நீங்கள் ஆலிமா?

in 2009 பிப்ரவரி

நீங்கள் ஆலிமா? மு.முஹைதீன்,ஏர்வாடி(நெல்லை)

அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும், அழகான மிகமிக சிறப்பான சத்திய மார்க்கமான இஸ்லாத்தை உலக மக்களுக்கு எடுத்து வைத்து இதுதான் சத்தியமார்க்கம்.

இன்றைய தினம் உங்களுடைய மார்க்கத்தை உங்களுக்கு நான் பரிபூரணமாக்கிவிட்டேன்; மேலும் என்னுடைய அருட்கொடையை உங்களின் மீது நிரப்பமாக்கிவிட்டேன். இன்னும் உங்களுக்கு இஸ்லாத்தை(யே நன்) மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன். (அல்குர்ஆன் 5:3) என்று உறுதியாக தெளிவாக அறுதிவிட்டு சொல்லி கொண்டிருக்கிறது நேர்வழிகாட்டல் நூல் அல்குர்ஆன்: நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள்? அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது என்று அன்னை ஆயிஷா சித்தீக்கா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் வினவியபோது, அன்னை அவர்கள் அழகான பதில் “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை குர்ஆனாகவே இருந்தது” என்று சொன்னார்கள்!

அப்படிப்பட்ட தூய்மையான வாழ்ககைக்கு சொந்தக்காரரான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் அல்லாஹ்வுடைய கட்டளைப்படியே வாழ்ந்து,மக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இரவிலும், பகலைப்போல் இருட்டிலும் ஒளியைப் போல் தெளிவாக வழிகாட்டிச் சென்றார்கள்! அதுதான் அல்லாஹ் தன் சத்திய நேர்வழிகாட்டல் நூல் குர்ஆனில் நெத்தியடியாக சொல்லும்போது;

(உங்களில்) அல்லாஹ்வையும், இறுதி நாளையும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறுபவராக இருப்பவருக்கு அல்லாஹ்வுடைய தூதரிடத்தில் திட்டமாக அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அல்குர்ஆன், 33:21)

மேல்கண்ட அல்குர்ஆன் வசனங்கள் மவ்லானா, மவ்லவிகள் அஃப்ஸலுல் உலமாக்கள் என்று சொல்லக்கூடிய, ஸனது பட்டம் பெற்ற புரோகிதர்கள், நாளை இன்ஷா அல்லாஹ் மறுமையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னது போல் “உலமாக்கள் என்து வாரிசுகள்” என்ற நிலையிலா? வருவார்கள்? குர்ஆன், ஹதீஃத் வழியில் நிச்சயமாக வரமாட்டார்கள்! தலைக்கனம் பிடித்த தாருந்நத்வா புரோகிதர்களாக வருவார்கள்! ஏன் என்றால் இந்த மவ்லானா, மவ்லவிகள் என்று சொல்லக்கூடிய புரோகிதர்கள் மார்க்கத்தை தொழிலாக, பிழைப்பாகக் கொண்டு செயல்படுபவர்கள் அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன்மாதிரியை அலட்சியம் செய்பவர்கள்; மேல்கண்ட குர்ஆன் வசனங்களை புறம் தள்ளுபவர்கள் இவர்கள் தான் நம்மை பார்த்து நீங்கள் ஆலிமா? என்று கேட்டு சுன்னத்தான் திருமணத்தில் அல்லாஹ்வுடைய பள்ளியில் இருந்துகொண்டு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தராத வாழ்த்துரையான “அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா” ஓதி தங்களது புரோகித புத்தியை காட்டுவார்கள். இது பற்றி நாம் எடுத்து காட்டி “அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா? ஓதவேண்டாம் என்று சொன்னால் அவர்களிடம் இருந்து என்ற சொல்லுக்கு இலக்கணம் தான் இந்த புரோகித முல்லாக்களுக்கு தெரியுமா? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்மாதிரியாக வாழ்ந்துகாட்டி வழி நடத்தி சென்று, இதுதான் எனது வழி என்று தெள்ளத் தெளிவாக வழிகாட்டி சென்றார்கள். அப்படி இருக்கும்போது இந்த சத்திய மார்க்கத்தில் இல்லாத “அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா” திருமண (நிக்காஹ்) மஜ்லிசில் ஓதுவதற்கு இவர்களுக்கு அதிகாரம் தந்தவன்யார்? இந்த புரோகித முல்லாக்கள் பதில் சொல்லப்படும். ஆனால் இவர்கள் பதில் சொல்ல மாட்டார்கள். காரணம் இந்த புரோகித முல்லாக்கள் பதில் சொல்லட்டும். ஆனால் இவர்கள் பதில் சொல்ல மாட்டார்கள். காரணம் இந்த பரோகித மவ்லவிகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காட்டித் தராத வழியில், மார்க்கத்தைத் தொழிலாக்கி மார்க்கப் பிரச்சாரத்திற்கும், அல்லாஹ்வை வணங்குவதற்கும் (இமாமத்) சம்பறத்திற்கு மார் அடிக்கக் கூடியவர்கள் தானே! இந்த புரோகித மவ்லகிள். எங்களது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு கடந்த 28.12.2008 அன்று திருமணம் நடந்தது; அந்த திருமணத்தில்தான்.

நிக்காஹ்வுக்கு முன் இமாம் இடம் சொன்னேன் “அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா” ஓதவேண்டாம்! அது நபி வழியில் உள்ளவை அல்ல என்ற நோக்கத்தில் அதை தவிர்த்து கொள்ள வேண்டும் என்பதற்காக சொன்னேன். ஆனால் அந்த புரோகித மவ்லவி ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் அல்லாஹ்வுடைய பள்ளிவாசலில் சலசலப்பு ஏற்பட்டது. நான் ஒதுங்கி கொண்டேன். இதனால் ஆத்திரம் அடைந்த புரோகித மவ்லவி. அபூ ஜஹீலின் மொழியில் நீங்கள் ஆலிமா? என்று கேட்டு தனது புரோகித புத்தியை காட்டினார். இவர்கள் எல்லாம் உலமாக்கள்? மவ்லானா? மவ்லவிகள்? நிச்சயமாக இவர்கள் எல்லாம் அல்லாஹ்வுக்கு பள்ளிவாசல்களில் வைத்து பகிரங்கமாக அல்லாஹ்வின் வார்த்தைகளான குர்ஆன் வசனங்களையும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழிகளையும் வளைத்து திரித்து மக்களுக்கு சொல்லி மக்களை, முஸ்லிம்களை வழிகெடுப்பார்கள். அதனால்தான் நாம் கேட்கிறோம் இந்த புரோகித மவ்லவிகளுக்கு ஆலிம் என்ற சொல்லுக்கு இலக்கணம் தெரியுமா? என்று ஆலிம் என்ற சொல்லுக்கு இலக்கணத்தை அல்லாஹு ரப்புல் ஆலமீன் இந்த மனித சமுதாயத்திற்கு கற்றுத் தருவதை பாருங்கள். ஆச்சர்யப்படாதீர்கள். உங்கள் அறிவுக் கண்களை திறந்து பாருங்கள். அல்லாஹ்வுடைய சத்திய நெறிநூல் குர்ஆன் என்ன சொல்லிக்கொண்டு இருக்கிறது என்பதை பாருங்கள் அல்லாஹ் கூறுகிறான்.

அவனுடைய அடியார்களில் அல்லாஹ்வை அஞ்சுபவர்களே அறிவுள்ளவர்கள் (உலமாக்கள்); நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) மிகைத்தவன், மிக்க மன்னிக்கிறவன். (அல்குர்ஆன் 35:28)

இங்கே அல்லாஹ் ரப்புல் ஆலமீன் “மின் இபாதிஹில்உலமாவு” என்ற அழகான வார்த்தையையே தெளிவாக சொல்லி விட்டான்! இந்த அல்குர்ஆன் வசனத்திற்கு விளக்க உரையாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லும்போது “உலமாக்கள் எனது வாரிசு. ஆனால் அவர்கள் தீனாருக்கோ திர்கமுக்கோ சொந்தக்காரர்கள் அல்ல” என்பது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேரடியான வாக்காகும். ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்வது போல் இந்த மவ்லவி புரோகிதர்களுக்கு இது ஒருபோதும் பொருந்தவே செய்யாது ஏன் என்றால் இந்த புரோகித மவ்லவிகள் மார்க்கத்தைத் தொழிலாக பிழைப்பாகக் கொண்டு சம்பளத்திற்கு தொழ வைப்பார்கள்; இவர்கள் எல்லாம் ஆலிம்களா?அல்லாஹ்வுடைய சொல்லுக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைக்கும் மாற்றமாக கூலிக்கு மார் அடிக்கும் இந்த மவ்லவிகள் ஆலிமா? இவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாரிசாக நிச்சயமாக இருக்கவே முடியாது. காரணம் இவர்கள் தீனாருக்கும் திர்ஹமுக்கும் மட்டும் சொந்தக்காரர்கள். அல்ல ரியாலுக்கும் ரூப்பியாவுக்கும் சொந்தக்காரர்கள்!

இந்த புரோகித மவ்லவிகள் திருமணத்தின் போது மணமகனுக்கு திருமண ஒப்பந்தம் செய்து வைப்பதற்கும் நபி வழிக்கு முரணான – ஷைத்தானிய வாழ்த்துஐர ஓதுவதற்கும் இவர்களுக்கு 100/- ரூபாய் கூலி வேறு. திருமண(நிக்காஹ்) ஒப்பந்தத்தை செய்வதற்கு முழுத் தகுதி பெற்றவர்கள். பெண்ணின் தந்தை, மற்றும் அதற்கு உரிமை உள்ளவர்கள் மட்டுமா? அல்லது இந்த புரோகித மவ்லவிகளா?

ரொக்கம்(வரதட்சணை) இல்லாமல், நகை, சீர், சிறப்புகள் பேரம் பேசாமல் செய்யப்படும் திருமணமே இஸ்லாமிய திருமணம்!

இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லாத ரொக்கம் நகை, சீர் சிறப்புகள் என்று பகிரங்கமாகவும், மறைமுகமாகவும், பேரம் பேசப்பட்டு மணமகள் வீட்டில் இருந்தே வாங்கிய ரொக்கத்தில் இருந்து மஹராக கொடுத்து திருமணம் செய்வதை பகிரங்கமான மோசடி என்றுதான் சொல்லவேண்டும். இந்த பகிரங்கமான மோசடி அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வடைய தூதருக்கும் செய்யுமு் துரோகம் என்று சொன்னால் மிகை இல்லை. ஆனால் நபி வழிக்கு முரணான இந்த கேடுகெட்ட திருமணத்தை பணத்திற்காக, அல்லாஹ்வுடை பள்ளி வாசல்களிலும், மணமகள் இல்லத்திலும், திருமண மண்டபங்களிலும், அல்லாஹ், ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பயம் இல்லாமல், வெட்கம், சூடு, சொரணை இல்லாமல் நடத்தி வைக்கிறார்களே, இந்த கேடுகெட்ட ஜமாஅத்தாரும், புரோகித மவ்லவிகளும், இவர்கள் இன்ஷா அல்லாஹ் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

அல்லாஹ்வுடைய சத்திய மார்க்கத்தில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தந்த முறையில் மட்டுமே செயல்பட அல்லாஹ் அனுமதி அளிக்கிறான். அதில் மாறுதல் செய்வதற்கும் கற்பனைகளை புகுத்துவதற்கும் எந்த கொம்பனுக்கும் எந்த புரோகித மவ்லவிக்கும் உரிமை சிடையவே கிடையாது.

இதுபற்றி அல்லாஹு ரப்புல் ஆலமீன். தன் சத்திய நெறிநூலில் சொல்லும்போது, இன்னும் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஏதேனும் ஒரு காரியத்தை முடிவு செய்துவிட்டால், இறை நம்பிக்கையாளனான எந்த ஆணுக்கும், எந்த பெண்ணுக்கும் தம் காரியங்களில் (அத்தீர்ப்புக்கு மாறாக வேறெதையும்) தேர்ந்தெடுக்கும் உரிமையில்லை; எவர் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறாரோ அவர் பகிரங்கமான வழிகேடாகத் திட்டமாக வழிகெட்டுவிட்டார். (அல்குர்ஆன் 33:36)

தன்னை முஸ்லிம் என்றும், நாங்கள் தான் உண்மையான உலமாக்கள், ஆலிம்கள், மவ்லானா மவ்லவிகள் என்று பீற்றிக் கொள்ளும் புரோகிதர்கள். மேல்கண்ட குர்ஆன் வசனத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? மார்க்கத்தை சொல்லி பிழைப்பு நடத்தும் புரோகிதர்கள் ஒருபோதும் பதில் சொல்லமாட்டார்கள். அலாலஹு ரப்புல் ஆலமீன் அவன் தன் இறுதி நேர்வழிகாட்டல் நூல் அல்குர்ஆனில் 33:21ல் சொல்வது போல் இந்த புரோகித மவ்லவிகளிடம் எந்த முன்மாதிரியும் கிடையவே கிடையாது. இவர்கள் பின்பற்றுவதெல்லாம் பகிரங்கமான வழிகேடாகத் திட்டமாக வழிகெட்டு விட்டார்கள்.

நிச்சயமாக அல்லாஹ் சொல்வதுபோல் அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அழகான முன்மாதிரி இருக்கிறது. அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பக்கூடிய ஒவ்வொரு மனிதனுக்கும் அழகிய முன்மாதிரி இருக்கிறது. நபி அவர்களின் முன்மாதிரியில் வணக்க வழிபாடு, கூட்டுறவு வாழ்க்கை, வாழ்வாதாரம், அரசியல், போன்ற எல்லாத் துறைகளிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றி நடப்பது எல்லா மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கடமையாகும். அல்லாஹ் நம் எல்லோர் மீதும் அருள்செய்வானாக!

Previous post:

Next post: