அறிந்து கொள்வோம்!
மர்யம்பீ, குண்டூர்
1. நிச்சயமாக வானங்களும், பூமியும் பிரிப்பதற்கு முன் எவ்வாறு இருந்தன?
இணைந்திருந்தன. அல்குர்ஆன் 21:30
3. வானத்தின் வாசல்களை எதைக் கொண்டு திறந்துவிட்டதாக இறைவன் கூறுகிறான்?
கொட்டும் நீரால். அல்குர்ஆன் 54:11
4. இப்றாஹீம்(அலை) அவர்கள் நிச்சய மாக நான் நீங்கள் வணங்குபவற்றை விட்டும் விலகிக் கொண்டேன் என யாரிடம் கூறினார்கள்?
தன்தந்தை, தனது சமூகத்தினரிடம். அல்குர்ஆன் 43:26,27
5. குதித்துப் பாயும் நீர் எங்கிருந்து வெளிப்படுகிறது என்று அல்லாஹ் கூறுகிறான்?
ஆணின்முதுகந்தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையே உள்பகுதி.
அல்குர்ஆன் 86:6, 7
7. நாம் அல்லாஹ்வுக்கு அழகிய முறை யில் கடன் கொடுத்தால் அதனை அல்லாஹ் எவ்வாறு ஆக்குவதாக கூறினான்?
பன்மடங்காகஆக்குவான். அல்குர்ஆன் 64:17
8. மனிதனை சோதிப்பதற்காக எதிலிருந்து படைத்தான்?
கலப்பு இந்திரியத்திரிலிருந்து படைத்தான். அல்குர்ஆன் 76:2
9. நிராகரிப்பாளர்களுக்கு எதை தயார் செய்து வைத்திருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்?
சங்கிலிகள், விலங்குகள், மற்றும் நரகம். அல்குர்ஆன் 76:4
10. நேரான வழியில் இருப்பவர் யார் என்பதை யார் அறிய முடியும்?
அந்தஇறைவனேஅறியமுடியும். அல்குர்ஆன் 17:84
11. இப்றாஹிம்(அலை) அவர்களை அவரது தந்தை எதைக்கொண்டு கொல் வேன் என்று கூறினார்?
கல்லெறிந்து. அல்குர்ஆன் 19:46
12. சிஃரா என்றால் என்ன?
வணங்கப்பட்டு வந்த நட்சத்திரம். அல்குர்ஆன் 53:49
13. மாதத்தில் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது எதற்கு சமம் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
மாதம்முழுவதும்நோன்புநோற்பதற்கு. புகாரி: 6134
14. ஹஜ்ஜு கடமையுள்ள தந்தைக்கு பதிலாக மகன் ஹஜ் செய்யலாமா?
செய்யலாம். புகாரி : 1855
15. குதிகால்களை சரியாக கழுவாதவர்கள் மறுமையில் எங்கு இருப்பார்கள் என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள்?
நரகத்தில் இருப்பார்கள். புகாரி: 60
16. எந்த பிராத்தனையின்போது நபி(ஸல்) அவர்கள் தம் மேலாடையை மாற்றிப் போட்டார்கள்?
மழைக்காக வேண்டும்போது. புகாரி:1011
17. இரவுகளின் எந்தத் தொழுகை கடைசி தொழுகை?
வித்ர்தொழுகை. இப்னு உமர்(ரழி) புகாரி: 998
18. கிரகணங்களை கண்டால் என்ன செய்ய வேண்டும் என நபி(ஸல்) கூறினார்கள்?
தொழச் சொன்னார்கள். அபூமஸ்வூத்(ரழி) புகாரி: 1041
19. நபி(ஸல்) ஹஜ்ஜின் போது மக்கா வெற்றிக்குப் பின் மக்காவில் எத்தனை நாட்கள் தங்கினார்கள்?
19 நாட்கள். ஆதாரம்:அர்ரஹீகுல் மக்தூம், பக்கம் 501