விரைவாக நோன்பு திறப்பது மட்டும் நபி வழி அல்ல!

S. சித்தீக் M.Tech.

விரைவாக நோன்பு திறப்பது மட்டும் நபி வழி அல்ல!

விரைவாக மஃக்ரிப் தொழுவதும் சேர்த்து தான் நபி வழி!

விரைவாக நோன்பு திறக்க வேண்டும் என்ற செய்தி மக்களிடம் பரவலாக பிரச்சாரம் செய்யப்படுகின்றது. அது ஹதீதின் ஒரு பகுதிதான். பரவலாக பிரச்சாரம் செய்யப்படாத அந்த ஹதீதின் மறு பகுதியை பார்ப்போம்.

நபி(ஸல்) அவர்கள்நோன்பு துறப்பதையும், மஃக்ரிபையும்விரைவுப்படுத்துபவர்களாக இருந்தார்கள் என அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.   (முஸ்லிம்: 2005)

இஃப்தாரை விரைவாக முடித்து, மஃக்ரிப் தொழுகையையும் நாம் விரைந்து தொழக்கூடியவர் களாக இருக்க வேண்டும். இதுதான் முழுமையான நபிவழி.

விரைந்து நோன்பு திறக்க வேண்டும் என்பது வலியுறுத்தி சொல்லப்படுவது போல் நபி வழியான மஃக்ரிபை விரைந்து தொழுவது சொல்லப்படுவது இல்லை. விரைந்து நோன்பு திறக்கும் நம்மில் பலர் பொறுமையாக அனைத்தையும் சாப்பிட்டுவிட்டு தாமதமாக மஃக்ரிப் தொழுவதை  காணமுடிகின்றது.

இஃப்தாரில் நபி வழியை முழுமையாக அமல்படுத்த  என்ன வழி?

நம்முடைய இஃப்தார் உணவு பட்டியல் பெரியதாக இருப்பதால், அவை அனைத்தையும் 10 நிமிடங்களில் நம்மால் உண்ண முடியவில்லை. எனவேதான் மஃக்ரிப் தொழுகை மிக தாமதமாகின்றது. மருத்துவர்களின் அறிவுரைப்படி சாப்பிட்டால் இதற்கு ஒரு தீர்வு கண்டிப்பாக கிடைக்கும்.

பட்டினி இருந்த பின் உணவு சாப்பிடும்போது ஒரே நேரத்தில் அனைத்தையும் சாப்பிட வேண்டாம். பிரித்து இரண்டு வேளையாக சாப்பிட்டால் அது நமது செரிமான சக்திக்கு உகந்ததாக இருக்கும், உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும். எனவே நமது இஃப்தாரை இரண்டாக பிரிக்கலாம். 10 நிமிடத்தில் நம்மால் எதை உண்ண முடியுமோ அதை முதல் முடித்துவிட்டு தொழுக சென்றுவிடலாம். தொழுதுவிட்டு வந்து இப்தாரின் 2ஆம் பகுதியை நேரம் ஒதுக்கி பொறுமையாக சாப்பிடலாம். அதாவது முதலில் பேரீட்சை பழம் கொண்டு நோன்பு திறந்தபின் தண்ணீர், பழரசம் போன்ற தண்ணீர் பொருள்களை மட்டும் அருந்திவிட்டு மஃக்ரிப்  தொழ செல்லலாம். தொழு கைக்கு பின் வந்து கஞ்சி, வடை அல்லது  விருப்பமான திட உணவுகளை சாப்பிடலாம். இது தலைவலி, தலைசுற்றல் போன்ற பிரச்சினைகளை  தவிர்க்கும்.

இதனால் நோன்பு திறப்பதிலும், மஃரிப் தொழுவதிலும் நபிவழியை பின்பற்றிய நன்மை நமக்கு கிடைக்கும். நமது செரிமான சக்தியும் சிறப்பாக செயல்பட்டு உடல் ஆரோக்கியமும்  கிடைக்கும். விரைவாக நோன்பு திறக்கின்றேன் என்று இஃப்தாரின் மொத்த உணவையும் அரை மணி நேரம் சாப்பிட்டு விட்டு தாமதமாக தொழுதால் நபி வழியையும் விட்டு விடுவோம். உடல் ஆரோக்கியமும் கெட்டு விடும். நபி வழியை பின்பற்றவும், உடல் ஆரோக்கியத்திற்கும் நபி  வழியை முழுமையாக  பின்பற்றுவோம்.  இன்ஷா அல்லாஹ்.

இன்னும் இஃப்தார் விருந்து என்னும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்துவதும்  தொழுகை  தாமதப்படுவதற்கு  காரணமாகிறது.’

——————————

அல்குர்ஆன்ஓர் அற்புதம்!

அஹமத் இப்ராஹிம், புளியங்குடி

மும்பையைச் சேர்ந்த பெண் சினிமா நடிகை ஆபாசமான நடனத்திற்கு பெயர் பெற்ற பெண் நடிகை!

சமீப காலமாக இணைய தளங்களில் இந்தப் பெண்ணின் தோற்றம் ஹிஜாபுடன் காட்சியளிப்பதும் கூடவேதான் திருந்தியதற்கான காரணத்தையும் மிகத் தெளிவாக கூறுகின்றார்.

அந்தக் காரணம் இதுதான்,

மும்பையைச் சேர்ந்த அவர் தன்னுடைய தாய்மொழி உர்து ஆகும்! எனவே அல்குர்ஆனை வெகு எளிதாக சிறு வயதிலேயே படித்துவிட்டார், ஓதிவிட்டார்! ஏனெனில் உர்துவை தாய்மொழியாகக் கொண்டவர்கள் அரபியிலுள்ள திருகுர் ஆனை மிக எளிதாக ஓதிவிடுவார்கள்! காரணம் உர்து மொழி எழுத்துக்களும் அரபி எழுத்துக்களும் ஏறக்குறைய ஒரே  மாதிரியாக  இருக்கும்!

நாம் சொல்ல வந்த விசயம் என்னவென்றால் புரியாத அரபி மொழியிலுள்ள அல்குர்ஆனை ஓதியும் கிடைக்காத நேர்வழி அந்த நடிகைக்கு எப்படி நேர்வழி கிடைத்தது என்றால், சமீபத்தில் அல்குர்ஆனின் விளக்க உரையை அதாவது தனது தாய் மொழியான உர்துவில் மொழி பெயர்க்கப்பட்ட அல்குர்ஆனை படித்த பின்புதான் இஸ்லாமிய மார்க்கத்தின் உண்மை நிலை என்ன என்பதையும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் வல்லமைகளையும் மறுமையில் நடக்க விருக்கும் நிகழ்வுகளையும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை பின்பற்றுவதின் அவசியம் ஆகியவைகள் தனக்கு தெளிவாக விளங்கியது பற்றியும் கண்ணீரும் கம்பலையுமாக உள்ளம் உருகி  பேட்டியளிக்கின்றார்.

இந்த  நிகழ்ச்சியைக்  காணும்  மாற்று  மத  சகோதரர்களும்  கண்ணீர்  வடிக்கின்றனர்.

என் அன்புச் சகோதர சகோதரிகளே நம் இந்திய திருநாட்டில் இஸ்லாம் வந்து எத்தனை நூற்றாண்டுகள்  ஆகிவிட்டன?

இத்தனை ஆண்டுகளாக அல்குர்ஆன் இல்லந்தோறும் முஸ்லிம்களால் ஓதப்பட்டுத்தான் வருகின்றன. அது ஏன் முஸ்லிம்களுக்கு நேர்வழிகாட்டவில்லை என்று சிந்தித்தால் அதற்கான விடைதான் மேற் கூறப்பட்ட நடிகையின் வாழ்க்கை சரிதம். 

அல்லாஹ்வின் கிருபையால் தற்காலத்தில் எல்லா மொழிகளிலும் அல்குர்ஆன் மொழி பெயர்ப்புகள் வெளிவரத் துவங்கியுள்ளன என்றாலும் இன்னும் அல்குர்ஆன் மொழி பெயர்ப்புக் களை பெருங்கொண்ட முஸ்லிம்கள் ஏறெடுத்தும் பார்க்க மறுக்கின்றனர். அதன் காரணமாக பெரும்பாலான முஸ்லிம்கள் மத்ஹபுவாதிகளாகவும், இயக்கவாதிகளாகவும் பிரிந்து அத்தோடு கற்பனையாக உருவாக்கப்பட்ட மண்ணறைகளில் உள்ளவர்களை தங்கள் பாதுகாவலர்களாக  ஆக்கிக்  கொண்டுள்ளனர். மேலும் மவ்லிது, ஸிர்க், தாயத்து, தட்டு, தரீக்காக்கள், ஏர்வாடி பேய் பிசாசு ஆட்டங்கள், சந்தனக்கூடு, கொடியேற்றம், மீலாது ஊர்வலங்கள், அனாச்சாரங்கள் போன்ற மூட நம்பிக்கைகளிலும் மற்ற மதத்தவர்களை விட தாங்கள் கொஞ்சமும் குறைவில்லாதவர்கள்  என  வெளிக்காட்டிக்  கொள்கின்றனர். 

இந்நிலைமாறவேண்டுமானால்அல்குர்ஆனோடுதொடர்புடையவர்களாகஆவதற்குநாம்அனைவரும்பாடுபடவேண்டும். இந்நிலையை நாம் உருவாக்கிவிட்டால் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவி முஸ்லிம்களுக்கு உறுதியாகக் கிடைக்கும். அப்போது ஏக இறைவனை மறுக்கும் பயங்கரவாதிகளால் ஏற்படும் எந்தத் தீங்கும் நம்மை எதுவும் செய்துவிட முடியாது. இன்ஷா  அல்லாஹ்!!

Previous post:

Next post: