2019 ஜுலை

அந்நஜாத் –  ஜூலை 2019 ஷவ்வால்  – துல்கஃதா 1440 தலையங்கம்! அல்லாஹ் முஸ்லிம்களின் இறைவனா? அமல்களின் சிறப்புகள்! ஹதீஃதில் கூறப்படும் உதாரணங்கள்! 1 உருவப்படம் வரையலாமா?   (பகுதி-3) ஹஜ் பெருநாள் சிந்தனைகள்- தியாகத் திருநாள்… ஆதிகாலவேதங்களும், இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்… பெரும்பாண்மை… அறிந்து கொள்வோம்… தலையங்கம்!    நமது இரயில்வே! ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட இரயில்வே மேப், இரயில்வே டைம்டேபிள் ஆகியவைகளின் மாஸ்டர் காப்பி தொலைந்து போய், ரெஃபர் செய்வதற்கு வேறு நகல் இல்லாவிட்டால், ஆங்காங்கே ரயில்கள் மோதிக் […]

அல்லாஹ் முஸ்லிம்களின் இறைவனா? ஜி.நிஜாமுத்தீன், பரங்கிப்பேட்டை வணக்கத்திற்கு உரியவன் இறைவனைத் தவிர வேறெவரும், எதுவும் இல்லை! என்ற கொள்கையை ஏற்று அதன்படி வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் தொகை உலகில் இருநூறு கோடிகளுக்கும் மேல், இந்த கொள்கையை மனதால் ஏற்று தன் நிலையை மாற்றிக் கொள்ளாவிட்டாலும் இந்த கொள்கை சரியானதுதான் என்றுகருதுபவர் களும் கோடிக்கணக்கில் உள்ளனர். “வணக்கத்திற்கு உரியவன் இறைவனைத் தவிர வேறெவரும், எதுவுமில்லை” என்ற கொள்கையை நாம் அரபு மொழியில் மொழிபெயர்த்தால் “”லாஇலாஹ இல்லா அல்லாஹ்” என்று […]

அமல்களின் சிறப்புகள்…. தொடர் : 47 அப்துல் ஹமீத் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம். தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு: திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும்: பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து,12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை முடிய எங்குமே குறிப்பிடப்படவில்லை. அமல்களின் சிறப்புகள்(அசி) புத்தகத்தில் ஸஹீஹான ஹதீஃதை சமயங்களில் குறிப்பிட்டுவிடுவார்கள். ஆனால், புரியும்படியாக […]

ஹதீஃதில் கூறப்படும் உதாரணங்கள்!  ( ஓர் அறிவியல் பார்வை!) எஸ்.ஹலரத் அலி, திருச்சி அல்லாஹ் உலகைப் படைத்து, அதை ஆளும் மனிதகுல மக்களுக்கு நேர்வழி காட்ட தூதர்களையும் அனுப்பினான். அந்த இறை தூதர்களுக்கு வழிகாட்ட நெறி நூல்களையும் இறக்கி அருளினான். இப்படி நன்மை தீமைகளை பிரித்தறிவிக்கக் கூடிய வேதங்களிலும், அதன்படி வாழ்ந்து காட்டிய தூதர்களின் போதனைகளிலும் ஏராளமான உதாரணங்கள் சொல்லப்படுகின்றன. நம் கண் முன்னே உள்ள பொருட்களை உதாரணமாக காட்டியே அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் சத்தியத்தை எளிமையாக விளக்குகிறார்கள். […]

உருவப்படம் வரையலாமா? ( பகுதி-3 ) M.A. ஹனீபா,  பொட்டல்புதூர் 2019 ஜூன் மாத தொடர்ச்சி… நான் (சிறுமியாக இருந்தபோது) “பொம்மைகளை வைத்து விளையாடுவேன்” எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்ட தும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளை யாடுவார்கள். அறிவிப்பாளர் : ஆயிஷா(ரழி), நூல்கள் […]

ஹஜ் பெருநாள் சிந்தனைகள்-தியாகத் திருநாள்… –  அபூ அப்தில்லாஹ் மறுபதிப்பு : ஆகஸ்ட் 1986 இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் பேரால் இந்த உம்மத்துக்கு அறிமுகப்படுத்தியது இரண்டு ஈத்கள் (பெருநாள்கள்) மட்டுமே. “”ஒன்று ஈகைத் திருநாள். மற்றொன்று தியாகத் திருநாள், இரண்டு பெருநாட்களும் மாபெரும் இலட்சிய அடிப்படையில் அமைந்துள்ளன.\ ரமழான் முழுவதும் நோன்பு நோற்று, தனது அத்தியாவசியத் தேவைகளை இறை ஆணைக்குக் கட்டுப்பட்டு, தடுத்துக் கொள்வதன் மூலம், ஏழைகளின், இல்லாதவர்க ளின் நிலை எப்படி இருக்கும்? அவர்களின் […]

ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும் M.T.M. முஜீபுதீன்,  இலங்கை 2019 ஜூன் மாத தொடர்ச்சி….. கடன் வாங்கும்போதும், கடன் பெறும் போதும் எவ்வாறு மனிதர்கள் நடந்து கொள்ள வேண்டும் என அல்லாஹ் அல்குர்ஆனில் மேற்கண்டவாறு விபரிக்கின்றான். ஒரு மனிதன் கடன் பெறும்போது அவன் மனதில் பின்வருமாறு நினைத்தல் வேண்டும் என ஹதீஃத்கள் விளக்குகினறன. கவனியுங்கள். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். எவன் மக்களின் பணத்தை அல்லது பொருட்களை திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் […]

பெரும்பான்மை…. எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. 2018 நவம்பர் மாத தொடர்ச்சி… பெரும்பாலானவர்கள் விதண்டாவாதம் புரிகின்றனர். நிச்சயமாக இந்தக் குர்ஆனில்நாம் மனிதர்களுக்கு எல்லா(விதமான) எடுத்துக்காட்டுகளையும் (கூறி) விவரித்துள்ளோம். (ஆனாலும்) மனிதனோ பெரும்பான்மையாக விதண்டாவாதம் புரிபவனாகவே இருக்கின்றான். 18:54, 9:54, புகாரி:1127, 7347, 7455, முஸ்லிம் 1424. பெரும்பாலானவர்களுடைய பேச்சில் எந்த விதமான நன்மையுமில்லை : தர்மம் அல்லது நற்செயல் அல்லது மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துதல் ஆகியவற்றைத் தூண்டக்கூடியவர்(களின் இரகசிய உரையாடல்)களைத் தவிரஅவர்களில் பெரும்பாலான (வர்களின்) இரகசிய உரையாடல்களில் எந்தவிதமான […]

மர்யம்பீ, குண்டூர், அல்லாஹ் நம்மிடத்தே எதை பார்க்கிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்? உங்களுடைய உள்ளங்களையும், செயல்களையுமே பார்க்கிறான்.  அபூஹுரைரா (ரழி), முஸ்லிம்: 5012 எதனை வலுவாக பிடித்துக் கொள்ளும்படி அல்லாஹ் கூறுகிறான்? அல்லாஹ்வின் கயிற்றை (குர்ஆனை) வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளும்படி அல்லாஹ் கூறுகிறான். அல்குர்ஆன்: 3:103 ஜும்ஆ நாளில் பள்ளிக்கு முதலில் வருபவரின் சிறப்பு பற்றி நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு கூறுகிறார்கள்? கடமையான குளிப்பு போல் குளித்து விட்டு பள்ளிக்கு முதலில் வருபவர் அல்லாஹ்வின் […]