2021 ஆகஸ்ட்

தலையங்கம்! 2021ன் ஹஜ் பயணம்…? கொரோனாவை கருத்தில் கொண்டு மத்திய சுகாதார அமைச்சகம், வெளியுறவுத்துறை, விமானப் போக்குவரத்து அமைச்சகம், ஹஜ் கமிட்டி, சவூதியில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவற்றுடன் மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகம் விரிவான ஆலோசனை செய்து, 2021ம் ஆண்டு ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பங்கள் பெற்றதாகவும், சவூதி அரசு விதித்த நடைமுறையின்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள தாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு.முக்தர் அப்பாஸ் நக்வி அறிவித்திருந்தார். ஹஜ் பயணிகள், பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக […]

ஒரே சமுதாயம்! Dr. A.  முஹம்மது ஃபாரூக்,  இலங்கை ரசூல்(ஸல்) அவர்கள் இந்த உம்மத்தை எந்த ஒரு ஜமாஅத்தில், எந்த ஒரு இயக்கத்தில் விட்டு விட்டுப் போனார்கள் என்பதற்கு குர்ஆன் ஹதீஃதை தவிர, வேறு ஏதேனும் நடைமுறைச் சான்றுகள் (Practical Evidence) இன்று ஏதேனும் காணப்படுகிறதா? என்று பார்ப்போமேயானால் ஏராள மான சான்றுகளைப் பார்க்கலாம். நாம் அவைகளைப் பார்ப்பதுமில்லை, அவைகளை பார்த்தும் உணர்வு பெறுவதுமில்லை. நபி(ஸல்) அவர்கள் ஏற்படுத்தித் தந்த ஒரு ஜமாஅத்திற்கு இன்றுள்ள எஞ்சியிருக்கும் அடையாளங்கள் […]

இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இடைத்தரகர்களா? தொடர்-12 அபூ அப்தில்லாஹ் அகில உலக அனைத்து மக்களின் ஒரே இறைவனான ஏகன் அல்லாஹ்வின் இறுதி வழிகாட்டி நூலான அல்குர்ஆன் இரவையும், பகலைப் போல் வெள்ளை வெளேர் என்று அனைத்து மக்களுக்கும் வழிகாட்டிக் கொண்டிருக்கிறது. இந்தப் புரோகித மவ்லவிகள் அல்குர்ஆன் உங்களுக்கு விளங்காது; ஆய கலை 64ம் கரைத்துக் குடித்தவர்களுக்கே விளங்கும் என புருடா விடுகிறார்கள். அல்குர்ஆனின் நேரடிக் கருத்துக்களைத் திரித்து, வளைத்து, மறைத்து நேர்வழியை கோணல் வழியாக ஆக்கி […]

படைப்பின் பரிணாம வளர்ச்சி! Dr. A. முஹம்மது அலி, Ph.D., இந்திரிய துளியின் பரிணாம வளர்ச்சி : விதி எண் 5 : மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்; குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான். முதுகுத் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.  (அல்குர்ஆன் 88:5-7) உங்கள் தாய்மார்களின் வயிறுகளில், ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களைப் படைக்கின்றான். (அல்குர்ஆன் 39:6) அவன் மனிதனை அலக்(நிலையி)லிருந்து படைத்தான். (அல்குர்ஆன் 96:2) (கர்ப்பக் […]

அமல்களின் சிறப்புகள்…. தொடர் : 72 அப்துல் ஹமீத் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் (1154 பக்கங்கள்) தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையி லிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு […]

இறைவனைப் பற்றிய மன உறுதிதான் மார்க்கம்! கமால், திருச்சி தன்னைத் தவிர வேறு எவருக்கும் இல்லை என்கிறான். ஆனால் இறைவனுக்குரிய நிலைப்பாடு பற்றி மனிதன் தன் அளவில் சிந்திக்கிறான். இறைவன் இவ்வுலகம் மட்டுமல்லாது ஏனைய உலகங்களையும் படைத்து இவ்வுலகில் அனைத்து ஜீவராசிகளையும் உண்டாக்கி பரிபாலித்து வருகிறான் என்பதை ஏற்றுக் கொண்டாலும் அவனுக்கு சில இணை-துணைகளைத் தன் கற்பனை மூலம் உண்டாக்கி அவற்றின் சரித்திரங்களை காவியங்களாக்கி அதன் மூலம் வாழ்வில் வெற்றி பெற முயல்கிறான். இன்னும் சற்று கொஞ்சம் […]

நல்லது இருந்தால் அதனை எடுத்துக்கொள்ளலாம்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர்,  இலங்கை. (இறைத் தூதராகிய) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்துக் கூறுவார்கள்; அவர்கள் அவனுக்கே பயப்படுவார்கள்; அல்லாஹ்வையன்றி வேறு யாருக்கும் அவர்கள் பயப்படமாட்டார்கள்; ஆகவே கேள்வி கணக்கு கேட்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன். (33:39) ஆயினும் நம் வேதனையைக் கண்டபோது, அவர்கள் கொண்ட நம்பிக்கை அவர்களுக்குப் பயனளிக்கவில்லை. (இதுவே) அல்லாஹ்வுடைய வழியாகும்; அவனுடைய அடியார்களுக்கு (முன்னரும் இவ்வாறு) நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆதலால் அந்நேரத்தில் காஃபிர்கள் நஷ்டத் தையே அடைந்தார்கள். (40:85) நல்லது, பொருத்தமானது, […]

யூகம் உண்மைக்கு உதவாது! ஷரஹ் அலி, உடன்குடி உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும். படைத்தவன் உங்களுக்கு அருள் புரியட்டும். அவர்களில் பெரும்பாலோர் யூகத் தைத் தவிர (வேறெதையும்) பின்பற்று வதில்லை. நிச்சயமாக யூகம் உண்மைக்கு ஒருபோதும் உதவாது. அவர்கள் செய் கின்றவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் 10:36) நீங்கள் செய்யாததை (பிறருக்கு) ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாததை நீங்கள் (பிறருக்கு) கூறுவது அல்லாஹ் விடம் வெறுப்புடையதாக இருக்கிறது.  (இறைநூல்: 61:2,3) […]

முஸ்லிம்களின் உயரிய பாரம்பரியம்! – இன்ஜினியர் இஸ்லாத்தில் முன்னோர்களின் பாரம் பரியத்திற்கென்று எந்தவித மதிப்பும், மரியாதையும் கிடையாது. இப்பாரம்பரியத்தை வைத்துக்கொண்டு இறைவனிடத்தில் உயர்ந்த இடத்தைக் கோரவும் முடியாது; பெறவும் முடியாது. முன்னோர்களின் உயர்ந்த பாரம்பரியத்தில் வந்தவர்கள், இறைவனிடத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெற்றிட இயலும் என்றிருந்தால், இப்ராஹிம்(அலை) அவர்களின் தந்தை நூஹ்(அலை) அவர்களின் மகன் லூத்(அலை) அவர்களின் மனைவி நபி(ஸல்) அவர்களை வளர்த்த பெரிய தந்தையான அபூதாலிப் ஆகியோர்களுக்கெல்லாம் சுவர்க்க அந்தஸ்து கிடைக்கும் என்று வல்ல அல்லாஹ் குறிப்பிட்டிருப்பான். […]

ஹராமை உண்ணும் ஹஜ்ரத்க(ல்)ள்! ஹலரத் அலி தூய இஸ்லாம் இன்று பெரும்பான்மை முஸ்லிம்களின் நடவடிக்கைகளால் இறை மறுப்புக்கு ஒப்பாகிவிட்டது. சுன்னத்தைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு பித்அத்தை சுன்னத் என்ற பெயரில் அரங்கேற்றிவிட்டார்கள். நன்மைகள் தீமைகள் ஆகவும், தீமைகள் நன்மைகளாகவும், முஸ்லிம்களால் மாற்றப்பட்டுவிட்டன. நபி(ஸல்) அவர்களின் காலத்தில், நபித் தோழர்கள், தாபீயீன்கள் வாழ்ந்த பொற்காலத்தில் இருந்த அசல் மார்க்கம் இன்று காணப்படவில்லை. நபி(ஸல்) அவர்களின் காலத்தில் வழிகேட்டில் வீழ்த்தும் செயல்களாக கருதப்பட்டவை இன்று நேர்வழி காட்டிகளாக கருதப்படுகின்றன. இந்த […]

குர்ஆனின் நற்போதனைகள்… மனிதனின் மறுபக்கம்…. Dr. A. முஹம்மது அலி, Ph.D., நிச்சயமாக நாம் மனிதனைப் படைத் தோம். அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம். (அல்குர்ஆன் 50:16) நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்கார னாகவும் மிக்க நன்றி கெட்டவனுமாயி ருக்கிறான். (அல்குர்ஆன் 14:34,100:6) மனிதன் மகா நன்றி மறந்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 17:67,22:66) நாம் நம்மிடமிருந்து நற்கிருபையை மனிதன் சுவைக்கும்படிச் செய்து பின்பு அதனை அவனை விட்டும் நீக்கி விட்டால், நிச்சயமாக அவன் நிராசைப் […]

ஐயமும்!  தெளிவும்!! ஐயம் : குர்பானி துல்ஹஜ் 10ஆம் நாள் மட்டுமா? இல்லை 10,11,12,13 நான்கு நாட்களா? ஆய்வு என்ற பெயரில் நவீன இயக்க வாதிகள் புதுப்புது கருத்துக்கள் வெளியிடுகிறார்களே! இது பற்றிய அந்நஜாத்தின் பார்வை என்ன? வார்னர் நதீர், நாகர்கோவில். தெளிவு : இதுபற்றி தாங்கள் அந்நஜாத்தின் பார்வையை கேட்டிருப்பதின் பேரில், குர்ஆன் மற்றும் ஹதீதின் அடிப்படையில் எமது பார்வையை பதிவிடுகிறோம். கீழே கொடுத்துள்ள 22:28 இறைவசனத்தைப் பாருங்கள். “தங்களுக்குரிய பலன்களை அவர்கள் அடைவதற்காகவும், அவன் அவர்களுக்கு வழங்கியுள்ள […]

விமர்சனமும்! விளக்கமும்!! விமர்சனம் : அந்நஜாத் ஜூன் 21 இதழ். பக்கம் 30ல், திருமணத்திற்கு முன் மணமக்கள் ஒரு முறையோ இரண்டு முறையோ சந்திப்பதால் மட்டும் நல்ல பெண், மார்க்க அறிவுள்ள பெண், இறையச்சமுள்ளவள் என்று முடிவுக்கு வரமுடியாது. இந்நிலையில் மார்க்கம் சந்திக்க அனுமதிப்பது ஏன்? எங்கள் பகுதிகளில் இக்காலத்தில் தான் மணமக்களை சந்திக்க அனுமதிக்கின்றனர். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் இது நடைமுறையில் இல்லாதிருந்தது.  அபூ நபீல்,தேங்காய்பட்டணம். விளக்கம் : தாங்கள் கூறுவது போல, சில ஆண்டு களுக்கு […]