தலையங்கம்

ரமழான்-ஷவ்வல் 1430 அந்நஜாத் செப்டம்பர் 2009 ரமழான் – ஈத் சிந்தனை! ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை-தீமைகளை) பிரித்தறிவிப்பதுமான அல்குர் ஆன் இறக்கியருளப்பட்டது ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவை நாடுகிறானே தவிர, உங்களுக்கு […]

அந்நஜாத் –  ஜூலை 2019 ஷவ்வால்  – துல்கஃதா 1440 தலையங்கம்! அல்லாஹ் முஸ்லிம்களின் இறைவனா? அமல்களின் சிறப்புகள்! ஹதீஃதில் கூறப்படும் உதாரணங்கள்! 1 உருவப்படம் வரையலாமா?   (பகுதி-3) ஹஜ் பெருநாள் சிந்தனைகள்- தியாகத் திருநாள்… ஆதிகாலவேதங்களும், இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்… பெரும்பாண்மை… அறிந்து கொள்வோம்… தலையங்கம்!    நமது இரயில்வே! ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட இரயில்வே மேப், இரயில்வே டைம்டேபிள் ஆகியவைகளின் மாஸ்டர் காப்பி தொலைந்து போய், ரெஃபர் செய்வதற்கு வேறு நகல் இல்லாவிட்டால், ஆங்காங்கே ரயில்கள் மோதிக் […]

அந்நஜாத் –  ஜூன் 2019 ரமழான் -­ ஷவ்வால் 1440 தலையங்கம்! அந்நியனாய் வாழ்வோம், அர்த்தம் புரியும்…. குரங்கு, பன்றி, எலியாக உருமாறிய பனீ இஸ்ராயீல் மனிதர்கள்! தக்லீது – ஓர் ஆய்வு அமல்களின் சிறப்புகள்! தவ்ஹீது பேசும்  பிரிவினை இயக்கங்களும், அதன் குண்டர்களும்…. உருவப்படம் வரையலாமா?   (பகுதி-2) ஆதிகாலவேதங்களும், இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்… அறிந்து கொள்வோம்… தலையங்கம்! தலைநகரத்தின் அவல நிலை! இதுவரை கண்டிராத கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை சென்னை மக்கள் சந்தித்து வருகின்றனர். பகலெல்லாம் வயிற்றுப் பிழைப்புக்காக […]

அந்நஜாத் மே 2019 ஷஃபான்-ரமழான் 1440 தலையங்கம்! அல்லாஹ்வின் கடும் சோதனை! முஸ்லிம்களே சுதாரித்துக் கொள்ளுங்கள்! பயங்கரவாத ஆயுதமாகும் பருவ நிலை மாற்றங்கள்  (தொடர்-3) அந்தத் தலைவரைப் பின்பற்றத்தான் வேண்டுமா?    (தொடர்-3) அமல்களின் சிறப்புகள்! உருவப்படம் வரையலாமா?   (பகுதி-1) எது இஸ்லாமிய அடிப்படையில் அமைந்த சந்திர காலண்டர்? பிறைகள் காலத்தை காட்டும் காலண்டர்! நோன்பை பற்றி குர்ஆன், ஹதீஃத் சொல்வது என்ன? ஆதிகாலவேதங்களும், இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்… விமர்சனம்! விளக்கம்!! தலையங்கம்!    நடந்து முடிந்த மக்களவைத்தேர்தல்… தேர்தலுக்கு […]

அந்நஜாத் ஏப்ரல் 2019 ரஜப் -­ ஷஃபான் 1440 தலையங்கம்! அந்தத் தலைவரைப் பின்பற்றத்தான் வேண்டுமா? முஸ்லிம்களை காஃபிராக்கும் பிரிவினை இயக்கத் தலைவர்கள்! அமல்களின் சிறப்புகள்… இஸ்ரா-இரவுப் பயணம்! மிஃராஜ்-விண்ணுலகப் பயணம்!! ஜம்வு கஸ்ரு, இணைத்துத் தொழுகை… அறிந்து கொள்வோம்… “தக்லீத்” ஓர் கூரிய பார்வை! நாளின் ஆரம்பம்… நெஞ்சில் பதிந்த கதறல்! தொலைக்காட்சி தொலைந்து போனது! சமூக வலைதளங்கள் பரபரப்பாயின! காம வெறி பிடித்த வாலிப கும்பல்! 6 ஆண்டுகள் நூறுக்கும் அதிகமான பெண்கள் மீது பாலியல் […]

அந்நஜாத் மார்ச் 2019 ஜ.ஆகிர்-ரஜப் 1440 தலையங்கம்!  வர்த்தகப் பிரச்சனை! உலகிலுள்ள அத்தனை நாடுகளுமே சில்லறை விற்பனையிலிருந்து பெரும்பெரும் வர்த்தகம் வரை பற்பல வணிகங்களில் பயன் அடைந்து கொண்டிருப்பது உண்மை! அதிலும், குறிப்பாக நாடுகளுக்கிடையிலான ஏற்றுமதி இறக்குமதி துறையில், பல நாடுகள் அதிக அளவில் பயன் அடைந்து வருவது நிதர்சனமான உண்மை. இத்துறை யில் ஏதேனும் பிரச்சனை உருவாகுமேயானால், சிக்கலைத் தீர்க்க இயன்ற அளவு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இன்றி யமையாத தேவையாக உணரப்பட வேண்டும். இதுதான் வர்த்தகத்தில் […]

அந்நஜாத்  பிப்ரவரி 2019 ஜ.அவ்வல்-ஜ.ஆகிர் 1440 தலையங்கம்! முஸ்லிம்களுக்கு எதிராக குறிவைத்தல்! உலகெங்கும் முஸ்லிம்களுக்கு எதிராக குறி வைக்கப்படுகிறது என்பது இஸ்லாத்திற்கு புதிதல்ல-முஸ்லிம்களுக்கும் புதிதல்ல. இது அன்றிலிருந்து இன்று வரை தொடர் நிகழ்வாகிக் கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை. சீன அரசு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களை கைது செய்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக, சமூக வலைதளங்களில் பரவலாக செய்தி வந்து கொண் டிருந்தது. செய்தியின் உண்மைத் தன்மை தெரியாததால் முஸ்லிம்களில் பெரும்பாலோனோர் அச்செய்தியை ஃபார்வர்ட் செய்யாமல் […]

அந்நஜாத் டிசம்பர் 2018 ர.அவ்வல் -ர.ஆகிர் 1440 “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” சமீப காலமாக இஸ்லாத்திற்கு எதிரான பல பொய் பிரசாரங்கள், நாடெங்கும் பலரின் பேச்சுக்களிலிருந்தும், சில பத்திரிகைகளிலும், ஊடகங்கள் வாயிலாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும், சுலபமாக பரப்பப்பட்டு வருகின்றன. அவைகளில் ஒன்று: முஸ்லிம்களின் உணர்வைத் தூண்டிவிட்டு கலவரங்களை நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக முஸ்லிம் பெண்கள் பிறமத ஆடவர்களைத் திருமணம் செய்து கொள்வதாக பல செய்திகள் சமூக […]

  ஆதார்! ஆதார் அட்டை சம்பந்தமாக இத்திட்டத்திற்கு நாட்டில் பல எதிர் கருத்துக்கள் வெளிப்பட்டன. இத்திட்டம் அமலுக்கு வந்தால், குடிமக்கள் ஒவ்வொருவரைப் பற்றிய உண்மைகள் அவை ரகசியங்களாக இருந்தாலும், அந்த ரகசியங்களைப் பெற நினைப்பவர் பெற்றுவிட முடியும் என்று சமூக வலைதளங்களில் வெளியான செய்திகள் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து நீதிபதிகளின் ஒரு அமர்வில், ஒவ்வொருவரின் அந்தரங்கமும் மனிதனின் அடிப்படை உரிமை என 2017ல் தீர்ப்பு வழங்கியது. திட்டம் நீடிக்காது என் றெண்ணி மக்கள் நிம்மதியாயினர். […]

அக்டோபர் 2018 முஹரம் -ஸஃபர் 1440  “ஸ்மார்ட் ஃபோன்”  உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் மக்களை கொன்று தீர்த்தாக வேண்டும் என்ற நோக்கத்தில் உலகம் செயல்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அதேபோல வீட்டு உபயோகப் பொருட்களிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பல பொருட்கள் மக்களை பிரயோஜனமில்லாதவர்களாக மாற்றியே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் உலகம் செயல்படுகிறதோ என்று எண்ணவும் தோன்றுகிறது. உதாரணமாக படித்தவர்களிலிருந்து பாமரர்கள் வரை மக்களிடம் பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது “ஸ்மார்ட் ஃபோன்”கள். கடைவீதிகள், சாலைகள் பேருந்து […]

செப்டம்பர் 2018 துல்ஹஜ் 1439 – முஹரம் 1440 பேரிடர் சூழல் முன்பெல்லாம் மழையோ, வெயிலோ, காற்றோ, குளிரோ குறிப்பிட்ட மாதங்களில் சீதோஷ்ண நிலை சொல்லி வைத்தாற் போல் அந்தந்த மாதங்களில் வந்து போய்க் கொண்டிருந்தது. சீதோஷ்ண நிலை மாற்றத்தால் நிகழ் காலத்தில் ஏற்படுகின்ற பாதிப்புக்களைக் கணக்கில் கொண்டால், முந்தைய காலங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் பெரிய அளவில் இல்லை எனக் கூறி விடலாம். சமீப காலமாக பருவகாலம் மாறிக் கொண்டிருப்பது அச்ச உணர்வைத் தந்து கொண்டிருக்கிறது. கலி […]

ஆகஸ்ட் 2018 துல்கஃதா – துல்ஹஜ்-1439 எய்ம்ஸ் மருத்துவமனை Vs. பசுமைச் சாலை எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவ இருப்பதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இம்மருத்துவமனையின் பணி மக்களுக்கு சேவை என்பதை மக்கள் உணர்ந்தவுடன் மக்கள் அதீதமாய் அதனை எதிர்பார்க்கின்றனர். இம்மருத்துவமனை மதுரையில் அமைய இருப்பதாக அறிவிக்கப்பட்டதும், இத்திட்டம் தமது மாவட்டங்களில் அமைக் கப்படவில்லையே என்று ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள விவரமறிந்தவர்கள் தமது ஏக்கத்தைத் வெளியிட்டனர். பெரும்பான்மையினர் இதனை ஆதரித்து வருகின்றனர். இது மக்களுக்கான திட்டம் என்று […]

மே 2018 ஷஃபான் – ரமழான்-1439 தமிழ்நாடும்! காவிரி நீரும்!! காவிரி நதி நீர் பகிர்மானம் தொடர்பாக உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வெளியிட்டது. 24 வருட நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளிவந்த தீர்ப்பு இது. கிடைத்துக் கொண்டிருந்த தண்ணீரின் அளவை இத்தீர்ப்பு இன்னும் குறைத்திருக்கிறது. இதனை உறுதிப்படுத்த மேலாண்மை வாரியம் அமைப்பதை பாஜக அரசு தள்ளிப் போட்டுக் கொண்டு வருகிறது. இந்த இடைப்பட்ட காலங்களில் தமிழக விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பு வாழ்வா? சாவா? எனும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. […]

M. அப்துல் ஹமீத் சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட முற்போக்கு சிந்தனையாளரான, கன்னட எழுத்தாளரும், பிரபல பத்திரிகையாளருமான 55 வயதான பி.கவுரி லங்கேஷ் அவர்கள், இந்து மதத் தின் மனுதர்மத்தையும், ஏற்றத்தாழ்வையும் உருவாக்கிய சாதி அமைப்பையும், பெண்ணை அடிமையாக்கிய சடங்குகளையும் வீரியத் தோடு எதிர்த்து வந்தார். எச்சில் இலை மீது தலித்துகள் உருளும் சடங்கு, அந்தரத்தில் முதுகில் அலகு குத்திக்கொண்டு தொங்குவது, நிர்வாண பூஜை, நரபலி போன்று கர்நாடகக் கோயில்களில் தொடரும் மூடப்பழக்க வழக்கங்களை ஒழிக்கச் சட்டம் இயற்ற […]

அவமானங்கள், அச்சங்கள், துயரங்கள்! ஆனாலும் ஆறுதல்கள்! “”ஜார்க்கண்டிலுள்ள மகாத்மா காந்தி நினைவு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்” ஊட்டச் சத்து குறைபாட்டால் சமீபத்தில் 52 குழந்தைகள் இறந்த செய்தி, நமக்கு மிகப் பெரிய துக்கத்தைத் தருகிறது. உலக அளவில், “”பசி குறியீடு” “”(குளோபல் ஹங்கர் இண்டெக்ஸ்)” 2016ன் புள்ளி விவரப்படி இந்திய மக்கள் தொகையில் 15 சதவீதத்தினர் உணவு அல்லது ஊட்டச்சத்துப் பற்றாக் குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊட்டச் சத்து குறைபாடு ஒரு தேசிய அவமானம் என்கிறார் முன்னாள் பிரதமர்  […]

அந்நாஜத் ஆநிரியர் சகோ. அபூ அப்தில்லாஹ் அவர்களின் மறைவுக்குப் பிறகு தொடர்ந்து ஆகஸ்ட், 2017 முதல் இதழ் வெளிவந்தது. அவரின் விருப்பத்தை அல்லாஹ் நிறைவேற்றினான். அந்நஜாத் வெளிவருமா? என சந்தேகித்தவர்களின் வினாவுக்கு விடையாக இந்நிகழ்வை அமைத்து தந்தான். அல்ஹம்துலில்லாஹ்! அந்த இதழில் தலையங்கத்திலும், சில ஆக்கங்களிலும் அவரைப் புகழ்ந்து எழுதப்பட்டு இருந்தது. விளைவு! “”அவரைப் பின்பற்றும் கூட்டம் ஒன்று” உருவாகி விட்டது என்ற முனங்கலை ஒருவர் வெளிப்படுத்தி இருக்கிறார் இந்த எண்ணம் வேறு சிலருக்கும் கூட இருக்கலாம். […]

“”நாம் எமது 77 வயதை கடந்து கொண்டிருக்கிறோம். இன்னும் எத்தனை ஆண்டுகள் வல்லமை மிக்க அல்லாஹ் எம்மை இப்பூமியின் மேற்பரப்பில் நடமாட அனுமதிக்கிறானோ? யாம் அறியோம்! ஆயினும் எமக்குப் பின்னரும் அந்நஜாத் “”குர்ஆன், ஹதீஃத் மட்டுமே மார்க்க ஆதாரங்கள்; மனிதர்களில் எவரது சுய கருத்தும் ஒருபோதும் மார்க்கம் ஆகாது” என்ற நேர்வழிக் கருத்தில் உறுதியாக நின்று நிலைத்து வெளிவர வேண்டும் என்பதே ஒரே குறிக்கோள். அல்லாஹ் அருள் புரிவானாக.” மேலே உள்ள வாசகம், “”அந்நஜாத்” பத்திரிகை ஆசிரியர் […]

அல்லாஹ்வின் பெரும் கிருபையால் அரபகத்தில் நிறைவு பெற்ற தூய இஸ்லாமிய மார்க்கம் நடை முறைப்படுத்தப்படும்போதே இந்தியாவின் தென் பகுதிக்கு கடல் மார்க்கமாக இஸ்லாம் வந்துவிட்டது என்பதற்குப் போதிய வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கின்றன. ஆக முழுமைபெற்ற இஸ்லாம் இந்தியாவின் தென்பகுதிக்குக் குறிப்பாக கேரளா, தமிழ்நாட்டிற்கு ஆரம்ப நிலையிலேயே அறிமுக மாகிவிட்டது. இஸ்லாம் ஆரம்ப நிலையிலேயே அறிமுகமானது போல் அல்குர்ஆனும் நம் நாட்டிற்கு அது இறக்கப்பட்ட அரபு மொழியில் அறிமுகமாகித்தான் இருக்கும். குர்ஆன் ஆரம்ப காலத்திலேயே தமிழகத்திற்கு அரபு மொழியில் […]

அவிழ்த்துக் கொட்டப்பட்ட நெல்லலிக்கனிகள் போல் பல பிரிவுகளாகச் சிதறிக் கிடக்கும் முஸ்லிம் சமுதாயத்தை அல்குர்ஆனின் வழிகாட்டல்படி 3:103 இறைக்கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து குர்ஆனைப் பற்றிப் பிடித்து நடக்க முற்படுவோம். அதற்கு எப்படிப்பட்ட மிக எளிய நடைமுறை கடைப் பிடிக்கப்பட வேண்டும் என்பதை விளக்கி அதன்படி நடக்க ஒரு கருத்தரங்கிற்கு 18.08.1438 (14.05.2017) ஞாயிறு அன்று பெரம்பலூர், துறைமங்களம், மூ.லு.மஹாலில் ஏற்பாடு செய்து கடந்த நான்கு மாதங்களாக அந்நஜாத்தில் தொடர்ந்து அறிவிப்பு செய்து வந்தோம். பெருங் கூட்டத்தை நாம் […]

””குரங்கு கையில் கிடைத்த பூமாலை’’ என்ற தொரு பழமொழி; அதுபோல் மனிதக் குரங்கு கள் கையில் மத்திய, மாநில ஆட்சிகள் கிடைத்துள்ளன. இன்று ஆட்சியில் அமர்ந்திருப்பவர்களுக்கு மனிதத் தன்மையோ, மனிதாபமோ இருப்பதாகத் தெரிய வில்லை. அப்படி ஆட்சியாளர்களுக்கு மனிதப் பண் பாடுகளோ, மனிதாபிமானமோ, மனித நேயமோ இருந்தால் மக்களைப் பற்றிய சிந்தனையில்லாமல், மக்கள் பணத்தை முழுக்க முழுக்க தவறான வழி களில் கோடி கோடியாகச் சுருட்ட முற்படுவார் களா? இன்றைய அரசியல், மூலதனமே இல்லாமல் பல்லாயிரம் கோடிகளை […]