2022 ஜுன்

சத்தியத்தை எடுத்து சொல்வது மட்டுமே கடமை! உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும். படைத்தவன் உங்களுக்கு அருள் புரியட்டும். இரண்டை மூன்றாக்கிய ஹிஜ்ரி கமிட்டி : சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ண யிக்கப்பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன. (இறைநூல் : 55:5) இறைவன் கூறியபடி சந்திரனும் சூரியனும் கணக்கின்படியே இயங்கி வருகின்றன. சூரியனை கணக்கிட்டு தொழுகை நேரத்தை கணக்கிட்டது போல் சந்திரனை கணக்கிட்டு மாத ஆரம்பத்தையும் கணக்கிட்டு விடலாம் அதன்மூலம் சந்திரநாள்காட்டியும் ஏற்படுத்திவிடலாம் அதன் […]

நீதி செலுத்துவதே இறையச்சம்! அருளாளன், அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…. இறை நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்காக வாய்மையில் நிலைத்திருப்போராயும், நீதிக்கு சான்று வழங்குவோராயும் திகழுங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள்கொண்டுள்ள பகைமை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்துவிட கூடாது. நீங்கள் நீதி செலுத் துங்கள்; இதுவே இறையச்சத்திற்கு மிகப் பொருத்தமானது. அல்லாஹ்வுக்கு அஞ்சி செயலாற்றுங்கள். நீங்கள் செய்வன வற்றை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான். (இறைநூல் 5:8) அல்லாஹ்வை முந்திக்கொண்டு யாரையும் தூய்மையானவர் என்று யாரும் கூற […]

எல்லாமே எனக்குத் தெரியும் என வாதாடாதீர்கள்! ஷரஹ் அலி உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும். (படைத்த) அந்த ஒரே இறைவன் உங்களுக்கு அருள்புரியட்டும். அந்த ஒரே இறைவனின் பெயரால்… (நபியே!) நீர் எந்த நிலையில் இருந்தாலும், அதில் ஒன்றாக குர்ஆனில் எ(ந்த வசனத்)தை ஓதினாலும், நீங்கள் (அனை வரும்) எந்த செயலைச் செய்தாலும், அதில் நீங்கள் ஈடுபடும்போது உங்களை நாம் கண்காணிக்காமல் இருப்பதில்லை. பூமியிலோ, வானிலோ ஓர் அணுவளவானாலும் அதைவிட சிறியதோ […]

இஸ்லாம் ஒரு பூரணப்படுத்தப்பட்ட மார்க்கம்! P.M.S. காசி மிய்யி வல்ல அல்லாஹ், இம்மை, மறுமை ஆகிய இரண்டிற்கும் பயன் தரக்கூடிய வற்றை, தனது தூதர் நபி(ஸல்) அவர்கள் மூலமாக அவை குறித்து நமக்குக் கூறாம லும், பாவம் தரக்கூடிய அனைத்துக் கெடுதி களை விட்டும் நம்மை எச்சரிக்கை செய்யா மலும், இஸ்லாமிய மார்க்கத்தைப் பூரணப் படுத்தவில்லை. அல்லாஹ் மிகத் தெளிவாக கூறுகிறான்: “இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தைப் பூரணமாக்கிவிட்டேன். மேலும் நான் உங்கள் மீது என் அருட் […]

யார் சாதனையாளர்? அபூ அப்தில்லாஹ் யார் சாதனையாளர் என்ற கேள்விக்குப் பலரும் பலவிதமான பதிலைத் தருவார் கள். ஒரு அரசியல்வாதியிடம் கேட்டால் அரசியலில் ஈடுபட்டு மந்திரி, முதன் மந்திரி, பிரதம மந்திரி ஆகிறவர்கள் சாதனையாளர் கள் என்பார். பல கோடிகளைத் திரட்டி வைத்திருக்கும் பெரும் செல்வந்தர் ஒருவரி டம் இதைக் கேட்டால் பணம் பண்ணுவதே சாதனை என்பார்; பெரும் படிப்பு படித்துப் பெரும் மேதையாகத் திகழ்பவரிடம் கேட்டால் கல்வியின் மூலம் மேதையாகத் திகழ்பவரே சாதனையாளர் என்பார்; புதிய […]

நல்லது இருந்தால் அதனை எடுத்துக்கொள்ளலாம்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. ஏப்ரல் 2022 தொடர்ச்சி… “அறியாமைக்கால அரபிகளின் உண்மையான சில நம்பிக்கைகள் குறித்துப் பேசுகின்ற சில குர்ஆன் வசனங்கள்” அவர்களைப் படைத்தவன் யார் என்று அவர்களிடமே நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். (43:87) “ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத் தான அர்´ன் அதிபதி யார்?” எனக் கேட் பீராக “”அல்லாஹ்வே” என்று கூறுவார்கள். (23:86,87) “பூமியும், அதில் உள்ளோரும் யாருக் குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளி […]

படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள் குர்ஆனை! ஷரஹ் அலி உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும். (படைத்த) அந்த ஒரே இறைவன் உங் களுக்கு அருள்புரியட்டும். அந்த ஒரே இறைவனின் பெயரால்… அவதியிலும் அமைதி : அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த சோதனையும் நேராது. யார் அல்லாஹ் வின் மீது (உறுதியாக) நம்பிக்கை கொள் கிறாரோ அவரது உள்ளத்தை அவன் நல் வழிப்படுத்துவான். (இறைநூல் : 64:11) அவன் எழுதியதுதான் நடக்கும் : (நன்மையோ, தீமையோ) […]

முஸ்லிம்களுக்கு காஃபிர் ஃபத்வா கொடுக்கலாமா? கொடுத்தால் கொடுத்தவர் நிலை என்ன? அபூஹனிபா, புளியங்குடி அல்லாஹ்வையும், அவனுடைய தூத ரையும் ஏற்றுக்கொண்ட முஸ்லிம்களுக்கு காஃபிர் ஃபத்வா கொடுக்க இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதி இருக்கிறதா? இல் லையா? காஃபிர் ஃபத்வா கொடுத்தால் அவரின் நிலை என்ன? என்பதை பற்றி தான் இன்றைக்கு பார்க்க இருக்கிறோம். அதாவது இன்றைக்கு அல்லாஹ்வை யும் அவனுடைய தூதரையும் ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள் பகிரங்கமாக அல் லாஹ்விற்கு இணை வைக்கக்கூடிய செயல்களை செய்கிறார்கள். தர்காவில் போய் […]

அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர் அல்லாஹ் மரணத்தையும், வாழ்வையும் எதற்காக படைத்தான்? மனிதர்களை சோதிப்பதற்காக. (அ.கு.67:2) யாருக்கு நிச்சயமாக சுவனச் சோலை கள் உண்டு என அல்லாஹ் கூறுகிறான்? நம்பிக்கை கொண்டு நல்லறம் புரிந் தோருக்கு. (அ.கு. 2:25) அனைத்துப் பெயர்களையும் யாருக்கு கற்றுக் கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான்? ஆதம்(அலை) அவர்களுக்கு. (அ.கு.2:31) சிறுமையடைந்த குரங்குகளாக மாறி விடுங்கள் என யாரை அல்லாஹ் கூறுகிறான்? சனிக்கிழமைகளில் வரம்பு மீறி மீன் பிடித்தவர்களை. (அ.கு. 2:65) தான் அறிவீனர்களில் […]

மத்ஹப்கள் மாநபி வழியா? மனுதர்ம வழியா? திருச்சி ராசிக் மத்ஹப் எனும் மாயவலை : மத்ஹப் எனும் மாயவலையில் மாட்டிக் கொண்டு ஈமானை (இறை விசுவாசம்) இழக்கும் முஸ்லிம்கள் பலர், இதில் அறிவு ஜீவிகள் என்று தங்களை அழைத்துக் கொள் பவர்களும் உண்டு, ஆலிம்களும் உண்டு, உதாரணமாக, சிறந்த சிந்தனையாளர், மார்க்க மேதை என்று அனைவராலும் போற்றப்படும் மெளதூதி சாஹிப் அவர் களே மத்ஹப்களை சரிகண்டு நியாயப் படுத்தியதை பார்க்க முடிகிறது. ஆயினும், குர்ஆன், ஹதீஃதுக்கு எதிரான […]

சோதனைகளின்போது பொறுமை கொள்ள வேண்டும் அபூ அஸீம், இலங்கை மே மாத தொடர்ச்சி…. கப்பாப் இப்னு அரத்(ரழி) அவர்கள் உம்மு அன்மார் என்ற பெண்ணின் அடிமை யாகவும் கொல்லர் பணி செய்பவராகவும் இருந்தார்கள். அவர் இஸ்லாத்தைத் தழுவி யதை அறிந்த எஜமானி பழுக்கக் காய்ச்சப் பட்ட இரும்பால் அவர்களது தலையிலும் முதுகிலும் சூடிட்டு “முஹம்மதின் மார்க் கத்தை விட்டுவிடு’ என்று கூறுவாள். ஆனால் இவ்வாறான வேதனைகளால் அவர்களது இறை நம்பிக்கையும், மன உறுதியுமே அதிகரித்தது. உம்மு அன்மார் […]