தலையங்கம் : தீதும் நன்றும் பிறர் தர வாரா! அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) “யாதும் ஊரே யாவரும் கேளீர் தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்பது புறநானூறு நூல் கூறும் கருத்து. நன்மையும் தீமையும் பிறர் தருவதில்லை. ஒருவரின் நற்செயல், தவறான செயல் ஆகியவற்றின் பலன் அவருக்கே வந்து சேரும். அதாவது, நம் வாழ்வில் சந்திக்கும் நன்மை தீமை அனைத்தும் நம்முடைய செயல்களின் விளைவே அன்றி, பிறரால் வருவதில்லை. தமிழ் நூல்களில் சொல்லப்பட்ட “தீதும் நன்றும் பிறர் […]
2025 செப்டம்பர்
மாற்று மதத்தவர்களுக்கு இஸ்லாம் கொடுக்கும் கண்ணியம்! – அபூ அப்தில்லாஹ் மார்க்கத்தில் நிர்ப்பந்தமே இல்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி பிரிந்து முற்றிலும் தெளிவாகிவிட்டது. (2:256) அன்று மீனாட்சிபுரம் போன்ற இடங்களில் மத மாற்றத்துக்கு வெளிநாட்டுப் பணம்தான் காரணம் என்று சொல்லும் மாற்று மதத்தவர்கள், இஸ்லாத்தில் உள்ள இத்தகைய உண்மை நிலையை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். பணத்தையோ, பதவியையோ அல்லது வேறு எதையும் விலையாகக் கொடுத்து மக்களை இஸ்லாத்தின் பக்கம் ஈர்ப்பதை இஸ்லாம் விரும்பவில்லை. அவ்வாறு இஸ்லாத்திற்கு வந்தவர்களுக்கும், அவ்வாறு வருவதற்கு […]
படைத்தவனும், படைப்பினங்களும் அல்லாஹ்வின் அடிமை என்று பிரகடனப்படுத்திய இறுதி இறைத்தூதர்! முஹிப்புல் இஸ்லாம் மறுபதிப்பு : ஆகஸ்ட் மாத தொடர்ச்சி… இப்படி அல்லாஹ்வையும், அவனது தூதரையும் இணைத்துப் பார்க்கிறோம். இதன் மூலம் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் கண்ணியப்படுத்துவதாக இந்திய முஸ்லிம்கள் மனப்பால் குடிக்கின்றனர். ஆனால் யதார்த்தம் இதற்கு மாற்றமானது என்பதைப் புரிந்து கொள்ள தவறிவிட்டோம். அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒன்றானவர்கள் என்று சித்தரிப்பதே இதை உருவாக்கியோர்கள் உள்நோக்கம் என்பதை உணரத் தவறிவிட்டோம். அல்லாஹ்வுடன், அவனது தூதரையும் […]
அவர்களுக்கு வானத்தின் வாயில்கள் திறக்கப்படமாட்டாது! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. நிச்சயமாக நம்முடைய வசனங்களைப் பொய்ப்பித்து, அவற்றை (ஏற்பதை) விட்டும் பெருமையும் கொண்டவர்களுக்கு வானத்தின் வாயில்கள் திறக்கப்படமாட்டாது; மேலும், ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனத்தில் நுழையமாட்டார் கள். மேலும், குற்றவாளிகளுக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம். (அல்குர்ஆன் 7:40) என்பதாக உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான். இதில், “”அவர்களுக்கு வானத்தின் வாயில்கள் திறக்கப்படமாட்டாது” எனும் தொடருக்கு இரண்டு விதமான பொருள் கூறப்பட்டுள்ளது. 1. அவர்கள் செய்த […]
இயக்க வெறியால் பிரசாரத்துக்கே தடை! K.M. அப்துல் ஹமீது மறுபதிப்பு : திருக்குர்ஆன் முக்காலத்தையும் உணர்த்தக் கூடிய இறுதி நெறிநூல். திருக்குர்ஆனையும், நபி வழியையும் அப்படியே ஏற்று நடக்கிறோம் என்று கூறும். நம் சகோதரர்கள் இயக்க விசயத்தில் மட்டும் நாம் பல வருடங்களாக எடுத்துக்காட்டும் குர்ஆன், ஹதீஃத் ஆதாரங்களைத் தூக்கி எரிந்துவிட்டு, இவ்வுலகில் ஆதாயத்(பணத்)தை பெறவே இயக்கங்களை நிலைநாட்டி வருகின்றனர். உலகத்தில் வாழக்கூடிய முஸ்லிம்கள் நாட்டுக்கு ஒரு அமைப்பு. மாநிலத்திற்கு ஒரு இயக்கம், மாவட்டத்திற்கு ஒரு மன்றம், […]
இயற்கையின் வண்ணங்களுக்கு உயிரூட்டும் மழை நீர்! எஸ். ஹலரத் அலி, திருச்சி. அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்… “நீர் கவனிக்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து மழை பொழியச் செய்கின்றான். பிறகு, அதன்மூலம் பல நிறங்கள் கொண்ட விதவிதமான கனிகளை நாம் வெளிக் கொணர்கின்றோம். மலைகளிலும் கூட வெண்மை, சிவப்பு, அடர்ந்த கறுப்பு ஆகிய நிறக்கோடுகள் காணப்படுகின்றன. அல்குர்ஆன் : 35:27 வானத்திலிருந்து பொழியும் மழை நீரைக் கொண்டே பலவிதமான நிறங்களைக் கொண்ட பழங்களும், காய்கறிகளும் உருவாவதாக அல்லாஹ் கூறுகிறான். […]
ஜமாத்துல் முஸ்லிமீன்! எஸ். ஹலரத் அலி, திருச்சி. இன்று அந்த “ஜமாத்துல் முஸ்லிமீன்” இல்லை என்பதை காரணம் காட்டி, புகாரி 3606 ஹதீதின்படி முஸ்லிம்கள் தனித்தனியாக மரவேர்களை கடித்து தனித்திருப்பதா? அல்லது ஒவ்வொரு ஊரிலும் உள்ள பள்ளிவாசல் முஹல்லா முஸ்லிம் ஜமாத்துடன் இணைந்து ஒன்றாக இருப்பதா? ஹதீத் எதைச் சொல்கிறது? பதில் : புகாரி 3606 ஹதீதில் குறிப்பிடப்பட்ட “ஜமாத்துல் முஸ்லிமீன்” என்பது முஸ்லிம்களின் ஒட்டுமொத்த ஒற்றுமையையும், ஒரு சட்டப்பூர்வமான தலைமையின் கீழ் இயங்கும் சமுதாயத்தையும் குறிக்கிறது. […]
நல்லதொரு குடும்பம்! புலவர் செ.ஜாஃபர் அலி மறு பதிப்பு : மனிதர்களுள் பெரும்பாலோர், “அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றான்” என்று வாயளவிலேயே மொழிகின்றனர். அவர்களுடைய செயல்கள் இறை நம்பிக்கையையோ, இறையச்சத்தையோ பிரதிபலிப்பதில்லை. “இம்மை இன்பம்” ஒன்றையே கருத்தில் கொண்டு ஓடியாடி உழைத்து, பொருளீட்டி, மனைவி – மக்களை மகிழ்விப்பதிலும் தம் சுய தேவைகளை–சரீர இச்சைகளை திருப்தி செய்வதிலுமே அதிகமான காலத்தைச் செலவழிக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால், நம் சமுதாயத்தவர்களில் பலர் சோதிடத்தை நம்புவதிலும், இராகு காலம் –எமகண்டம் பார்ப்பதிலுமே நம்பிக்கை […]
அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர் 1. இஷாத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுதால் கிடைக்கும் நன்மை என்ன என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்? பாதிஇரவுவரைநின்றுதொழுதநன்மை. முஸ்லிம் : 1162 2. மூன்று குழந்தைகளை மரணத்தின் மூலம் இழந்த பெண்ணின் நிலை என்னவாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்? நரகிற்குசெல்லாமல்தடுக்கப்படுவார்கள். புகாரி : 101 3. அபூ சுஃயானின் வணிகக்குழு பற்றி அறிந்துவர உளவாளியாக நபி(ஸல்) அவர்கள் யாரை அனுப்பி வைத்தார்கள்? புசைசாபின்அம்ர்அல்அன்சாரீ(ரழி). முஸ்லிம் : 3858 4. ஹஜ் […]
நட்பும்…! நம்பிக்கையும்…!! அய்யம்பேட்டை A. நஜ்முதீன் இவ்வுலகில் எந்தவொரு மனிதனும் தனித்தவனுமல்லன், அதுபோல் தனித்து தனியாக வாழ்ந்திட கூடியவனும் அல்லன். ஏன் என்றால்; வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பிற மனிதர்களைச் சார்ந்தே வாழ்பவனாகவே இருக்கின்றான், இருக்கின்றோம். அதாவது கணவன், மனைவி உறவு, உடன் பிறந்த சொந்தங்களின் உறவு, நண்பர்கள் உறவு, இன்னும் ஏனைய சில உறவுகளின் தொடர்புகளுடனும் வெவ்வேறு அடையாளங்களுடன் வாழ வேண்டியவனாகவே இருக்கின்றான். இதைப் பற்றி இறைவன் கூறியிருப்பதாவது: “அவனே(இறைவனே) நீரிலிருந்து மனிதனைப் படைத்தான். அம்மனிதனுக்குப் […]
AI – யா? AQ – வா? எது சிறந்தது? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் இறைவனில் படைப்பில் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி திறமையும் சில சிறப்புக்களும் உள்ளன. அதாவது வானம், பூமி, சூரியன், சந்திரன், கடல், காற்று, நெருப்பு, நீர், விலங்கினங்கள், பறவையினங்கள், மரம், செடி இன்னும் நாம் அறிந்தவைகள், அறியாதவைகள் என்னென்ன உள்ளனவோ அவை அனைத்துக்குமாகும். “அல்லாஹ்வே ஒவ்வொரு பொருளையும் படைத்தவன்; அவன் தனித்தவன்; அடக்கியாள்பவன்” என்று கூறுவீராக! அ.கு. 13:16 ஆனால் மேற்கண்ட […]
மனித நேயம் மலர! மத சின்னங்கள் புனிதமாகுமா? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் பல்வேறு மதத்தவர்கள் வாழும் இவ்வுலகில் “மத நல்லிணக்கம்” என்பது மிக முக்கிய மானதாகும். ஒவ்வொரு மதத்தினரும் அவரவர்கள் நம்பக்கூடிய மத வழிபாட்டுத் தளங்களை புனிதமாக நம்புகின்றனர், மதிக்கின்றனர். அதில் தவறு ஒன்றுமில்லை, அதுவே இரு மதத்தவர்கள் மத்தியில் கலவரம் நடக்கும்போது ஒருவர் மற்றவரின் மத வழிபாட்டுத் தளங்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அதன் விளைவு புனிதமாக மதிக்கக்கூடிய சில வழிபாட்டு தளங்கள் அவ மதிக்கும்போது […]
கோட்டையில் இருக்கும் கோமாளிகள்….!!! அய்யம்பேட்டை A. நஜ்முதீன் உலக வல்லரசு நாடுகள் என கூறப்படும் அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளாகட்டும், காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலைப் பெற்ற நாடுகளாகட்டும், பிரிவினைப் பெற்று சுதந்திரம் அடைந்த நாடுகளாகட்டும், மற்றும் சிறு சிறு நாடுகள் முதல் ஏனைய உலகிலுள்ள நாடுகளாகட்டும் குடிமக்கள் பதிவேட்டை (ளீஷ்மிஷ்குeஐவிஜுஷ்ஸ்ரீ யூeஉலிrdவி)ஐ தயாரித்து தங்கள் நாட்டை சார்ந்தவர்கள் (குடிமகன்கள்) என்பதற்கான அடையாள அட்டையை வழங்குவது என்பது ஆட்சியாளர்களின் பொறுப்பு. அதன் அடிப்படையில் உலகிலுள்ள எல்லா […]
சுன்னாவின் அவசியம்! M. சையத் முபாரக், நாகை நாம் எப்படி வாழவேண்டும்? என்பதைக் கற்றுக்கொடுக்கும் அல்குர்ஆனை நாம் ஓதுகிறோம்; ஆனால், பொருளையோ, கருத்தையோ அறியாமல், அதன் மொழி பெயர்ப்பை ஏனோதானோ என்று நமது மொழியில் படிக்கவும் செய்கின்றோம். ஆனால், அல்குர்ஆனை கருத்தூன்றி படிக்கும் எண்ணம் நம்மிடம் இல்லை; அத்துடன் சிந்திப்பதுமில்லை; அதனை உள்வாங்கி செயல்படுத்துவதுமில்லை. அதுபோல, சுன்னா பற்றிய தெளிவும், மார்க்கச் சட்ட திட்டங்களில் (சரீஆவில்) அதன் முக்கியத்துவம் பற்றிய அறிவும் நம்மிடம் இல்லை. அதனால், தான்தோன்றித்தனமாக […]
சூரியன் மேற்கில் உதிப்பதால் ஒரு நாளில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்? ஹலரத் அலி. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : சூரியன் மேற்கிலிருந்து உதிக்காமல் மறுமை நாள் ஏற்படாது. அதைக் கண்டதும் மக்கள் இறைவனை நம்புவார்கள். ஆனால் ஏற்கனவே இறைவனை நம்பாதிருந்தவர்களின் நம்பிக்கை எப்பயனுமளிக்காது. அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி), நூல்: புகாரி 6506 அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மறுமை நாளின் பெரிய அடையாளங்களில் ஒன்றாக கிழக்கிலிருந்து சூரியன் உதிப்பதற்கு பதிலாக மேற்கிலிருந்து சூரியன் உதிக்கும் என்பதையும், இப்பெரு நிகழ்வை மக்கள் […]
விமர்சனம்!! விளக்கம்!! விமர்சனம் : ஆகஸ்ட் 2025 அந்நஜாத் மாத இதழ் பக்கம் 30ல் “ஸலஃபிகளை” பின்பற்றலாமா என்ற கேள்விக்கு குர்ஆன் சுன்னாவை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று கூறிவிட்டு இறுதியில் நபித் தோழர்களின் நடைமுறைக்கு முன்னுரிமை கொடுப்பதே ஏற்புடையதாகும் என்று கூறி நழுவியுள்ளீர்கள். இது விசயத்தில் அந்நஜாத்தும் தடுமாற்றத்தில் உள்ளது என்கிறேன். விளக்கம் தரவும். M. அபூநபீல், தேங்காய்பட்டணம். விளக்கம் : தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல நபிதோழர்களின் நடைமுறைக்கு முன்னுரிமை கொடுப்பதே ஏற்புடையதாகும் என்று நாம் […]
இறைவனின் பார்வையில் கண்ணியத்திற்கு உரியவர் : நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மூஸா பின் இம்ரான்(அலை) அவர்கள் இறைவனிடம் வினவினார்கள். என் அதிபதியே! உன்னுடைய அடியார்களில் உன்னுடைய பார்வையில் மிக அதிகக் கண்ணியத்திற்கு உரியவர் யார்?” இறைவன் பதிலளித்தான் : “சக்தி பெற்றிருந்த நிலையிலும் மன்னித்து விடுகின்ற மனிதன் (தான் மற்றெல்லா மனிதர்களை விடவும் கண்ணியத்துக்குரியவன்) அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரழி), நூல்: பைஹகீ. உண்மையில் மனிதன் ஓர் ஒழுக்கப் படைப்பு ஆவான். அவனுடைய ஒழுக்கம் முழுமை பெறுகின்ற போதுதான் […]