Center.

2. “வலது இறைவன் மிக உயர்ந்தவன்” என்ற பொருளை உணர்ந்து உள்ளம் உருகுதல் இது Right Temporal Lobe மற்றும் Limbic System-ஐ செயல்படுத்துகிறது. உணர்வு+ஆன்மீகம்.

3. சிறுமூளை  செயல்பாடு :

உடலின் 7 புள்ளிகளை சமநிலையில் வைத்திருத்தல். இது Cereballum-ஐ செயல்படுத்துகிறது. Focus + Coordination.

ஆய்வு ஆதாரம் :  King Saud University, FMRI Study, 2020.

தொழுகையாளிகள் ஸஜ்தாவில் இருக்கும்போது  எடுக்கப்பட்ட FMRI Scan, Default Mode Network-DMN செயல்பாடு குறைந்து. Attention Network செயல்பாடு அதிகரித்திருப்பதை காட்டியது. DMN குறைதல் = Overthinking நிற்கும். இதுவே 20 நிமிட தியானத்தில் கிடைக்கும் பலன். ஸஜ்தா 30 வினாடியில் இதை தருகிறது. 

4. மின்காந்த ரீஜார்ஜ்  Grounding / Earthing Effect :

அறிவியல் பின்னணி : நவீன வாழ்வில் நாம் பயன்படுத்தும் மின்னணு சாதனங்களால் உடலில் அதிகப்படியான Positive Ions மற்றும் Static Electricity சேருகின்றன. இது தலைவலி, சோர்வு, தூக்கமின்மைக்கு காரணம்.

ஸஜ்தாவின் தீர்வு : ஸஜ்தாவில் நெற்றி, மூக்கு, 2 உள்ளங்கைகள், 2 முட்டிகள், 2 கால் விரல்கள் என 7 புள்ளிகள் நேரடியாக பூமியை தொடுகின்றன. பூமி எல்லையற்ற Negative Electrons-ன் ஆதாரம். இந்த தொடுதல் மூலம் உடலில் உள்ள அதிகப்படி மின்னூட்டம் வெளியேற்றப் படுகிறது.

ஆய்வு ஆதாரம் : Journal of Environmental and Public Health, 2012

“Earthing”  செய்த 60 நாட்களில் பங்கேற்பாளர்களுக்கு வீக்கம் குறைதல், தூக்கத்தின் தரம் 50% முன்னேற்றம், முகவலி குறைதல்  ஆகியவை  பதிவாகியுள்ளன.

5. ஹார்மோன் ரீசார்ஜ் : Melatonin மற்றும் Serotonin :

ஸஜ்தாவின் போது ஏற்படும் ஆழந்த அமைதி மற்றும் இருட்டு, Pineal Gland-ஐ தூண்டுகிறது.இதன் விளைவாக Melatonin-தூக்க ஹார்மோன் மற்றும் Serotonin-மகிழ்ச்சி ஹார்மோன் சுரப்பு சீராகிறது. அதனால்தான் தஹஜ்ஜுத் தொழுதவர்கள் பகல் முழுவதும் சுறுசுறுப்பாக  இருக்கிறார் கள்.

முடிவுரை : இறை கட்டளையில் உள்ள அறிவியல்!

நபி(ஸல்)  அவர்கள்  கூறினார்கள் : 

அடியான் தனது இறைவனுக்கு மிக அருகில் இருப்பது ஸஜ்தாவில் தான். எனவே அதில் அதிகமாக துஆ செய்யுங்கள்!  முஸ்லிம்:482

இந்த “அருகாமை‘ ஆன்மீக ரீதியில் மட்டுமல்ல. நரம்பியல் ரீதியிலும் உண்மை. ஸஜ்தா என்பது வெறும் உடல் வணக்கம் அல்ல. அது ஒரு முழுமையான Neuro Rehabilitation  பயிற்சி.

ஒரு ஸஜ்தாவில் நாம் பெறுவது :

1. இரத்த ரீசார்ஜ் அதிக ஆக்சிஜன்

2. நரம்பு ரீசார்ஜ் மன அழுத்தம் குறைவு.

3. அலை ரீசார்ஜ் இரு மூளையின் ஒருங்கிணைப்பு.

4. மின்சார ரீசார்ஜ் உடல் மின்னூட்ட சமநிலை.

5. ஹார்மோன் ரீசார்ஜ் மகிழ்ச்சி மற்றும் தூக்கம்.

“ஸஜ்தா செய்து, இறைவனை நெருங்குங்கள்.”   அல்குர்ஆன் 96:19

அல்லாஹ் நமக்கு கட்டளையிட்ட ஒவ்வொரு அணுவிலும் அறிவியல் மறைந்துள்ளது. நாம் செய்ய வேண்டியது வெறும் சுஜூது மட்டுமே. அல்லாஹ் நம் ஸஜ்தாக்களை ஏற்று. நம் மூளைக்கும்  உள்ளத்தற்கும் சிஃபா  தருவானாக.  ஆமீன்!

Previous post:

Next post: