2013 பிப்ரவரி

ஐயம்: வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுவ தற்கு முன் பயான் செய்வதற்கு இமாம் இல்லாத போது குர்ஆனுடைய ஒரு சூராவை ஓதிவிட்டு தொழுகையை நடத்தினால் அத்தொழுகை ஜும்ஆவாக நிறைவேறுமா? இஸ்மாயீல், தமாம். தெளிவு: குத்பாவுக்குப் பகரமாக குர்ஆனில் ஒரு சூராவை ஓதினால் அதுவே போதுமானது என்பதில் என்ன சந்தேகம்? நபி(ஸல்) அவர்கள் தமது ஜும்ஆவின் குத்பாவில் குர்ஆனுடைய சூராவை ஓதியிருப்பதாக பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

பஷீர், புதுக்கோட்டை பார்வை : சமீபத்திய டெல்லி பாலியல் வன்முறைச் சம்பவம் தொடர்பான போராட்டமும், அதற்கு முன் நடந்த ஊழல் எதிர்ப்பு போராட்டங்களும் நமது நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. டெல்லியில் நடந்த ஒரு பாலியல் பலாத்காரம் சர்வதேச அளவில் இந்தியாவிற்குத் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிக்கைகள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள்… இப்படி பல தரப்பினரும் கருத்துகளை பதிவு செய்து தம் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள். RSS பிரமுகர்கள், பெண்ணியவாதிகள் என்று பலரும் மரண தண்டனை கோரி கொடி பிடிக்கின்றார்கள். […]

S.N.K வேதனை மேல் வேதனை: உலகெங்கும் இஸ்லாத்தை ஏற்றதாய் பெயர் பண்ணிக் கொண்டு வாழும் பரம்பரை பெயர் தாங்கி முஸ்லிம்கள்! இஸ்லாத்தை ஏற்ற பெயர் தாங்கிகள் பெரும்பான்மையினர், இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாகக் கொள்ளவில்லை. இஸ்லாமிய முலாமில், இஸ்லாம் அல்லாத, இஸ் லாத்திற்கு நேர்முரணான வழிகேடுகளே, இஸ்லாமாக அரங்கேறி வருவதுதான் வேதனைக்கெல்லாம் வேதனையான வேதனை.

விபச்சாரத்திற்கு இட்டுச் செல்பவை என்ற வகையில் பின்வருவன விளக்கப்பட்டுள்ளன: அந்நிய ஆணும் பெண்ணும் தனிமையில் இருத்தல், சுதந்திரமாகப் பழகுதல். இது பற்றி நபியவர்கள் பின்வருமாறு எச்சரித்துள்ளார்கள்: “அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டவர் ஒரு மஹ்ரம் இல்லாத நிலையில் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அவர்களுடன் மூன்றாமவனாக ஷைத்தான் இருப்பான்.” (அஹ்மத்)

மனிதன் பெற்றுள்ள அறிவு மிகமிக அற்பமானது என்று இறைவாக்கு பனூ இஸ்ராயீல்: 17:85 கூறுகிறது. ஆம்! தன்னை ஈன்றெடுத்த தாயையோ, தந்தையையோ சுயமாக அறிந்து கொள்ள முடியாத, அடுத்த வினாடி தனக்கு என்ன நடக்கும் என்பதையே அறிய முடியாத அற்பமான அறிவைத்தான் மனிதன் பெற்றிருக்கிறான். அவனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஐம் புலன்களும் அற்பமானவையே! குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் கேட்க முடியாத, பார்க்க முடியாத, நுகர முடியாத, தொட்டறிய முடியாத, சுவைக்க முடியாத ஐம்புலன்களைக் கொண்டவனே மனிதன். கேட்டல், பார்த்தல், […]