2025 அக்டோபர்

தலையங்கம் : உலக நாடுகள் எப்படிப்பட்டது தெரியுமா? இந்திய அரசியலிலும் சரி, தமிழக அரசிய லிலும் சரி, அரசியல்வாதிகள் தேர்தல் நேரங் களில் அல்லது ஆட்சி அமைக்க பெரும் பான்மை தேவையான நேரத்தில் ஒன்றை அடிக்கடி  சொல்வார்கள்.  அது  என்ன  தெரியுமா? “அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர  எதிரியும்  இல்லை” அதுபோல உலக நாடுகளிலும் உண்டு. ஆனாலும் இந்திய அரசியல் கட்சிகளைப் போல் மிகவும் கேவலமான/சுயநலமான நண்பன்,  எதிரி  என்று  கிடையாது. உதாரணமாக அமெரிக்காவை பார்ப்போம். […]

“தக்லீது!” – ஓர் ஆய்வு! – அபூ ஃபாத்திமா மறுபதிப்பு : இன்றைய சூழ்நிலையில், முஸ்லிம் சமுதாய மக்களிடம் “தக்லீது” செய்யாதீர்கள். “தக்லீது” குர்ஆனுக்கும், ஹதீதுகளுக்கும் முழுக்க, முழுக்க முரணானதாகும், என்று சொன்னவுடன், “தக்லீது” செய்யக்கூடாது என்றால், மனிதர்களால் ஏட்டில் கோர்வை செய்யப்பட்டுள்ள குர்ஆனைப் பார்க்கக் கூடாது; மனிதர்களால் சேகரம் செய்து தரப்பட்டுள்ள நூல்களைப் பார்க்கக் கூடாது. அந்நஜாத்தைப் பார்ப்பதும் கூடாது. காரணம் இவை எல்லாம் “தக்லீது” ஆகும் என்று உடனே சொல்லிவிடுகிறார்கள். தக்லீது செய்யாமல் நடப்பதாக […]

இஸ்லாத்தின் பார்வையில் சோதனை! முஹிப்புல் இஸ்லாம் மறுபதிப்பு : வாழ்க்கை  ஓர்  மனித  கண்ணோட்டம் : வானங்களையும், பூமியையும் அவனே (அல்லாஹ்) ஆறு நாட்களில் படைத்தான். மேலும் அவனுடைய சிம்மாசனம் (அர்ஷ்) நீரின் மீதுள்ளது. உங்களுள் எவருடைய செயல்கள் மிக சிறந்தவை என அவன் உங்களைச் சோதிப்பதற்காக (இவற்றைப் படைத்தான்)  ஹூது11:7 மனிதர்கள்  வாழப்  பிறந்தவர்கள்! வாழ்க்கை வாழ்வதற்கே! வழக்கமாய் மனிதர்கள் அனைவரும் வாழ்க்கை குறித்து கொண்டிருக்கும் பொது கருத்து. எது வாழ்க்கை? எப்படி வாழ்வது? என்பதில்தான் […]

உங்கள் தேர்வு! (கோபம்) ­ சரஹ் அலி, உடன்குடி மறு பதிப்பு : (இறைவன் மீது பயபக்தியுடையோர்) தங்களின் கோபத்தை மென்று விழுங்கி விடுவார்கள். மனிதர்களின் குற்றங்களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் இத்தகைய நல்லோர்களை நேசிக்கின்றான்.  (அ.கு. 3:134) பொதுவாக இந்த உலகில் வாழும் நாம் ஒவ்வொருவருமே, விரும்பினாலும், விரும்பாவிட் டாலும், பிற மனிதரோடு இணைந்தே வாழவேண்டிய நிலையில் இருக்கிறோம். அந்தப் பிற மனிதன், நமது கணவனாக, மனைவியாக, நண்பனாக உறவினராக, சக பணியாளனாக, மாற்று மதத்தைச் […]

வானம் பூமியை படைத்தது ஒரே இறைவனா? பல கடவுள்களா? S.H. அப்துர் ரஹ்மான் “உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும்” “படைத்தவன் உங்களுக்கு அருள்புரியட்டும்” “ஒரே இறைவனா? பல இறைவனா?” என்பது மனிதர்களின் ஆன்மீக சிந்தனைகளின்  மையக்  கேள்விகளில்  ஒன்று. இதற்கான  பதில் ஒரே  இறைவன்தான் : 1. இந்து வேதங்களில் “ஏகமேவ அத்விதீயம்” என்று கூறப்பட்டுள்ளது. அதாவது “ஒரே ஒன்று, அதற்கு  இணையாக  இன்னொன்றில்லை”  2. “இஸ்லாத்தில் அந்த இறைவன் ஒருவனே” […]

இந்தியாவில் பெரும்பான்மை முஸ்லிம்கள் பின்பற்றுவது சுன்னத் வல் ஜமாத் கொள்கையா? அல்லது சிஆ கொள்கையா? எஸ். ஹலரத் அலி, திருச்சி. இந்தியாவில் பெரும்பான்மை முஸ்லிம்கள் பின்பற்றுவது சுன்னத் வல்ஜமாத் கொள்கையா? அல்லது சிஆ  கொள்கையா? என்ற கேள்வியை எவர் கேட்டாலும்… உடனே புள்ளி விபரத்துடன் பதில் கிடைத்துவிடும். இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் பின்பற்றுவது “சன்னி” எனச் சொல்லப்படும் சுன்னத் வல்ஜமாத் கொள்கை தான் என்று ஆக்ரோமான பதில் வரும். ஆனால் இந்திய முஸ்லிம்களின் அன்றாட வாழ்க்கை நடவடிக்கை […]

மரணம் வரமா அல்லது சாபமா? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் உலகில் அன்றாடம் புதிது புதிதாக பல நவீன கண்டுபிடிப்புக்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றில் இப்போது AI, AIG, AIS  வரை  வந்துவிட்டன. AI என்றால்; Artificial Intelligence மனித மூளையைப் போன்று செயல்பட வைக்கும் செயற்கை  நுண்ணறிவு  கணினி.  உதாரணம் :  Google Translate & Chat GPT. AIG  என்றால் Artificial Intelligence  General. பொது  செயற்கை  நுண்ணறிவு கணினி, உதாரணம் :  ரோபோ மனிதன் செய்யக்கூடிய […]

அறிந்து கொள்வோம்! மர்யம்பீ,  குண்டூர் 1. நிச்சயமாக வானங்களும், பூமியும் பிரிப்பதற்கு முன் எவ்வாறு இருந்தன? இணைந்திருந்தன.   அல்குர்ஆன் 21:30 3. வானத்தின் வாசல்களை எதைக் கொண்டு திறந்துவிட்டதாக இறைவன் கூறுகிறான்? கொட்டும்  நீரால்.   அல்குர்ஆன் 54:11 4. இப்றாஹீம்(அலை) அவர்கள் நிச்சய மாக நான் நீங்கள் வணங்குபவற்றை விட்டும் விலகிக் கொண்டேன் என யாரிடம்  கூறினார்கள்? தன்தந்தை, தனது சமூகத்தினரிடம். அல்குர்ஆன் 43:26,27 5. குதித்துப் பாயும் நீர் எங்கிருந்து வெளிப்படுகிறது என்று […]

என்னை  பின்பற்றுங்கள்!! அய்யம்பேட்டை A. நஜ்முதீன் இவ்வுலகில் இப்போது (2025வரை) சுமார் 800 கோடி பேருக்கு மேல் மக்கள் வாழ்கின் றார்கள். இதற்கு முன்பு பல கோடிக்கணக் கான மனிதர்கள் வந்தார்கள், வாழ்ந்தார்கள், மறைந்தார்கள். இதில் பிர்அவ்ன் என்ற கொடுங்கோல் மன்னனும் உண்டு, இவ்வுலகை ஆட்டிப் படைத்த ஹிட்லர் போன்ற சர்வாதிகாரியும் உண்டு. உலகில் பெரும் பகுதிகளை வென்ற மாவீரன் அலெக்சாண்டரும் உண்டு, பல அமெரிக்கா அதிபர்களும் உண்டு, அண்ணல் காந்தியடிகளும் உண்டு, சுமார் நூற்றுக்கு மேற்பட்ட […]

நாய்கள் செல்ல பிராணியா? M. சையத் முபாரக், நாகை இப்பிரபஞ்சமும் அதிலுள்ள படைப்புகளும் அல்லாஹ்வால் படைக்கப்பட்டதே. அதில் வேறு விதத்தில் பயன்படுகின்ற, நமக்குத் தீங்கு தருகின்ற சிலவற்றை அல்லாஹ் நமக்கு உண்பதற்கும், வளர்ப்பதற்கும் தடை செய்திருக்கின்றான். அதில் ஒன்றுதான் வீடுகளில் நாய் வளர்ப்பதும், அதோடு கொஞ்சி  குலாவி  விளையாடுவதும். இஸ்லாம்  என்ன  சொல்கிறது? “நாயும், உருவப்படங்களும் உள்ள வீட்டில் (இறையருளைக் கொண்டுவரும்) வானவர்கள் நுழையமாட்டார்கள்” என நபி (ஸல்) அவர்கள்  கூறினார்கள்.  (புகாரி: 5949, முஸ்லிம் 4274) […]

நீங்கள் விதைக்கின்ற விதையைப் பற்றி எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? எஸ். ஹலரத் அலி, திருச்சி. நீங்கள் விதைக்கின்ற (Seed Germination and growth) விதையைப் பற்றி எப்போதாவது  நீங்கள்  சிந்தித்ததுண்டா? அல்குர்ஆன் 56:63 மனிதன் நிலத்தை பண்படுத்தி உழுது நீர் பாய்ச்சி விதை விதைக்கின்றான். பின்பு மண்ணில் புதைக்கப்பட்ட விதைக்கு என்ன நடக்கிறது என்பது மனிதனுக்கு தெரியாது. இதைத்தான் அல்லாஹ்  சிந்திக்கச்  சொல்கிறான். “நீங்கள் விதைப்பதை நீங்கள் பார்க்கவில்லையா? நீங்கள் தான் அதை பூமிக்குள் வளர்க்கிறீர்களா? அல்லது […]

சாட்சிகளில் இறைசாட்சியே மேலானதாகும்!! அய்யம்பேட்டை A. நஜ்முதீன் சாட்சியங்களில் பல வகை உண்டு: அவை : 1. மனசாட்சி 2. மனிதர்கள் சாட்சி 3. இறைவன் சாட்சி. மனசாட்சி : மனசாட்சி என்பது வெளியிலிருந்து வரும் கட்டளை அல்ல. நமது உள்ளத்திலிருந்து எழுந்து மூளையின் உத்தரவுப்படி செய்யும் ஒரு  ஆற்றலாகும். சில நேரம் நன்மையை செய்யத் தூண்டும்.சில நேரம் தீயதையும் செய்ய தூண்டும். அதாவது ஒவ்வொருவரின் சூழ்நிலை, சந்தர்ப்பத்தை பொறுத்து மனசாட்சிபடி அவரின் செயல்  வெளிப்படும். மனசாட்சி […]

புத்தகங்களை சுமக்கும் கழுதைகள் யார்? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் இவ்வுலகில் இப்போது 800 கோடிக்கு மேல் மக்கள் வசிக்கின்றார்கள், அதில் சுமார் 210 கோடி பேர் முஸ்லிம்களாக உள்ளனர். இந்த 210 கோடி முஸ்லிம்களும் குர்ஆன் இறை வழிகாட்டி நூல் என்றும், இறைவனிட மிருந்து அருளப்பட்டது என்பதிலும் 100% சதவீதம்  நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆனால் எல்லா முஸ்லிம்களும் நம்பிக்கை வைத்துள்ள அந்த குர்ஆனை படித்து புரிந்து கொண்டுள்ளார்களா? என்றால் இல்லை.  அதற்கு  காரணம்  மூன்று : 1. […]