2019 மே

அந்நஜாத் மே 2019 ஷஃபான்-ரமழான் 1440 தலையங்கம்! அல்லாஹ்வின் கடும் சோதனை! முஸ்லிம்களே சுதாரித்துக் கொள்ளுங்கள்! பயங்கரவாத ஆயுதமாகும் பருவ நிலை மாற்றங்கள்  (தொடர்-3) அந்தத் தலைவரைப் பின்பற்றத்தான் வேண்டுமா?    (தொடர்-3) அமல்களின் சிறப்புகள்! உருவப்படம் வரையலாமா?   (பகுதி-1) எது இஸ்லாமிய அடிப்படையில் அமைந்த சந்திர காலண்டர்? பிறைகள் காலத்தை காட்டும் காலண்டர்! நோன்பை பற்றி குர்ஆன், ஹதீஃத் சொல்வது என்ன? ஆதிகாலவேதங்களும், இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்… விமர்சனம்! விளக்கம்!! தலையங்கம்!    நடந்து முடிந்த மக்களவைத்தேர்தல்… தேர்தலுக்கு […]

அல்லாஹ்வின் கடும் சோதனை ! முஸ்லிம்களே சுதாரித்துக் கொள்ளுங்கள்!! K.M.H.  அபூ அப்தில்லாஹ் ஆக்கத்திலிருந்து மீள்பதிவு “…அல்லாஹ், தான் நாடியோருக்கு (ஆட்சி) அதிகாரத்தை வழங்குகிறான்…”  (2:247) “அல்லாஹ்வே! ஆட்சிகளின் அதிபதியே! நீ விரும்பியோருக்கு ஆட்சியைக் கொடுக்கிறாய். இன்னும் நீ விரும்புவோரிடமிருந்து ஆட்சியை அகற்றியும் விடுகிறாய். நீ நாடி யோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவுபடுத்துகிறாய். நன்மைகள் யாவும் உன் வசமே உள்ளன. நிச்சயமாக நீ ஒவ்வொரு பொருளிலும் ஆற்றல் மிக்கவன்” என (தூதரே) கூறும். (3:26) ஆட்சியில் சிறிதேனும் இவர்களுக்குப் […]

பயங்கரவாத ஆயுதமாகும் பருவ நிலை மாற்றங்கள்! எஸ்.ஹலரத் அலி, திருச்சி மனிதர்களின் கைகள் தேடிக் கொண்டதன் காரணமாகக் கடலிலும், தரையிலும் அழிவு வேலைகள் (அதிகமாக) பரவிவிட்டன.  அல்குர்ஆன் : 30:41 என்ற அல்லாஹ்வின் வாக்குக்கேற்ப மனிதர்கள் தங்களுக்கு தாங்களே அழிவைத் தேடிக் கொள்கின்றனர். சுற்றுச்சூழலை மாசு படுத்தும் வாயுக்களை வெளியிட்டு புவி வெப்பமடைவதால் வரும் தீங்குகளை அனுபவித்து வருகின்றனர். அடுத்து, அல்லாஹ்வின் படைத்த படைப்பினங்களான நுண்ணுயிர்கள், தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களின் படைப்பின் கட்டமைப்பை மாற்றும் வேலையில் (GENETIC […]

அந்தத் தலைவரைப் பின்பற்றத்தான் வேண்டுமா? தொடர்-3 ஜி.நிஜாமுத்தீன், பரங்கிப்பேட்டை ஆலு இம்ரான் 3:31வது வசனத்தில் எல்லா நிலைகளிலும் முஹம்மத் என்ற இறைத்தூதர் அவர்களை பின்பற்றுவதின் அவசியம் பற்றி கூறப்பட்டுள்ளது. அதில் இறைவனை நேசிக்கக் கூடிய ஆன்மீகவாதி எவராக இருந்தாலும் அவர் முஹம்மத் என்ற அந்த ஆன்மீகத் தலைவரை பின்பற்றித்தான் ஆகவேண்டும் என்ற கட்டளை மிக வலுவாக முன் வைக்கப்பட்டுள்ளது என்பதை கடந்த இரண்டு தொடர்களில் விளக்கினோம். அடுத்து அந்த தலைவரை ஏற்றுக் கொண்டு வாழும் முஸ்லிம்கள் தங்கள் […]

அமல்களின் சிறப்புகள்…. அப்துல் ஹமீத் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம். தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து,12 ­வ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை முடிய எங்குமே குறிப்பிடப்படவில்லை. திக்ரின் சிறப்புகள் தொடர்ச்சி… அமல்களின் சிறப்பு (அசி) புத்தகத்திலுள்ள திக்ரின் […]

உருவப்படம் வரையலாமா?  ( பகுதி-1 ) M.A. ஹனீபா, பொட்டல்புதூர் அறிவியல், நவீன கண்டுபிடிப்புகள், நவீன கருவிகள் இவற்றுக்கு இஸ்லாம் எதிரானதல்ல. ஒவ்வொரு நவீன கருவியும் அறிமுகமான தொடக்கத்தில் மார்க்கத்தின் மீதான அளவிலா பற்றின் காரணமாக அவற்றை இஸ்லாமிய அறிஞர்கள் எதிர்த்துத் தடை செய்து வந்தனர். பின்னர் படிப்படியாக அனுமதித்து நடைமுறைப்படுத்தலாம் என தீர்ப்பு வழங்கினார்கள். “குர்ஆன் மொழி பெயர்ப்பைத் தமிழில் தருவது ஹராம்” என்று தீர்ப்பு வழங்கினர் இன்று குர்ஆனுக்குத் தமிழ் மொழி பெயர்ப்புகள் பல வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை […]

பிறைகள் காலத்தை காட்டும் காலண்டர்! கு. நிஜாமுதீன் பிறைகள் பற்றி குர்ஆன் வசனங்களைப் பார்ப்போம் : பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். “அது” (அதாவது ஹிலால்) மக்களுக்கு காலம் காட்டுகின்றது. குர்ஆன்: 2:189 பிறைகள்மக்களுக்கு காலம் காட்டுபவை என்று இறைவன் இங்கு குறிப்பிடுகிறான். இது முஸ்லிம்களுக்கு மட்டும் காலம் காட்டவில்லை. உலக மக்கள் அனைவருக்கும் காலம் காட்டுபவை. இன்றும் உலகில் பல சமூகங்கள் பிறை களை நாள்காட்டியாக பின்பற்றுகிறார்கள். அவர்களுக்குள் எந்த குழப்பமும் ஏற்படுவதில்லை. ஏனெனில் ஒவ்வொரு […]

நோன்பை பற்றி குர்ஆன், ஹதீஃத் சொல்வது என்ன? S.T. முஹம்மது ரபீக்,   மறவாங்குடி வசந்தம் என்றாலே மனம் இனிக்கும். ஏனெனில் அது பூமி பூக்கும் காலம் ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு வசந்தக் காலம் உண்டு. ஒட்டு மொத்த பூமிக்கும் சேர்த்து ஒரு வசந்தம் உண்டா? ஆம் உண்டு. ஆசியாவும், ஆப்ரிக்காவும், அமெரிக்காவும், ஐரோப்பாவும், உலகின் மேல் பகுதியும் கீழ் பகுதியும் ஒன்று சேர்ந்து எதிர்பார்க்கும் வசந்தம், நோன்பு. இஸ்லாத்தில் ஐந்து கடமைகளில் மூன்றாவது கடமை தான் […]

  ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும் M.T.M. முஜீபுதீன், இலங்கை 2019 மார்ச் தொடர்ச்சி….. உழைத்து வாழ்வதன் சிறப்புகள் பற்றி இஸ்லாம் : மனிதன் மற்றவர்களிடம் சார்ந்து வாழ்வதை விட உழைத்து வாழ்வது சிறந்தது ஆகும். இதனால் அவனுடைய பொருளாதாரம் வளர்ச்சி அடைவதுடன், நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் அடிப்படையாக அமைகின்றது. கவனியுங்கள்: அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் : “எனது உயிர் யாருடைய கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! உங்களில் ஒருவன் கயிற்றை எடுத்துக் கொண்டு […]

விமர்சனம் : ஹிஜ்ரி காலண்டர் அறிமுகமாகி 1380 வருடங்களும் கிரோகோரியன் காலண்டர் அறிமுகமாகி 437 வருடங்களுமாகிறது என்பதை அறிய முடிகிறது. இரண்டாம் கலீஃபா உமர்(ரழி) அவர்கள்தான் காலண்டர் முறையை உலகுக்கு முதலில் தந்தவர் என்கிறீர்கள். உலகுக்கு காலண்டரை தந்தவர்கள் நாம் தான் என்று கூறும் அதே நேரத்தில் இஸ்லாமிய தேதிக்கோடு & சர்வதேச நேரம் என்று ஒன்று இதுநாள்வரையிலும் நம்மிடம் இல்லையே ஏன்? அது இல்லாத காரணத்தினால்தான் இன்று உலகளாவிய அளவில் நோன்பு & பெருநாள் ஒரே தேதி, […]

S.H. அப்துர் ரஹ்மான் அன்பு சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) நாம் பயன்படுத்தும் ஹிஜ்ரி காலண்டரை கணக்கிட பயன்படுத்தும் IDL மற்றும் UTC போன்ற அளவீடுகள் ஆங்கிலேயரால் நிர்ணயிக்கப்பட்டவை இஸ்லாமிய அடிப்படையில் அமைந்தவைகள் அல்ல என்று ஏற்கனவே இரண்டு ஆக்கங்களில் பார்த்தோம். செப்டம்பர் 2018 அந்நஜாத்தில் IDL பற்றியும் டிசம்பர் 2018 அந்நஜாத்தில் UTC பற்றியும் விளக்கமாக பார்த்தோம். அதில் உள்ள சந்தேகங்கள் பற்றி ஹிஜிரி கமிட்டி இடமும் கேள்விகள் கேட்டு இருந்தேன். அதற்கும் இது நாள் வரை அவர்களிடம் இருந்து எந்த பதிலையும் பெறமுடியவில்லை. இவைகள் இஸ்லாமிய அடிப்படையிலும் […]